Thursday, April 25, 2013

ராஜாஜி 2011ல் -1,2& 3



ராஜாஜி 2011ல் - 1,2 &3


Innamburan S.Soundararajan Fri, Apr 26, 2013 at 6:52 AM

நண்பர்களே,

நாடு விடுதலை அடைந்த பத்தாவது வருடம், ஒரு ரூபாய் விலையில் ஒரு நூல் பிரசுரம் ஆயிற்று - ராஜாஜியின் ஒன்பது கட்டுரைகள். முன்னுரையில் அந்த தீர்க்கதரிசி இரு விஷயங்களை தெளிவுற கூறுகிறார் - 1. அவரது கருத்துக்களை, மக்களை மேய்ப்பர்கள் ஏற்காமல் இருக்கக்கூடும்; 2. இந்த கருத்துக்கள் சிந்தித்து, சிந்தித்து எழுதப்பட்டவை; அவசரம் அவசரமாக தன்னிச்சையாக எழுதப்பட்டவை அல்ல. ஆங்கிலத்திலிருந்து, அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்ய விருப்பம். சுருக்குவது கடினம். அவரே சுருக்கமாக எழுதுபவர். என் ஆர்வத்திற்கு இரு காரணங்கள். எனக்கு அவருடன் பரிச்சயம் இருந்தது. ஐம்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு அவரின் சொல் ஒவ்வொன்றும் கணீரென்று கணீரென்று ஆலயமணி அடிப்பது போலும், கீற்று மின்னல் 'டால்' அடிப்பது போலும், இன்றைய இந்திய சூழ்நிலைக்கு கனபொருத்தமாக இருப்பது. இந்த இழை என்னிடம், மணிக்கணக்காக வேலை வாங்கும். வரவேற்பு இல்லையெனில், நிறுத்தி விடுவது உசிதம். 


கட்டுரை 1: நமது ஜனநாயகம்
நாடாளுமன்ற பிரதிநித்துவம் என்ற மக்களாட்சி முறை செயல்பாடுகளில் வெற்றி பெற, இரு விஷயங்களில் தெளிவு வேண்டும். 1. பற்பல நிலைகளில் வசித்து வரும் மக்களிடையே, அரசின் குறிக்கோள்கள் எது, எதுவாக இருக்கவேண்டும் என்பதில் பெருமளவில் ஏகோபித்த அபிப்ராயம் இருக்கவேண்டும். 2. சீரிய தலைவர்கள், இடைவிடாமல், தரமான பாதையில் வழி நடத்தியும், மெஜாரிட்டி வாக்காளர்கள் விரும்பினால், நல்லாட்சி அளிக்கக்கூடிய, இரு கட்சிகள் களத்தில் இருக்கவேண்டும். அரசியல் கருத்துக்கள், ஒன்றுக்கொன்று சளைக்காத இரு கட்சிகள் இல்லையெனில், நீர்த்து விடும்.   அத்தருணம், நாடாளுமன்ற பிரதிநித்துவம் பெயரளவில் தான் இருக்கும். உண்மையான ஜனநாயகம் அங்கில்லை. ஒரு கட்சி அரசாளும் போது, மாற்றுக்கருத்துடையோர் தனியார்களாகவோ அல்லது சின்ன சின்ன குழுக்களாகவோ இருப்பின், அரசு நிச்சியமாக, சர்வாதிகாரம் செய்யத்தொடங்கும்...
(தொடரும்)
இன்னம்பூரான்
07 04 2011
------------


பாகம் -2
அரசு நிச்சியமாக, சர்வாதிகாரம் செய்யத்தொடங்கும்...மக்களாட்சியெனில், வலிமையான எதிர்க்கட்சி தேவை. எல்லாருக்கும் ஓட்டு என்றால், எதிர்ப்பே இல்லாத மெஜாரிட்டி கட்சி ஆட்சி புரிவது, முழுச்சுமையையும் ஒரே கழுதையின் முதுகில் ஏற்றுவது போல. இரு கட்சி வரைமுறையில், சுமையை சமமாக பகிர்ந்து கொள்வதால், அரசாட்சி நிலை பெறும். நமக்கு இரண்டு கண்களும், இரண்டு காதுகளும் இருப்பதால், பார்த்ததையும், கேட்டதையும், உரிய இடத்தில் அமர்த்த முடிகிறது. ஒரே கட்சியை ஆளுமையில் வைத்தால், அத்தருணம், மக்களாட்சி தராதரத்தை இழந்து விடுகிறது. பார்க்க முடிந்தும், காண முடியாது; ஏற்றதாழ்வுகளை எடை போடமுடியாது; எழும் வினாக்களின் எல்லா பரிமாணங்களையும் காண இயலாது. 

காங்கிரஸ் கட்சியின் தாக்கம், வரலாற்றின் வெளிப்பாடே தவிர, தேர்தலில் பெற்ற வெற்றி அன்று. தேர்தலில் கெலிப்பதெல்லாம், இந்த தாக்கத்தின் விளைவு; காரணமல்ல. இவ்வாறு வரலாற்றின் பயனாக பெற்ற தலைமையை நியாயப்படுத்த, அந்த கட்சி இடது சாரியாக திரும்பியிருக்கிறது. இடது சாரியும் வரலாறும் சங்கமம் ஆகிவிட்டதால், வலதுசாரி ஆர்வம் அடக்கி வாசிக்கிறது, அலக்கழிக்கப்படுகிறது. ஆகமொத்தம், காங்கிரஸ் கட்சி சாஸ்வதமாக ஆளுமை வகிக்கிறது.

இந்த அசைக்கமுடியாத நிலையில், நாடாளுமன்ற பிரதிநித்துவம் (என் விளக்கம்: Westminister Model: his words: ‘parliamentary democracy’.) இல்லை. இந்த சூழ்நிலையில், முக்கியத்துவம் கட்சிக்கு; நாடாளு மன்றத்துக்கு அல்ல. கட்சிக்குள் அபிப்ராய பேதங்கள் எழலாம்; காணப்படலாம். கட்சியின் கட்டுப்பாடும், ஆளுமையும் இந்த ‘சுய பரிசோதனையை’ ஒடுக்காமல் இருந்தால், இருகட்சி பேதம், (ஆளும்) கட்சியிலேயே வளரலாம். கட்சி தலைவர், கட்சியின் மெஜாரிட்டி கருத்துக்கிணங்க, தீர்மானங்களை கொணரலாம். அவ்வாறு நிகழ்வது, ஓரளவு சர்வாதிகாரத்தை குறைக்கலாம்; தலைவர் மிக்க ஆளுமைத்திறனும், அத்தகைய அணுகுமுறையும் உடையவர் எனின், அதுவும் சாத்தியமில்லை. கதவை சாத்திவிட்டு, வீட்டுக்குள் கூட, மாற்றுக்கருத்துக்களை அனுமதிக்காமல், ஆளும் கட்சி இயங்கும். எந்தவித தடையும்,தடங்கலும் இல்லாமல், சர்வாதிகாரம்/யதேச்சதிகாரம் கோலோச்சும்...
(தொடரும்)
இன்னம்பூரான்
08 04 2011
---------------------
பாகம்-3
இந்த நாடாளுமன்ற பிரதிநித்துவத்தை காப்பாற்றுவதற்கு தேவையான எதிர் தரப்பு மறைவிலிருந்து பணி செய்வதில் பயனில்லை. அது நேரடியாகவும், வாக்காளர்களின் மூலமாக இயங்கவேண்டும். பெரும்பாலோர் இதை ஒத்துக்கொண்டாலும், எதிர் தரப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதில் கருத்து உடன்பாடு இல்லை. உரைப்பது என்ன என்பதை பற்றிய சர்ச்சைகளை தவிர்த்து, இந்த இடது/வலது சாரி செயல் முறையை கூறி விடுகிறேன். இடது சாரி, மக்கள் நலன் விரைவாக அவர்களை சேரவேண்டும், அது சராசரியாக யாவருக்கும் பயன் தரவேண்டும் என்று நினைப்பவர்களின் கூட்டம். மாற்றம் ஏற்படுவதின் பின்னால், தடுமாற்றங்கள், திண்டாட்டங்கள், துன்பம் எல்லாமே இருக்கும், ஒரு இயந்திரத்தில் தட்தடாலென்ற சத்தம், உரசல் எல்லாம் இருப்பது போல. ஆனால், தனிமனிதனின்/சமுதாயத்தின் வாழ்க்கை இயந்திர வாழ்க்கை அன்று. மாற்றம் கொடுக்கும் வலியை வாழும் மனிதர்கள் எப்படி ஏற்றுக்கொண்டால் தான், முன்னேற்றதை காணமுடியும். வலது சாரி கட்சிகளால், இந்த தடுமாற்றங்கள்/ இடைஞ்சல்கள்/துன்பம் எல்லாவற்றையும் பிரதிபலிக்க முடியும். அதுவும் முக்யம் தான்.
நான் ஏற்கனவெ சொன்னபடி, காங்கிரஸ் கட்சி இடது சாரி ஆகிவிட்டது. நம் அரசியல் துறைக்கு மேலும் தீவிரமான இடது சாரி தேவையல்ல; நமக்கு வேண்டியது வலிமை மிக்க, ஆக்கப்பூர்வமான வலது சாரியே. இந்திய மக்கள் அடி பணிபவர்களாக இருந்தாலும், அவர்கள் களிமண் பொம்மைகள் அல்ல. அவர்களின் வாழ்வியல் இயந்திர கதியில் இயங்கவில்லை. சிக்கலான எண்ணங்களும், உணர்ச்சிகளும், மன உளைச்சல்களும் நிறைந்த வாழ்வில், உரசல்களும், தூக்கிப்போடும் இடைஞ்சல்களும் இருக்கத்தான் செய்யும். பற்பல பற்பல படிநிலைகளில் வாழும் மக்கள் யாவரும் இதன் இலக்கே. நீண்ட கால வரலாறே இதற்கு அத்தாட்சி. இந்த தாக்கங்கள் எங்கோ அத்வானத்தில் நடை பெறவில்லை. வாழ்ந்து வரும் நம்மை தான் அவை குறி வைக்கின்றன.
(தொடரும்)
இன்னம்பூரான்
09 04 2011

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
4/9/11


மிக அற்புதமான காரியம் செய்கிறீர்கள் இ சார்.

உங்களுக்கு என் பணிவான  தலைவணக்கங்கள்.

பல தலைமுறைகளுக்கு இவை கருத்துச் சுரங்கங்கள். 

மிக்க நன்றி.  இன்னும் தொடரவேண்டும் நீங்கள். நாங்கள் இதை எங்கே சென்று தேடமுடியும். தேடாத செல்வம் தானாக வருகிறது.

வள்ளல் நீங்கள். வாழ்க.

அன்புடன்

பென்

Subashini Tremmel 
4/9/11

2011/4/9 Innamburan Innamburan <innamburan@gmail.com>
.. மாற்றம் ஏற்படுவதின் பின்னால், தடுமாற்றங்கள், திண்டாட்டங்கள், துன்பம் எல்லாமே இருக்கும், ஒரு இயந்திரத்தில் தட்தடாலென்ற சத்தம், உரசல் எல்லாம் இருப்பது போல. ஆனால், தனிமனிதனின்/சமுதாயத்தின் வாழ்க்கை இயந்திர வாழ்க்கை அன்று. மாற்றம் கொடுக்கும் வலியை வாழும் மனிதர்கள் எப்படி ஏற்றுக்கொண்டால் தான், முன்னேற்றதை காணமுடியும். வலது சாரி கட்சிகளால், இந்த தடுமாற்றங்கள்/ இடைஞ்சல்கள்/துன்பம் எல்லாவற்றையும் பிரதிபலிக்க முடியும். அதுவும் முக்யம் தான்.
நான் ஏற்கனவெ சொன்னபடி, ....
 
இந்திய மக்கள் அடி பணிபவர்களாக இருந்தாலும், அவர்கள் களிமண் பொம்மைகள் அல்ல. அவர்களின் வாழ்வியல் இயந்திர கதியில் இயங்கவில்லை. சிக்கலான எண்ணங்களும், உணர்ச்சிகளும், மன உளைச்சல்களும் நிறைந்த வாழ்வில், உரசல்களும், தூக்கிப்போடும் இடைஞ்சல்களும் இருக்கத்தான் செய்யும். பற்பல பற்பல படிநிலைகளில் வாழும் மக்கள் யாவரும் இதன் இலக்கே. நீண்ட கால வரலாறே இதற்கு அத்தாட்சி. இந்த தாக்கங்கள் எங்கோ அத்வானத்தில் நடை பெறவில்லை. வாழ்ந்து வரும் நம்மை தான் அவை குறி வைக்கின்றன.


அருமையான விளக்கம். 
-சுபா 

கிருஷ்ணமூர்த்தி 
4/10/11


//நான் ஏற்கனவெ சொன்னபடி, காங்கிரஸ் கட்சி இடது சாரி ஆகிவிட்டது.//

இடதுசாரிகளை இதைவிட அதிகமாக எவரும் கேவலப்படுத்திவிட முடியாது. :-(((

இப்படிச் சொல்லிப்பார்க்கலாமோ?

இந்திய இடதுசாரிகளும் கூட, கொஞ்சம் நாற்காலி,  அதிகார சுகத்தை
அனுபவிப்பதில் காங்கிரஸ் கட்சி போலாகிவிட்டார்கள்! :-)))

ஒரு  மாறுதலுக்காக அரசியல் நிர்ணயசபையில் திரு அம்பேத்கர் உரையாற்றியதில்
இருந்து ஒரு சிறுபகுதி:

"For, as has been well said by Abraham Lincoln, a House divided
against itself cannot stand very long. Therefore the sooner room is
made for the realisation of their aspiration, the better for the few,
the better for the country, the better for the maintenance for its
independence and the better for the continuance of its democratic
structure. This can only be done by the establishment of equality and
fraternity in all spheres of life. That is why I have laid so much
stresses on them.

I do not wish to weary the House any further. Independence is no doubt
a matter of joy. But let us not forget that this independence has
thrown on us great responsibilities. By independence, we have lost the
excuse of blaming the British for anything going wrong. If hereafter
things go wrong, we will have nobody to blame except ourselves. There
is great danger of things going wrong. Times are fast changing. People
including our own are being moved by new ideologies. They are getting
tired of Government by the people. They are prepared to have
Governments for the people and are indifferent whether it is
Government of the people and by the people. If we wish to preserve the
Constitution in which we have sought to enshrine the principle of
Government of the people, for the people and by the people, let us
resolve not to be tardy in the recognition of the evils that lie
across our path and which induce people to prefer Government for the
people to Government by the people, nor to be weak in our initiative
to remove them. That is the only way to serve the country. I know of
no better.?"

முழுதுமாகப்படிக்க இங்கே

http://pragati.nationalinterest.in/2010/08/the-grammar-of-anarchy/

--------------------------------
அன்புடன்
செல்வன் holyape@gmail.com via googlegroups.com 
4/10/11




நான் ஏற்கனவெ சொன்னபடி, காங்கிரஸ் கட்சி இடது சாரி ஆகிவிட்டது. நம் அரசியல் துறைக்கு மேலும் தீவிரமான இடது சாரி தேவையல்ல; நமக்கு வேண்டியது வலிமை மிக்க,ஆக்கப்பூர்வமான வலது சாரியே.

Clap..clap..clap

Fantastic "I" sir...India badly needs an economic right wing party like Rajaji's sudanthira party.
Nagarajan Vadivel r
4/10/11

Congress was/is/will be neither leftist nor rightist but will remain forever a pseudo leftist party.
Vnagarajan
devoo 
4/10/11
Apr 9, 11:57 pm, Nagarajan Vadivel
>>> Congress was/is/will be neither leftist nor rightist but will remain forever
a pseudo leftist party <<<
Accurate assessment  :))))

 dev
சித்திரத்துக்கு நன்றி: http://www.noolulagam.com/book_images/2940.jpg

No comments:

Post a Comment