விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 2
நூற்றுக்கணக்கான நாடுகளை சார்ந்த அரசியல் வல்லுனர்கள் செய்த ஆய்வின் முடிபு ஒன்றை காண்போம்: ‘ஜனநாயக மரபுகளுக்குகந்த கலாச்சார ஒருமைப்பாடும் பொருள்வளமும் உலகின் குடியரசுகளில் பிரசன்னம், இந்தியாவை தவிர.’ சொல்லப்போனால், இந்திய குடியரசு புரட்சியின் கருத்தாழத்தையும், வரலாற்றையும் இது வரை யாரும் முறையாக ஆய்வு செய்யவில்லை. அதனுடைய விசித்திர/விநோத போக்கு தான் அதற்குத் தடையாக நின்றதா? சுருங்கச்சொல்லின், உலக ஜனநாயக பிரவாகத்தில், இந்தியா கலந்து விடாமல், தனித்துத் தேங்கிவிட்டது. அது ஒரு புதிர் தான். சமூகவியல் ஆய்வாளர்களுக்குத்தான் அது பிடிபடவில்லை. முந்தைய ஆட்சி இந்தியாவுக்கு, தெரிந்தோ, தெரியாமலோ, தத்தம் கொடுத்த பிதுரார்ஜிதம் என்று வரலாற்றாசிரியர்கள் ( பிரிட்டீஷ்க்காரர்கள் மட்டுமல்ல) கூறுகிறார்கள். ஃப்ரென்ச்/டச்சு/ போர்ச்சுகீஸ்/பெல்ஜியர் போல் அல்லாமல், பிரிட்டீஷ் கலோனிய ஆட்சி திறந்த மனது கொண்ட நவீனர்களாம்!
இந்த வாதம் சிக்கலானது; நிஜம். ஆனால் நிஜம் அல்ல. பிரிட்டீஷ்க்காரர்கள் ஜனநாயக மரபுகளையும், நெறிகளையும், முறைகளையும் பரப்பினார்கள் என்றால், ஜனநாயகம் ஆஃப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் இருந்த அவர்களின் காலனிகளில், (குறிப்பாக, இந்திய வரலாற்றில் முளைத்தெழுந்த பாகிஸ்தானில்) ஏன் காலூன்ற முடியவில்லை. வாழையடி வாழையாக, இந்திய சமூக சீர்த்தித்தவாதிகளாலும், சமுதாய ஆர்வலர்களாலும் தான் இந்தியா, பொறுமையுடனும், கடும் உழைப்பினாலும், ஜனநாயகத்துக்கு ஏற்புடையதாக தயார் செய்யப்பட்டது என்பது தான் உண்மை. இந்திய தேசீய காங்கிரஸ், பிரிட்டீஷ் தொழிலாளர் கட்சி துவக்கம் செய்வதற்கு முன்னரே 1885ல் நிறுவப்பட்டது. அந்த கட்சி இந்திய மகாஜனங்கள் யாவரையும், ஜாதி மத இன பேதமின்றி, ஒரு குடையின் கீழ் கொணர பகீரதப் பிரயத்தனம் செய்தது யாவரும் அறிந்ததே. ‘ காங்கிரஸ் இந்திய தேசீயம் என்ற தோணியின் மாலுமி’ என்கிறார், பிரபல வரலாற்று ஆசிரியரான முகுல் கேசவன். எவ்வகையாயினும் இந்தியர் எனப்படுவோரை இந்தத் தோணியில் ஏற்றிக்கொள்ள படாத பாடு பட்டது, இந்த கட்சி. அந்த முயற்சியில் கணிசமான அளவு வெற்றி பெற்றிருந்தாலும், முழு வெற்றி அடைய முடியவில்லை. 1947ல் விடுதலை அடையும் வரை , இந்தியாவில் அதற்கு மவுசு இருந்திருந்தாலும், அதற்கு பின் முஸ்லிம் கட்சிகள், பத்தாம்பசலி ஹிந்து அமைப்புகள், லிபரல்/கம்யூனிசம் (போல்ஷ்விக் புரட்சி நடந்த நான்கே வருடங்களில் நிறுவப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.) போன்ற கொள்கைளால் உந்தப்பட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட ஆரம்பித்தன.
*
மூலம்:
*
Owing to its counter-intuitive, even miraculous nature, the historical and ideological origins of the Indian Revolution have not been systematically studied by scholars. A study by political scientists of more than one hundred countries found that India alone, of the world’s functioning democracies, did not fit the conventional democratic parameters of cultural homogeneity and economic prosperity—it was, in this respect, an outlier. Where social science cannot account for this puzzle, historians (chiefly but not exclusively British) seek to explain it in terms of a bequest, willed or accidental, from the previous rulers of the country. India is now democratic, it is said, because the British were modern, open-minded colonialists, unlike the French and the Dutch and the Portuguese and (especially) the Belgians.
The problem with this argument is factual as well as counter-factual. To take the latter objection first: if the British promoted democratic values and institutions, why has democracy failed to take root in other of its colonies in Africa and Asia (not least in Pakistan, which has a similar legal and institutional history to India’s)? The truth is that Indians were prepared for democracy by the patient hard work of several generations of homegrown reformers and activists. The Indian National Congress—founded in 1885, some years before the British Labour Party—worked hard, even heroically, to bring Indians of all castes, religions, and ethnicities into its ambit. The Congress, as the historian Mukul Kesavan has remarked, was a “Noah’s Ark of nationalism,” which sought to bring every species of Indian on board. Its successes were significant but not total—while it remained the most influential party until independence in 1947, its hegemony was challenged by parties representing the Muslim interest, the orthodox Hindu interest, and the lower-caste interest, as well as by parties run on more strictly ideological lines, such as the Indian Liberal Party and the Communist Party of India (which was founded four years after the Bolshevik Revolution).
*
சேமமுற வேண்டும் என்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம், மின் தமிழர்கள் கூட்டுறவில்.
(தொடரும்)
இன்னம்பூரான்
15 11 2012
No comments:
Post a Comment