தோடவிழ்நீலம் மணங்கொடுக்கும்
சூழ் புனல் சூழ்க்குடந்தைக் கிடந்த
சேடர் கொலென்று தெரிக்க மாட்டேன்
செஞ்சுடராழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல்லடியார் வணங்கப்
பன்மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்
அச்சோ ஒருவரழகியவா!
இப்படியும்
செம்பவளம் இவர் வாயின் வண்ணம்
தேவரிவரது உருவம் சொல்லில்
அம்பவளத்திரளேயும் ஒப்பர்
அச்சோ ஒரு வரழகியவா1
என்றிப்படியும் ஆழ்வார் பாடியதில் இந்த ‘அச்சோ’ என்பதும் ஐயோ அல்லது அட என்பதான வியப்புப்பொருளைக் குறிக்கிறதா
என்று யோசிக்கவைக்கிறது! ‘இ’ஸார்! 'க' அல்லது 'மோ' அல்லது' த' அல்லது 'ஹ' அல்லது .தே’ என உங்களில் யாராவது பொருள் சொன்னால் நன்றி முன்கூட்டியே!
ஷைலஜா
பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!
No comments:
Post a Comment