Sunday, May 5, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -29:' டெலிஃபோன் ஆடிட்’



தணிக்கை செய்வதில் தணியா வேகம் -29:' டெலிஃபோன் ஆடிட்’:

Innamburan S.Soundararajan Sun, May 5, 2013 at 6:32 PM


29 01 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -29:' டெலிஃபோன் ஆடிட்
Inline image 1


அரசின் கையிருப்பு ஒரு தகவல் சாகரம். எண்ணற்ற தகவல்கள் தாறுமாறாக குவிந்திருப்பதாலும்தணிக்கைத்துறை எல்லாவற்றையும் தணிக்கை செய்வது இயலாது என்பதாலும்அநேக அரசு நடவடிக்கைகள் தணிக்கையிலிருந்து தப்பக்கூடும். அதை கட்டுபடுத்தஎல்லா அலுவலகங்களின் பட்டியல் அரசு தரவேண்டும் என்பது விதி. மதிப்பார்களோஅதற்குத்தான் டெலிஃபோன் ஆடிட் உருவாக்கினேன். டைம்லைன்: 1959.

தூத்துக்குடியில் ஒரு தணிக்கை நடந்துகொண்டிருந்தது. டெலிஃபோன் டேரக்டரியில் Regional Officer (Sails) என்றொரு அலுவலகம். அது ஆடிட் செய்யபட்டதாக வரலாறு கூறவில்லை. ஃபோன் செய்து நாங்கள் ஸர்ப்றைஸ் ஆடிட் செய்யப்போவதாக சொன்னேன். 'வருகஎன்றார்அதன் அதிகாரிபட்டாச்சார்யா என்ற பெங்காலி அதிகாரி. சின்ன ஆஃபீஸ். இரண்டு மணி நேரத்தில் தணிக்கை முடிந்து விட்டது. அவருக்கும் மகிழ்ச்சி. ஏனென்றால்அவர் நேர்மையான அதிகாரி. டெக்னாலஜிஸ்ட். அலுவலக விஷய்ங்கள் தெரியாது. முன்னின்று. சிறிய தவறுகளை நீக்கினார். பிறகுஎங்கள் வேலையை நீங்கள் பார்க்கவேண்டும் என்று அவர்களது சிறிய கப்பலில் [trawler] கடலுக்குள் அழைத்து சென்று எல்லாம் விளக்கினார்.

நம்ம் ஆடிட் புத்தி எங்கே போகும்டீஸல் வரத்துப்போக்கை அலசினோம், நடுக்கடலில். Nothing like visual audit. அதன் பயனாக,டீஸல் வாங்குவது/அதை வைத்து கப்பலை இயக்குவது/ செலவு எழுதுவது ஆகிய படிகளை ஆய்வு செய்துசில மாற்றங்களால் [fine tuning] சிக்கனம் கடைப்பிடிக்கலாம் என்று நாங்கள் சொன்னதை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட அவர் எழுப்பிய வினா: நான் அதிக்ப்படி செலவு செய்தாலும்எனது முறை அரசினால் அங்கீகரிக்கபட்டதுநீங்கள் சொல்வதோ புதிது. எங்கள் தலைமை ஆஃபீஸ்க்காரங்க குட்டுவார்கள். அவர் சொல்வது யதார்த்தம். 'இது தான் ஆடிட் நோட்எனவேஅவர்கள் சொல் படி செய்யத்தொடங்கிவிட்டேன்என்று எழுதுங்கள் என்றேன். ஆனால்அந்த நோட்டை எழுதியதேஅவர் தான். விஷயம் புரிந்துகொண்டதாலும்டெக்னிகல் மொழி அவரிடம் இருந்த்தாலும்நல்லதே நடந்த்தது. சுருங்க்ச்சொல்லின், 'குரங்கு பிடிக்கப்போய். பிள்ளையார் பிடிக்கப்பட்டது!

பிற்காலம்அவர் சென்னையில் வீட்டுக்கு வந்ததும்அவரது குடும்பமும்என் குடும்பமும் நண்பர்களாக ஆனதும் போனஸ்
இன்னம்பூரான்
29 01 2010

இன்றைய அப்டேட்:

தமாஷ் எல்லாம் கூட நடக்கும். தீவட்டிக்கொள்ளைக்காரன் மாதிரி நோட்டீஸ் கொடுத்து ஆடிட் செய்வது தான் வழக்கம். ஒரு நாள் ஒரு பெரியவர் என்னை பார்க்க வீட்டுக்கு வந்தார், கண்ணீர் மல்க. ஆடிட் வரப்போவதால், அவருடைய மகள் கல்யாணத்துக்கு லீவு தரமாட்டேன் என்று சொல்லி விட்டாராம், தாசில்தார். எல்லாம் அலசியபிறகு, ஆடிட் செய்வதை ஒத்திப்போட்டோம்! தாசில்தார் அத்தனை முரடு.
சித்திரத்துக்கு நன்றி:http://www.stemtechnews.com/wp-content/images/telephone.jpg

இன்னம்பூரான்
06 05 2013

No comments:

Post a Comment