எப்படி ஓடினரோ...! - 5
(...பேஸ்து அடிச்சமாதிரி ஆயிடுத்து!...) கம்பியில்லா தந்திகள் பறந்த வண்ணம் இருந்தன. குப்தா தலைமையில், தலை தெறிக்க ஓடினோம், ஸூப்டப் காரில் தான், வேறு திசை நோக்கி. இந்த கிரிஜா புன்சிரித்தாள். இந்த ஹாண்ட் இன் க்ளவ்வுக்குத்தான், ஒரிஜினல் வழித்தடம் தெரியுமே. அப்டிப்பட்ட பாங்கி லேசுல கட்சி மாறமாட்டா தான், கீதா சொல்றமாதிரி. ஆனா, நம்பள் ‘சாம, தான, பேத, தண்டத்துக்கு’ முன்னாலே...
“எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்த மருப்பு
கலங்கினர் பலர்’
என்ற கலித்தொகைப்பாடல், நினைவுக்கு வருகிறது, நாங்கள் கிளப்பிய தூசிப்படலத்தை நினைத்தால்! மார்பு ஏற்றவில்லை எனினும், உள்ளூர கலக்கம் இருந்தது என்பது என்னமோ உண்மை!
கிரிஜாவுக்குத் தெரியாது, போலீஸ் நடமாட்டத்தைக் கண்டு, ‘வனஜன்’, கிருஷ்ணன் கோயிலில் புரோகிதர்களை மிஸ் பண்ணவுடனேயே, ராமர் கோயிலை நோக்கி ஓடியது. விட்டுடுவாரா, குப்தா? ‘குறுவஞ்சி பாய்மா’ போல, சீறிப் பாய்ந்து சென்றது, எங்கள் ஐந்துச்சக்ரப்படை. (நடுவிலே ஸ்டெப்னி மாத்தினோம்; அதை சொல்றேன்!). அதோ! அக்கா! என்று கத்திவிட்டாள், கிரிஜா! அந்த மறைமூர்த்திக்கண்ணன் ( நாவன்னா காவான்னா நோட்டுக.) திருதராரஷ்ரனுக்கு திவ்யசஷுக்கள் கொடுத்தானோ, இல்லையோ, எனக்கு தெரியாது. தேவ் அவர்களைக் கேட்கணும். எங்களுக்குக் கொடுத்தான்! ஓட்ற கார்லே, எழுந்து நின்னுண்டு, வனஜன் அவளுக்கு தாலி கட்டிவிட்டான். குப்புசாமியின் முகத்தைப் பார்த்தேன். கொஞ்சம் கலக்கம் நீங்கினமாதிரி இருந்தது.
ஒரே வினாடி. அவுக கார் வளைக்கப்பட்டது. இரண்டுச்சக்ர சுற்றுவட்டாரப்படை நிறுத்தப்பட்டது. சாவிகள் பிடுங்கப்பட்டன. எல்லாரையும் ஒரு கார் ஏற்றிக்கொண்டு, கஸ்ட்ஹெளஸ் நோக்கிப் பறந்தது. ஒரு காவலர் அவங்க வண்டிகளுக்கு. நம்ம கடுமா, எல்லாவற்றையும் கடந்து, முன்னாலேயே போய்டுத்து. காஃபி குடித்து, ஆஸ்வாசப்படுத்திக்கொண்டோம். எங்களை வரவேற்றது, அந்த வட இந்திய பார்ட்டியின் தலைவர். ‘சாப்பாடு ரெடி’ என்றாரே பார்க்கலாம், அந்த விவரம் அறிந்த பெரியவர்! குப்தா, இருவரையும் கூப்பிட்டுப் பேசினார். அவள் மேஜர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாராம். குப்புசாமி வனஜாவுடன் தனித்து பேசணும் என்றார். ஆனால், என்னையும் வைத்துக்கொண்டார். கிரிஜா நகத்தைக் கடித்தாள்.
வனஜா, வனதேவதைப் போல் இருந்தால், சிவப்பு கூறைப்புடவையில் (காட்டன்). முதல் நாளே டைப் அடிக்கப்போயிட்டாளா! அவள் கண்கள் லாஹிரியில் கிறங்கிப்போயிருந்தன. அழகு கூடிவிட்டது, கொஞ்சம் சினம் கொப்பளித்தால் கூட.
உரையாடல்:
குப்புசாமி: வனஜா!
வனஜா: மாமா!
வனஜா: (என்னிடம்): நீங்க கூடவா! (என் மேல் அவளுக்கு நல்லெண்ணம் இருக்கே என்று எனக்கு சந்துஷ்டி. மழுப்பினேன்).
ஓவர்.
ஆசீர்வாதம் பண்ணிடிங்கோ என்றேன். ‘பொத்’ என்று விழுந்தாள், அவர் தாள்களில். அவன் விறைப்பா நின்னுண்டு இருந்தான். ‘சேவிடா!’ என்று கர்ஜித்தேன், ஈனக்குரலில். சேவிக்கறதா பேர் பண்ணினான். சிரிப்பு தாளாமல், புரோகிதர்கள் பஞ்சாதி ஓதினார்கள். ‘தந்துனா நேனா’!
அந்த வட இந்திய சாப்பாடு பிரமாதம், போங்கோ! ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்களின் பெருமை சாற்றினார், தலைவர்.
Everybody got into the spirit of the things!
முதல் ஹால்ட், கிரிஜாவை ட் ராப் பண்ண, நம்ம கார்லே. அங்கே, ஒரு மகளிர் மன்றமே கூடி இருந்தது. தலைவிக்கிழவி, ஒரு தீர்க்க சுமங்கலி. வந்தவுடன் கேட்டாள், ‘தாலிக்கட்டிட்டுனா?’ என்று. வனஜா அம்மா முகத்திலே, ஒரு கலக்கம் நீங்கா பூரிப்பு. குப்புசாமி வீட்டுக்கு போனா, விசாலம் (வனஜா அம்மா) ஃபோன் பண்ணா, என்று சொல்லி, சிரித்தாள், மாமி. நம் இல்லம் அடைந்தால், வஸந்தா, ‘உங்களுக்காக சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பண்ணியிருக்கேன். வெளிலே சாப்டலாமா, ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா? என்று டோஸ் கொடுத்து விட்டு, கபூர் ஃபோன் பண்ணார், என்று சொல்லி சிரித்தாள். ரோஸ்ட் ஃபிட்டிங் ஃபைனேல்.
நிஜக்கதையும் முடிந்தது; தலைச்சனும் பிறந்தது.
நாடகமே உலகம்.
பி.கு. செல்வன் இளைஞர். அதான், ஓடிப்போறதுக்கும், உடன்போக்குக்கும் வித்யாசம் தெரியல்லை. ஓடிப்போறது = eloping: உடன்போக்கு = Eloping. யாராவது பல பேர் கேட்டால், விளக்கம் தரப்படும்.
No comments:
Post a Comment