2010/5/4 Nakinam sivam
> நான் முள் மரம் அல்ல மென்மையான ரோஜா செடிதான்
> முள்ளை பார்த்தால் முள் மட்டுமே தெரியும்.
வாடிய பயிரைக் கண்டாலும் வாடும் மனமுடைய ஒரு தமிழனைப் பற்றிப் பேசவரும்
இழையில் இவ்வளவு வாட்டம் ஏன்?
It is important to be sensitive to other's feeling.
நாமெல்லாம் எவ்வளவுதான் செம்மொழிகளில் ஆன்மீகம் பற்றி அடுக்கடுக்கடாய்
காட்டினாலும், நடைமுறை என்று வரும் போது அவரவர் கூடு அவரருடையது என்று
பதுங்கிவிடுகிறோம். நெருங்கினால் பாயத்தொடங்குகிறோம்.
சகல காரணனாய் அவனொருவன்தானே நம்மையெல்லாம் இப்படி ஆட்டுவித்துக்
கொண்டிருக்கிறான். அந்த ஒருமையில் நம்மைக் குவித்தால் கோபத்திற்குப்
பதில் இரக்கம் வரும். [என்ன நாகையா என்ற பட்டமும் கூட வரும் :-))]
நான் அடிக்கடி சொல்வது. இது ஏதோ விளையாட்டாக எழுதும் ஒரு களமல்ல இது!
கூரறிவு படைத்தவர்க்கு இதுவொரு பொற்கொல்லன் உலை. ஆண்டாள் சொல்வது போல்
நம் மலங்களை தூசாக்கும் உலை இது. ஆனால் எதுவுமே மேலே படாமல் இலை மேல்
நீர் போல் வந்து போவோர்க்கு ஒரு ஆதாயமும் இங்கில்லை. சும்மா பொழுது
போவதைத் தவிர.
மின்தமிழ் ஒரு ஆன்மீகக் கண்ணாடி. வள்ளலாருக்கு முருகனையும், ஆண்டாளுக்கு
ரங்கனையும் காட்டிய கண்ணாடி...இப்போது இந்த வடிவில் வந்து நிற்கிறது.
‘என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்’ என்று தன்னை இக்கண்ணாடியில்
பார்க்கத்தெரிந்தவர் நிர்மலனாகிறார். கொஞ்சம் எட்டப்பார்வை,
கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு கொஞ்சம் நாள் எடுக்கலாம். ஆனாலும் ஒரு நாள்
ஆத்ம தரிசனம் கிட்டும்!!
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
இந்த அற்புதமான பாடலைக் கேட்க!
http://www.youtube.com/watch?v=k-IF_VhbiSE&feature=player_embeddedhttp://www.thamizhisai.com/video/video-002_tamil-cinema/tamil-001_orumaiyudan.phpநா.கண்ணன்
No comments:
Post a Comment