வல்லளார் -5
சூடு பிடித்தது. ஃபயர் இஞ்சின் வந்தது!
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
21 05 2013
நக்கினம் சிவன்:
அன்பு சிவ அறிவொளியன் அவர்களுக்கு,
சைவ சமயத்தின் அனைத்து பாடல்களும் அத்துபடியாக வைத்திருக்கிறீர்கள். மேலும் அருட்பாவின் பாடல்களை பொருளுடன் அறிந்திருக்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பாவம் ஒரு சிலருக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று
புரிந்து கொள்ள முடியா விட்டாலும்
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக காட்டிக் கொள்வதற்கு தயங்குவது கிடையாது.
தத்தக்கா பித்தக்கா என்று நான்கு வரி எழுதி விட்டு
அதை புகழ
அருளி செயல் - புரளி வயல்
என்று ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு
என்ன பிழைப்பு.
சேற்றை தண்ணீர் என நினைப்பவர்களிடம்
தண்ணீரில் நீந்த கற்று கொடுப்பது தவறுதான்.
நமது இந்து சமயத்தை மீள் சிந்தனைக்கு ஆட்படுத்தினால்
அதன் ஆழ் கருத்துக்கள் மட்டுமே நிலைத்து நிற்கும்.
மற்ற மேலோட்டமான கருத்துக்கள் அனைத்தும்
அசூசையாகவே முடியும்.
ஆனால் நம்மவர்கள் ஆழ் கருத்துக்களுக்கு போக தயாரில்லை.
உண்மை எப்போதும் சுடும்.
அன்புடன்
****
நக்கினம் சிவன்:
அன்புள்ள சீரங்கம் மோகன் மற்றும் ஹரிகி அவர்களுக்கு,
நீங்கள் எதிர்பார்த்த பதில் வரவில்லையோ ?
ஆதலினால்தான் இது பிரசங்கமாக மாறி போனதோ ?
தத்துவம் 96 ஐயும் உங்களுக்கு தெரிந்த வரை விளக்குங்களேன்
நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
அல்லது சைவ சித்தாந்தத்தயாவது விளக்குங்களேன்
நாங்கள் கை மூடி வாய் பொதி கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் வள்ளலாரை மீள் சிந்தனைக்கு உடபடுத்தியது போல
நமது இந்து சமயத்தில் உள்ள ராமாயணம், மகாபாரதம்
தசாவதாரம் போன்றவற்றை கொண்டு வர முடியுமா ?
நமது சடங்குகளை மீள் சிந்தனைக்கு உட்படுத்த முடியுமா ?
நாம் ஒன்றில் நின்று கொண்டு
அதுதான் உண்மை என்று நினைத்துக் கொண்டு
அந்த உண்மை ? தான் எல்லா இடத்திலிருந்தும் வர வேண்டும்
என்று நினைத்தால் அது ஏமாற்றத்தையே தரும்.
*
ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்:
ஐயா! நான் வல்லையா விளையாட்டுக்கு:--))))
பிரமாதமா சொல்ரீங்க ஆளைவிடுங்க :--)))
*
அன்பின் நக்கினம் சிவன்:
அமைதி காக்க!
தாங்கள் வள்ளலார் பற்றியும், சைவ சித்தாந்தம் பற்றியும் மிக அழகாக எளிய
முறையில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் விளக்கி வருகிறீர்கள்.
ஒரு விளக்கமோ, கருத்தோ முன் வைக்கும் போது, சங்க கால பழக்கமாக அதை உரசிப்
பார்ப்பது புலவர் செயல்தானே? யாரை விட்டார்கள் சங்கப் புலவர்கள்?
நம்மாழ்வார் திருநாடு எய்த பின்னும் அவரது திருவாய்மொழியை உடனே
ஏற்றுக்கொள்ளவில்லையே? புனல்வாதம் வைத்தார்களே?
எனவே நாம் இங்கு கருத்து விளக்கம், தெளிவு, மீண்டும் கேள்விகள்,
விளக்கம், புரிதல் என்று கூட்டாகச் சேர்ந்து இயங்குவோம். நமக்குள்
பிரிவினை எதற்கு?
இங்கு யாரும் வாய் பொத்தி, கை கட்டி கேட்க வேண்டிய தேவை இல்லை, இல்லையா?
நாமென்ன மடமா நடத்துகிறோம்? :-))
மேலும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? என்ற நிலையில் இங்கு
உள்ளோரின் பட்ட அறிவின் ஆழம் எவ்வளவு என்று எப்படிக் கணக்கிட முடியும்?
அரங்கனார் ஏதோ சொல்ல வருகிறார் என்று தோன்றுகிறது. அவர் கொஞ்ச காலமாக
சிவஞான முனிவர் அருளிய மாபாடிகத்தைக் குடைந்து கொண்டிருப்பதாக கேள்வி ;-)
உங்களை சாக்காக வைத்து ஏதாவது சொல்ல வரலாம். அது உங்களை தாழ்த்தவோ இல்லை
வள்ளலாரை மீள்பார்வை செய்யவோ இல்லாமலும் இருக்கலாம். வள்ளலாரின்
வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவு உள்ளது? சமீபத்தில் ஒரு
நண்பர் சொன்னது போல் அவர் வழக்கில் இருந்து கூட அவர் பெருமையே
புலனாகிறது. எனவே அரங்கனாரின் பார்வையில் வள்ளலார் ஏன் சைவத்தைக்
கைவிட்டார் என்பதற்கு ஏதாவது துப்புக் கிடைக்கலாம்?
ஹரிகி அருணகிரியை உருட்டிப்புரட்டுபவர். அருணகிரியின் வாயிலாக சைவ
சித்தாந்தம் எப்படி ஊற்றெடுக்கிறது எனக்காணலாம்.
நாமெல்லாம் எதிர், எதிர் அணிகளே அல்ல. இவ்வளவு ஆர்வத்துடன் ஆன்மீக
விஷயங்களில் பங்கேற்பதிலிருந்தே தெரியவில்லையா நமது ஆர்வம்?
அரங்கனாரும், ஹரிகியும் இன்னும் மென்மையாக சொல்லிப் பாருங்களேன். இனிய
உளவாக இன்னாது ஏன் கூற வேண்டும். நமக்குத்தேவை ஆன்மீகக்கனிதானே!!
நன்றியுடன்
நா.கண்ணன்
5/3/10
xxxxxxxxxxxx
No comments:
Post a Comment