Sunday, April 21, 2013

எப்படி ஓடினரோ. 4




எப்படி ஓடினரோ. 4

எப்படி ஓடினரோ...4



     கள்ளி! முதல் நாள் ட் ரை ரன் (ஒத்திகை) பாக்கச்சே, இவளும் உறு துணை! வழி நன்றாகத் தெரியும். அழிச்சாட்டியமாக, ஏற்புடைய பாங்கியாக, டைம்-ரிலே ஸ்விட்ச் வச்சு ஆகாத்தியம் செய்திருக்காள். சிபாரிசு வேறே, என் இல்லாளிடமிருந்து! அவ நாங்கள் வரதை அந்த டீ.ஜி. போலீஸ் கிட்ட சொல்லிட்டா; அந்த குட்டியை குறுக்கு விசாரணை பண்ணவேண்டாம் என்று அன்பு கட்டளை வேறு. நேரே அவர் வீட்டுக்குப் போகச்சே மணி 7 40 காலை. அரை மணிக்குள் தாலி கட்டியாகிவிடும், நாற்பது மைல் தள்ளி இருக்கும் கிருஷ்ணன் கோயிலில் ! நல்ல இடம் பார்த்தார்கள்!
     இந்த பொண்டுகள் மனசு நுட்பம். நுட்பமா? நன்னா திட்டம் போடும். பெண் மனம் அறியும்; ஆண் மனம் புரியும், அவாளுக்கு! வனஜா அம்மாவே, கிரிஜாவை இந்த மனுஷன் குறுக்குவிசாரணை பண்றதை விட, வனஜா கல்யாணமும், கார்த்தியுமா இருக்கட்டும் என்று நினைத்ததாகத் தோற்றம். கிரிஜா பாங்கி ரோலை என் ஜாய் பண்ணாள். நம்மாத்துக்காரி ஸேம்சைட் கோல் போட்றா! இது ஒண்ணு.
      இன்னொண்ணு அரசு நிர்வாக நுட்பம். ஒத்துருக்கு ஒத்தர் சொற்போரும், ஆவணமறமும் நிகழ்த்தினாலும், அடிப்படையில் ஒரு ஒத்துமை இருக்கக்கூடும், ஆடிட்காரன் கிட்டக்கூட. கபூரும் (டீ.ஜி.) யும் நானும், அதற்கு முதல் நாள் தான் ஒரு கமிட்டிலே அடிச்சுண்டோம். ஆனால், ஆபத்துக்கு, சம்பத்துக்கு உதவறது உண்டு. சில சிக்கலான பெரிய மனுஷா விஷயங்களில், அவருக்கு நான் விஷயதானம் செய்தது உண்டு. ஒரு அமைச்சர் என் கிட்ட ரொம்ப உறவு கொண்டாடினார். அவர் சகவாசம் வேண்டாம்னு கபூர் தான் ஹிண்ட் கொடுத்தார். இதெல்லாம் தப்பில்லை; ஆனா, வெளிலே தெரியாது. இந்த பூவுலகம் இப்படியாக சுழன்று கொண்டிருக்கு வேளையில், அவர் வீட்டுக்குப் போனா, நாலு போலீஸ் கார்கள், சிவப்பு விளக்கு சுழல, ஊதுவதற்கு தயாராக இருந்த சங்குகளுடன் பிரஸன்னமாக இருந்தன. காக்கி தர்பாரின் பலத்தை பார்த்து குப்புசாமி திகைத்து விட்டார். ஏன் என்றால், நாங்கள் போகும் போது, அந்த விடலையின் அப்பாவுடன், டி.ஜி. பேசிக்கொண்டு இருந்தார்! அவ்வளவு ஃபாஸ்ட், நம்ம தகவல் மையம். அப்பாக்காரன் உள்ளூர் பிரபலம். ‘என் பையனுக்கா கல்யாணம்? பண்ணிக்கட்டுமே!’ என்றார், அந்த பிருகிருதி. ‘இது தேறாத கேஸு என்று சொல்லிவிட்டு, கபூர், ஒரு குப்தாவை அறிமுகம் செய்து வைத்தார். சொல்ல மறந்துட்டேனே. என்னை கங்க்ரேச்சுலேட் பண்ணார்.
     எதற்கு? அதற்கு ‘வீராதி வீர, தீராதி தீர,சூராதி சூர...’தமிழ்த்தேனி சொன்னாப்லே, எனக்கு அகப்பொருள் போய், புறப்பொருள் கவனத்துக்கு வந்துவிட்டது. 
“...பற்றார் தம்முனை படுமணி ஆயத்து/ ஒற்று ஆராய்ந்து வகைஉரைத் தன்று...” என்றார், ஐயனாரிதனார், வெட்சிப் படலத்தில். பெயர் புதுமையாக இல்லை? நினைவில் வைப்பது கஷ்டமா? அப்போ, நீங்கள் எப்படி உருவபஃறேர் இளஞ்சேட்சென்னியையும், சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வீர்கள்? ஒரே வழி. நம்ம பசங்களுக்கு இந்த மாதிரி பெயர் வைக்கலாம். ஆனா, பூராப ெயரையும் சொல்லிக்கூப்பிடணும். ‘உருவ்! மான்! என்றெல்லாம் குறுக்ககூடாது. என்னமோ சொல்லிண்டு போறேன்! 

      இந்த பாடலின் பொருள்: ‘ஒற்றர் வருகை’. பாங்கியை ஒற்றனாக (ஒற்றியாக?) மாற்றியதற்காகத்தான் அவர் வாழ்த்துக்கள். குப்தா வழுக்கை. சூதானம் தெரிந்த ஸூபரிண்டெண்ட் ஆஃப் போலீஸ். வயதானவர். நிதானம். ஆனா, போலீஸ். கபூர் சொன்ன படி, ஒரு போலீஸ் அம்பேசடர் வண்டியில், சிவப்பு விளக்கு சுழல, சங்கு அலற, புறப்பாடு. மூன்று வண்டி பின்னாலே. குப்தா கிட்டே கேட்டேன். ‘இது என்ன ஸூபர் அம்பேசடராக இருக்கு?’ என்று. இது ‘ஸூப்டப் வெர்ஷன்’ (தரம் மிகவும் உயர்த்தப்பட்டது, வாங்கிய பிறகு). அந்த செலவை கணக்குலே காட்றதில்லை. ஆஃபீஸ்லே போட்டுக்கொடுத்தறாதங்கோ, என்றாரே, பார்க்கலாம். ‘ஓஹோ! அப்டியா!’ என்று கறுவிக்கொண்டே, அதை மனதின் சனி மூலையில் பதிவு செய்து கொண்டேன். ‘இதுவா கேட்கற தருணம்? டீ.ஜீ. கிட்ட ஆற அமர பேசிக்லாம்னு’. ‘ஏனு உடுக்தீரா’ ந்னு ஆகிவிடுமே!

     ஒரு அரண்மனை வாசலில் நிதானமாக இறங்கினோம். காஃபி, டிஃபன். இது ஒரு அரசாங்க கஸ்ட்ஹெளஸ்-கம்-டூரிஸ்ட் லாட்ஜ். ஒரு பெரிய வட இந்திய பார்ட்டி இறங்கி இருந்தது. அவுக வீட்டு கல்யாணம் முடிஞ்சாச்சு. விமான தளத்துக்கும், ரயில் பிடிக்கவும் போகணும். அந்த வீட்டுப் பெரியவர் வந்து சத்தம் போட்டார். பெரிய விஷயம் ஒண்ணுமில்லை. நம்ம பார்ட்டி என்று சந்தேஹப்பட்டு லோகல் போலீஸ் அவர்களை முடங்கி வைத்து விட்டது! குப்தா அவரை கண்டுக்கவே இல்லை. கருமமே கண்ணாயினாராக, இரு நபர்களை நம் முன் ஆஜர் பண்ணினார். பனிரெண்டு பட்டை நாமம், பட்டு வேஷ்டாடை. ரண்டு பேரும் ஒரே உதறல். அந்தோ! பரிதாபம்! ஒருவர் அழுதார். மற்றொருவர் பெருங்குரல் எடுத்து அழுதார். அந்த கிராமத்து போலீஸ், கிருஷ்ணன் கோயில் புரோகிதர்களை, தீர விசாரித்து, ‘லபக்’கி விட்டார்கள்! எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. குப்புசாமிக்கு பேஸ்து அடிச்சமாதிரி ஆயிடுத்து.
(தொடரும்)
இன்னம்பூரான்
பி.கு. நான் கூட ட் ராமாவில் நடித்து இருக்கிறேன். சந்தேஹமிருந்தால், இயக்குனர் சிகரத்திடம் கேட்கவும். வசனம் எழுதியாச்சு. டச்-அப் பண்ணாப்போச்சு. நானும் நடிக்கிறேனே, தமிழ்த்தேனீ. வனஜாவுக்கும் கிரிஜாவுக்கும் ஆள் ரெடி. 
இந்த ஃபாண்ட் படுத்தல் உங்களை படுத்த வில்லையே. எதற்கும், இரண்டையும், பிடிஃப் கோப்பில் இணைத்து விட்டேன்.
2 attachments — Download all attachments   Share all images  
E4 PDF.pdfE4 PDF.pdf
61K   View   Download  
Interval.pdfInterval.pdf
95K   View   Download  
Tthamizth Tthenee 
7/9/10

எப ஓன...! - 4க! த நா ைர ர (ஒைக) பாகேச, இவ உ ைண! வநறாக ெத. அசாயமாக, ஏைடய பாயாக, ைட- ேலவ ஆகாய ெசகா. பா ேவேற, எ இலாட! அவநாக வரைத அத . . டடா; அதையசாரைண பணேவடா எ அ கடைள ேவ. ேநேர அவகேச ம 7 40 காைல. அைர ம தா கயா, நாபைம த இண! நல
 
 
பீடீ எப் லே  இப்பிடி வருது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

meena muthu 
7/9/10

நல்லா வருது   Scan and download கிளிக் செய்து தரவிறக்கினால் நல்லா வருது!

95K View as HTML  இதை கிளிக்கினால் சரியா வரலை
Tthamizth Tthenee 
7/9/10

எதற்கு? அதற்கு ‘வீராதி வீர, தீராதி தீர,சூராதி சூர...’தமிழ்த்தேனி சொன்னாப்லே, எனக்கு அகப்பொருள் போய், புறப்பொருள் கவனத்துக்கு வந்துவிட்டது. 

 
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஅ
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/9/10

இங்கு பீடிஎஃப் கோப்புகள் அழகாக திறந்தன, திருமதி. மீனா சொன்னமாதிரி. நன்றி. இப்போ உங்கள் மேலான கருத்துக்க்அளை எதிர்னோக்கும்,
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/10/10

இது நிஜம் என்று சத்தியப்பிரமாணம் செய்து விட்டேனே, திருமதி. மீனா. இது
வாழ்க்கை சித்திரம்.
இன்னம்பூரான்
2010/7/9 meena muthu <rangameena@gmail.com>:
meena muthu 
7/10/10

ஆமாம். 

அதனால்த்தான்  //நீங்க சொல்லுங்க.. :))))) // என்றவள் ’ஆனால் இது நிஜம் நீங்க சொல்லுங்க’
என்று சேர்த்து எழுதாமல் விட்டுவிட்டேன். 

இருந்தாலும் ஒரு நிஜக்கதையின் ஊடே அப்படி எழுதி இருக்கக்கூடாது மன்னித்துக்கொள்ளுங்கள்.

மீனா

2010/7/10 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
Innamburan Innamburan 
7/10/10

அதனால் பரவாயில்லை. எனக்கும் வாசகரின் மனவோட்டத்தை அறிந்து கொள்ள அவா.
இன்னம்பூரான்
2010/7/10 meena muthu 
Subashini Tremmel 
7/10/10

திரு.மௌளியின் ஒரு சில நாடகங்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் விசிடியில் பார்த்திருக்கிறேன். அந்த ஞாபகம் தான் வந்தது உங்கள் கதை சொல்லும் விதத்தை பார்க்கும் போது.  தலைப்பே கவனத்தை ஈர்க்கிறதே..:-)
 


 
2010/7/9 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
எப்படி ஓடினரோ...! - 4

     கள்ளி! முதல் நாள் ட் ரை ரன் (ஒத்திகை) பாக்கச்சே, இவளும் உறு துணை!
...
     இந்த பொண்டுகள் மனசு நுட்பம். நுட்பமா? நன்னா திட்டம் போடும். பெண் மனம் அறியும்; ஆண் மனம் புரியும், அவாளுக்கு!
 
ரசித்தேன். அழகான வரிகள். :-)
 
-சுபா
Subashini Tremmel 
7/10/10

2010/7/8 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
எப்படி ஓடினரோ...! - 2

  அவள் தான் உள்கை; ,
 
உள்கை என்றால் என்ன?
Geetha Sambasivam 
7/10/10

உள் கை என்றால் கூட்டு, ஆலோசனை தரும் மதிமந்திரி, அவள் உதவியோடே எல்லாத்தையும் நடத்திக்கொண்டாள் என்று பொருள் கொள்ளலாம், ஆனால் இந்த உள்கையாய் இருப்பவங்க லேசில் வாயைத் திறக்க மாட்டாங்க. விசுவாசிகள்!

Innamburan Innamburan 
7/10/10

மிக்க நன்றி, ஸுபாஷிணி. உங்கள் பதில்கள் என்னை பரவசப்படுத்துகின்றன. நான் மெளனி அவர்களின் நூல்களை படித்ததது நினைவுக்கு வருகிறது. ஒரு ரகஸ்யம். ஒரு நாள் 'குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும்போது, டி.வி.யில் ஒரு அம்மையார் 'எப்படி பாடினரோ' ஆலாபனை செய்து கொண்டிருந்தார். உடும்புப்பிடியாக, அதை பிடித்துக்கொண்டு, தலைப்பை அமைத்தேன். பிறகு எழுத ஆரம்பித்தேன். அடுத்த இடுகையில் சுபம். இன்னொரு சமாச்சாரம். நான் எடிட் பண்ணுவது கிடையாது. ப்ளன்ஷெட் மாதிரி சொற்கள் கொட்டுகின்றன.

Hari Krishnan 
7/10/10

2010/7/10 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
உள் கை என்றால் கூட்டு, ஆலோசனை தரும் மதிமந்திரி, அவள் உதவியோடே எல்லாத்தையும் நடத்திக்கொண்டாள் என்று பொருள் கொள்ளலாம், ஆனால் இந்த உள்கையாய் இருப்பவங்க லேசில் வாயைத் திறக்க மாட்டாங்க. விசுவாசிகள்!

Hand in glove.   

சித்திரத்துக்கு நன்றி:http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/99/Stout-Hand_in_Glove.jpg/260px-Stout-Hand_in_Glove.jpg


No comments:

Post a Comment