Thursday, May 23, 2013

டால்ஸ்டாயின் ஆருடம்!

டால்ஸ்டாயின் ஆருடம்!


Innamburan Innamburan Tue, Jun 14, 2011 at 7:16 PM


டால்ஸ்டாயின் ஆருடம்!


ஒரு தங்கச்சுரங்கத்துக்கு போனால், பாய்ந்தோடி வரும் நீரில் நன்றாகக் கழுவி, அழுக்குக்களை, மறுபடியும், மறுபடியும் நீக்கினால் தான், பரிசுத்தமான தங்கத்தை புடமிட்டு அபரஞ்சித்தங்கத்தை எடுக்கலாமோ, அவ்வாறு முயன்றால் தான், உண்மையை காணமுடியும் என்றார், லியோ டால்ஸ்டாய் என்ற ரஷ்ய தத்துவஞானி, நாவலாசிரியர்.

‘Truth, like gold, is to be obtained not by its growth, but by washing away from it all that is not gold...’ 
Leo Tolstoy Russian mystic & novelist (1828 - 1910)

இன்று, இந்திய சமுதாயம், சில தெளிவுகள் கண்டபின்னும், மக்கள் துணிவுடன் இயங்கி மக்களாட்சியின் ஆணிவேரை போற்றி காப்பாற்றிய பின்னும், அடிப்படை கொள்கை போராட்டங்கள் வலுத்தபின்னும், சர்ச்சைகளும், வாதங்களும், விதண்டா வாதங்களும், பட்டும் படாத மன்றங்களும், ‘உண்மை’ என்ற அபரஞ்சித்தங்கத்தை, மறைக்க வித்தைகள் பல செய்கின்றன. சொற்கள் பல உதிர்த்து, மூடி மறைத்து விட பிரம்மப்பிரயத்தனம் செய்கின்றனர்.
சில ஊழல்கள் புலப்பட்டன. ஒரு விசாரணை உண்மை நாடியதாக அறியப்பட்டாலும், அது ‘மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி’ என்ற வகையில் திருப்பப்பட்டது, நேற்று. இரு பிரபலங்களின் ‘சத்யாக்ரஹம்’ தடுமாறுகிறது. அவர்கள் மீது அத்தனை சர்ச்சைகள். மத்திய அரசோ முன் வைத்த காலை பின் வைத்தவண்னம், பின் வைத்த காலை, அதற்கு அடியில் வைத்த வண்ணம் இருக்கிறது. ஒரு குட்டிச்சாத்தான், ஒரு கூளி போன்ற இரு ஊழல்கள் நம்மை ஆட்டிப்படைக்கும் போது, ஒரு கொள்ளிவாய் பிசாசும் ( பெட்ரோலியம் என்றால் கொழுந்து விட்டு  தான் எரியும்.) வருகை தரும் போல இருக்கிறது. அன்றொரு நாள் வழக்கறிஞரும், மத்திய அமைச்சரும் ஆன பிரபலம் ஒருவர், ‘ ஆடிட் ரிப்போர்ட்டாவது! அமைச்சர் ராஜிநாமாவாவது! ஊஹூம்! என்று எள்ளல் நகை விடுத்தார். இன்றோ, வரைவு நிலையில் இருக்கும், ஃபைசல் செய்யப்படாத ஆடிட் ரிப்போர்ட்டை பற்றி ஊடகங்கள் (வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வரை) விரிவாக அலச, அமைச்சர் பிரதமரிடம் போய், அதை பற்றி கலந்தாலோசிக்கிறார். ஆடிட் ரிப்போர்ட்டை ஃபைசல் செய்யாத வழி தேடிகிறார் என்ற ஊகம் வேறு.

இங்கு ஊரும் பேரும் வெளிப்படையாக சொல்லாததற்குக் காரணம், அவரவர்கள் புரிந்து கொண்டதை சொல்லட்டுமே என்று.

உண்மை எங்கே? காந்தி மஹான் எங்கே? பாரதமாதாவுக்கு துணை யார்?

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்
14 06 2011
__________________
Image Credit:
http://www.brainpickings.org/wp-content/uploads/2011/07/tolstoy_classictalesfables.jpg

No comments:

Post a Comment