1)வள்ளலாரின் பெருமை ஜீவகாருண்யத்தை மிகச்சிறந்த ஆன்மிக நெறியாக வலியுறுத்தியதில் இருக்கிறது.
ஜீவகாருண்யம் என்பது இறைவனை அடைவதற்கான பாதையாக வள்ளலார் மட்டும் கூறவில்லை. இறை நிலை அனுபவம் வாய்த்த அனைத்து ஞானிகளுமே கூறி இருக்கிறார்கள். திருவள்ளுவர் கூட கொல்லாமை, புலால் மறுத்தல் போன்ற தலைப்புகளில் ஜீவ காருண்யத்தை வலியுறுத்தி உள்ளார்.
சரி ஜீவ காருன்யதிற்கும் இறை நிலையை அடைவதற்கும் என்ன தொடர்பு ?
ஜீவ காருண்யம் என்பதே பிற உயிர்களுக்கு எந்த துன்பமும் செய்யாமல் இருப்பதுதான்.
ஏன் பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது என்றால்
பிற உயிர்களுக்கு செய்யும் துன்பம் நமக்கு நாமே செய்து கொள்ளும் துன்பமாகும் என்கின்ற நீதி நெறியின் அடிப்படையிலாகும்.
இது எப்படி என்றால்
இறை அனுபவம் என்பதே எல்லா உயிர்களையும் தானாக காண்பதும்.
அடுத்து தன்னை தவிர வேறு ஒன்று இல்லை என்கின்ற நிலையினை அடைவதுதான்.
இப்படி பட்ட அனுபவம் வைத்தவர்கள் மட்டுமே இறை நிலையை அடைய முடியும்.
ஆகவேதான் பிற உயிர்கள் படுகின்ற துன்பம் அனைத்தும் தான் படுவதாக ஏற்படும் அனுபவம் இறை நிலையினை அடைவதற்கு முன்னர் ஏற்படும் அனுபவமாகும்.
மேலும் இந்த உயிர்கள் அனைத்தும் வினையின் காரணமாக அது நல் வினை, தீ வினை பிறப்பெடுத்து இருக்கின்றன. ஆனால் ஆதியில் இவை அனைத்தும் ஒன்றிலிருந்து பிரிந்து உடல் எடுத்து இருக்கின்றன.
ஆக நாம் அனைவரும் ஒன்றான சிவத்திலிருந்து (இங்கு சிவம் என்பது சிவன் அல்ல)
பிரிந்து வந்து இந்த உடலை வினையின் காரணமாக எடுத்து இருக்கிறோம்.
சரி வினை எப்படி தோற்றியது என்றால்
முதலில் சிவம் என்பது இயக்கமற்ற (Static) நிலையில் இருந்தது.
இயக்கமற்ற நிலையில் இருந்து சலனம் தோன்றியது.
அதுவே இயக்கமாக (Dynamic) மாறியது.
அந்த இயக்கத்தின் காரணமாக சுத்த மாயை தோன்றியது
அடுத்து அசுத்த மாயை தோன்றியது.
அதன் காரணமாய் பிறப்பு தோன்றியது.
பிறப்பின் காரணமாய் வினை தோன்றியது.
அது நல் வினை என்றும் தீ வினை என்றும்
மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணமாய் ஆனது.
இங்கே பிறப்பறுக்க வேண்டும் என்றால்
நாம் நல் வினை மற்றும் தீ வினையில் இருந்து விடு பட வேண்டும்.
அதற்கு பெயர்தான் நிர்மல நிலை அதாவது அசுத்த மாயையில் இருந்து
சுத்த மாயை நிலைக்கு உயர்தல்.
அந்த நிலையினை அடைய நமக்கு துணை செய்வதுதான்
ஜீவகாருண்யம்.
2)முதல் ஐந்து திருமுறைகள் சைவ சித்தாந்த ரீதியாகப் பாடிய வள்ளலார் ஏன் ஆறாம் திருமுறையை மட்டும் நேர் எதிர்கருத்துடன் பாடவேண்டும்?
துவைதம் கரைந்தால் அத்வைதம். இங்கே அ + துவைதம் = அத்வைதம் எனப்படும்.
துவைதம் கடவுளை நம்மை விட்டு வெளியில் காண்பது.
அத்வைதம் என்பது கடவுளை நம்முள்ளே நாமாக காண்பது.
வள்ளல் பெருமான்
தியானிக்கும் போது நிஷ்கலமாக தியானிக்க கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.
எதாவது பொருளை வைத்து தியானிக்கும் போது
உருவம் கரைந்து அருவமாக மாறும்.
இது எல்லா ஞானிகளுக்கும் ஏற்பட்ட அனுபவம்.
இந்த அருவ நிலை வாய்க்கும் வரை உருவ வழிபாடு தேவைபடுகிறது.
உருவ நிலை மாறி அருவ நிலை வாய்க்க இது 12 ஆண்டுகள்.
கூடுமானவரை இந்த கால கட்டம் எல்லா ஞானிகளுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.
வள்ளல் பெருமானும் அருவ நிலை வைத்த உடன் உருவ வழிபாட்டிற்கு
முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்.
இருப்பினும் நிஷ்கலமாக தியானிக்க கூடாது என்பதனால்
விளக்கினை வைத்து அதன் தீபத்தை உற்று நோக்கி
நமது புருவ மத்தியத்தில் ஜோதி ஒளிர்வதாக பழக்கப் படுத்த சொன்னார்கள்.
காரணம்
உருவம் கரைந்து அருவம் வாய்க்கும் போது ஜோதி தரிசனமே வாய்க்கும்.
ஆக உருவம் கரைவதற்கான காலம் குறைவாகும்.
இந்த ஜோதி தரிசனம் அனைத்து க்ன்னநிகளுக்கும் பொதுவான அனுபவமாகத்தான் இருக்கிறது.
அடுத்த மூன்றுக்கும் அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.
3)தனக்கு சிவபெருமானும், முருகனும் அருள் செய்ததாகப் பாடும் ஒருவர் சிவ வழிபாடான சைவத்தை உதறிவிட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று கூறுவாரா?
அருட்பா மருட்பா எதிர்ப்பால் இந்தப் பின்விளைவான போக்கு தோன்றியிருக்குமா? அப்படி நாம் அந்த அருளாளர் விஷயத்தில் நினைப்பதைவிட, அவருடைய அனுதாபிகள் தங்களுக்குப் பிடித்த மகானுக்கு நேர்ந்த இடர்பாடுகளைக்கண்டு எதிர்போக்கு கொண்டு ஆற்றிய செயல்களின் வெளிப்பாடாய் அவை இருக்கலாம் அல்லவா? வள்ளலாரே எவ்வளவு தடுத்திருந்தாலும் சீறிய அன்பு கேட்காதே!
4)அடுத்து வள்ளலாரின் நூல்களில் இடைச்செருகல் என்பவை இல்லையா? ஆரம்பகால பிரதிகள், கைப்பிரதிகள் அனைத்தையும் கண்டு ஆய்வுப்பதிப்பு வந்துள்ளதா?
5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது மேடையில் வேத உபநிஷதங்களைப் போற்றி, பிரம்மசமாஜக் கொள்கைகளை எதிர்த்துப் பேசினார் வள்ளலார் என்று படித்த நினைவு. வாழ்வின் கடைசி கட்டத்தில் தாமே பிரம்மசமாஜம் போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா?
No comments:
Post a Comment