அன்பின் நக்கினம் சிவம்,
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்!
நல்ல இடுகை. நன்றி!!
.
> அடுத்த மூன்றிற்கு கீழே விளக்கம் அளித்துள்ளேன்.
> சைவ சமயத்தின் உச்சமே உருவத்தை விட்டு விலகி அருவத்தில் கரைவதுதான். இதை
> நீங்கள் நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக
> திருவாசகத்தில் உருவம் கரிந்து அருவ நிலை சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது.
>
25 தத்துவங்களோடு நின்று விட்டவர்களுக்கு, எங்கே 36 தத்துவங்களும், 96
தத்துவங்களும் புரியப் போகிறது?!
சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிசூழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என் றரு ளாயே. - திருவாசகம்
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
*ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்* காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. - திருவாசகம்
> அடுத்து சன்மார்க்கம் என்பது இறைவனை தானாக காண்பது.
> இங்குதான் ஒருமை என்பது தோன்றுகிறது.
> இங்கு ஒன்றை தவிர வேறு இல்லை என்று உணர்படுகிறது.
> இதற்கு தான் ஜீவ ஐக்கியம் என்று பெயர்.
>
*ஒருமையுடன்* நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
> ஆக வள்ளல் பெருமானும் முதல் மூன்று மார்க்கங்களான
> சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம்
> என மூன்று நிலைகளில் இருக்கும் வரை முருகன், சிவன் என வழிபாடு முறையினை
> வைத்திருந்தார்.
எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண் கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம் பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை பலிஏற்க நீள்கொடுங்கை
சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. -திருஅருட்பா,
முதல் திருமுறை, தெய்வமணி மாலை
>
> அடுத்த நிலையான சன்மார்க்கம் நிலை வரும்போது அனைத்தையும் விட்டு விலகி ஜோதி
> நிலையினை உணர்ந்த காரனத்தால் இறைவன் உருவம் அற்றவன் என்று ஜோதி வடிவானவன் என்று
> அனைவருக்கும் எடுத்து கூறினார்.
> இது அவரது ஆறாம் திருமுறை பாடல்கள் அனைத்திலும் ஜோதி வழிபாடே
> அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் நிலையினை விளக்கி உள்ளார். (முதல் ஐந்து
> திருமுறையிலும் உருவ வழிபாடே உள்ளது)
>
சிவன் - சிவம் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு எங்கே ஐயா
இதெல்லாம் புரியப் போகிறது!
திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே. - திருஅருட்பா,
ஆறாம் திருமுறை
அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர். - திருஅருட்பா,
ஆறாம் திருமுறை
சொல்லிக் கொடுக்க யாருமில்லை.
“ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்”
நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை நன்மைதீ மைகளும் இல்லை
நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற நடுநின்ற தென்றுவீணாள்
போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே போதிப்பர் சாதிப்பர்தாம்
புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று போந்திடில் போகவிடுவார்
சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு தாம்புபாம் பெனும்அறிவுகாண்
சத்துவ அகண்டபரிபூரண காரஉப சாந்தசிவ சிற்பிரம நீ
தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. - திருஅருட்பா,
முதல் திருமுறை, தெய்வமணி மாலை
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
No comments:
Post a Comment