Wednesday, May 8, 2013

’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34




’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34
1 message

Innamburan S.Soundararajan Wed, May 8, 2013 at 6:04 PM


’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34 
Inline image 1

மறு நாள் அஸன்சால் ஸ்டேஷனில் ஆரவாரம். ரயில்வண்டிக்கதவை திறந்து கொண்டு நேருஜி. 'அஸால்ட்டா' நின்றுகொண்டு இருந்தார். தற்காலம் போல கெடுபிடிகள் கிடையாது.
திவாஜீ ஆடிட் பூசலைப் பற்றிக்கேட்கிறார். நேரு மீட்டிங்கை ஆடிட் பகிஷ்காரம் செய்தது, அழைப்பு இல்லாததால். என்னை மட்டும் தான் அழைத்திருந்தார்கள் என்றது பிறகு தெரிய, ஜெனெரல் மானேஜருக்கு ஒரு கண்டனக்கடிதம் எழுதினேன். தீர விசாரித்து, எங்கள் ஆஃபீஸுக்கு வந்து, ஆடிட் சமூகத்திடன் மன்னிப்பு கேட்டார், அந்த பெரிய மனிதர்.
பூசல் தணிந்தது; கிதாப்பு ஏறியது.
ரயில்வே ஆடிட் ரிப்போர்ட்டில், பலவருடங்களாக சித்தரஞ்சன் தொழிற்சாலையைப்பற்றி குறை கூறபடவில்லை என்ற சாதனையும் முறிந்தது. மூன்று ஆடிட் பாரா, முதல் வருடமே. அதில் ஒன்று ஒரு தீ விபத்து. அது ஆண்டவன் செயல் என்று அவர்கள் கூற்று. அது மனிதனின் பொறுப்பற்ற செயலின் விளவு என்று என் ஆதாரங்கள்.
வேலை மிக குறைவாக இருந்தது; தொழிற்சாலையிலே மணிக்கணக்காக இருந்து, நுணுக்கங்கள் கற்று வரும்போது, ஜி.எம். கூப்பிட்டார். 'ஒரு முக்யமான பாகம், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வாங்குகிறோம்; அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். உள்நாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சலுகை கொடுத்து, வளர்க்க விரும்புகிறோம். நீயோ மடியில் இருக்கும் தேள் மாதிரி கொட்டுவாயோ? என்று கவலைப்படுகிறார்கள் என்றார். அக்காலம், டி.ஜி.டி.டி (DGTD) என்ற துறை இத்தகைய சலுகைகள் பற்றி கொள்கை அறிவித்திருந்தது. அவற்றை திரட்டி அவரிடம் கொடுத்தபோது தான், வேறு யாரும் அது பற்றி தகவல் தரவில்லை என்று நன்றி கூறினார். ஆடிட் தேள் தப்பு செய்தால் தான் கொட்டும் என்று சொல்லி விட்டு, ஓடி வந்து விட்டேன்.
டபிள் சார்ஜும், நானும் கூடப்பிறந்தவர்கள். காசிக்கு அருகில் உள்ள மற்றொரு தொழிற்சாலை ஆடிட் அடிஷனல் சார்ஜ். அந்த கதைக்கு பிறகு வருகிறேன். படா டமாஷ்!
சித்தரஞ்சனிலிருந்து என்னை டில்லியில் பாதுகாப்பு அமைச்சரகத்தில் அண்டர்செக்ரெட்டரியாக (டைம் லைன் 1962) மாற்றினார்கள். 'இன்றே வருக.' 'நேற்றே வருக.' என்ற வகையில் தந்திகள் பறந்தன. என் பையன் படு ஜுரம்; ஆஸ்பத்திரியில். டில்லியில் லேசில் வீடு கிடைக்காது. தவித்து போனேன்.
ஒரு நாள் ஆஸ்பத்திரியிக்கு வந்து என் பையனைப் பார்த்த ஜி.எம்., 'இவன் தேறியபிறகு, குடும்பத்தை சென்னைக்கு அனுப்பிவிட்டு, வீட்டுச்சாவியை என்னிடம் கொடுத்து விட்டு, டில்லிக்குப்போ; நான் சாமான்களை கொணருகிறேன்' என்றார். அப்படியே, எனக்கு வீடு கிடைத்த பிறகு,தன் தனிவண்டியில் (ஸலூன்) கொணர்ந்தும் கொடுத்தார். அத்துடன் விடவில்லை. ஒரு வருடம் கழித்து, சித்தரஞ்சனில் ஒரு புதிய வகை எஞ்சின் தயாரிப்பைத் தொடக்கிவைக்க, நேருஜி வந்த போது, ' ...as an old guard of CLW...'நீயும் வரவேண்டும் என்ற அழைப்பும், ரயில்வே பாஸ்ஸும் அனுப்பினார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சான்றோகளின் நடைமுறை எல்லாம் படிப்பினை அல்லவோ!
இன்னம்பூரான்


No comments:

Post a Comment