அன்றொரு நாள்: மே 6:
தலை கீழ்!
ராஜாஜி அவர்கள் பிரிட்டீஷ் சர்க்காருடன் காங்கிரஸ் செய்த ஏற்பாட்டின் படி, சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது, ஒரு டவாலியிடம் ஒரு கவரை கொடுத்து தபால் தலை ஒட்ட சொன்னார். ராஜாவும் தொங்கினார்! அந்த டவாலி தலை கீழாக ஒட்ட, ராஜாஜி, ‘ஏம்ப்பா! இந்த ராஜாவை கவிழ்க்க நாங்கள் எல்லாம் பிரம்ம பிரயத்தனம் செய்கிறோம். நீ ஒரு வினாடியில் கவிழ்த்து விட்டாயே’ என்றாராம். இது படித்தது. தபால் தலைகள் வரலாறு பேசும். நான் ஆறு/ஏழு வயதில் தொடங்கிய தபால் தலை சேகரிப்பு தொய்வில்லாமல் தொடருகிறது, எழுபது வருடங்களாக. தீப்பெட்டி லேபல் எத்தனை வைத்திருந்தேன். அபேஸ். நேற்று கூட ஃப்ளோரிடா, அரிஜோனா, ஒஹாயோ, நார்த் கரோலினா அரை டாலர்கள் பத்திரப்படுத்தினேன். நாலு வரி ஒப்பேத்தியாச்சு. விஷயத்திற்கு வருகிறேன்.
உலகிலேயே முதல் தபால் தலை மே 6, 1840 அன்று பயனுக்கு வந்தது, இங்கிலாந்தில். அதற்கு ‘பென்னி ப்ளேக்’ (Penny Black). தம்பிடி சவரனாக மாறிய மாதிரி, அன்று அதன் விலை ஒரு பென்னி. இன்று $565 வரை ஈபே ஏலத்தில் போவுது. முதல் உசாத்துணையில் அபரிமிதமான படங்கள். எல்லாம் மாட்சிமை தாங்கிய பிரிட்டீஷ் மஹாராணியிடம் தங்கியவை. பார்த்து மகிழவும். இந்தியாவின் முதல் தபால் தலை மே 6. 1854ல் வெளியிடப்பட்டது என்று விக்கிப்பீடியா சொன்னாலும், சிந்த் மாகாணத்தில் அதற்கு முன்னோடிகள் (சிந்தியா டாவ்க்) இருந்தன. இரண்டாவது உசாத்துணையில் இந்திய தபால் தலை வரலாறு உளது.
இன்னம்பூரான்
06 05 2012
உசாத்துணை:
|
No comments:
Post a Comment