Tuesday, April 23, 2013

2011/13ல் ராஜாஜி: 1

2011/13ல் ராஜாஜி: 1





Innamburan S.Soundararajan Tue, Apr 23, 2013 at 9:23 PM

2011ல் ராஜாஜி: 1

Inline image 1
Innamburan Innamburan <innamburan@gmail.com>
4/7/11

நண்பர்களே,

நாடு விடுதலை அடைந்த பத்தாவது வருடம், ஒரு ரூபாய் விலையில் ஒரு நூல் பிரசுரம் ஆயிற்று - ராஜாஜியின் ஒன்பது கட்டுரைகள். முன்னுரையில் அந்த தீர்க்கதரிசி இரு விஷயங்களை தெளிவுற கூறுகிறார் - 1. அவரது கருத்துக்களை, மக்களை மேய்ப்பர்கள் ஏற்காமல் இருக்கக்கூடும்; 2. இந்த கருத்துக்கள் சிந்தித்து, சிந்தித்து எழுதப்பட்டவை; அவசரம் அவசரமாக தன்னிச்சையாக எழுதப்பட்டவை அல்ல. ஆங்கிலத்திலிருந்து, அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்ய விருப்பம். சுருக்குவது கடினம். அவரே சுருக்கமாக எழுதுபவர். என் ஆர்வத்திற்கு இரு காரணங்கள். எனக்கு அவருடன் பரிச்சயம் இருந்தது. ஐம்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு அவரின் சொல் ஒவ்வொன்றும் கணீரென்று கணீரென்று ஆலயமணி அடிப்பது போலும், கீற்று மின்னல் 'டால்' அடிப்பது போலும், இன்றைய இந்திய சூழ்நிலைக்கு கனபொருத்தமாக இருப்பது. இந்த இழை என்னிடம், மணிக்கணக்காக வேலை வாங்கும். வரவேற்பு இல்லையெனில், நிறுத்தி விடுவது உசிதம். 


கட்டுரை 1: நமது ஜனநாயகம்
நாடாளுமன்ற பிரதிநித்துவம் என்ற மக்களாட்சி முறை செயல்பாடுகளில் வெற்றி பெற, இரு விஷயங்களில் தெளிவு வேண்டும். 1. பற்பல நிலைகளில் வசித்து வரும் மக்களிடையே, அரசின் குறிக்கோள்கள் எது, எதுவாக இருக்கவேண்டும் என்பதில் பெருமளவில் ஏகோபித்த அபிப்ராயம் இருக்கவேண்டும். 2. சீரிய தலைவர்கள், இடைவிடாமல், தரமான பாதையில் வழி நடத்தியும், மெஜாரிட்டி வாக்காளர்கள் விரும்பினால், நல்லாட்சி அளிக்கக்கூடிய, இரு கட்சிகள் களத்தில் இருக்கவேண்டும். அரசியல் கருத்துக்கள், ஒன்றுக்கொன்று சளைக்காத இரு கட்சிகள் இல்லையெனில், நீர்த்து விடும்.   அத்தருணம், நாடாளுமன்ற பிரதிநித்துவம் பெயரளவில் தான் இருக்கும். உண்மையான ஜனநாயகம் அங்கில்லை. ஒரு கட்சி அரசாளும் போது, மாற்றுக்கருத்துடையோர் தனியார்களாகவோ அல்லது சின்ன சின்ன குழுக்களாகவோ இருப்பின், அரசு நிச்சியமாக, சர்வாதிகாரம் செய்யத்தொடங்கும்...
(தொடரும்)
இன்னம்பூரான்
07 04 2011
Tirumurti Vasudevan 
4/8/11


முதலமைச்சரா இருந்தப்ப இரவு அரசு வேலைக்கு ஒரு மெழுகுவர்த்தியும், தன் சொந்த கடிதங்கள் எழுத தன் சொந்த மெழுகுவர்த்தியும் பயன்படுத்தியவர் பத்தி கேட்க கசக்குமா?
எழுதுங்க. விடாம படிப்பேன். பின்னூட்டம் இட அவகாசம் இல்லைன்னாலும்......
Innamburan Innamburan <innamburan@gmail.com>
4/8/11





பாகம் -2
அரசு நிச்சியமாக, சர்வாதிகாரம் செய்யத்தொடங்கும்...மக்களாட்சிெனில், வலிமையான எதிர்க்கட்சி தேவை. எல்லாருக்கும் ஓட்டு என்றால், எதிர்ப்பே இல்லாத மெஜாரிட்டி கட்சி ஆட்சி புரிவது, முழுச்சுமையையும் ஒரே கழுதையின் முதுகில் ஏற்றுவது போல. இரு கட்சி வரைமுறையில், சுமையை சமமாக பகிர்ந்து கொள்வதால், அரசாட்சி நிலை பெறும். நமக்கு இரண்டு கண்களும், இரண்டு காதுகளும் இருப்பதால், பார்த்ததையும், கேட்டதையும், உரிய இடத்தில் அமர்த்த முடிகிறது. ஒரே கட்சியை ஆளுமையில் வைத்தால், அத்தருணம், மக்களாட்சி தராதரத்தை இழந்து விடுகிறது. பார்க்க முடிந்தும், காண முடியாது; ஏற்றதாழ்வுகளை எடை போடமுடியாது; எழும் வினாக்களின் எல்லா பரிமாணங்களையும் காண இயலாது. 

காங்கிரஸ் கட்சியின் தாக்கம், வரலாற்றின் வெளிப்பாடே தவிர, தேர்தலில் பெற்ற வெற்றி அன்று. தேர்தலில் கெலிப்பதெல்லாம், இந்த தாக்கத்தின் விளைவு; காரணமல்ல. இவ்வாறு வரலாற்றின் பயனாக பெற்ற தலைமையை நியாயப்படுத்த, அந்த கட்சி இடது சாரியாக திரும்பியிருக்கிறது. இடது சாரியும் வரலாறும் சங்கமம் ஆகிவிட்டதால், வலதுசாரி ஆர்வம் அடக்கி வாசிக்கிறது, அலக்கழிக்கப்படுகிறது. ஆகமொத்தம், காங்கிரஸ் கட்சி சாஸ்வதமாக ஆளுமை வகிக்கிறது.

இந்த அசைக்கமுடியாத நிலையில், நாடாளுமன்ற பிரதிநித்துவம் (என் விளக்கம்: Westminister Model: his words: ‘parliamentary democracy’.) இல்லை. இந்த சூழ்நிலையில், முக்கியத்துவம் கட்சிக்கு; நாடாளு மன்றத்துக்கு அல்ல. கட்சிக்குள் அபிப்ராய பேதங்கள் எழலாம்; காணப்படலாம். கட்சியின் கட்டுப்பாடும், ஆளுமையும் இந்த ‘சுய பரிசோதனையை’ ஒடுக்காமல் இருந்தால், இருகட்சி பேதம், (ஆளும்) கட்சியிலேயே வளரலாம். கட்சி தலைவர், கட்சியின் மெஜாரிட்டி கருத்துக்கிணங்க, தீர்மானங்களை கொணரலாம். அவ்வாறு நிகழ்வது, ஓரளவு சர்வாதிகாரத்தை குறைக்கலாம்; தலைவர் மிக்க ஆளுமைத்திறனும், அத்தகைய அணுகுமுறையும் உடையவர் எனின், அதுவும் சாத்தியமில்லை. கதவை சாத்திவிட்டு, வீட்டுக்குள் கூட, மாற்றுக்கருத்துக்களை அனுமதிக்காமல், ஆளும் கட்சி இயங்கும். எந்தவித தடையும்,தடங்கலும் இல்லாமல், சர்வாதிகாரம்/யதேச்சதிகாரம் கோலோச்சும்...
(தொடரும்)
இன்னம்பூரான்
08 04 2011

sharadha subramanian 
4/8/11

நன்றி இன்னாம்பூர் சார் உங்கள் தமிழ்வாச்ல் அமர்களமாக்த் திறந்து உள்ளது உள்ளே
இன்னும் நிறய விஷயங்களை ப்டிக்க் ஆவலாக உள்ளது



coral shree 
4/8/11


ஐயா, நல்ல செய்திகள். இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம் ஐயா. நன்றி.
Geetha Sambasivam 
4/8/11

to mintamil
 
புதிய செய்தி ஒன்றையும் காணோமே?? அதே செய்திதான் திரும்ப வந்திருக்கு??? குழப்பம்?? எனக்கு வரலையோ???

2011/4/8 coral shree <coraled@gmail.com>
ஐயா, நல்ல செய்திகள். இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம் ஐயா. நன்றி.

Geetha Sambasivam 
4/8/11

அட, இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன்??  நன்றி பவளசங்கரி, நீங்க சொன்னதும் தான் மறுபடியும் பார்த்தேன்.


Innamburan Innamburan <innamburan@gmail.com>
4/8/11


Dear Mrs. Geetha Sambasivam,
As it takes a lot of time to translate his precious writing, I do small bits daily and reproduce earlier input also, so that continuity is available for readers.

Geetha Sambasivam 
4/8/11


Thank You Sir, I did not notice it.  Really it is a great job. hats off to you.
annamalai sugumaran 
4/8/11

என்னிடம் 1960    களில் இருந்து கலகி இதழில் ராஜாஜி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இருக்கும் என நினைக்கிறேன் .
அதில் அவர் எழுதிய சோக்க்ரதர் போன்ற பல கட்டுரை தொகுப்புகள் உள்ளன .
என்னிடம் இப்போது கூட சுமார்  5000 அந்தநாளைய புத்தகங்கள் எனது எளிய இல்லத்தில் இடமின்றிதவிக்கின்றன .
இதுவரை நான் சேர்த்த பெரிய நூலகங்கள் மூன்று முறை களைந்து போயின .
முதல் முறை நான் 1979   வெளிநாட்டில் வேல்லைக்கு சென்றபோது கவனிப்பாரின்றி களைந்து போனது .
அடுத்து மீண்டும் சேர்த்த குவியல் எனக்கு மிகவும் உடல் நிலை சரியில்லாமல் போனபோது .கவனிப்பாரின்றி போனது .
இப்போது புதுவையில் இருப்பது பழயன கழிந்து புதியன புகுந்தது .
அவையே இப்போது படிடிக்க நேரமில்லாமல் குவிந்து விட்டன .

இங்கிருக்கும் பல பழைய புத்தக கடைகளுக்கு நான் தான் புரவலர் .

செல்வம் உபரியாக இல்லை என்றாலும் புத்தகம் குவிந்துவருவது தொடர்கிறது எனது மனைவியின் முனுமுனுப்புக்கிடையே கூட .
என மனைவிக்கு தெரியாமல் எனது வீட்டுக்குள் புத்தகங்களை நான் கொணர்வது ஒரு தனி கலை .

யாராவது என்னை சந்தித்தால் பழைய கல்கி தொடர்களைத் தர தயாராக இருக்கிறேன் .

அன்புடன் 
சுகுமாரன் 

s.bala subramani B+ve 
4/8/11


செல்வம் உபரியாக இல்லை என்றாலும் புத்தகம் குவிந்துவருவது தொடர்கிறது எனது மனைவியின் முனுமுனுப்புக்கிடையே கூட .
என மனைவிக்கு தெரியாமல் எனது வீட்டுக்குள் புத்தகங்களை நான் கொணர்வது ஒரு தனி கலை .


 என்  வீட்டிலும் நடக்கும் கதை இது தான் 
Geetha Sambasivam 
4/9/11


விண்ணப்பம் போட்டு வைக்கிறேன்.  ஆனால் நீங்க சொல்றாப்போல் என் கணவருக்குத் தெரியாமல் கொண்டு சேர்க்கணும். வேறே வழியே இல்லாமல் அவரே தூக்கி வருவதும் உண்டு.

2011/4/8 annamalai sugumaran <amirthamintl@gmail.com>
_________________________
Innamburan
23 04 2013

No comments:

Post a Comment