Saturday, May 18, 2013

வள்ளலார்~2




வள்ளலார்~2

Innamburan S.Soundararajan Sat, May 19, 2013 at 8:54 PM


வள்ளலார்~2
Inline image 1
மேலும் கேளுங்கள்.
சித்திரத்துக்கு நன்றி:http://www.vallalar.org/templates/vallalarorg/images/VallalarSpaceVallalar.jpg

இன்னம்பூரான்
19 05 2013


அன்புள்ள இன்னம்புரன் அவர்களுக்கு,

மிக்க நன்றி. இப்பதிவை வெளியிட்டதற்கு.
ஒரு தவறு - அது விகடன் செய்ததா ?
முடிக்கும் போது ஒரு குசும்பு வேலை செய்யப்பட்டுள்ளது.
வள்ளலார் எப்போது சமாதி ஆனார் ?
ஞான சபையினை வள்ளலார் சமாதி என்று காட்டுவது எதற்காக ?
ஞான சபை என்பது அகத்தில் உள்ளதை புறத்தில் காட்டுவதற்காக
வள்ளல் பெருமானாரால் ஏற்படுத்தப் பட்டது.
இது கோவில் போன்ற வழிபாட்டு தளம் அல்ல.
இது உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 
அக அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக
வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப் பட்டது.
நாம் எப்பொழுதும் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பழக்கப் பட்டுள்ளோம். அது போன்ற சடங்குகளை விட்டு விலகியதே
சன்மார்க்கம். 
இதன் முடிந்த முடிபு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் ஒன்றே.
இங்கே ஞான சபை என்பதே நம்முள்ளே 
சிற்சபை என்பது எது? 
பொற்சபை என்பது எது ? 
ஞான சபை என்பது எது ?
ஜோதி தரிசனம் என்பது எதற்காக ?
திரைகள் ஏன் விளக்கப் படுகின்றன ?
திரை விலகுவதற்கு முன்பு ஜோதியின் நிறம் என்ன ?
திரை விலகிய பின்னர் ஜோதியின் நிறம் என்ன ?
இது போன்ற சத் விசார கேள்விகளுக்கு 
விளக்கம் தருவதற்காக ஏற்படுத்தப் பட்டது.
ஆகவே ஞான சபை என்பது ஞானத்தை தெரிவிப்பதற்காக 
ஏற்பட்டதே தவிர வள்ளலாரின்  சமாதி என்று தவறானதை தெரிவிக்க வேண்டாம்.
அன்புடன்
நக்கினம் சிவம்
*
 அன்பரே!

சில விஷயங்கள் மீள்சிந்தனைக்கு உரியனவாய் இருக்கின்றன.

1)வள்ளலாரின் பெருமை ஜீவகாருண்யத்தை மிகச்சிறந்த ஆன்மிக நெறியாக வலியுறுத்தியதில் இருக்கிறது.

2)முதல் ஐந்து திருமுறைகள் சைவ சித்தாந்த ரீதியாகப் பாடிய வள்ளலார் ஏன் ஆறாம் திருமுறையை மட்டும் நேர் எதிர்கருத்துடன் பாடவேண்டும்?

3)தனக்கு சிவபெருமானும், முருகனும் அருள் செய்ததாகப் பாடும் ஒருவர் சிவ வழிபாடான சைவத்தை உதறிவிட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று கூறுவாரா?
அருட்பா மருட்பா எதிர்ப்பால் இந்தப் பின்விளைவான போக்கு தோன்றியிருக்குமா? அப்படி நாம் அந்த அருளாளர் விஷயத்தில் நினைப்பதைவிட, அவருடைய அனுதாபிகள் தங்களுக்குப் பிடித்த மகானுக்கு நேர்ந்த இடர்பாடுகளைக்கண்டு எதிர்போக்கு கொண்டு ஆற்றிய செயல்களின் வெளிப்பாடாய் அவை இருக்கலாம் அல்லவா? வள்ளலாரே எவ்வளவு தடுத்திருந்தாலும் சீறிய அன்பு கேட்காதே! 

4)அடுத்து வள்ளலாரின் நூல்களில் இடைச்செருகல் என்பவை இல்லையா? ஆரம்பகால பிரதிகள், கைப்பிரதிகள் அனைத்தையும் கண்டு ஆய்வுப்பதிப்பு வந்துள்ளதா? 

5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது மேடையில் வேத உபநிஷதங்களைப் போற்றி, பிரம்மசமாஜக் கொள்கைகளை எதிர்த்துப் பேசினார் வள்ளலார் என்று படித்த நினைவு.  வாழ்வின் கடைசி கட்டத்தில் தாமே பிரம்மசமாஜம் போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா? 

--- இவை போன்ற பல விஷயங்கள் மீள் சிந்தனையின் போது தோன்றுகின்றன. விளக்கம் தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றி. நீர்விளக்கும், நீர்மையுடன் விளக்கமும் நமக்கு தெளிவு தரட்டும். 
*

”தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி
வண்ணமாமணியே போற்றி மணிவண்ணத்தேவா போற்றி
அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”

ஒருமுறை அருட்பிரகாச வள்ளலார் திருத்தணிக்குச் சென்றார். அடிக்கடி அவர்
அந்த முருகனைக் காணச் செல்வது வழக்கம். ஆனால் போகும் வழியில் இருக்கும்
திருவள்ளூருக்குச் செல்லமாட்டார். அந்தத் தடவை திருவள்ளூரை
நெருங்கியவுடன் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. திருவள்ளூரில்
இருக்கும் அருள்மிகு வீரராகவப் பெருமாளைத் தரிசிக்காமல் போகிறோமே என்று
அப்போதுதான் அவர் மனதில் பட்டது.

பின் அவர் அங்கு போய்ப் பிரார்த்திக்க, வயிற்றுவலி அறவே நீங்கியது. அவர்
இந்தப் பெருமாள்மேல் "வீரராகவ பஞ்சகம்'' இயற்றியிருக்கிறார். இந்தக்
கோயில் வாயிலில் இந்த வீரராகவ பஞ்சகம் பளிங்குப் பலகையில்
செதுக்கப்பட்டிருக்கிறது



தேவ்
________________________________________________________________

[தொடரும்]
வள்ளலார்~3



No comments:

Post a Comment