தணிக்கை செய்வதில் தணியா வேகம் -2:
http://farm3.static.flickr.com/2180/2065012586_4ada249b8b.jpg
இப்படியாக, பாடமும், வேலையும் இணைந்து பயணித்து வரும் காலத்தே, எதிர்பாராமல், ஒரு நாள், அப்பா ஆஃபிஸுக்கு திடீர் விஜயம் செய்தார். அந்த காலத்திலே, யார் வேணுமானாலும் வரலாம்;போகலாம். தங்கு தடை கிடையாது. என் மேஜை துப்புறவாக இருந்தததைக் கண்டு திடுக்கிட்டார். "என்னடா இது? விவஸ்தை யில்லாமல்? ஏ.ஜீ. பார்த்தால் என்ன நினைப்பார்? இரண்டு கோப்புக்களை மேஜையில் வை." என்றார். அனுபவம் பேசுகிறது. அக்காலம், மேலதிகாரிகளின் நன்மதிப்பு இல்லை என்றால் 'அரோஹரா' தான். வேலைப்பளு வெளிப்படையாகத்தெரியவேண்டும், இல்லாவிட்டால் கூட.
சொல்லப்போனால், கோட்டுப்போட்டுண்டு போறதே, ஒரு உத்தி. நாங்கள் எல்லாம், அதிகமாப்போனா, ஒரு டை. அதுவும் கலருக்குத்தான். சில அனுபவசாலிகள், கோட்டில்லாமல் வரமாட்டார்கள். வந்தவுடன், கழட்டியும், நாற்காலியில் மாட்டி விடுவாஅர்கள். ஏ.ஜீ. கூப்டா, அது முதுகேறும். இல்லாவிட்டால், மாட்டப்பட்ட கோட்டு தவம் கிடக்க, ஸார் இல்லையெனில்,ஏதோ வேலையாக அலைகிறார் என்று ஒரு மாயம். எனக்கு தெரிந்த ஒருவர், கோட்டை மாட்டிவிட்டு, மத்தவாளோட வாயாடப்போயிடுவார். ஏ.ஜீ. கூப்டா,கடமையுணர்ச்சியுடன், ப்யூன் வந்து சொல்வான். கோட்டு முதுகேறும்.
இன்னும் சிலருக்கு, மத்தவா வேலையை இழுத்துப்போட்டுக்கிற துர்க்குணம் உண்டு. ஒருத்தர் (பெயர் வேண்டாமே? இதை கேள்விப்பட்ட 'புலு புலு'ன்னு சண்டைக்கு வந்துருவார்!) ஜன்னல் பக்கத்திலே மேஜை நாற்காலிப்போட்டுண்டு உட்கார்ந்திருப்பார். எந்த ப்யூன் போனாலும், கோப்பை பிடுங்கிடுவார். இஷ்டமிருந்தால், தனக்கு ஆதாயம் இருக்குமானால், அதை குடைந்து ஏதோ எழுதுவார். அப்றம் என்ன? சப்றம் தான். இஷ்டமில்லை என்றால், கோப்புப்போக்கு, சிவன் போக்கு என்று விட்டு விடுவார். தனக்கும் இந்த அரசு ரகஸ்யம் தெரியும் என்று, பிற்காலம் காட்டிக்கொள்வார். 'அடுத்த வீட்டு தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று சிலர் தன் வேலையைத் தவிர, மற்றவர்கள் வேலையை மட்டும் செய்வார்கள். சான்றாக, கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? அதற்காகவே இரண்டு ஸீனியர் செக்ஷன்கள்- Treasury Miscellaneous & Works Miscellaneous.. அதாவது 'கருவூலப்பிரிவு: விட்ட குறை, தொட்டகுறை & பொதுப்பணிப்பிரிவு: விட்ட குறை, தொட்டகுறை இந்த இரண்டு செக்க்ஷனும் புகுந்து விளையாடுவாங்க. கேள்வி முறையில்லை.
மாரல்: நிர்வாகம் உறைந்து போகக்கூடாது. பழையன கழிதலும், புதியன புகுதலும் திறனுடன் நடந்து கொண்டே இருக்கவேண்டும்..
இன்னம்பூரான்
2010/1/16 Geetha Sambasivam
இது எப்டி? இன்றைய ஜூனியர் விகடனில் வந்த ஒரு பகுதி:
"...''சமீபத்தில் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு களின்போது சாலையோரங்களில் இருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சரிஞ்சி ருச்சு. ஈட்டி, சில்வர் ஓக், செண்பகம் உள்ளிட்ட அந்த மரங்களோட மதிப்பு கோடிக்கணக்கில் இருக்குமாம். இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, அவற்றை வெட்டும் ஏலத்தை எடுக்க கான்ட்ராக்டர்களுக்குள் கடும் போட்டியாம். ஆனா, அவங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு, ஆளுங்கட்சிப் புள்ளி ஒருவரோட கை பாணத்துக்கு டெண்டரை குடுத்துட்டாங்களாம். அதுவும் சில லட்சங்களுக்குள்ளே சீப்பா கொடுத்திருக்காங்க. டெண்டரை எடுத்த அந்த கை பாணமோ, இதுதான் சாக்குன்னு சொல்லி, நல்லா இருக்கிற மரங்களிலும் ரம்பத்தை பாய்ச்சுறாராம். இந்த மேட்டர் தெரிஞ்சு விசாரணைக்கு வந்த வனத் துறையினரையும் வாகாய் 'கவனிச்சு' வாயடைச்சுட்டு, மங்களகரமா சுந்தரமா தொடருதாம் மரம் வெட்டு.''
மின் தமிழில் ஜோதிஷம் பற்றி ஒரு இழை சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், ஸீலிட்ட டெண்டர் கவருக்குள் இருக்கும் மர்மம் காணப்பெறுமோ? 'முடியும். டாட்டந்ஹாம் கையேடு போடுவார். நாஙக் திரிபு மன்னர்கள்' என்று ஒரு பீ.டபிள்யூ.டீஆசாமி சொல்றாரு.
--
இன்னம்பூரான்
ஓ! அவரும் களப்பணிதான் செய்து கொண்டிருந்தாரா?
:-)))
இருட்டிவிட்டது. உயர்நிலை பொறியாளரோ சகதியில் நின்று கொண்டு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்
No comments:
Post a Comment