Monday, May 6, 2013

அன்றொரு நாள்: மே 7, 8, 9: எல்லாமே மூணு தான்! மும்முனை போர்.

அன்றொரு நாள்: மே 7, 8, 9: எல்லாமே மூணு தான்! மும்முனை போர்.

Innamburan Innamburan Wed, May 9, 2012 at 11:52 PM

ன்றொரு நாள்: மே 7, 8, 9:
எல்லாமே மூணு தான்!
மும்முனை போர்.
மூன்று கழுதைகள்: ஹிட்லர், முஸோலினி, டோஜோ.
மூன்று களிறுகள்: சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஸ்டாலின்

இரண்டாவது உலக மஹா (என்ன ‘மஹா’ வேண்டிக்கிடக்கு: மண்ணாங்கட்டி!) யுத்தம் மும்முரமாக மும்முனைகளில் நடந்து ஓய்ந்து, ஏப்ரல் 30, 1945 அன்று ஹிட்லர் தன்னையும், பலநாள் ஆசைக்கிழத்தியும், ஒரு நாள் மனைவியும் ஆன ஈவா ப்ரானையும் மாய்த்துக்கொள்ள, இஸ்பேட் சரவாதிகாரி அட்மிரல் கார்ள் டொயனிட்ஸ் நேசத்துருப்புகளிடம், மே 7 1945 அன்று, ரீம்ஸ் என்ற இடத்தில் சரணடைந்தான். மறு நாள் (மே 8.1945) அன்று பெர்லினில் ஆவணப்படுத்தப்பட்டது. மூன்றாம் நாள் (மே 9, 1945) ஸோவியத் ரஷ்ய திருவிழா.
ஒரு கொசுறு:
இந்த ‘உறையூர் சுருட்டு‘ புகழ் சர்ச்சிலுக்கு மதியம் இரண்டு மணி வரை துயில் கொள்ளும் வழக்கம். காலை நாலு மணி வரை நெட்டி வேலை, சினிமா, சிங்கிள் மால்ட்! அதான். அவருடைய ஆணை: நான் தூங்கணும். கெட்ட செய்தி வந்தா எழுப்பு, உடனே. நல்ல செய்தி வந்தா, அது காத்திருக்கட்டும். அவங்களும் எழுப்பவில்லை. அதை அவரும் சிலாகித்து... 
ராஜா ராணியுடன், சுருட்டைப்பிடித்துக்கொண்டு, ஐயா பக்கிங்ஹாம் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து தரிசனம் தராரு, ராஜகுமாரி குட்டிகள் இரண்டும், ஜனங்கள் ஊடே புகுந்து விளையாடுதுங்க. பத்து லக்ஷம் மக்கள் கூடி குதூஹலமாக ஆரவாரம் செய்கிறார்கள். சர்ச்சிலின் சொற்பொழிவில் உணர்ச்சியும், கடமையும் ஒலித்தது. மக்களிடம் ‘ஆண்டவன் துணை’ என்றார். அவர்கள், ‘சர்ச்சில் ஜாலி பையன் என்று பாடினார்கள். இது மே 8, 1945.
ஜப்பான் சரண்டர் உரிய காலத்தில் வரலாம். 
அமெரிக்காவில், ஜனாதிபதி ஹாரி ட்ரூமனுக்கு மணி விழா, இன்று: மே 8, 1945. நம்ம மிஸெளரிக்காரர்.(இங்கு விடுமுறை). வாகை சூடிய பெருமிதத்தை தன்னுடைய முன்னோடியான அமரர் (ஏப்ரல் 12, 1945) ரூஸ்வெல்ட்டுக்கு அர்ப்பணித்தார். தேசீயக்கொடி ஒரு மாதகாலம், அரைக்கம்பத்தில். ஷிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், மியாமி, ந்யூ யார்க் எல்லாம் தடபுடலான கொண்டாட்டங்கள்.
நான் மே 7,8, 9 என்று போட்டால் 72 மணி நேரம் அல்ல. ந்யூ யார்க்கில் 8ம்தேதி, ரஷ்யாவில் 9ம் தேதி. (நான் மே 8 என்று எழுதும் போது, 9ம் தேதி ஹிந்து இதழ் வந்தாச்சு அல்லவா.) ஆனால்.ஸ்டாலினும் சந்தேஹப்பிராணியா? பிகு பண்ணினார். ரஷ்யாவில் வாணவேடிக்கையும், கூத்து நடனமுமாக மெகா கொண்டாட்டம்.
உசிலம்பட்டி: தெருத்தெருவாக ஊர்வலம். சொல்லப்போனால், உசிலம்பட்டி ஒரு மிலிட்டரி செண்டர். பிரமலை கள்ளர்கள் தலைமுறை, தலைமுறையாக ராணுவம். உசிலம்பட்டியில் மாரி பிஸ்கெட், சார்லி பிஸ்கெட் எல்லாம் குடிசைத்தொழில். அந்தக்காலம், இலவச பிஸ்கட் காலம். வாரி வழங்கினார்கள். நானும் என் பங்குக்கு அதை சாப்பிட்டுவிட்டு, நேதாஜி பிரச்சாரம் செய்தேன். மென்மையாக கடிந்தவர்கள், கண்டும், காணாமலும், விட்டு விட்டார்கள்.
இன்னம்பூரான்
7/8/9/ -05 -2012
Inline image 1
ஜெர்மனி சரண்டர்
உசாத்துணை:  
The BBC asked the public to contribute their memories of World War Two to a website between June 2003 and January 2006. This archive of 47,000 stories and 15,000 images is the result.

Geetha Sambasivam Thu, May 10, 2012 at 1:44 AM

ஆஹா, இப்படி எல்லாம் எங்க சரித்திர ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருந்தால் சரித்திரத்தில் எங்கேயோ போயிருப்பேன். என்ன அழகாயும், சுருக்கமாயும் முக்கியமான நிகழ்வுகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.  படித்தது தான்.  இப்போது தான் விபரமாய்த் தெரிந்து கொள்கிறேன்.  மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் விஷயங்கள்.

2012/5/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>

ன்றொரு நாள்: மே 7, 8, 9:
எல்லாமே மூணு தான்!
மும்முனை போர்.

Subashini Tremmel Thu, May 10, 2012 at 8:00 AM

2012/5/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ன்றொரு நாள்: மே 7, 8, 9:
எல்லாமே மூணு தான்!
மும்முனை போர்.
மூன்று கழுதைகள்: ஹிட்லர், முஸோலினி, டோஜோ.
மூன்று களிறுகள்: சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஸ்டாலின்

இரண்டாவது உலக மஹா (என்ன ‘மஹா’ வேண்டிக்கிடக்கு: மண்ணாங்கட்டி!) யுத்தம் மும்முரமாக மும்முனைகளில் நடந்து ஓய்ந்து, ஏப்ரல் 30, 1945 அன்று ஹிட்லர் தன்னையும், பலநாள் ஆசைக்கிழத்தியும், ஒரு நாள் மனைவியும் ஆன ஈவா ப்ரானையும் மாய்த்துக்கொள்ள, இஸ்பேட் சரவாதிகாரி அட்மிரல் கார்ள் டொயனிட்ஸ் நேசத்துருப்புகளிடம், மே 7 1945 அன்று, ரீம்ஸ் என்ற இடத்தில் சரணடைந்தான். மறு நாள் (மே 8.1945) அன்று பெர்லினில் ஆவணப்படுத்தப்பட்டது. மூன்றாம் நாள் (மே 9, 1945) ஸோவியத் ரஷ்ய திருவிழா.
ஒரு கொசுறு:
இந்த ‘உறையூர் சுருட்டு‘ புகழ் சர்ச்சிலுக்கு மதியம் இரண்டு மணி வரை துயில் கொள்ளும் வழக்கம். காலை நாலு மணி வரை நெட்டி வேலை, சினிமா, சிங்கிள் மால்ட்! அதான். அவருடைய ஆணை: நான் தூங்கணும். கெட்ட செய்தி வந்தா எழுப்பு, உடனே. நல்ல செய்தி வந்தா, அது காத்திருக்கட்டும். அவங்களும் எழுப்பவில்லை. அதை அவரும் சிலாகித்து... 
ராஜா ராணியுடன், சுருட்டைப்பிடித்துக்கொண்டு, ஐயா பக்கிங்ஹாம் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து தரிசனம் தராரு, ராஜகுமாரி குட்டிகள் இரண்டும், ஜனங்கள் ஊடே புகுந்து விளையாடுதுங்க. பத்து லக்ஷம் மக்கள் கூடி குதூஹலமாக ஆரவாரம் செய்கிறார்கள். சர்ச்சிலின் சொற்பொழிவில் உணர்ச்சியும், கடமையும் ஒலித்தது. மக்களிடம் ‘ஆண்டவன் துணை’ என்றார். அவர்கள், ‘சர்ச்சில் ஜாலி பையன் என்று பாடினார்கள். இது மே 8, 1945.
ஜப்பான் சரண்டர் உரிய காலத்தில் வரலாம். 
அமெரிக்காவில், ஜனாதிபதி ஹாரி ட்ரூமனுக்கு மணி விழா, இன்று: மே 8, 1945. நம்ம மிஸெளரிக்காரர்.(இங்கு விடுமுறை). வாகை சூடிய பெருமிதத்தை தன்னுடைய முன்னோடியான அமரர் (ஏப்ரல் 12, 1945) ரூஸ்வெல்ட்டுக்கு அர்ப்பணித்தார். தேசீயக்கொடி ஒரு மாதகாலம், அரைக்கம்பத்தில். ஷிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், மியாமி, ந்யூ யார்க் எல்லாம் தடபுடலான கொண்டாட்டங்கள்.
நான் மே 7,8, 9 என்று போட்டால் 72 மணி நேரம் அல்ல. ந்யூ யார்க்கில் 8ம்தேதி, ரஷ்யாவில் 9ம் தேதி. (நான் மே 8 என்று எழுதும் போது, 9ம் தேதி ஹிந்து இதழ் வந்தாச்சு அல்லவா.)

அமர்க்களம் :-)

சுபா

கி.காளைராசன் Thu, May 10, 2012 at 11:24 AM

ஒரு கொசுறு:
இந்த ‘உறையூர் சுருட்டு‘ புகழ் சர்ச்சிலுக்கு மதியம் இரண்டு மணி வரை துயில் கொள்ளும் வழக்கம்.

அதென்ன உறையூர் சுருட்டு?
உறை பற்றியும் உரைக்க வேண்டுகிறேன்.

 கெட்ட செய்தி வந்தா எழுப்பு, உடனே. நல்ல செய்தி வந்தா, அது காத்திருக்கட்டும்.

ஆகா அற்புதமான அரசியல்வாதி.

அவங்களும் எழுப்பவில்லை.

உசிலம்பட்டி: தெருத்தெருவாக ஊர்வலம். சொல்லப்போனால், உசிலம்பட்டி ஒரு மிலிட்டரி செண்டர். பிரமலை கள்ளர்கள் தலைமுறை, தலைமுறையாக ராணுவம். உசிலம்பட்டியில் மாரி பிஸ்கெட், சார்லி பிஸ்கெட் எல்லாம் குடிசைத்தொழில். அந்தக்காலம், இலவச பிஸ்கட் காலம். வாரி வழங்கினார்கள்.
காளையார்கோயில் வட்டம், ஒச்சந்தட்டு என்ற கிராமத்திற்குத் தேர்தல்பணிக்காகச் சென்றிருந்தேன்.  ஓட்டுப்போட்டபின் ஒவ்வொருவராக என்னிடம் வந்து “பொரியும் போண்டா“வும் கேட்டனர்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. முகவர் (ஏஜெண்ட்) களிடம் கேட்டேன்.
“எல்லா வேட்பாளர்களும் ஒன்றாகச் சேர்ந்து , ஒட்டளித்த பின் எல்லோருக்கும் போண்டாவும் பொரியும் கொடுப்போம்“ என்றார்.  எதுவானாலும் 200 மீ.க்குள் இருக்கக் கூடாது என்று நினைத்து அப்படியே ஒரு சுற்று சுற்றி வந்தேன்.  தூரத்தே ஒரு மரத்தடியில் வைத்து வாரி வழங்கிக் கொண்டிருந்தனர்.

அன்பன்
கி.காளைராசன்

_________________________________________________________________

No comments:

Post a Comment