Tuesday, May 21, 2013

அரசு-1 மக்கள் கருத்து




அரசு-1 மக்கள் கருத்து

Innamburan S.Soundararajan Tue, May 21, 2013 at 7:24 PM

அரசு-1
மக்கள் கருத்து
Inline image 1
இது புதிய தொடர். பல வருடங்களாக மடலாடும் குழுக்களில் எழுதி வந்ததை வலைப்பூவில் பதிக்கவில்லை. சில நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க, அவற்றை மீள்பதிவு செய்ய தொடங்கினேன். சேகரமும் ஆகிறது; வாசகர்களும் கூடினர். ஒரு பக்கம், அது தொடரும். நிகழ்காலத்துக்கும் வரவேண்டுமல்லவா. அதற்காக, புதிய தொடர்கள். சுருக்கமான தலைப்புகள். எளிய உரைநடை. ஆங்கிலம் கலக்கலாம். இவற்றை மடலாடும் குழுக்களுடனும், வல்லமை இதழுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
இரு வாரங்கள் முன்னால் ஸீ.என்.என்.ஐ.பி.என் ஒரு சர்வே நடத்தியது. தற்கால மத்திய கூட்டணி ஒன்பது வருடங்களாக அரசாளுகிறது. இனி தாக்குப் பிடிக்கமுடியாது என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதாக ஒரு தோற்றம். இந்த சர்வேயில் பெரும்பாலோர் இது துணிவிழந்த அரசு, அரசியல் திறன் குறைந்து விட்டது என்கிறார்களாம் -95% டில்லியில்; லஞ்சலாவண்யம் கடந்த ஒரு வருடத்தில் அதிகரித்து விட்டதாக 94% டில்லியில் வருந்தினார்கள். விலைவாசி எக்கச்சக்கமாகவே உயர்ந்து விட்டது என்ற கவலை வேறு. சென்னையிலும் இதே மாதிரி தான் கணிப்பு. மும்பையில் சரி பாதி இந்த அரசுக்கு ஆதரவு. சரி பாதி அதை போற்றவில்லை. பெங்களுரில் ஆதரவு கொஞ்சம் கூட. அங்கே தான் பிஜேபியின் வண்டவாளம் வெளுத்து விட்டதே. இந்தியாவின் செல்வ நிலை (பொருளாதாரம் என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை.) மங்கி விட்டதாக ஒரு கருத்துப் பரவலாக இருந்தாலும் சண்டிகரிலும், போபாலில் இதற்கு மாறான கருத்து. மிகவும் கவலை தரும் விஷயம்: 80 வயதான பிரதமர் மன் மோஹன் சிங் அவர்கள் கண்ணியத்துக்குப் புகழ் பெற்றவர். பிரமாதமான பட்ஜெட் அளித்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னால் உலகை அசத்தியவர். பொருளியல் நிபுணர். சமீபத்து உழல்களின் பின்னணி பயங்கரமானது. அவற்றில் சில தேசத்துரோகம் செய்தவை. கறுப்புப்பணம் ஈட்டியவை. வெளிநாட்டு மர்மக்கணக்குகளில் நம் செல்வத்தை முடக்கியவை. அவற்றை கட்டுப்படுத்தவில்லை என்று மக்கள் அவரை குறை சொல்வது அதிகரித்து விட்டது. என் செய்வது? நான் அவரை மதிப்பவன். ஆனால், நமக்கு எத்தனை நெருடல்!
இன்னம்பூரான்
21 05 2013




No comments:

Post a Comment