28 01 2010
தணிக்கை செய்வதில் தணியா வேகம் -28:'டெக்னிக்’
தணிக்கையாளன் செய்நன்றி எதிர்பார்க்கக்கூடாது. அவன் நிந்தனையிலிருந்தும், எள்ளலிருந்தும் தப்பமுடியாது. கர்மா தியரில் அவனுக்கு அசையா நம்பிக்கை வேண்டும். ஏனென்றால், அவனிடம் யாதொருவிதமான அதிகாரமும் கிடையாது. குற்றம் காணலாம்.Who cares? கெஞ்சிக்கூத்தாடி, ஏதோ ஒரு பதில் வாங்கியாக வேண்டும்; பதிலையும் இணைத்துத்தான் ஆடிட் கண்டுபிடித்த விஷயங்களை வெளியிடவேண்டும் என்று மரபு.
இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட் அனுப்பினால், பதில் போட மாட்டார்கள்; முக்யமான அம்சங்களை ட்ரஃப்ட் ஆடிட் பாரா என்று தலைப்பு இட்டு, அரசு காரியதரிசிக்கு அனுப்புவார்கள், ஆறு வாரக்கெடு வைத்து; சிலசமயம், ஆறு மாதத்திற்கு பிறகும் பதில் வராது. அதற்குள், ஆடிட் ரிப்போர்ட் அளிக்கவேண்டிய காலக்கெடுவும் நெருங்கிவிடும். ஆக மொத்தம், பதில் சொலவதில் கால தாமதப்படுத்தி, ஒரு ஆடிட் பாராவை அலக்கழிக்கமுடியும்.
இப்படியாக பாஸ்ஸெஞ்சர் வண்டி அன்னநடை போடுகிறதே என்றால், எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்பார்கள். இத்னால் தான், லக்ஷக்கணக்கான நிர்வாகக்குற்றங்களை வடிகட்டி, வடிகட்டி, தயாரிக்கப்படும் ஃபில்டர் டிக்காக்ஷமன் தான் ஆடிட் ரிப்போர்ட். ஒரு சொல் கூட தவறக இருக்காது. அந்த அளவுக்கு, பைத்தியக்காரன் சட்டையைக் கிழித்துக்கொள்வது போல, ஒருவருக்கு நாலு பேர், ஆதாரங்களை சரி பார்த்த பிறகு தான், அதற்கு விடிவு காலம்.. இத்தனையும் ஆனபிறகு,, நாடாளும் மன்றத்தின் பொதுக்கணக்குக்குழுவின் முன், ஆடிட் சொல்வது தப்பு என்று சத்தியப்பிரமாணம் செய்வார்கள். அதை எதிர்நோக்கத்தான் 'சாவி' [KEY] ஆடிட்பாரா பூட்டு என்றால். இந்த ஆதாரக்கூட்டுச்சோறு தான் சாவி. ஒரு பக்கப்பூட்டுக்கு, 50 பக்க சாவி இருக்கும். அதிலிருந்து மேற்க்கோள் காட்டினால், சாவி கொடுக்கவில்லையே என்பார்கள்!
இப்போ புரியதா, ஏன் அரசு கடியாரம் மணி காட்டுவதில்லை என்று?...
இன்னம்பூரான்
பி.கு. ஆறு வாரக்கெடு வைத்து ட்ரஃப்ட் ஆடிட் பாரா அனுப்பும்போது, 'இதற்கு ரிமைண்டர் வராது' என்று முன்கூட்டி சொல்வது என் வழி. அதற்காக, நான் பெற்ற நிந்தனைகள் எக்கச்சக்கம்!
Today's Update:
'...JAIPUR: Comptroller and auditor general Vinod Rai on Saturday said that reports of the CAG can be accessed by the public at every stage, including when the draft report is ready, through an Right To Information application.
"Under the law we are obliged to share information if someone files an RTI," Rai said here and added that whenever an audit query is raised if someone files an RTI the CAG is bound to give away the information, and this can happen at any stage of the audit, even at the point when the draft report is ready. Rai was speaking here at the inauguration of the International Centrefor Environment Audit and Sustainable Development. He said that the CAG office never has indulged in any selective leaks as it is duty bound to maintain secrecy till the report is tabled in Parliament. '
*
Innamburan
05 05 2013
|
No comments:
Post a Comment