Sunday, May 19, 2013

மனித நேயம் ~4




மனித நேயம் ~4

Innamburan S.Soundararajan Sun, May 19, 2013 at 2:43 PM

மனித நேயம் ~4
Inline image 1

கதை கேளும். இது கதையல்ல. நிஜம்.
மொஹம்மது .... எழுதப்படிக்கத்தெரியாத பங்களா தேஷ் அகதி, இங்கிலாந்தில். சட்டத்தை மீறி எப்படியோ 13 வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்தில் திருட்டுத்தனமாக புகுந்து விட்டார். தெருவுக்குத் தெரு இந்திய உணவு விடுதிகளா இங்கு.  நடத்துவது, பெரும்பாலும் பங்களா தேசிகள். அத்தகைய ஹோட்டல்களில் எடுபிடியாக, எக்ஸ்ப்ளாயிடட். ஒரு நாள், தாங்கமுடியாமல், எங்கள் ஆலோசனை மன்றத்துக்கு வந்தார், எல்லை தாண்டி. அவருடைய சர்நேம் குழப்பம். ஆங்கிலம் தெரியாததால், பிரச்னை. எங்கள் மன்றம் சின்ன அமைப்பு. அதன் மானேஜர் பிராந்திய எம்.பி.க்கு, உரிமையுடன் எழுதுகிறார்,

'இவர் அப்பாவி. ஏழை. நாம் உதவ வேண்டும். 14 வருடங்கள் அஞ்ஞாத வாசம் செய்தால், துணிவுடன் தலையை காட்டி, குடியுரிமை நாடலாம். அது தான் சட்டம். நான்கு மாதங்கள் தான் பாக்கி. சலுகையுடன் அதை பொருட்படுத்தாமல், இவருக்கு உதவ, உங்கள் பரிந்துரை உதவும். அது வேண்டும்.'

அதற்கு வேண்டிய ஆவணங்கள் அவருடைய வக்கீல் கையில். அவரும் பங்களா தேஷ் ஆசாமி. மொகம்மது அவர் சால்ஜாப்பு சொல்கிறார், காசு வாங்கிக்கொண்டு, என்றார். நாங்கள் பேச முனைந்தால், ஒரு வினாடிக்கு இத்தனை பவுண்டு கட்டினால் தான் ஆச்சு என்று முழக்கம். நாங்கள் ஆலோசனை மன்றத்துக்கு ஆட்கள். உம்மை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று அவரை வழிக்குக் கொண்டு வந்தோம். ஆவணங்களை வாங்கி ஒரு பிரிட்டீஷ் வக்கீலுடன் கொடுத்தோம். அவரோ இலவசமாக பணி புரிந்தார். இதற்கான நிர்வாக ஊழியம் செய்தது குடும்பத்தலைவி ஒருத்தி. மிருதுவான ஸ்வபாவம். கறார் ராணி. அந்த வக்கீலுடன் இவருடைய கண்டிப்பான சம்பாஷணை அபாரம். இந்தியாவில் எத்தனை குடும்பத்தலைவிகள் இவ்வாறான பணி செய்ய இயலும். ஊஹூம்! நான் லக்ஷக்கணக்கில் செலவு செய்து ஊரூராக அலைந்தது தான் மிச்சம். இத்தகைய தன்னார்வப்பணிகளுக்கு இந்தியாவில் ஆதரவு இல்லை. பிரதமர் மன்மோஹன் சிங்குக்கு, அவர் முதல் தடவை பதவி ஏற்ற தினமே எழுதினோம். நோ ரிப்ளை. ஜனாப் அப்துல் கலாம் அவர்களுக்கு, அவர் பதவி துறந்த தினமே எழுதினோம். நோ ரிப்ளை. பல தன்னார்வ அமைப்புகளிடம் படையெடுத்தேன். ஒரு காதில் வாங்கி எதிர் காதின் வழியே. விட்டார்கள். நானும் தமிழன்னையிடம் அடைக்கலம் புகுந்தேன்.

No comments:

Post a Comment