Showing posts with label தணியா வேகம். Show all posts
Showing posts with label தணியா வேகம். Show all posts

Monday, May 13, 2013

"அரெஸ்ட் வாரண்ட்!" : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -40




"அரெஸ்ட் வாரண்ட்!" : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -40

Innamburan Innamburan Mon, May 3, 2010 at 8:07 PM



03 05 2010
"அரெஸ்ட் வாரண்ட்!" : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -4


     உங்களுக்கு ஜே.பி.மாணிக்கம் அவர்களை தெரியுமோ? நம்ம காஃபி கிளப் நண்பர். அந்தக்காலத்து போலீஸா, கம்பீரமா  முறுக்குமீசை, அதிலே கொஞ்சம் லேசா நரை. குங்குமப்பொட்டு. நல்ல களை. சிவாஜி கணேசன் மாதிரின்னு வச்சுக்கங்களேன். அவர் தான் உளவு துறை தலைவர். ஒரு நாள் வந்தார். அதற்கு முன் செக்ரடரி பி.வி.ஆர். ராவ் தொலை பேசியில் ரஃப்பா பேசினார, 'Manikkam is coming to you. Render all cooperation.' டொக்! பாத்தா கண்ணின் மணி. அதன் முன்னே மாணிக்கனார்! வந்த ஜோர்லே, நம்ம டெலிஃபோனை கட் பண்ணிட்டு, இந்தக்காலத்து சாமியார்கள் மாதிரி, 
'நீ தப்பு பண்ணவில்லையென்றால், கவலைப்படாதே; தப்பு செய்திருந்தால் காராகிருஹம் நியாயம் தானே' 
என்று ஆசுவாசப்படுத்தி விட்டு, ஒரு நாளிதழை பிரித்து, 'இது உன் கையெழுத்தா?' என்றாரே பார்க்கலாம்! அது பாகிஸ்தானின் 'டாவ்ன்' நாளிதழ். கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினேனா, 'டபக்'னு போலீஸ் உத்தியை கையாண்டார், மற்றொரு நாளிதழை விரித்து. அது ஈஜிப்ட்டின் 'அல் அஹ்ராம்'. இரண்டிலும் தலையங்கம் சுரீர். ' Nehru proposes; Soundararajan disposes!' என்ற வகையில். இன்றும் முழு விவரம் சொல்ல இயலாது. அரைகுறையா சொன்னால், அடியேன் கையொப்பமிட்ட அரசாணை ஒன்று [நகல் இணைக்கபட்டிருந்தது. என்னுடைய நீளமான கையொப்பம். சும்மா சொல்லாக்கூடாது; நன்னாத்தான் 'பளிச்' னு இருந்தது, ப்ரிண்டில்!]  
பகர்ந்த 'திடுக்' செய்தி, நம் அரசு பிரகடனம் செய்த கொள்கைகளுக்கு முரணாக இருந்தது. போர்காலங்களில் அவ்வாறு நிகழலாம். போரில்லாக்காலங்களிலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன! [பிரதமரின் ஒப்புதல் இருந்ததது; ஆனால். எல்லாம் பரம ரகஸ்யம்.] பாகிஸ்தானுக்கு கொண்டாட்டம். எனக்கு திண்டாட்டம். இதன் பின்னணியைக்கேட்டால், கீதா, திருவேங்கிட மணி, தேனியார், மறைமுகம் திவாஜி (டைம் இல்லையாம்!) ஜ்யோதிஷர், ஒளிந்தும் ஒளியாத சுரேஷ் , மத்தவா எல்லாம் (எழுதாதவ எல்லாம் படிக்காதவாளா?) மனம் இரங்கி என் மேல் இரக்கமழை பொழிவார்கள், 

"துப்பார்க்குத் துப்பாய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை" 
போல.

     ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை, என்றும் இல்லாத திருநாளாக, வஸந்தாவும் நானும் சினிமாவுக்கு கிளம்பினோம். வழியில் சவுத் ப்ளாக்கில் (ஆஃபீஸ்). செளந்தரராஜன் 1ன்  கார் தென்பட்டது. ஒரு நிமிஷம். எட்டிப்பார்த்துவிட்டு வருகிறேன் என்று போனேனா. அவர் 'வா,வா, இந்த ஆணை (தேவ்ஜீ சொல்றமாதிரி: இப்பெல்லாம், 'ஜீ' விளி போட்றமாதிரி தானே தூள் கிளப்பறார்!) 'தத்க்ஷணமே' கிளம்பவேண்டும்.' என்றார். வஸந்தாவை மிலிட்டரி வண்டியில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, வேலையில் ஆழ்ந்தோம். கை மேல் வெண்ணைய், ஒரு வாரத்திற்குள்!!  'இன்று, எவ்வளவு நேரமானாலும், என்னிடமிருந்து விடுதலை கிடைக்காமல், வீட்டுக்குப் போகாதே' என்று, நேற்று நம்முடன், இன்முகத்துடன் காஃபி அருந்திய மாணிக்கனார் மிரட்டறார்னா, கல்மனமும் கரையுமே. மின் தமிழர் வெல்லம் மாதிரி உருகும் மனத்தினர் அல்லவோ, அப்பப்போ உருட்டி மிரட்டினாலும்!

     போறாக்குறைக்கு,சினிமா துறந்த அன்றிலிருந்து ஊடல். ஹி.ஹி. 'காரை பாத்தாலே, இப்டி ஓட்றவா, ஆளை பாத்தா எப்டியோ! என்று தனிமொழி. அங்கும், இங்குமா, எங்கும். உபத்ரவம்னு சொல்ல முடியாது. இல்லைன்னும் சொல்லிக்கமுடியாது. அது தான் இல்லறம் என்று 

           "…நெருநல் ஆடினை புனலே, இன்று வந்து
            ஆக வனமுலை அரும்பிய சுணங்கின் 
            மாசில் கற்பின் புதல்வன் தாய்என
            மாயப் பொய்மொழி…"

பரணரே சொல்லிவிட்டாரே. 

எல்லாவற்றிலும் நல்லதே காண்க என்று சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? யார் என்று கேட்கக்கூடாது. தெரிந்தா சொல்லமாட்டேனா? அதை விடுங்கோ. மாணிக்கனார் தற்காலிக சிறையில் வைத்த துன்பத்தை வீட்லே சொன்னேனா, சற்றே மிகைப்படுத்தி. ஊடல் ஓடியே போய்விட்டது. அடடா! மாணிக்கத்திடம் இந்தக்கணக்காயன் சொன்ன கணக்கை எழுத மறந்துட்டேனே. மிதுன ராசிலே மிருகசீர்ஷம் காண்றவா, சுக்ர தெசைலே ஒன்பதாவது மடத்திலெ குரு என்று சொல்றா. அதான் மறந்துடுத்து.  டூ லேட்! அப்றம் அரெஸ்ட் வாரண்டின் கரெண்ட் பிடுங்கிய வரலாறு 
தொடற (லாமா)?
இன்னம்பூரான்


2 ஏப்ரல், 2010 1:26 pm அன்று, Thiruvengada Mani T.K <tktmani@gmail.com> எழுதியது:

விறுவிறுப்பாக இருக்கிறது! அரெஸட் வாரண்ட் வந்ததா? தப்பித்தீர்களா?
மணி

Innamburan Innamburan Mon, May 31, 2010 at 2:02 PM

To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88@yahoo.com
31 05 2010
________________________________________________________
Image Credit: http://whartonconstable2.com/images/warrantcard_t.jpg
innamburan
13 05 2013



Sunday, May 12, 2013

'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39




'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39

Innamburan S.Soundararajan Sun, May 12, 2013 at 5:38 PM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88

'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39

31 03 2010

'சுக்ரதிசை!' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -39

Inline image 1


வேலை கடுமையாக இருந்தாலும், ஒரு நிறைவு இருந்தது. திரு. ராம் மனோஹர் லோகியா, நேரு அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொணர்ந்த அன்று, அதிகாரிகள் அமரும் இடத்தில் நெருக்கம் தாங்கமுடியவில்லை என்றாலும், வீ.டி.தெஹிஜா என்ற உயர் அதிகாரி அநியாயமாக பறித்துக்கொண்டாலும் என் ரெசெர்வ்ட் இடத்தை பறித்தாலும், அருகில் அமர்ந்து, எனக்கு விமர்சனம் அளித்த வண்ணம் இருந்தார்; அதையும் சேர்த்து, என் ரிப்போர்ட்டை தாக்கல் செய்தேன். ஜே.எஸ்.லால் ஐ.ஸீ.ஸ், என்னை கூப்பிட்டு, 'நீ ஜர்னலிஸத்துக்கு தான் லாயக்; டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு சொல்கிறேன்;போகிறாயா?' என்று கேட்டார். மறுத்து விட்டேன். அவருக்கு என் மேல் பரிவு. ஒருநாள் காலை எட்டு மணிக்கு, காற்று வாங்க ஆஃபீசிலிருந்து இறங்கும் போது எதிரில் வந்த அவர், 'எப்படியிருக்கிறாய்/' என்று கேட்டதற்கு [நாக்குலே சுக்ரன்!], 'I am most unhappy, Sir.' என்றேன். தன்னறைக்கு அழைத்து சென்று, காஃபி கொடுத்து ஆஸ்வாசப்படுத்திய பிறகு, விசாரித்தார். 'குடக்கூலிக்கு இருக்கும் இடம் ஒழுகல், பாதுகாப்பு இல்லை, மனைவுக்கு, நானோ ராப்பகலா பாசறையில்' என்று யான் குரல் கொடுக்க, 'நானாச்சு, மாலை வா' என்றார். போனால், யாரும் போக விரும்பாத, ராமகிருஷ்ணாபுரம் செக்டர் 4ல், இல்லம் கொடுக்கும் ஆணை, வேறு அமைச்சரகத்திலிருந்து! அங்கு மனைவிக்கு அருமையான கம்பெனி; நல்ல மனிதர்கள். அக்காலம், கார் வாங்குவது, குதிரைக்கொம்பு. ஃபியட் டப்பாவுக்கு மூன்று வருடம் காத்திருக்கவேண்டும். ஸ்டாண்டர்ட் டப்பா வாங்கினேன். நானும் அவருக்கு ஒரு பதிலுபகாரம் செய்தேன். அக்காலம், சுழல் முறையில், கன்ட்ரோல் அறையில் காவல் ட்யூட்டி. கூட இருக்கும் கர்னல் பழங்கதையெல்லாம் சொல்லுவார். ஒரு நாள், திடீரென்று தெற்கு சீமையிலிருந்து, 'சைனாக்காரன் வந்துட்டான்!' என்று சங்கேத மொழியில் அலறல்! லால் ஐயாவை வரச்சொல்லவேண்டும். 'என்னப்பா புரளி. நீயே அம்மாகாணத்து தலைமையுடன் பேசு. நான் பொறுப்பு' என்றார். ரகசிய தொடர்பு மூலம் அந்த தலைமை காரியதரிசியை கேட்டால், 'அப்படியா' என்றார், அரை தூக்கத்தில். ஒரு விடு விட்டேன். மேட்டர் செட்டில்டு. இப்படியா குப்பை கொட்டிகொண்டிருக்கும்போது, என் நண்பரின் தந்தை, சென்னையில் உயர் அதிகாரி, வந்திருந்தார். ஸ்கூட்டர் வாங்கிய அவனுக்கும், கார் வாங்கிய எனக்கும் மெகா-டோஸ் கொடுத்தார், 'வீட்டுமனை வாங்க தெரியாத மக்குகளா!' என்று. ஐ.ஏ.எஸ்ஸுக்கு தான் நீங்கள் கொடுப்பீர்கள் என்று நான் குற்றம் சாட்ட, மிலிடரி விஸ்கி கொடுத்த துணிச்சலில், என்னுடன் பந்தயம் போட்டார். நான் கெலித்தேன். எப்படி தெரியுமா? அவர் வந்த வேலை எங்கள் அமைச்சரகத்தில்; பாஸ் இல்லாமல் அவரை கூட்டிச்செல்லவேண்டும். ரொம்ப சுளிவு. அதிகாலையில் வரும் எனக்கு, செக்யூரிடியில் பல நண்பர்கள். என் பின்னால், அவர் வர, நான் அவருக்கு சலாம் போட, அவர்களும் சலாம் போட்டு உள்ளே விட்டார்கள். எனக்கு மனை ஒதுக்கப்பட்டது, பந்தய விதிப்படி. அது பெரிய கொடுப்பினை. டபால்னு சுக்ரன் ஓடிப்போயிட்டார், சனி நுழையப்போரார். ஏன்?, என்னை அரெஸ்ட் பண்ண வந்துவிட்டார்கள்.

[தொடரும்: அரெஸ்ட் வாரண்ட்!]


Tthamizth Tthenee
4/2/10

'சுக்ரதிசை!' :
 
சுக்கிரதிசையா.?
 
சுக்ர தசையா.?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
Geetha Sambasivam 
4/2/10

சுக்ர தசை என்பதே சரி என நம்புகிறேன். வேறே பெரியவங்க வந்து சொல்லட்டும். திசை என்றால் பொருள் மாறுபடுகிறது.
Thiruvengada Mani 

அரஸ்ட் வாரண்டா? தப்பித்து விட்டீர்களா? ஒரே விறு விறுப்பு!
4/2/10

மணி
Tthamizth Tthenee 
4/2/10

சுக்ர தசை, ஒன்பதாம் மடத்தில் குரு
 
அப்புறம் எப்படி மாட்டுவார்.?
 
தப்பித்திருப்பார்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
____________________
சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/_YXhBd2jSUy8/S0NR9V5zEPI/AAAAAAAACgA/cgRNEjMLRdg/s400/Doubt+21.jpg

'பாகல் ஜிம்கானா! : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -38




'பாகல் ஜிம்கானா! : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -38

Innamburan S.Soundararajan Sat, May 11, 2013 at 10:19 PM


23 03 2010

 'பாகல் ஜிம்கானா! : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -38
Inline image 1

சில மாதங்களுக்கு முன்னால், எங்கள் ஓய்வு பெற்றோர் சங்கத்தில் அக்காலத்தில் எனக்கு டிபுடி செக்ரெடரியாக இருந்தவரை சந்தித்தேன். பழங்கதைகளை சொல்லி மகிழ்ந்தார். 'ஒரு பாடாக, என் டிபுடிசெச்ரெடரியின் தரிசனம் கிடைத்தது, அதிர்ச்சி தரும் சூழலில்!' என்று சொன்னேனே, முந்தைய சுற்றில். அந்த மஹானுபாவன் தான்,அவர். 

பின்னோக்கி செல்வோம். எல்லா பெரியவர்களையும் பார்த்து வந்தனம் சொல்லியாயிற்று. இவரை மட்டும் பார்க்க இயலவில்லை. அவரு எப்போதும் பிஸி. ஒரு நாள் என் அறைக்கு வந்து அழைத்துப்போனார். பலிகடா மாதிரி பின் தொடர்ந்தேன். 

உரையாடல்:
அவர்: உன் கையொப்பம் போட்டுக்காட்டு. 
[காட்டினோம்]
அவர்: அடப்பாவி! என் மாதிரியே போடுகிறாயே. இதோ பார்!
[என் காசோலைகளை காண்பித்தார். அவருக்கு டெபிட்! உள்ளூர சந்தோஷம் எனக்கு. காட்லாமோ? ஊஹூம்!]
அவர்: ஏற்கனவே இந்த அமைச்சரகம் பாகல் ஜிம்கானா [பைத்தியக்காரர் கூட்டம் என்க.] நீ வேறே படுத்தரே. 
அடியேன்: நீங்கள் தான் என் மாதிரி கையொப்பம் போடுகிறீர்கள்! 
[சுருங்கச்சொல்லின், ஒரு உடன்படிக்கைக்கு வந்தோம்.]

இவரிடம் நான் கற்றுக்கொண்டது கொஞ்சநஞ்சமில்லை. இவர் ஒரு அதிகாரமையம். அதன் பின்னணி: ராணுவம் பற்றிய எல்லா செய்திகளையும், அப்டேட் செய்து, விரல் நுனியில் வைத்திருந்தார், இந்த செளந்திரராஜன்; அரசு உருப்படியாக செயல்படுவதில் குறியாக இருந்தார்; முறையாக நடக்கவேண்டியதை, நிறைவேற்றுவதிலும், முறையற்றதை, என்ன எதிர்ப்புகள் இருந்தாலும், செயலிழக்க செய்துவிடுவதிலும், அய்யா மன்னன்!. அதற்கு, அருமையான உத்தி வைத்திருந்தார். அந்த கோப்பைகளை 'கடப்ஸ்'ஸில் போட்டுவிடுவார். வேளை வரும்போது அது எட்டிப்பார்க்கும். திரு.கிருஷ்ணஸ்வாமியோ, எந்த சிக்கலையும், ஒரு வினாடியில் அவிழ்த்து விடுவார். ஹரீஷ் ஸரீன் ஐ.ஸீ.ஏஸ் ஒரு தனிப்பிறவி; ராணுவக்கடலில் தோணி. கரையோரம் கலங்கரை விளக்கு. இவர்களிடம் அனுபவப்பாடம் பெறுவது ஒரு கொடுப்பினை.

ஒரு பாடம்: 
நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு எங்கள் மேல் பாய்ந்த தணிக்கை அறிக்கைகளை ஒரு ரகசிய மன்றத்தில், எங்களை சாக்ஷிகளாக நிறுத்தி, அலசும். மாரி பொழிவது மாரி நிந்தனைகள் பொழியும். காலாகாலத்தில் முடிவு எடுக்காததால், பீர் வாங்கியதில், அந்த பிரிவுக்கு நஷ்டம் இத்தனை ஆயிரம் ரூபாய் என்று குற்றச்சாட்டு; அந்தப்பணத்தை ஜவான்களிடமிருந்து வசூல் செய்துவிட்டோம், நஷ்டமில்லை என்று சால்ஜாப்பு. பொது கணக்குக்குழு ஒத்துக்கோண்டாலும், போர் நடக்கும் காலகட்டத்தில் ஜவானுக்கு செலவா? என்று முறைத்தது. அத்துடன் விட்டது.

பிரதம சாட்சியான ஹரீஷ் ஸரீனுக்கு நான் உதவியாளன். திரும்பிய பிறகு, நான் அவரிடம் சொன்னேன், 'என் குறிப்பை நீங்கள் பார்க்கவில்லை. நாம் ஜவானிடன் இதை தள்ளிவிடவில்லை.' 

மறுநாள், விசாரணை தொடங்கும் முன், ஸரீன் ஒரு விளக்கமளித்தார், 'நான் நேற்று தவறாக கூறிவிட்டேன்; மன்னிக்கவும். அதிகப்படி செலவை ஜவான்களின் தலையில் கட்டவில்லை; அமைச்சரகம் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்கும்' என்றார். குழுவும் சிலாகித்தது. மற்ற நிந்தனைகளும் எடுபடவில்லை.  

அன்று எல்லாம் முடிந்தபிறகு, வழக்கம் போல், ஆடிட்டர் ஜெனெரலும், ஸரீன் அவர்களும் மரியாதை நிமித்தம் உரையாடியபோது, அவரும் இந்த அணுகுமுறையை சிலாகித்தார்.  இவன் தான் காரணம் என்று ஸரீன் என்னை முன்னிறுத்தினார். போட்டாரே பார்க்கலாம், ஆடிட்டர் ஜெனெரல், 'இதற்கு தான் இந்த பசங்களை உங்களிடம் பயிற்சிக்கு அனுப்புகிறோம்' என்று! 
[ தொடரும்: 'சுக்ரதிசை!']

இன்னம்பூரான் 
சித்திரத்துக்கு நன்றி:http://3.bp.blogspot.com/-gvuz_vKPhZo/TnmaNJKIg1I/AAAAAAAAB4g/Jcr4-ExMr8M/s1600/1.jpg
இன்னம்பூரான்
12 05 2013

Saturday, May 11, 2013

’பரமபத சோபானம்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -36




’பரமபத சோபானம்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -36

Innamburan S.Soundararajan Sat, May 11, 2013 at 9:55 PM

19 02 2010

 ’பரமபத சோபானம்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -36

Inline image 1
இந்த டீ.எல்.டபிள்யூவை எல்.பீ.டபிள்யூ ஆக்கறது தானே, என் கடன், அமல்!
அதற்கு, 'லாக்புக் லகான்' அற்புதமா வேலை செஞ்சது. ரயில்வேக்காரனுக்கு இனப்பற்று ஜாஸ்தி. மெகானிகல் எஞ்சினியர் பப்ளிக் ரிலேஷன் ஆஃபீசரோடு பேசறது சொல்பம். ஆடிட்காரன் பஹுதூரம் இல்லையோ? அதோடே, நல்லவேளை, பாலின வேற்றுமை இடம் பெறவில்லை. (எனவே, பிரச்னைகள் வேறு!) இப்போ, 'அப்பாடான்னு பெருமூச்சு விட்டங்களா!; க்ளப்லே முகம் கொடுத்துப் பேச ஆரம்பிசச்சாங்க. 'நல்வரவே ஆகுக' என்று இருந்து விட்டேன். இப்படியாக காலதேசவர்த்தமானம் இருக்கச்சே, காண்ட்ராக்ட்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.


இப்போ, பட்டி தொட்டிலே, பேட்டைக்கு பேட்டை, பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்து, டவுனுக்கு டவுன், மாவட்டத்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம் துஷ்பிரயோகம் பண்றாளே, அந்த டெண்டர் முறையின் எளிய பதிப்பு தான், அப்போ ஐம்பது வருடங்களுக்கு முன் தெரிந்த ஏற்பாடு. ஆனா, மாண்ட்வாடிலே கட்றது பெரிய டீஸல் எஞ்சின் தொழிற்சாலை; அமெரிக்கா கம்பெனி ஆல்கோ ஒப்பந்தக்காரார்,கூட்டாளி. ஏற்கனவே, ரயில்வே போர்ட் மன்னாதிமன்னர்களால் முடிக்கப்பட்டவை. 'பொன்னியின் செல்வத்தை' விட தடிமன் ஆன காண்ட்ரேக்ட்கள்;பக்கம் பக்கமாக நுண்ணிய எழுத்துக்களில், ஆங்கிலமில்லாத, ஆனால் ஆங்கில'சொற்கள்; புரியமாதிரி இருக்கும்; புரியாது. எல்லாபக்கங்களிலும், இரு தரப்பினரும் 'டொட்டாய்ங்க்' ந்னு நெடிய கையெழுத்து. நமக்கு தான் வேலை குறைச்சலா! அதையெல்லாம் படித்து, பித்து பிடித்து, பாயைப் பிராண்டி, வினா தொடுத்தபிறகு தான் தெரிந்தது, அவர்களுக்கும் புரியவில்லை என்று!

  • எனக்கு ஜவாப் சொல்றதுக்கு ஒரு அமெரிக்கரை அனுப்பினார்கள். கொஞ்சம் அசமஞ்சம். பக்கோடா சாப்டிண்டு பேசறமாதிரி அவர் பேசினாலும், அவரிடமிருந்து உண்மையை கறக்கமுடிந்தது. பரமபதசோபானப்படத்திலே ஏணி காண்பித்த அளவு தான் ஏறும். சர்ப்பத்தின் வாலும் கண்ணுக்கு தெரியும். இவர்களது ('இவா' ந்னு எழுதவில்லை, அமல்.) காண்ட்ராக்ட்டில், இரண்டு ஏறுமுகம் - கூலி உயர்வது, விலைவாசி உயர்வது. சிக்கல் சிக்கலான சூத்திரங்கள், நடைமுறையுடன் ஒவ்வாதவை, இறங்குமுகத்தைப்பற்றி பேச்சே இல்லை. சுருங்கசொல்லின், கேட்டதை கொடுக்கறமாதிரி. நமக்கு இதெல்லாம் ஒத்து வருமோ? 'நீங்கள் கொடுக்க நினைப்பதை தடுக்கவில்லை; சட்டரீதியான பிரச்னைகள் எழலாம். பிறகு தணிக்கை செய்கிறேன்' என்றேன். 'த்ராட்லே மாட்டிட்டுட்டையே' என்றார், ரயில்வே நிதித்துறைத்தலைவர். காசிக்கு பக்கமோல்லியோ. அவர்கள் அதிர்ஷ்டம், இந்த அடிப்படையில் பில் போடுவதற்கு முன், எனக்கு மாற்றல் பூதம் வந்து விட்டது. ஆனால், இந்த பக்கோடாப்படிப்பு, பிற்காலம் எனக்கு உதவியது. இது நிற்க

இந்த மாதிரி காலம் தள்ளிக்கொண்டிருக்கையில், எங்கள் ஆடிட்டர் ஜெனெரல், ஏ.கே.ராய் அவர்கள் கல்கத்தா வந்தார். அருமையான மனிதர்.அவர் அந்த பார்ட்டியில், இந்த ஏறுமுகம் காண்டிராக்டுக்கள் பற்றி சரியான விளக்கம் கொடுத்தார், எனக்கு. பிற்காலம், ஒரு பயணத்தில், அவருடன் சவாரி செய்தேன்; மனிதநேயத்தின் இலக்கணத்தை கண்டேன். வேளை வந்தா சொல்றேன்.

சரி. தாம் தூம்னு க்ரேட் ஈஸ்டர்ன் ஹோட்டலில் பார்ட்டி. சந்தாவும் அதிகம் .தண்ணியும் ஆறா ஓடித்து. எனக்கும் வஸந்தாவுக்கும் இதெல்லாம் புதிசு. ஃபோட்டோக்குட எங்கயோ இருக்கு; பார்த்தேன். வெள்ளி முளைக்க, பார்ட்டியும் முடிந்தது. எனது மேலதிகாரி திரு. ஹெச்.கே.மைத்ராவுக்கு, நான் பிள்ளை மாதிரி. அவருக்காகவே தனியாக ஒரு கார் கொண்டு வந்திருந்தேன்.


"Sir, You are not driving; it is an order" என்றேன். அவாத்து மாமிக்கு ரொம்ப சந்தோஷம். இதிலே ஒரு பாயிண்ட் இருக்கு ஸ்வாமி. இது சும்மா காக்காப்பிடிக்கிறது இல்லை. அவர் என் மீது அக்கறை காண்பித்தது ஆயிரம்; நான் செய்த யதார்த்த பணீ ஒரு பின்னம். அந்தக்காலத்தில், மேலதிகாரிகள் சின்னப்பசங்களை வழி நடாத்துவதில் மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள்.

இன்னம்பூரான்

2010/2/18 devoo
கஜ கர்பத்திற்குக் கொசுறு  கத்தரிக்காய் ஜோக் !

ஆண்டு விழாவின்போது திவாஜீ மின்னாக்கம் பற்றிக் கூறும்போது  ஒவ்வொரு
முறையும் பக்கத்தைப் புரட்டி வைத்து எழுந்து நின்றுகொண்டு படம் பிடிப்பதை
விளக்கினார்; முட்டு வலித்தால் தடவிக்கொள்ள balm வைத்துக்கொள்ளுமாறும்
விளையாட்டாக அறிவுறுத்தினார். இன்னம்பூரான் சார் மெதுவாகப்
புகைப்படத்துக்கு  அருகில் வந்து நின்றுகொண்டு ‘இங்கு balm bottle
ஒன்றையும் காணோமே’ என்று கூறியது சிரிப்பலைகளைக் கிளப்பியது

தேவ்


On Feb 18, 6:07 am, Geetha Sambasivam  wrote:
> கத்தரிக்காயை விடலை, காசிக்குப் போயும்![?][?][?][?]
>
> 2010/2/18 Tthamizth Tthenee
>
> > காசிக்குப் போனதே  இல்லையோ..?
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>
> > 18-2-10 அன்று, Geetha Sambasivam  எழுதினார்:
>
> >>  [?][?][?][?][?][?][?]எனக்குக் கத்தரிக்காய் ரொம்பப் பிடிக்கும்!
>
> >> 2010/2/15 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
> >> 15 02 2010
____________
இன்னம்பூரான்
11 05 2013 

Thursday, May 9, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -37":அட ராபணா!





தணிக்கை செய்வதில் தணியா வேகம் -37":அட ராபணா! 
Innamburan S.Soundararajan Mon, May 6, 2013 at 4:09 PM


02 03 2010
தணிக்கை செய்வதில் தணியா வேகம் -37":அட ராபணா! 
Inline image 1

டில்லிக்கு வந்தேனா! காலம்பறப்பார்த்த அஞ்சாறு தலைகள் எனக்கு; பத்தும் ஆச்சு கூடிய சீக்ரம். நானே அன்டர்செக்ரடரி: (ஆயுதங்கள் + தளவாடங்கள் + நிதி ஆளுமை + யுத்தக்கையேடு + தணிக்கைத்தொடர்பு + பொதுக்கணக்குக்குழு வேலைகள் + நாடாளுமன்றக்குறிப்பு எடுப்போன் + விஞ்ஞான ஆலோசகர் நடத்தும் விவாதங்களுக்கு குறிப்பாளன் (Rapporteur) + இது + அது + எதுவும்!). போறாக்குறைக்கு, நான்கு டிபுடி செக்ரடரிகளுக்கு/ மூன்று ஜாயின்ட் செக்ரடரிகளுக்கு (எல்லாரும் ஐ.ஸி.ஸ் பெருமகனார்கள்)/ ஒரு  விஞ்ஞான ஆலோசகருக்கு பதில் சொல்லியாகவேண்டும்; மேலதிகாரி யார் கூப்பிட்டக்குரலுக்கும்  தத்க்ஷணமே பதில் சொல்லியாகவேண்டும். போக வர பஸ்ஸும் நின்றுவிடும்; டாக்சியும் கிடைக்காது; நடுநிசியானால் அப்டித்தான். அதற்காகவே கார் வாங்கினேன். ராணுவ அமைச்சகம்  ஆழம் தெரியாதக்கடல்;  சைனா போரும் வந்துவிட்டதா? வேறு வினை வேண்டாம். 500/600 கார்கள் வரும் அலுவலகம். மூன்று கார்களூக்கு மட்டு ஒதுக்கப்பட்ட இடம். ஒன்று ராணுவத்துறைக்காரியதரிசிக்கு. பாக்கி இரண்டும் க்யூ. நம்ம இரண்டு பேருக்கும் ( ஸெள & ஸெள) நிச்சயம். வேறு யாரு காலை 6 மணிக்கு ஆஃபீஸ் வருவார்கள்?
காலை ஆறு மணிக்குப்போய், ராத்திரி 11 மணிக்கு வந்தால், நான்கு தடவையாவது 'பட்பட் படார்' என்று மோட்டார் சைக்கிள் தூதுவர்கள், கோப்பைகளோடு. எது எப்படீருந்தாலும், எனது உடனடி மேலதிகாரிக்கு, இது மேலும் பொருந்தும். பார்க்கவேண்டியிருந்தவர்கள் எல்லாரையும் பார்த்தபிறகு, அவரை மட்டும் அணுகமுடியவில்லை. அவ்வளவு பிஸி, அந்த அஷ்டாவதானி + சா.வ.கோ.ப + வே.வா.ம.
ஒருநாள் ஃபோன் போட்டார்: அன்றைய மீட்டிங்க் ஒன்றுக்கு எனக்கு பதில் நீ போய்விட்டு வந்து சொல்லு என்றார். அது மிகவும் ரகசியமான உயர்மட்டக்குழுவின் கூட்டம். சங்கேதச்சொற்கள் இல்லையெனில் நுழையமுடியாது. சமர்த்தாகப் போய் அமர்ந்தேன், எல்ல சம்பிரதயங்களையும் முடித்து விட்டு. குழுதலைவர் என்னைப்பார்த்து முறைத்தார்; நாமம் கேட்டார்; நவின்றேன். சங்கேதம் ஒலித்தார்; எதிரொலித்தேன்.  முறைத்தார் மறுபடியும்; வெளியில் சென்று வந்தார், புன்சிரிப்புடன். கனிவாக என்னை அறிமுகம் செய்து, மிலிடரி ஸ்டைலில் எனக்கு நாமகரணம் செய்தார் 'பாக்கெட் எடிஷன்' என்று! அந்த பெயர் நிலைத்து விட்டது. பல வருடங்கள் கழித்து ராணுவ அமைச்சரகம் சென்றபோது, 'பாக்கெட் எடிஷன்' வந்திருக்கிறார் என்று நினைவு கூர்ந்தார்கள்.
 ஒரு பாடாக, என் டிபுடி செச்ரெடரியின் தரிசனம் கிடைத்தது, அதிர்ச்சி தரும் சூழலில்!
இன்னம்பூரான்
_____________________________________
சித்திரத்துக்கு நன்றி: http://sagotharan.files.wordpress.com/2010/05/ravana.jpg
பி.கு. இன்றைக்கும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், 50 வருடங்கள் கழித்து. 
இன்னம்பூரான்
06 05 2013
_________
பி.கு: வே.வா.ம = வேலை வாங்குவதில் மன்னன்.

சா.வ.கோ.ப = சாளரம் வழி கோப்பை பறிமுதல் செய்வோன்.

Wednesday, May 8, 2013

’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34




’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34
1 message

Innamburan S.Soundararajan Wed, May 8, 2013 at 6:04 PM


’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34 
Inline image 1

மறு நாள் அஸன்சால் ஸ்டேஷனில் ஆரவாரம். ரயில்வண்டிக்கதவை திறந்து கொண்டு நேருஜி. 'அஸால்ட்டா' நின்றுகொண்டு இருந்தார். தற்காலம் போல கெடுபிடிகள் கிடையாது.
திவாஜீ ஆடிட் பூசலைப் பற்றிக்கேட்கிறார். நேரு மீட்டிங்கை ஆடிட் பகிஷ்காரம் செய்தது, அழைப்பு இல்லாததால். என்னை மட்டும் தான் அழைத்திருந்தார்கள் என்றது பிறகு தெரிய, ஜெனெரல் மானேஜருக்கு ஒரு கண்டனக்கடிதம் எழுதினேன். தீர விசாரித்து, எங்கள் ஆஃபீஸுக்கு வந்து, ஆடிட் சமூகத்திடன் மன்னிப்பு கேட்டார், அந்த பெரிய மனிதர்.
பூசல் தணிந்தது; கிதாப்பு ஏறியது.
ரயில்வே ஆடிட் ரிப்போர்ட்டில், பலவருடங்களாக சித்தரஞ்சன் தொழிற்சாலையைப்பற்றி குறை கூறபடவில்லை என்ற சாதனையும் முறிந்தது. மூன்று ஆடிட் பாரா, முதல் வருடமே. அதில் ஒன்று ஒரு தீ விபத்து. அது ஆண்டவன் செயல் என்று அவர்கள் கூற்று. அது மனிதனின் பொறுப்பற்ற செயலின் விளவு என்று என் ஆதாரங்கள்.
வேலை மிக குறைவாக இருந்தது; தொழிற்சாலையிலே மணிக்கணக்காக இருந்து, நுணுக்கங்கள் கற்று வரும்போது, ஜி.எம். கூப்பிட்டார். 'ஒரு முக்யமான பாகம், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வாங்குகிறோம்; அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். உள்நாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சலுகை கொடுத்து, வளர்க்க விரும்புகிறோம். நீயோ மடியில் இருக்கும் தேள் மாதிரி கொட்டுவாயோ? என்று கவலைப்படுகிறார்கள் என்றார். அக்காலம், டி.ஜி.டி.டி (DGTD) என்ற துறை இத்தகைய சலுகைகள் பற்றி கொள்கை அறிவித்திருந்தது. அவற்றை திரட்டி அவரிடம் கொடுத்தபோது தான், வேறு யாரும் அது பற்றி தகவல் தரவில்லை என்று நன்றி கூறினார். ஆடிட் தேள் தப்பு செய்தால் தான் கொட்டும் என்று சொல்லி விட்டு, ஓடி வந்து விட்டேன்.
டபிள் சார்ஜும், நானும் கூடப்பிறந்தவர்கள். காசிக்கு அருகில் உள்ள மற்றொரு தொழிற்சாலை ஆடிட் அடிஷனல் சார்ஜ். அந்த கதைக்கு பிறகு வருகிறேன். படா டமாஷ்!
சித்தரஞ்சனிலிருந்து என்னை டில்லியில் பாதுகாப்பு அமைச்சரகத்தில் அண்டர்செக்ரெட்டரியாக (டைம் லைன் 1962) மாற்றினார்கள். 'இன்றே வருக.' 'நேற்றே வருக.' என்ற வகையில் தந்திகள் பறந்தன. என் பையன் படு ஜுரம்; ஆஸ்பத்திரியில். டில்லியில் லேசில் வீடு கிடைக்காது. தவித்து போனேன்.
ஒரு நாள் ஆஸ்பத்திரியிக்கு வந்து என் பையனைப் பார்த்த ஜி.எம்., 'இவன் தேறியபிறகு, குடும்பத்தை சென்னைக்கு அனுப்பிவிட்டு, வீட்டுச்சாவியை என்னிடம் கொடுத்து விட்டு, டில்லிக்குப்போ; நான் சாமான்களை கொணருகிறேன்' என்றார். அப்படியே, எனக்கு வீடு கிடைத்த பிறகு,தன் தனிவண்டியில் (ஸலூன்) கொணர்ந்தும் கொடுத்தார். அத்துடன் விடவில்லை. ஒரு வருடம் கழித்து, சித்தரஞ்சனில் ஒரு புதிய வகை எஞ்சின் தயாரிப்பைத் தொடக்கிவைக்க, நேருஜி வந்த போது, ' ...as an old guard of CLW...'நீயும் வரவேண்டும் என்ற அழைப்பும், ரயில்வே பாஸ்ஸும் அனுப்பினார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சான்றோகளின் நடைமுறை எல்லாம் படிப்பினை அல்லவோ!
இன்னம்பூரான்


தணிக்கை செய்வதில் தணியா வேகம் -33:’தண்டம்’




தணிக்கை செய்வதில் தணியா வேகம் -33:’தண்டம்’

Innamburan S.Soundararajan Mon, May 6, 2013 at 5:39 PM


07. 02 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -33:’தண்டம்’
Inline image 1

அப்டேட்:
கடந்த பத்து வருடங்களில், நான் இந்த கட்டுரையில் சுட்டிய ஊழல்களை எல்லாம்  அசுரவேகத்தில் வளர்த்து,
நாட்டின் செல்வத்தை சூறையாடுகிறார்கள். அதனால் தான் சிவப்பு மசி.  இதை படித்தவர்கள் தங்கள் அனுபவங்களை/கருத்துக்களை/ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டால், நலம். என் நன்றி. தனிமடல் அனுப்புவோர்க்கும் பதில் அனுப்பபடும்.

அன்புடன், 
இன்னம்பூரான்
06 05 02013

கொஞ்சம் மாற்றம் வேண்டாமோ?  இது நான் 2004 லில் எழுதிய கட்டுரை.
இன்னம்பூரான்
07 02 2010------------


Date:03/08/2004 URL: http://www.thehindu.com/thehindu/op/2004/08/03/stories/2004080300261300.htm

Back Open Page

Containing waste

PENCIL SHAVINGS is a waste product. 
Throwing the stub away is a waste. 
Throwing the pencil away is a malpractice.
Most governmental activities throw the metaphorical pencil away, as premeditated subversion. Private sector is no paragon of virtue, debiting philately to postage! Nevertheless, the immediate concern is on public money. Unburnt coal is deliberately heaped with coal ash for sharing the loot, in some power stations. The top managers in one case sat up and took notice only when it was shown that gold prices rose less steadily than the bids for coal ash! Dhanbad mafia is a direct product of waste and malpractices in mining and dispatching coal. Floor sweepings in factories command a premium in auctions as a rich pick of tools, products and raw material can be salvaged. Ingenious are the ways of those who thrive on waste. The story goes that a Soviet factory was losing wheelbarrows daily. Having failed to solve the riddle, the management adopted a capitalistic stratagem; they announced a reward and immunity. The culprit confessed to heaping a barrow daily with waste and walking away. Security guards let him out after checking the contents!
The limited focus is here on the deliberate waste for illegal gain. The national Common Minimum Programme will meet its nemesis in the hardcore waste-taker in all spheres, if the government does not watch out. Primarily comes the inefficiency of services and wasting of working time. Employment guarantee is welcome. However, employee obligation in the form of discipline and reasonable obedience should be defined and enforced. Legislation in the U.K. protects the employee jealously in many respects, including maternity, rest, safety and whistleblowing. However, there is no protection to gross misconduct like rifling the till. We had been exposed to malpractices long enough to spot them, if there be a will. Hawala and black money are examples of Frankenstein spawned and nurtured by the wasteful system. They are open gutters and are not submerged tunnels.
A few examples are mentioned to signpost the rocks on which governments founder. It is but the tip of the iceberg. Government apparatus jealously guards some myths. The public works department, which Rajaji famously declared as his enemy No.1 (ranking the communists next), awards contracts, based on schedule of rates, derived from rate analyses. A multi-purpose dam project had schedules only for buildings, one per cent of its outlay. When the project digs canals, the wasters dig gold. The digging profile consists of overburden (sand or equivalent), soft disintegrated rock and hard disintegrated rock. Deeper the cut, higher the rate. It is fair. However, in one geological zone, hard rock could not be built into the rates, as it was of alluvial soil. The masterstroke was to adopt the schedule of an adjacent district, for enriching the contractors. This was stopped, but the honest man got the sack. The tribals in Phulbani district of Orissa touch neither sugar nor wheat. The public distribution system routinely drew those commodities for that district. This happened decades ago. Nevertheless, the moral is still valid.
Another myth is the sanctioned estimate. Overdesign is the trick. Most culverts need non-pressure clay or at the most, cement pipes. One estimate provided for electronically welded steel pipes (used for tube wells) costing hundreds of times more; the stock reply was that the estimate was a sanctioned one. A highway division had large quantities of thick twisted steel rods, when they needed none. The bridge divisions had enough on their plate. Unable to defend that purchase, they planned to convert them into mild steel rods (which also they did not need), a physical impossibility. Bitumen is one item, which is pilfered on paper and on site. The unedifying spectacle, euphemistically known as March rush of expenditure, is hoarding time for the rogue elephants among government officials. The litany is endless.
Whenever the government is on the threshold of launching large spending programmes, deliberate wasters spend sleepless nights scheming in mind as to how to subvert the system. They form a ubiquitous and unscrupulous community of shared interests, and, of course, the booty, among politicians, officialdom, contractors and middleman. They operate in secret in the beginning and become brazen after some time, as mutual protection gets set, unlike the sand they mixed with the cement.
Apart from vigilance machinery — in-house and external — the government must evolve alert preventive measures to stop this Barbarian (vested interest masquerading as a mere waster) at the Gate. Such measures can be as simple as a log of what was done, a quick reporting mode and the surprise inspections. The colonial rule had a system of district inspection by members of the Board of Revenue, a sinecure establishment. It used to be as instructive as the gazetteers and performance was measured and ranked. There are many other dimensions to waste as a phenomenon. All those who are aware should share and the government should take care.

S. SOUNDARARAJAN

Former Additional Deputy Comptroller and Auditor General of India
© Copyright 2000 - 2009 The Hindu

Tuesday, May 7, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -31 'இது வேறே!’


தணிக்கை செய்வதில் தணியா வேகம் -31 'இது வேறே!’

Innamburan S.Soundararajan Mon, May 6, 2013 at 4:33 PM


அப்டேட்: 07 05 2013
‘…தாசில்தார் ஒரு மனுதாரரிடம் நன்கொடை கேட்கிறார், அரசின் பிரிதிநிதியாக…’ !

~ இது நடந்த காலகட்டம்: 1963 ~ 65.

ஐம்பது வருடங்கள் கழித்து:
‘…தாசில்தார் ஒரு மனுதாரரிடம் நன்கொடை கேட்கிறார், அரசின் பிரிதிநிதியாக…’ !

ஒரு தலித் சிறுவனுக்கு சாதிச்சான்று வாங்க சில வருடங்கள் முன்னால் தாசில்தாரிடன் போனால்: அதே பிச்சை பாத்திரம்.






02. 02 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -31 'இது வேறே!’
Inline image 1


நான்காவது பத்து தொடங்குகிறது, .

‘…தாசில்தார் ஒரு மனுதாரரிடம் நன்கொடை கேட்கிறார், அரசின் பிரிதிநிதியாக…’ !

மெல்ல மெல்ல, தயங்கி, தயங்கி, ஆங்காங்கே சப்பைக்கட்டுக்களுடன், கசிந்து வந்த செய்தி:

மத்திய அரசு, 'வரவு எட்டணா; செலவு பத்தணா' என்று அகலக்கால் வைக்க, அவ்வப்போது,ரிஸர்வ் வங்கியின் அறிவுரைப்படி, கடன் பத்திரங்களை அளித்து, கடன் வாங்குவது உண்டு. தகுந்த வரவேற்பு இல்லையெனில், அரசுக்கே தலைகுனிவு. மத்திய அரசு மாநில அரசுக்களை வற்புறுத்த (அது, அந்த்தக்காலம்!), அவை கலெக்டர், தாசில்தார், ஆசிரியர், கால்நடை மருத்துவர் இந்தமாதிரி, பொதுமக்களின் தேவையை நிறை செய்யும் கடமை உடையோர்களை எல்லாம், ஒரு இலக்கு (டார்ஜெட்) கொடுத்து இற்செறிக்கும்.

ஆந்திர அரசு, அவர்களின் 'இருபக்கமும் அடி வாங்கும் மத்தள நிலை' கண்டு, இரக்கத்துடன் !,ஒரு வழி வகுத்தது. அந்த அலுவலகர்கள் (சொல்லப்போனால், எல்லா அலுவலகர்களும்) வந்து போகும் விண்ணப்பதாரர்களிடம், அரசின் சார்பாக பிச்சை எடுக்கலாம். அந்த பிச்சைக்காசுகளை சேமித்து, தனியே வைத்து, அதிலிருந்து, கட்ன் பத்திரங்கள் வாங்குபவர்களுக்கு இன்சென்டிவ் பணம் கொடுக்கலாம். (ஏழை டு செல்வந்தன்) அதற்கு விகிதாச்சாரம் வேறு. அரசு ஆணை கிடையாது. வாய்மொழி உத்தரவு. அரசல் பரச்லாக, சில கடிதங்களில் பூடகமான குறிப்புக்கள். மானத்துக்கு மானமும் போச்சு. இப்போ,மேலாவிலேருந்து வசை வேறு கொட்டும், உங்களிடம்  சொன்னதிற்காக, என்று அந்த தாசில்தார் (நல்ல மனிதன்) நொந்து கொண்டார். தன் தலை விதியை.  சற்று நேரம் கழிந்த பின், 'இது வேறே! அரசுப்பணமே இல்லை. நீங்கள் யார் கேட்பது? என்று விரட்டியும் பார்த்தார். என்க்கு என்னமோ, அவர் மீது இரக்கம் தான் வந்தது. பழி தீர்ப்பது, அதுவும் நாணயஸ்தனிடம், அரசியலர்க்கு கை வந்த கலை. 'ஆமாஞ்சாமி' ஆஃபீஸர்களும் வேறே.

'சட்புட்'னு, ஒரு காரியம் செய்தேன். ஐயா, உம்மை மட்டும் இழுக்கவில்லை. ஒரு மாதத்திற்குள், மேலும் நான்கு தாசில்தார்களை வளைத்து, ஐந்து அலுவலகங்களுக்கும் ஒரே ரிப்போர்ட் அனுப்புகிறோம் என்று சொல்லிவிட்டு, மற்ற மாவட்டங்களிலிருந்து, நான்கு அலுவலகங்களைப்பொறுக்கி, ஒரே ரிப்போர்ட் தயார் செய்தோம். அது நமக்கே வசதியாகப்போய்விட்டது,  இந்த 'இது வேறே' வியாதி பரவலாக உள்ளது என்று திட்டவட்டமாகச்சொல்ல முடிந்தது.

இப்படிச்சேர்த்த பணம் ஒரு லக்ஷம் ரூபாய், ஒரு கலெக்டரிடம் முடங்கிக்கிடந்தது.(அந்தக்காலத்தில் அது செல்வம்.) எங்களுடன் விதண்டாவாதம் பலநாட்களுக்குப்புரிந்த அரசு,கடைசியாக அரைமனதுடன், அந்த நிதியெல்லாவற்றையும் கஜானாவில் செலுத்த சம்மதித்தது. எவ்வளவு தூரம் கடைப்பிடித்தார்கள் என்று என்னால் சொல்ல இயலாது, மாற்றல் பூதம் காரணமாக. அது நல்ல பூதம். குஜராத் அரசு கட்டிவரும் ஒரு பெரிய அணைக்கட்டு அலுவலகத்துக்கு நிதி ஆலோசகனாக மாற்றப்பட்டேன். அங்கு தான் பல நெளிவு சுளிவுகளை அறிய வாய்ப்பு கிட்டியது. நான் செய்த பணிகளில், எனக்கு மன நிறைவைக்கொடுத்த பணி அது.
இன்னம்பூரான்

பி.கு.

1. கோயில் உண்டியில் பணம் போடும்போதோ, யாராவது உண்டியிலைக்குலுக்கி வரும்போதோ, நாம் கணக்கு கேடபதில்லை. சான்றோர்களிடம் கணக்கு கேட்காமல் இருப்பது ஒரு பண்பு என்று கூட கருதப்படுகிறது. 'காந்திக்கணக்கு' ஒரு தமிழ் சொலவடை என்றாலும், அதைப்பற்றி, அதன் இழிச்சொல் பொருளைப்பற்றி காந்திஜிக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். கணக்குத்தணிக்கையில் கடுமையான விதிமுறைகளை கட்டாயப்படுத்தின அவர், தான் பெற்ற நிதிக்கு ரசீது கொடுத்ததாக தெரியவில்லை. ஆரம்பகாலத்திலேயே,ஆட்டோக்ர்ஃப் போட பத்து ரூபாய் வாங்குவார். பெண்குழந்தைகள் மாட்டிக்கொண்டால்,நகைகளை கேட்டு வாங்கிவிடுவார். ஒரு பெண்மணியிடம், ஹார்ஸ்லி மலைக்குண்றில் தங்கியிருந்தபோது, அவரது மகனை கேட்டு வாங்கிக்கொண்டார். நாம் எப்படி சுகபிரம்மரிஷி ஆடையுடுத்தவில்லை என்று கவலைப்படுவதில்ல்லையோ, அவ்வாறு காந்தியின் கணக்கு கேட்கவேன்டியதில்லை என்று அக்கால சான்றோர்கள் முடிபு செய்தனர். அது வேறு யாருக்கும், திருமலை தேவஸ்தானம் உள்பட பொருந்ததாது. இது தெரியுமோ. தினந்தோறும் காலை திருமலையில், பெருமாளுக்கு கணக்குவழக்கு சொல்லப்படுகிறது.

2. கீதா: நன்றி. நாலு பேர் படிக்கிறா என்றால் எழுத ஆர்வம். ஒரு ஸெர்வரில் எழுதி, மற்றொரு ஸெர்வரில் பதித்து, கணிணியை ஒரு வகையாக பைபாஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்து போய் விடுகிறது.. பரவாயில்லை. மின் தமிழில் பலவிஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. தெரிந்ததை எழுத முடிகிறது. தண்டியலங்காரமும், டால்ஸ்டாயும், நேற்று வந்த ஆங்கில நூல்களையும் படிக்க வேண்டியிருப்பதால் (quadratic equations also, for Rukmini) இனி கொஞ்சம் இடை வெளி விட்டு எழுத முடியும் போல தோன்றுகிறது, தினந்தோறும் எழுதாமல். கீதா சொல்படி கேட்டு, சற்று பின்னோக்கி, சித்தரஞ்சன் கலாட்டா பற்றி எழுதுகிறேன், பிறகு,பாதுகாப்பு அமைச்சரகம். சரியா?

3. நான்காம் பத்து, இன்று புது இழையில்.

4. உங்கள் கருத்துக்கள் என் பெட்டியில் விழவில்லை. ஏன்? தேனியார் அனுப்பிய பிறகு தான்,பார்க்கமுடிந்தது.

Geetha Sambasivam 
2/3/10

இது தெரியுமோ. தினந்தோறும் காலை திருமலையில், பெருமாளுக்கு கணக்குவழக்கு சொல்லப்படுகிறது.//

சிதம்பரத்திலும் நடராஜருக்குக் கணக்குச் சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன்.
//ஒரு ஸெர்வரில் எழுதி, மற்றொரு ஸெர்வரில் பதித்து, கணிணியை ஒரு வகையாக பைபாஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்து போய் விடுகிறது//

வேர்ட் டாகுமெண்டில் எழுதிட்டு காப்பி, பேஸ்ட் பண்ணிடலாமே??


//டால்ஸ்டாயும், நேற்று வந்த ஆங்கில நூல்களையும் படிக்க வேண்டியிருப்பதால் (quadratic equations also, for Rukmini) இனி கொஞ்சம் இடை வெளி விட்டு எழுத முடியும் போல தோன்றுகிறது//

மெதுவாய், நிதானமாய் வாங்க. காத்திருக்கோம்.
_________________
சித்திரத்துக்கு நன்றி: http://www.inbaminge.com/t/v/Varavu%20Ettana%20Selavu%20Pathana/folder.jpg
இன்னம்பூரான்
06 05 2013