Showing posts with label வள்ளலார். Show all posts
Showing posts with label வள்ளலார். Show all posts

Saturday, August 1, 2015

நாளொரு பக்கம் 98

நாளொரு பக்கம் 98
Thursdayday, the 3rd July, 2015

‘வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்
மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி
மயில் குயிலாச்சுதடி’
-வள்ளலார்

மனம் மாறினால், அறிவு குலைந்தால், உணர்வு மங்கினால், நினைவாற்றலை இழந்தால், விரும்பத்தகாத வேட்கை ஏற்பட்டால், ஒழுக்கம் கெட்டால், நடவடிக்கை அடாவடியானால், செயல் தடுமாறினால், அந்த நபரின் மனோபாவத்தைக் குறை கூறுகிறோம். அவருடைய மனம் மோனத்தை நாடினால் சித்தபிரமை என்கிறோம். அறிவு, சராசரி தேடலைத் தவிர்த்து, விவேகத்தை நாடினால், பித்தன் என்கிறோம். வலது பக்கம் போவதை இடது பக்கம் தேடுகிறோம். இடது பக்கம் போவதை வானத்தில் தேடுகிறோம். அதைத் தான் மறை ஞானமாக இராமலிங்க அடிகளார், அருளினாரோ மேலே!

‘சுத்த சன்மார்க்கமே அகத்தில் இருந்துதானே தொடங்கப்பெறவேண்டியுள்ளது.‘ என்ற சுகபிரும்ம வாக்கு இது எனலாம். இதிகாச சுகபிரும்மத்தின் மூலமாக உன்மத்தத்தின் ஆதிமூலம் அறிய ஒரு வாய்ப்பு கிட்டியது. உன்மத்தம் தலைக்கேற, ஏறவே, அதன் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம். அதற்கு முன் திருமூலரின் இலச்சினை:

ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.  2751 
-(திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.)
-#-

Thursday, October 3, 2013

வள்ளலார்: அன்றொரு நாள்: அக்டோபர் 5




அன்றொரு நாள்: அக்டோபர் 5
Innamburan Innamburan Wed, Oct 5, 2011 at 2:36 AM



அன்றொரு நாள்: அக்டோபர் 5
I. அக்டோபர் 5, 1823 வள்ளலார் எனப்படும்  சிதம்பரம் ராமலிங்க அடிகளார், ‘சம்புபக்ஷ சிருஷ்டியாக’ கருவில் அமைந்து, உரிய காலத்தில் அவதரித்த திரு நாள். அருட்பெரும்சோதியின் தனிப்பெருங்கருணையை போற்றி வணங்குவோமாக. இயன்றவரை அந்த நற்பண்பை கடைப்பிடிப்போமாக. எனக்கு நானே சொல்லிக்கொள்வது: மணிமேகலையின் அமுதசுரபியை பற்றி போகுமிடமெல்லாம் பேசு.
மின் தமிழில் மடலாட துணிந்த புதுசு. ‘வானத்தில் மயிலாடக்கண்ட’ வள்ளலாரின் திருவருட்பா ஆறாம் திருமுறையை பற்றி எழுதப்போய், செம்மையாக தர்ம அடிகள் வாங்கிக்கட்டிக்கொண்டேன். வசமாக மாட்டிக்கொண்டேன். ஓடப்பார்த்தேன். ஆனால், சிவப்பழமாகத் திகழ்ந்தத் தமிழ்தென்றல் திரு.வி.க. அவர்கள்
"... சமரசக் கோயிலை (வடலூர் சபை) அமைத்துச் சென்றார். இங்கேயாதல் சுவாமிகள் கொள்கை ஆட்சியிலிருக்கிறதா? ஈங்கும் வழிப்பேய் புகுந்து தன்னாட்சி செலுத்துகிறது. இந்தக் கொள்ளைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது?...” (இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் (1955) ப.34) 
என்று எழுதியதை நினைத்துக்கொண்டேன். கூடவே பயணிப்பது வள்ளலாரின் ஆன்மிக பொதுவுடமையும் பொது கடமையும்: 
"பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச வொழுக்கம் சமயவொழுக்கம் சாதியொழுக்கம் செய்கையொழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே ஜீவ காருண்யம்.”
ஆங்கிலத்தில் ‘Ecumenical’ என்ற கிருத்துவம் சார்ந்த சொல் ஓரளவுக்கு மேற்கண்ட சமரச சன்மார்க்கத்தைக் குறிக்கிறது எனலாம், மொழி பெயர்ப்பு நிர்பந்தங்கள் ஏற்பட்டால். மற்றபடி, வள்ளலாரின் சன்மார்க்கத்தை உபநிஷத்துக்களில் தான் காண இயலும். 
அருள்பெறில் துரும்பும்  ஓர் ஐந்தொழில் புரியும் 
தெருள்இது எனவே செப்பியசிவமே (983~4) 
என்று மனமுருக இசைத்து விட்டு,
 "சாதி சமயச் சழக்கைவிட்டேன் அருட்
 ஜோதியைக் கண்டேனடி – அக்கச்சி”
(ஆறாம் திருமுறை - அக்கச்சி 129) 
என்று ஒரு தொன்மை சார்ந்த புறப்பாடு செய்தால்,‘கர்நாடகங்கள்’ ஏன் சண்டைக்கு வரமாட்டார்கள்? அதுவும் அருட்பா” தொகுக்கப்பட்டு முதல் ஐந்து திருமுறைகள் 1867இல் வெளிவந்தது; ஆறாம் திருமுறை அவரது மறைவிற்குப் பின்பு (1888) வெளிவந்தது என்ற நிலையில்!
என்ன? வள்ளலாரை பற்றி பேசாமல் என்னன்னமோ பேசிண்டு? என்றா கேட்கிறாய்? எல்லாம் ‘கருடா சுகமா?’ என்கிற கதை தான். நம்ம இழையிலே குழைத்து குழைத்து எழுதலாம். யார் கேட்கப்போகிறார்கள்? என்கிற அசட்டு தைரியம் தான்.அதுவும் ஒரு தனிப்பகுதி அமைத்து! சங்கு கிடச்சா பூம்!
நிஜமான தைரியம் என்ன தெரியுமா? வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார்களா? இவ்வுலகை உய்விக்க வந்த வள்ளலாரின் சரிதை படிக்க உசாத்துணை யாதும் கொடுக்கவில்லை. ஆதாரஸ்ருதி மட்டும் உளது.படிக்கவும்.
***
II. வள்ளலாரின் ஆன்மிக பொதுவுடமையும் பொது கடமையும்! இதில் ஆன்மிகம் எங்கு வந்தது? பார்த்தீர்களா? ஆன்மிகம் என்ற ஒரு சொல் போதும், வாதப்பிரதிவாதத்தை உரமிட்டு, எரு போட்டு, வளர்க்க. கோள் (மேற்கோள், ஐயா!) சொல்வது என்று சர்ச்சையை துவக்கி விட்டால், பட்டி மன்றம் துண்டுபட்டு, துகள் மன்றமாக துள்ளிக்குதிக்கும்!
எனக்கு ஆன்மிக வாதப்பிரதிவாதங்கள் செய்யத்தெரியாது.அவற்றை கேட்டு திகைத்துப்போய் நின்றதுண்டு. எந்த ஹிதோபதேசத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். பிச்சு உதறி விடுவார்கள். ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். ‘தர்மம் சர’ என்று சொன்னால் போதும். விசிஷ்டாத்வைத/அத்வைத/த்வைத/முந்தைய.பிந்தைய ஹிந்து மார்க்கங்கள்/பெளத்தம்/ சமணம்/கிருத்துவம்/ இஸ்லாமியம் (சாக்கிரதையாய்)/ குணங்குடி மஸ்தான்/தாயுமானவர்/அருணகிரி நாதர்/வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் வகையறாவின் மூலாதாரங்களை ‘கொழு கொழு கன்றே! கன்றின் தாயே’ என்று பிடித்துக்கொண்டு ‘இறை’ தேடும் வைபவங்கள் நேர்த்திக்கடன்கள் போல் நிறைவேறும். கிட்ட கிடு கிடு வென்று தொடங்கி, போகிற போக்கில், கூரத்தாழ்வார்,குரு நானக், சேஷாத்ரி ஸ்வாமிகள், கலீல் கிப்ரான், கபீர் தாஸ்,ஶ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர்,ஶ்ரீ அரவிந்தர்,அன்னை,ஶ்ரீரமணர், ஜேகே, யூஜிகே இவர்கள் எல்லாரையும் ஒரு பிடி பிடித்து, குலுக்கி விட்டு,ஹாய்யா, சாவகாசமாக வந்து பார்த்து,வள்ளலார் வாழ்ந்து மேன்மை படுத்திய தருமமிகு சென்னையில் அதருமம் மிகுந்து விட்டது என்று சொல்லிக்கொள்கிறார்களாம். அந்தோ! பரிதாபம்!
அத்துடன் விட்டதா?, அருள் வாக்காளர்களும்,ஆஷாடபூதிகளும்,இஷ்டதேவதை சித்தர்களும்,ஈசான்ய நோக்கர்களும், உழக்கு மொள்பவர்களும், ஊருக்குபதேசிகளும்,எடுத்து எறிபவர்களும், ஏமாந்த சோணகிரிகளும், 'ஐயர்களும்', ஒத்தூதிகளும், ஓங்கியுரைப்பர்களும் நிறைந்த நம் நன்னாட்டில் ஆயிரங்கட்டி வராகனுக்கும் சல்லிக்காசுக்கும் தாரதம்யம் கண்டீரோ?
இடம், பொருள், ஏவல் கருதி சில கருத்துக்கள். அதற்கு முன்னால் ஒரு பிரார்த்தனை:‘பிள்ளையாரப்பா! என்னை வம்பில் மாட்டி விடாதே. மாட்டினாலும் கழட்டி விடு’. 
ஆன்மிக தேடல் மனித இயல்பு. தொன்று தொட்டு இயற்கை அன்னையும், இந்த பிரபஞ்சமும், மனித இனத்தின் பலவீனத்தை வஞ்சனையில்லாமல் காட்டிக்கொடுக்கின்றன.சமுதாயம் யாதாயினும், சுமேரியன்/அரபி/சைனா/எகிப்திய/கிரேக்க/ரோமன்/ இந்தியா/ (இந்த பட்டியல் நீண்டது) தொன்மை (mythology) கலக்காத ஆன்மீகமும் இல்லை; நாத்திகமும் இல்லை; கலவையும் இல்லை. தொன்மை ஒரு கற்பனை; படைப்பாற்றல்; மருமம்; கனவு; மோனம். அது நாட்டுநடப்புடன் உலாவி வரும். சிந்தனையுடன் கட்டிப்புரளும்.பிரார்த்தனை செய்தால், குரல் கொடுக்கும். அதனால் தான் நீலமேக சியாமளன்; ஜடாமுடியில் கங்கை; ஹயக்ரீவர்; கொழுக்கட்டை சாப்பிடும் ஆனைமுகத்தோன்.நசிகேதஸ். அஃப்ரோடைட் என்ற கிரேக்க மோஹினி. ஏசு பிரானின் புனர்ஜன்மம். மெக்காவிலிருந்து நபிகள் நாயகம் மதீனாவுக்கு யாத்திரை, ஸ்வாமி விவேகானந்தருக்கு அருளப்பட்ட நிர்விகல்பசமாதி. சனாதனம் மிகுந்த தொன்மையில்லையெனின், ஆத்திகர்கள் தும்பை மலர் போன்ற முடிகளை அகற்றியும், நாத்திகர்கள் கருமுடியை அகற்றியும், மனித சமுதாயத்தின் முடி இறக்கி விடுவார்கள்.
அலெக்ஸீஸ் கேர்ரல் என்ற டாக்டர் நோபல் பரிசு பெற்றவர். அவர் ‘Man, the Unknown’ என்ற நூலில், மனிதனை பற்றி தெரிந்தவையும்,தெரியாதவையும் பற்றி தெளிவு படுத்தி, என்றுமே தெரியாமலே மறைந்திருக்கும் விஷயங்களும் உண்டு என்கிறார்.பாயிண்ட் மேட்?
இன்னம்பூரான்
05 10 2011
VallalarSpaceVallalar.jpg
ஆதாரஸ்ருதி:
திருமதி.கீதா சாம்பசிவம்: ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள்:Retrieved on Oct 5, 2011 from



Geetha Sambasivam Wed, Oct 5, 2011 at 12:10 PM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இடம், பொருள், ஏவல் கருதி சில கருத்துக்கள். அதற்கு முன்னால் ஒரு பிரார்த்தனை:‘பிள்ளையாரப்பா! என்னை வம்பில் மாட்டி விடாதே. மாட்டினாலும் கழட்டி விடு//

இது முதல்லே வந்திருக்கணும்; முக்கியமானது சொல்லியாச்சு; அப்புறமாச் சொல்லி என்ன பிரயோஜனம்? நல்லா ரசிச்சேன்.  நன்றி.

எனக்கு மறுபடியும் கெளரவம் தேடித்தந்திருக்கிறீர்கள். பெருமைப் படுத்துகிறீர்கள்.  திக்குமுக்காடிப்போகிறேன். நன்றி என்பது இங்கே வெறும் வார்த்தையே.

2011/10/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>


இடம், பொருள், ஏவல் கருதி சில கருத்துக்கள். அதற்கு முன்னால் ஒரு பிரார்த்தனை:‘பிள்ளையாரப்பா! என்னை வம்பில் மாட்டி விடாதே. மாட்டினாலும் கழட்டி விடு’. 
இன்னம்பூரான்
05 10 2011
VallalarSpaceVallalar.jpg
ஆதாரஸ்ருதி:
திருமதி.கீதா சாம்பசிவம்: ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள்:Retrieved on Oct 5, 2011 from

Saturday, May 25, 2013

வள்ளலார் - 7

வள்ளலார் - 7


வள்ளலார் இதையெல்லாம் படிக்க நேரிட்டால்!
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSOlH9QxWosDgZufCCuKv_rZutYLobO0szrLIId__aG5tPj7WRC9CYz-0i6-475S_ZhkwOBFXzEM1-P1GDff7UhgPp3qW_jhgRAxEzlZ-JwM7KcOu1tlRmRHP5sn6dKAqHSYd7dr7afKk/s1600/Q12.jpg
இன்னம்பூரான்
25 05 2013
_______________________________________

Hari Krishnan hari.harikrishnan@gmail.com via googlegroups.com 
5/5/10

இந்த ஆவணத்தை அளித்ததற்காக நன்றி.  இதிலுள்ள தமிழ்ப்பாடல்கள் எல்லாம் TAM/TAB அல்லது வேறு என்கோடிங்காக (ஒருவேளை பாமினியாக) இருக்கலாம் என்று தோன்றுகிறது.  பாடல்களின் மூலத்தையும் அறிய விரும்புகிறேன்.  யுனிகோடில் இந்தப் பாடல்களைப் படிக்க இயலுமா?  முடிந்தால், தயார் நிலையில் இருந்தால், உதவவும்.  இல்லாவிட்டால், இருப்பதை வைத்து யுனிகோடாக மாற்றி, அடையாளம் காண முயல்கிறேன்.

திரு. நக்கினம் சிவன் அவர்களின் 'கிணற்றுத்தவளை' கேலியை நான் ரசிக்கவில்லை.

அது அவருடைய கதை என்று நினைத்துக்கொண்டால் அல்லவா ரசிப்பதற்கும் ரசிக்காமல போவதற்கும்!  அதைத்தான் ரெண்டாங் கிளாசிலேயே படித்துவிட்டோமே....புதுசாக ரசிக்க என்ன இருக்கிறது... கடல் தவளை, ஏதோ ஒரு காரணத்தால் கிணற்றில் வந்து விழுந்துவிட்டால், அது மறுபடியும் கடல் தவளை ஆகமுடியுமோ?  அதுவும் கிணற்றுத் தவளைதான்.  இருக்கும் இடத்தை வைத்துதான் அடையாளம்.   கடலை அறிந்திருந்தால் என்ன, இருக்கும் இடம் கிணறு என்றால் இதுவும் கிணற்றுத் தவளைதான்.  கடலைக் கண்டறிந்த ஞாபகத் துணுக்குகள், இப்போது வந்து விழுந்திருக்கும் கிணற்றைக் கடலாக மாற்றிவிடுமா என்ன!  சேரிடம் அறிந்து சேரச்சொன்னா, சேறிடம் அறிந்தா சேருவது... போகட்டும்.  நாமதான் சேறு.  கடல் தவளைகள் சேற்றில் விழுந்து புரள்வானேன்!  அட உடுங்கணா... 

ஆவணத்தை அனுப்பியதற்கு மறுபடியும் நன்றி.  
srirangammohanarangan 
5/5/10

திரு இன்னம்பூரர்க்கு,
ஜட்ஜ்மெண்ட் காப்பியின் வாசகங்களை இணைத்துப் படிக்கக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
தங்களுடைய இழையில் என்னுடைய ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாக்’  கருத்துரைகளால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் விளைந்திருப்பின் மன்னித்தருள்க.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

Hari Krishnan 
5/5/10

2010/5/5 srirangammohanarangan v <ranganvmsri@gmail.com>
திரு இன்னம்பூரர்க்கு,
ஜட்ஜ்மெண்ட் காப்பியின் வாசகங்களை இணைத்துப் படிக்கக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
தங்களுடைய இழையில் என்னுடைய ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாக்’  கருத்துரைகளால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் விளைந்திருப்பின் மன்னித்தருள்க.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

அட! அசத்தீட்டங்க...கலக்கிட்டீங்க ரங்கன்!  அடக்கம்னா இது அடக்கம்...பாருங்கையா...இந்த அளவுக்கு அடக்கம் வேற எவனுக்காவது இருக்கா?  எங்க வந்து நிரூபிச்சுக் காட்டுங்க பாப்பம்....ஐயா அடக்கத்துக்கு இணை ஐயா அடக்கம் மட்டும்தான். When I bask in his reflected glory, methinks I am an epitome of modesty and modesty nonpareil   I throw an open challenge! If you think you are modest come and prove that you are made of a better stock!  But I know I am the most humblest and the bestest of all modest beings.  Do I not have the humility to accept that I am a human being after all!  
tirumalainumbakkam 
5/5/10

திரு. நகினம் சிவம் கூறிய சிலபல கருத்துக்களுக்கு நான் உடன்பாடு
இல்லாவிடிலும் இன்று அவர் கூறிய ,,''தவளை '' உபமா னத்திற்கு

எனக்கும் உடன்பாடு உண்டு; அவர் கூறிய சான்று ''அக்ஷ்ரலக்ஷம் பெறும்எனவே
நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருப்பதிலும் .நல்ல கருத்துஉக்களை
விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து கற்ப்போம்
என்பதில்  எந்த மாற்று கருத்தும் இலலை   ;''மாற்றான் தோட்டத்து பூவும்
மணக்கும் ; நன்றி . உவமை கதை சான்றுடன் விடை கூறிய நகினம் சிவா விற்கு
வாழ்த்துக்கள் ;
--
> 2010/5/4 Gomathy Sankaranarayanan <gomath...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > இருப்பினும் மற்றவர்களின் வலி என்ன என்று உணர்த்த வேண்டியே செய்தேன்.
> >> அவர் அதை உணர்ந்து இருப்பின் அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.
> >> அன்புடன்
> >> நக்கினம் சிவம்
>
> > சிவம் கலக்கிட்டீங்க!.
> > கோமதி


Kamala Devi 
5/5/10
ஹரி, ஹரி,
இப்படியெல்லாம் கூட சிரிக்க வைக்கணுமா?
[ரசித்துப்படித்தேன்]





From: Hari Krishnan <hari.harikrishnan@gmail.com>
To: mintamil@googlegroups.com
Sent: Wednesday, 5 May 2010 10:43:41


Subject: Re: [MinTamil] Re: வள்ளலார்

Nakinam sivam 



அன்பு நண்பர் அரிக்கி அவர்களுக்கு,

அட! அசத்தீட்டங்க...கலக்கிட்டீங்க ரங்கன்!  அடக்கம்னா இது அடக்கம்...பாருங்கையா...இந்த அளவுக்கு அடக்கம் வேற எவனுக்காவது இருக்கா? எங்க வந்து நிரூபிச்சுக் காட்டுங்க பாப்பம்....ஐயா அடக்கத்துக்கு இணை ஐயா அடக்கம் மட்டும்தான். 

மிக சிறப்பான பண்பு - உங்களுக்கு,
வயது ஏற ஏற உங்கள் பண்பு மெருகு ஏறுகிறது.

நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை.
ஒருவேளை நான் அடக்கம் ஆகும்போது 
நான் இல்லாமல் போகலாம்.
நான் இருக்கும் போது எப்படி அடக்கம் ஆக முடியும்.
ஆகவே நான் இன்னமும் அடக்கம் ஆகவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன்.
நான் அடக்கத்தை தான் சொல்கிறேன்.
சிவ அறிவொளியன்  
5/7/10



சிவம் ஐயா,

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

"அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!
Nakinam sivam 
5/7/10

அன்பு நண்பர் சிவ அறிவொளியன் அவர்களுக்கு,

"அடக்கம்" ஆகும்போது அடியேனிடனிடம் சொல்லி அனுப்புங்கள்!
அடியேனும் "அடக்கத்தைத்" தான் சொல்கிறேன்!!

ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு

நான் மட்டுமல்ல யார் அடக்கம் ஆனாலும் உங்களுக்கு தெரியாமலா ?
ஊர் சுடுகாடே உங்களிடம் தானே இருக்கிறது.
ஆகவே நான் அடக்கம் ஆவது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ 
உங்களுக்கு நிச்சயம் தெரியும்.

அடக்கம் முதல் ஒடுக்கம் வரை 
உங்களது பெயரிலேயே வைத்திருக்கும் போது 
அடக்கம் பற்றி நீங்கள் கவலை பட போவதில்லை.
அடக்கமும் ஒடுக்கமும் பற்றி அனைவரும் 
பயப்படும் வேளையில் உங்களது பெயரிலேயே
அனைத்தையும்  கொண்டுள்ளதனால்
நீங்கள்
மிகவும் அடக்கமானவர்தான்.
இந்த அடக்கம் அதுவல்ல.
தன் அடக்கம் மட்டுமே.
Innamburan Innamburan 
5/7/10

" கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து." [திருக்குறள்]
இன்னம்பூரான்
_______________________________________________________________

Thursday, May 23, 2013

வள்ளலார் - 6




வள்ளலார் - 6

Innamburan S.Soundararajan Thu, May 23, 2013 at 10:54 AM


வள்ளலார் -6
Inline image 1

வள்ளலார் பற்றிய இழையில், திசை மாறியும், வெறும் சர்ச்சையுமாக வந்த இழைகள் சிலவற்றை, இங்கு பதிக்கவில்லை.
மற்றபடி, சில பதிவுகள். ஈற்றடியையும், அதில் கொடுத்துள்ள லின்கையும் நோக்குக.
இழையும் சீக்கிரம் முடிவு பெறும்.

இன்னம்பூரான்
23 05 2013
N. Kannan 
5/4/10


2010/5/4 Nakinam sivam
> நான் முள் மரம் அல்ல மென்மையான ரோஜா செடிதான்
> முள்ளை பார்த்தால் முள் மட்டுமே தெரியும்.

வாடிய பயிரைக் கண்டாலும் வாடும் மனமுடைய ஒரு தமிழனைப் பற்றிப் பேசவரும்
இழையில் இவ்வளவு வாட்டம் ஏன்?
It is important to be sensitive to other's feeling.

நாமெல்லாம் எவ்வளவுதான் செம்மொழிகளில் ஆன்மீகம் பற்றி அடுக்கடுக்கடாய்
காட்டினாலும், நடைமுறை என்று வரும் போது அவரவர் கூடு அவரருடையது என்று
பதுங்கிவிடுகிறோம். நெருங்கினால் பாயத்தொடங்குகிறோம்.

சகல காரணனாய் அவனொருவன்தானே நம்மையெல்லாம் இப்படி ஆட்டுவித்துக்
கொண்டிருக்கிறான். அந்த ஒருமையில் நம்மைக் குவித்தால் கோபத்திற்குப்
பதில் இரக்கம் வரும்.  [என்ன நாகையா என்ற பட்டமும் கூட வரும் :-))]

நான் அடிக்கடி சொல்வது. இது ஏதோ விளையாட்டாக எழுதும் ஒரு களமல்ல இது!
கூரறிவு படைத்தவர்க்கு இதுவொரு பொற்கொல்லன் உலை. ஆண்டாள் சொல்வது போல்
நம் மலங்களை தூசாக்கும் உலை இது. ஆனால் எதுவுமே மேலே படாமல் இலை மேல்
நீர் போல் வந்து போவோர்க்கு ஒரு ஆதாயமும் இங்கில்லை. சும்மா பொழுது
போவதைத் தவிர.

மின்தமிழ் ஒரு ஆன்மீகக் கண்ணாடி. வள்ளலாருக்கு முருகனையும், ஆண்டாளுக்கு
ரங்கனையும் காட்டிய கண்ணாடி...இப்போது இந்த வடிவில் வந்து நிற்கிறது.
‘என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்’ என்று தன்னை இக்கண்ணாடியில்
பார்க்கத்தெரிந்தவர் நிர்மலனாகிறார். கொஞ்சம் எட்டப்பார்வை,
கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு கொஞ்சம் நாள் எடுக்கலாம். ஆனாலும் ஒரு நாள்
ஆத்ம தரிசனம் கிட்டும்!!

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்

மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

இந்த அற்புதமான பாடலைக் கேட்க!
http://www.youtube.com/watch?v=k-IF_VhbiSE&feature=player_embedded

http://www.thamizhisai.com/video/video-002_tamil-cinema/tamil-001_orumaiyudan.php

நா.கண்ணன்
YouTube - Videos from this email
RK.SATHISH KUMAR 
5/4/10



அசைவம் உண்ன வேண்டாம்.பூஜை புணஸ்காரம்,உருவ வழிபாடு பலன் தராது.அப்படி எதையேனும் வணங்க விரும்பினால் ஜோதியை வழிபடு.அன்பு,இரக்கம்,மனிதாபிமானத்தோடு நடந்துகொள்.உணவு பழக்கத்தை முறையாக கடைபிடி.இதுவே அறிவு.-வள்ளலார் வாக்கு.

5/4/10
 
to mintamil
 
அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு,

மிக்க நன்றி.
நான் சன்மார்க்கம் பயிலும் மாணவனாக தான் இருக்கிறேனே தவிர 
எல்லாம் தெரிந்தவன் என்று எப்போதும் நினைத்தது கிடையாது.
கற்க வேண்டியது இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவோ உள்ளது என்று நினைப்பவன்.
நான் இன்னமும் ஒருமை நிலையினை முழுமையாக அடையவில்லை.
இருப்பினும் அந்த பாதையில்  பயணித்து வருகிறேன்.
சைவ சித்தாந்தத்தின்படி தற்போதம் என்னும் உணர்வு நீங்கினால் மட்டுமே ஒருமை வரும். ஆனால் அந்த ஒருமை நிலை வரும்போது 
இதுபோன்ற எதையும் எழுத முடியுமா என்று தெரியவில்லை.
இந்த உடலையும் உயிரையும் பற்றிய 96 தத்துவங்களும் ஒடுங்கிய நிலையில் மட்டுமே ஒருமை வாய்க்கும்.
அது வரை தான் வேறு மற்றவர் வேறு என்பதுதான் உணர்வாக இருக்கும்.
இல்லை நான் ஒருமை நிலை அடைந்து விட்டேன் என்பது வெறும் பேச்சளவாகவே இருக்கும்.
இருப்பினும் உடனுக்குடன் மற்றவர்கள் படுகின்ற துன்பத்தை உணர முடிவதனால் நமது நிலையை மாற்றிக்கொள்கிறோம்.
ஆகவே யாரையும் நோகடிக்க வேண்டும் என்று என்னவில்லை.
இருப்பினும் மற்றவர்களின் வலி என்ன என்று உணர்த்த வேண்டியே செய்தேன்.
அவர் அதை உணர்ந்து இருப்பின் அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.
அன்புடன்
நக்கினம் சிவம் 

N. Kannan 
5/4/10



> அசைவம் உண்ன வேண்டாம்.பூஜை புணஸ்காரம்,உருவ வழிபாடு பலன் தராது.அப்படி
> எதையேனும் வணங்க விரும்பினால் ஜோதியை வழிபடு.அன்பு,இரக்கம்,மனிதாபிமானத்தோடு
> நடந்துகொள்.உணவு பழக்கத்தை முறையாக கடைபிடி.இதுவே அறிவு.-வள்ளலார் வாக்கு.
>
அருமையாக உள்ளது.

நாசா வேற்று கிரகங்களுக்கு விண்கலம் மூலம் மனிதர்களை அனுப்பும்
ஆய்வுகளைப் பல காலமாக மேற்கொண்டு வருகிறது. விண்கலங்களில் ஆடு, மாடு,
கோழி வளர்க்க முடியாது (பயணம் சில வருடங்களாவது ஆகும்). பயிர்களைத்தான்
வளர்க்க முடியும். எனவே சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களே முதலில் வேற்று
கிரகங்களில் குடியேறுவர்!!


Kamala Devi 
5/4/10


to mintamil
 
”அவர் பட்ட வலிக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்”

சிவம்,
இந்த, வரிகளுக்காக, இந்த  பண்புக்காகவே ,ஞான் நிங்ஙளை வணங்குகிறேன்.
அன்பு கமலம்



Nakinam sivam 



ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிதல்


ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு
ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது.அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று
பதில் கூறியது.
அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது. அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது.அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது.அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது.சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று கிணற்று தவளை கூறியது.அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல்என்று பதில் கூறியது.உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியதுகடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விடபெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது.நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ
என்று கடல் தவளையை விரட்டி விட்டது.
அது போல்தான் ஞான மார்க்கத்தில்  சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று  அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது. ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள்  உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை
மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும்.

ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து  கொண்டு அதையே பிடித்து கொண்டு  அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால்ஞானத்தை முழுமையாக அடைய முடியாது.
நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து கற்க வேண்டும்.
நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால் நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும்  இருக்காது.
இறை அருள் நம்மை வந்து அடையும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு.
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
5/5/10


     இந்த இழையை தொடங்கியபோதும், இது விசனம் தரும் வகையில் பயணிக்கலாம்; மத/சமய/ஆன்மீகக் கோட்பாடுகள், தங்கள், தங்கள் உன்னத நிலைகளிலிருந்து உதறி வீசப்படலாம்; முரணும், மருளும் முருங்கை மரம் ஏறிக்கொள்ளக்கூடும் என்றெல்லாம், நான் கனவிலும் நினைக்கவில்லை. மும்மலங்களின் ஆளுமை ஆட்டிப்படைக்கிறதே என்ற வ்யாஹூலத்தில் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, நான் தவறு இழைத்தேனோ,இல்லையோ, மின் தமிழ் வாசகர்களிடம், மன்னிப்பு கேட்டுக்கொண்டு, ஹைக்கோர்ட் ஜட்ஜமெண்டை இணைக்கிறேன். மனித இனம் சன்மார்க்கம் நோக்கி 'இரட்க்ஷ்ண்ய யாத்ரீகம்' செய்யமாட்டேன் என்று முரண்டு பிடிப்பதற்கு மூன்று வழக்குகள் சான்று. முதல் வழக்கு ஆறாம் திருமுறை வரும் முன். இரண்டாவது வள்ளலாரின் காலத்திற்கு பிறகு, திரு. நா.கதிர்வேற்பிள்ளை அவர்களால் எழுந்தது. அது இல்லாதிருந்தால், திரு.வி.க. அவர்கள் தமிழ்த்தாத்தாவிற்கு பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியார் ஆகி இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது? சிவப்பழமாக இருந்த அவர் சன்மார்க்கம் நோக்கிப் பயணித்தற்கு சான்றாக, பல ஆதாரங்கள், திருமதி.சுபாஷிணியின் ஆர்வத்தினால், தமிழ் மரபு அறக்கட்டளையின் சேமிப்புகளில் உள்ளன. அதையெல்லாம் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டோம். இருக்கும் விடையை புறக்கணித்து, வினா எழுப்பிவிட்டு விலகிடுவோம் என்றால், இந்த தீர்ப்பை இணைத்தும் பயனில்லை. ஒரே ஒரு உரிமை எடுத்துக்கொள்கிறேன். திரு. நக்கினம் சிவன் அவர்களின் 'கிணற்றுத்தவளை' கேலியை நான் ரசிக்கவில்லை.
     
    இருந்தும், நீதியரசர் சந்துரு அவர்கள் தனது நேர்மைக்கும், வாய்மைக்கும், நடுநிலைமைக்கும், ஆழ்ந்த சிந்தனைக்கும், பன்முக படிப்பறிவுக்கும் புகழ் பெற்றவர், வழக்கறிஞராக இருந்த போதே. மின் தமிழர் ஒருவருக்காவது அந்த தீர்ப்பை படிக்கவேண்டும் தோன்றவில்லை என்பது எனக்கு வருத்தம் அளித்தது. அது 31 பக்கம் இருப்பதால், எனக்கு தோன்றிய படி, சில வாக்கியங்களை ஹைலைட் செய்து இணைத்துள்ளேன். பொறுப்பு எனது.

நன்றி, வணக்கம்,

இன்னம்பூரான்
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS.docIN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS.doc
128K   View   Download