மனித நேயம் ~ 5
சில மடலாடும் குழுக்களில் யானொரு உறுப்பினன். இந்த இழைகளில் சில அவற்றில் பதிவானவை. சில உடனக்குடன் அங்குமிங்கும் பதிவாகின்றன. ஏனெனில் வாசகர் வட்டங்கள் வெவ்வேறு. மனித நேயம் ~4ன் பின்னணி, எங்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் உப தலைவர் திருமதி. சுபாஷிணி ட் ரெம்மல் எழுதிய ஒரு குறிப்பு. மனித நேயம் ~4 பதிவை மார்த்தவுடன், இந்தியாவிலிருந்து நண்பர் கீதா சாம்பசிவம் எழுதியதையும், அதைத் தொடர்ந்து சுபாஷிணி எழுதிய ஒரு மனித நேய வரலாற்றை, அவருடைய அனுமதியுடன் இங்கு பதிவு செய்கிறேன். இன்றைய காலகட்டத்தில் நிமிடத்தில் கடிதப்போக்குவரத்து முடிந்து விடுகிறது.
______________________________ _______________
'இதைப் படிக்கையில் மனம் கனக்கிறது. வேற்று நாட்டுக்கு அகதிகளாகச் செல்பவர்கள் நிலைமை மோசம் தான் என்றாலும் கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் சொந்த நாட்டவர்களே உதவி என்ற பெயரில் நடந்து கொள்வது குறித்து என்ன சொல்வது! :(((((' ~ கீதா சாம்பசிவம்.
எனக்குத் தெரிந்த ஒரு இலங்கைத்தமிழ்க்குடும்பத்துப் பெண்மணி..
இலங்கையின் போர்காரணமாக அங்கிருப்பதை விட ஜெர்மனியில் உள்ள ஒரு தமிழருக்கு திருமணம் செய்து வைத்து அங்கேயே தங்க வைத்து விட முடிவெடுத்து.. அப்பெண்ணின் 31வது வயதில் பெற்றோர்கள் லட்சக்கணக்கில் ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து இப்பெண்ணை இலங்கையிலிருந்து ஜெர்மனிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்து ஏற்பாடு செய்தனர்.
திருட்டுத்தனமாக செல்வது என்பதால் நேராக ஜெர்மனி வரமுடியாது.. ஆக பல்வேறு நாடுகளில் வேவேறு வழிகளில் இருந்து தான் வரவேண்டும். அந்த வகையில் இலங்கையிலிருந்து திருட்டுத்தனமாக ஏஜெண்டுகள் ஏற்பாட்டில் இந்தியாவில் ஓர் ஊருக்கு வந்து அங்கே 8 மாதங்கள் திருட்டுத்தனமாக ஒளிந்து கொண்டு வாழ்ந்து பின்னர் அங்கிருந்து தாய்லாந்து அனுப்பப்பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் மலேசியா வந்திருக்கின்றார். இங்கு எல்லாமே இலங்கைத் தமிழ் ஏஜெண்டுகள் இருக்கின்றனர். மலேசியாவில் 6 ஆண்டுகாலம் ஓரு ஊரில் ஒளிந்து கொண்டு வாழ்ந்திருக்கின்றார். இடையில் இந்த ஏஜெண்டுகளால் பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்தப்பட்டு.. பின்னர் அங்கிருந்து இத்தாலி அனுப்பப்பட்டு.. பின்னர் அங்கிருந்து இறுதியில் ஜெர்மனி வந்து .. பின்னர் அந்த உறவினரைச் சந்தித்து அவர் வழியாக அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு பின்னர் அவரையே திருமணமும் செய்து கொண்டு. தற்சமயம் 19 வயதில் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.
திருமணத்திற்குப் பின் தான் தெரிந்திருக்கின்றது அந்தக் கணவர் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டவர் என்பதும், அடித்து துன்புறுத்துபவர் என்பதும். இதையெல்லாம் தாங்கிக் கொண்டு சில ஆண்டுகள்.. கடந்த 5 ஆண்டுகளாக உளக்கோளாறு வந்து ஹிஸ்டீரியாவில் கஷ்டப்படுகின்றார்.. ஹிஸ்டீரியா கொண்டு அலறுவதால் அண்டை வீட்டுக் காரர்கள் போலீசாருக்கு தகவல் சொல்ல போலீஸார் வந்து இவரை மன நோய் சிகிச்சை தர அழைத்துச் சென்று விட்டனர்.
பின்னர் மனம் ஓரளவுக்கு அமைதி அடைந்து தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று மனித உரிமை சங்கத்தை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் ஒரு சூப்பர்மார்க்கெட்டில் பணி புரிகின்றார். அவ்வப்போது நான் பார்க்கும் போது நலம் விசாரிப்பேன்.. இது ஒருவரது உண்மை சம்பவம்.. இது போல ஏராளம் ஏராளம்..
சுபா
*
நன்றி, சுபாஷிணி.
Image Credit:https://www.nhm.in/img/978-81-8493-477-9_b.jpg
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment