Thursday, May 9, 2013

பாமரகீர்த்தி 2

>


பாமரகீர்த்தி 2
1 message




  1. பாமரனொருவர்
  2. Inline image 2

'ஆபத்சம்பந்துக்கு' என்ற சொல், முன்னறிவிப்பில்லாமல் வந்து உதவும் சமயசஞ்சீவியை சுட்டுகிறது. அத்தகைய மாந்தர்களை அன்றாடம் கண்டாலும், நாம் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இருந்தும், சில நிகழ்வுகள் காணக்கிடைக்கின்றன - டா.ராதாகிருஷ்ணன் ஒரு மாணவருக்கு உதவியது போல. நானும் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய அலுவல்கள் ஒரு டாக்டரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தன ~ எதிராளியாக! அதாவது என் கூற்றை எதிர்ப்பது அவருக்கிடப்பட்ட பணி. காலாவட்டத்தில் என் கூற்று ஏற்கப்பட்டது. அவரும் நண்பராயினார். நான் அரசு பணியில் அமர்வதும், அவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அத்தனை வயது வித்தியாசம். அவர் மற்றதொரு பணி ஏற்றுக்கொண்ட ஊரில் என் தந்தை வாசம். அவருக்கு பார்கின்ஸன் டிஸீயஸ் என்ற நிவாரணம் காணாத வியாதி. இந்த டாக்டரும் முடிந்த வரை அவரை மருத்துவரீதியில் கவனித்துக்கொண்டார். ஒரு நாள் சென்னையில் ஆளனுப்பி என்னை வரவழைத்து சொன்னது: 'இன்று ஹிந்துவில் வந்திருக்கிறது, ஒரு பிரிட்டீஷ் டாக்டர் மூளை அறுவை சிகிச்சை செய்து இந்த வியாதிக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் பணியில் வந்திருக்கிறார் என்று. அது டா.பி.ராமமூர்த்தியின் பிரிவு. அவர் என்னுடைய மாணவர். இந்த கடிதம் எடுத்துச் செல்லுங்கள்.'. இதே மனிதர் பத்து மாதங்கள் முன் என்னிடம் சொன்னது, 'தம்பி! நீ சொல்வது சரியென்றாலும் ஒத்து வராது. நீ சின்னப்பையன். உனக்கு அனுபவம் போதாது!' நான் மசியவில்லை அப்போது என்று கோபப்பட்டவர், அவர்! அவருடைய அறிவுரையினால், மள மள என்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து, பாரிச வாயு போன்ற இந்த பிணியால் பீடிக்கப்பட்டு இருந்த என் தந்தை, அதற்கு பிறகு ஒரு வாழைத்தோட்டம் போட்டார். பல வருடங்களுக்கு புனர்வாழ்வு. இந்த சமய 'சஞ்சீவி'யின் பெயர் டா. மாருதி ராவ். என்னே பொருத்தம்!

அன்பர்கள் யாவரும்மின் தமிழில், 'பாமரர்களின்
வரலாறுஎன்ற இலக்கிய வரவை தரவேண்டும் என்று மறுபடியும் விண்ணப்பம்.
அன்புடன், 
இன்னம்பூரான்
05 09 2011
Mohanarangan V Srirangam 
9/5/11

2011/9/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அருமையான அறிமுகம், மெருகான நடையில், மாருதிராவ் என்றும் நினைவில் பதியும் விதத்தில். இது போல் தொடராகப் பலர் பற்றியும் எழுதினால் ஒரு நல்ல தொகுப்பாக ஆகும்.
Innamburan Innamburan <innamburan@gmail.com>
9/5/11

நன்றி பல. ஶ்ரீ. ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்,

பாமர கீர்த்தி தான் சமூகத்தின் உண்மையான வரலாறு என்று கருதுகிறேன்.
Mohanarangan V Srirangam 
9/5/11


நன்றி பல. ஶ்ரீ. ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்,

பாமர கீர்த்தி தான் சமூகத்தின் உண்மையான வரலாறு என்று கருதுகிறேன். 


மிக அழகான வாக்கியம் ஐயா இது. -- “பாமர கீர்த்திதான் சமூகத்தின் உண்மையான வரலாறு”.  

ஆங்கிலத்தில் சொன்னால் 

Micro-history forms the real history of the society as such. 

இதை நிச்சயம் தேசியம் இழையில் மேற்கோள் காட்டுவேன். அனுமதி உண்டுதானே. 

Innamburan Innamburan <innamburan@gmail.com>
9/5/11

தாராளமாக. நானே பொது சொத்து அல்லவா!

Subashini Tremmel
9/5/11

இந்தப் புதிய கருத்துக்கு நல்வரவு!

-சுபா
coral shree 
9/5/11

நல்ல ஆரம்பம் ஐயா. தொடரலாம் அருமையாக.நன்றி. வணக்கம்.
shylaja 
9/5/11

 இ சார் .ஜனரஞ்சகம்!  தொடரலாம்..நானும் வரேன்.

____________
innamburan
08 05 2013

No comments:

Post a Comment