Showing posts with label மனித நேயம். Show all posts
Showing posts with label மனித நேயம். Show all posts

Tuesday, January 26, 2016

மனித நேயம் 1: 2016

மனித நேயம் 1


கலஹாரி பாலையில் ஒரு வெள்ளையன் சிக்கிக்கொண்டான். அவன் கார், ரேடியேட்டர்ல், நீர் வறண்டு போனதால், நின்று விட்டது. ஆதவன் இறங்க, இறங்க, இவனுக்கு திகில் ஏறியது. ஒன்று: குளிர் கொன்றுவிடும்; இரண்டு: ஒரு பழங்குடி, ஒதுங்கி, மறைந்து, இவனை நோட்டம் விடுகிறான். அசந்து போனால், கொன்று தின்று விடுவானோ என்ற பயம். மேல் மட்டத்தாருக்கு, கீழ்மட்டம் என்றுமே தள்ளுபடி. ஆனால், இனம் தெரியாத பயம்.

சில மணி நேரம். அந்த பழங்குடி, அனுபவத்தின் பயனாக, ஓரிடத்தில் மணலை தோண்டி, சொற்பமான நீரை வாயில் உறிஞ்சி, வெள்ளையனிடம் இருந்த ஜெர்ரிகேனில் தர, அவனும் காரை கிளப்பிக்கொண்டு போகிறான். மிஞ்சிய துளிகளை அருந்த அவன் தாகம் விழைகிறது. பரிதாபமாக, அந்த  'தண்ணீர் பந்தலை பார்க்கிறான், குற்ற உணர்வுடன். அவன் தலை அசைக்க, அருந்தி விடுகிறான். ஆனால், அந்த வெள்ளையனுக்கு தெரியும்; பாலைவனம், இனி நீர் தராது. அந்த பழங்குடி இறந்து போவான்.

பல வருடங்களுக்கு முன்னால், இது நிஜம் என்று படித்தேன்.

இன்னம்பூரான்
15 03 2011

Monday, June 24, 2013

மனித நேயம் ~7




மனித நேயம் ~7
இன்றைய அப்டேட்:
டில்லியில் இருக்கும் திஹார் சிறைவாசிகள் உத்தராகாண்ட் வெள்ளத்தில் அடிபட்டவர்களுக்கு உதவ ரூ,10 லக்ஷம் நன்கொடை கொடுத்துள்ளனர். அதில் ரூ.3.5 லக்ஷம் ஆயுள் கைதிகளிடமிருந்து. சிறையில் உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து, இந்த நன்கொடை.
~ ஹிந்து அப்டேட்.
இன்னம்பூரான்
25 06 2013

Innamburan S.Soundararajan Mon, Jun 24, 2013 at 11:52 PM


மனித நேயம் ~7
Inline image 1

கேதார்நாத், பத்ரிநாத், அலக்நந்தா, பாகீரதி, ருத்ரப்ராயக், ... ஆஹா! என்னே அழகிய பெயர்கள். தெய்வாதீனமோ! மனித பராதீனமோ! ஒரு பெருவெள்ளம் யாத்திரீகர்களை மிகவும் பாதித்து விட்டது. வருமுன் காப்போன் வந்தபின்னும் காக்கவில்லை என்ற கூச்சல். ஆனாலும், நமது ராணுவம் அசகாய வேலைகளை செய்து மீட்புப்பணியில் இயங்குகிறது. இந்த கட்டுரை அதை பற்றியல்ல. நாள்தோறும் ஊடகங்கள் இது விஷயம் பற்றி வரிந்து வரிந்து எழுதுகிறார்கள். நான் பார்த்தவரை, அந்த பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள், அவர்களின் இன்னல்கள், நிவாரணம் அதையெல்லாம் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை, நேற்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் உசாத்துணையை தவிர. அது ஒருபுறமிருக்க...

350 குடும்பங்கள் - இடையர்கள், நெசவாளிகள்,குடியானவர்கள், ஊழியர்கள் - பாகீரதி நதிக்கரையில் வசிக்கும் பகோரி கிராமத்தினரை அமுதசுரபி என்று சொன்னால் சாலத்தகும். கிராமத்துத்தாய்குலம் விருந்து படைக்கிறது. 24 மணி நேரமும் தேனீர் பருகலாம். ஹிந்து/பெளத்த மதம் சார்ந்த சாந்தஸ்வரூபிகளாகிய இந்த பரம ஏழைகளின் பிரதிநிதி சாந்தா தேவி பூரிக்கு மாவு பிசைந்து கொண்டே ‘கவலையற்க. வேண்டியது இருக்கிறது’ என்கிறார். எத்தனை நாட்கள் இது ஓடும்? காசு கூட இல்லை. வங்கிக்கணக்கு எல்லாம் 70 கிலோமீட்டருக்கு அப்பால். போகமுடியாது. இடையில் பெருவெள்ளம். மாநில அரசு எப்படி இயங்கினாலும், ராணுவமும் சோறு போடுகிறது. இந்த மாதிரி எத்தனை கிராமங்களோ? அவர்க்ளுக்கும் நிவாரண/புத்துயிர் உதவி அவசரத்தேவை.

இனி சித்திரம் பேசும். காண, உசாத்துணை சொடுக்கவும். நன்கொடை கொடுக்கவும்.


pastedGraphic.pdf


pastedGraphic_1.pdf



pastedGraphic_2.pdf

உசாத்துணை: அவர்களது காப்புரிமையை மதித்து, நன்றி நவில்கிறேன்.

 (Photos by Prasad Nichenametla)
சித்திரம்:


Saturday, June 8, 2013

மனித நேயம் 6: ஒரு பின்னூட்டம்

மனித நேயம் 6: ஒரு பின்னூட்டம்

Innamburan S.Soundararajan Sat, Jun 8, 2013 at 10:38 AM

மனித நேயம் 6: ஒரு பின்னூட்டம்
Inline image 1

ஜூனியர் விகடனின் இன்றைய கட்டுரையின் பின்னூட்டம், இது, என் வலைப்பூவிலும், மின் தமிழ் போன்ற குழுக்களிலும். பல நாடுகளிலிருந்து வாசகர்கள் இருப்பதால், பொது நலம் கருதி. இங்கிலாந்திலிருந்து உடனக்குடன் முன் அனுமதி வாங்க இயலவில்லை, மன்னிப்பீர்களாக.
1970களில் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுடன் தொடர்பு; நீடித்து வருகிறது. சமூகப்பணி சரி. தன்னலத்தை முற்றும் துறந்த முனிவர், டாக்டர் சாந்தா. அந்த நற்பண்பை எல்லா ஊழியர்களிடமும் அவர் வித்திட்டது, அரும்பணி. அவரது நிர்வாகம் போற்றத்தக்கது. மருத்துவப்பணி கடல் போல் அளவற்றது. பதவிகளும், விருதுகளும் அவரால் மேன்மை பெருகின்றன. விரைவில்,‘பாரத ரத்னாவுக்கு’ அந்த பெருமிதம் கிடைக்கட்டும்.
இன்னம்பூரான்
ஜூன் 8, 2013
http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com


காப்புரிமை: நன்றி: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=33309
_____________________________________________________Image Credit:http://www.cifwia.org/aboutus/history/laidstone.jpg
 'நானே நர்ஸ்... நானே டாக்டர்!'
அசத்தும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்

'அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்’ - பிரபலமான இந்திய மருத்துவமனை களில் ஒன்று. இந்த மருத்துவமனை ஜூன் 3-ம் தேதி 60-வது ஆண்டை நிறைவுசெய் திருக்கிறது.
 இந்த மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா. மாநில அரசின் ஒளவையார் விருது முதல் மத்திய அரசின் பத்மபூஷன் விருது வரை பெற்றவர். இந்தப் புற்றுநோய் மருத்துவ மனையின் சிறப்புக்கு ஆதாரமாக இருக்கும் அவர், இதன் வரலாற்றை விவரிக்கிறார். ''புற்றுநோய்க்காக பிரத்யேகமாகத் தமிழ்நாட்டில் தனி மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவர் டாக்டர் முத்து லட்சுமி அம்மா. அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும்விதமாக இந்த கேன்சர் இன்ஸ்டிட்யூட் 1954-ம் ஆண்டு உதயமானது.
pastedGraphic.pdf
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனை இல்லாத காலகட்டம் அது. பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு இது தொடங்கப்பட்டது. அப்போதுதான் நானும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் அடையாறில் 12 படுக்கைகள்கொண்ட குடிசையில் இந்த மருத்துவமனையைத் தொடங்கினோம். நான் காலையில் பொது மருத்துவமனையில் பெண்கள் குழந்தைகள் பிரிவில் நோயாளிகளைப் பார்த்து விட்டு மதியம் இங்கு வருவேன். அதுவரை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பார்த்துக்கொள்வார். உதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லை. நானே நர்ஸ்... நானே டாக்டர். அறுவைசிகிச்சைகளை நாங்கள் இருவருமே இருக்கும் நேரமான மாலை நேரத்தில்தான் வைத்துக்கொள்வோம். சில முக்கியமான அறுவைசிகிச்சைகளின்போது வெளியில் இருந்து மருத்துவர்களை உதவிக்கு வரச் சொல்லி கெஞ்சுவோம். அவர்களாலும் மாலை நேரத்தில்தான் வர முடியும். அந்த மருத்துவர்களுக்கு பணம்கூட கொடுக்க முடியாத சூழ்நிலை. 7 மணிக்கு அறுவைசிகிச்சை தொடங்கினால், முடிவதற்கு இரவு 11 மணி ஆகிவிடும். நான் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்காக இரவு அவர்கள்கூடவே இந்தக் குடிசையில் தங்கிவிடுவேன்.
1956-ல் கனடாவில் தயாரித்த கேன்சர் சிகிச்சைக் கான 'கோபால்ட் 60’ என்ற கருவியை இந்த மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கினர். ஆசியாவிலேயே முதன் முறையாக அந்தக் கருவியைப் பயன்படுத்த ஆரம்பித்தது நாங்கள்தான். அதன் பிறகுதான் இந்தியாவே எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தது. குடிசையில் மருத்துவம் பார்க்கும் இடத்தில் இவ்வளவு விலை உயர்ந்த கருவி எப்படி வந்தது என்று எல்லோருக்கும் ஆச்சர்யம். மத்திய அரசில் இருந்து அடுத்த நாளே ஒரு குழு வந்து இங்கு ஆய்வு நடத்திய பின்னர்தான் மக்கள் சேவைக்காக இப்படி ஓர் மருத்துவமனை இயங்குகிறது என அனைவருக்கும் தெரியவந்தது. அரசாங்கமும் உதவி செய்ய ஆரம்பித்தது.
pastedGraphic_1.pdf
இங்கு கேன்சர் சிகிச்சை பெறுபவர்களிடம் அவர்களின் வசதிக்கு ஏற்பத்தான் கட்டணம் வாங்குகிறோம். கேன்சரால் பாதிக்கப்பட்ட ஓர் ஏழையிடம் 'உங்கள் சிகிச்சைக்கு இரண்டு லட்சம் ரூபாய் கட்டுங்க’ என்றால், அவரால் எப்படிக் கட்ட முடியும்? இந்த மருத்துவமனையின் நோக்கமே, ஏழை மக்களுக்குச் சிறந்த சிகிச்சை தர வேண்டும் என்பதுதான்.
பெரியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அதே இடத்தில் குழந்தைகளை வைக்க வேண்டாம் என, அவர்களுக்காகத் தனியாக ஒரு பிளாக் தொடங்கினோம். கேன்சருக்காகப் பயன்படுத்தும் மருந்துகள் விலை அதிகமானவை. அவற்றுக்கு 1960 காலகட்டத்தில் அதிக வரி விதித்திருந்தனர். அப்போது நிதி அமைச்சராக இருந்த எஸ்.பி.சவான் சென்னை வந்து இருந்தார். அவரை இங்கு வரக் கேட்டு அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி, இங்கு சிகிச்சை பெற்றுவந்த எல்லாக் குழந்தைகளையும் வரிசையாக நிற்கவைத்து 'இந்தக் குழந்தைகளின் உயிரைக் காக்கும் மருந்துக்கு வரி வேண்டுமா? ரத்துசெய்யுங்கள்’ என்று விண்ணப்பம் வைத்தோம். உடனே, இந்தியா முழுவதும் கேன்சருக்கான மருந்துகளுக்கு வரியை நீக்கினார். அந்த மகத்தான மாற்றம் நடந்த இடம் இதுதான். இன்று மருத்துவமனையோடு ஆராய்ச்சி மையமும் சிறப்பாக நடக்கிறது.
இவ்வளவும் எங்களால் செய்ய முடிவதற்குக் காரணம் ஸ்பான்சர்களும் அரசாங்க உதவியும்தான். இங்கு வேலை செய்யும் டாக்டர் களுக்கு பெரிய சம்பளம் கொடுக்க முடிவதில்லை. டாக்டர்களும் ஊழியர்களும் சேவையாக நினைப்பதால்தான், இவ்வளவு தரமான சிகிச்சை அளிக்க முடிகிறது'' என்றார்.
அதற்குச் சாட்சியாக அவருடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் டாக்டர்கள் வசந்தன், லட்சுமணன், செல்வ லட்சுமி, சுவாமி நாதன், சாகர் ஆகியோர் அங்கே  அக்கறையாகப் பணியாற்றுவதைப் பார்க்க முடிந்தது.
சேவை தொடரட்டும்.
- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: பா.கார்த்திக்
________________________________________________________________________________

Sunday, May 19, 2013

மனித நேயம் ~ 5

மனித நேயம் ~ 5
Inline image 1
சில மடலாடும் குழுக்களில் யானொரு உறுப்பினன். இந்த இழைகளில் சில அவற்றில் பதிவானவை. சில உடனக்குடன் அங்குமிங்கும் பதிவாகின்றன. ஏனெனில் வாசகர் வட்டங்கள் வெவ்வேறு. மனித நேயம் ~4ன் பின்னணி, எங்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் உப தலைவர் திருமதி. சுபாஷிணி ட் ரெம்மல் எழுதிய ஒரு குறிப்பு. மனித நேயம் ~4 பதிவை மார்த்தவுடன், இந்தியாவிலிருந்து நண்பர் கீதா சாம்பசிவம் எழுதியதையும், அதைத் தொடர்ந்து சுபாஷிணி எழுதிய ஒரு மனித நேய வரலாற்றை, அவருடைய அனுமதியுடன் இங்கு பதிவு செய்கிறேன். இன்றைய காலகட்டத்தில் நிமிடத்தில் கடிதப்போக்குவரத்து முடிந்து விடுகிறது.
_____________________________________________
 
'இதைப் படிக்கையில் மனம் கனக்கிறது.  வேற்று நாட்டுக்கு அகதிகளாகச் செல்பவர்கள் நிலைமை மோசம் தான் என்றாலும் கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் சொந்த நாட்டவர்களே உதவி என்ற பெயரில் நடந்து கொள்வது குறித்து என்ன சொல்வது! :(((((' ~ கீதா சாம்பசிவம்.

எனக்குத் தெரிந்த ஒரு இலங்கைத்தமிழ்க்குடும்பத்துப் பெண்மணி..
இலங்கையின் போர்காரணமாக அங்கிருப்பதை  விட ஜெர்மனியில் உள்ள ஒரு  தமிழருக்கு திருமணம் செய்து வைத்து அங்கேயே தங்க வைத்து விட முடிவெடுத்து.. அப்பெண்ணின் 31வது வயதில் பெற்றோர்கள் லட்சக்கணக்கில் ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து இப்பெண்ணை இலங்கையிலிருந்து ஜெர்மனிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்து ஏற்பாடு செய்தனர். 

திருட்டுத்தனமாக செல்வது என்பதால் நேராக ஜெர்மனி வரமுடியாது.. ஆக பல்வேறு நாடுகளில் வேவேறு வழிகளில் இருந்து தான் வரவேண்டும். அந்த வகையில் இலங்கையிலிருந்து திருட்டுத்தனமாக ஏஜெண்டுகள் ஏற்பாட்டில் இந்தியாவில் ஓர் ஊருக்கு வந்து அங்கே 8 மாதங்கள் திருட்டுத்தனமாக ஒளிந்து கொண்டு வாழ்ந்து பின்னர் அங்கிருந்து தாய்லாந்து அனுப்பப்பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் மலேசியா வந்திருக்கின்றார். இங்கு எல்லாமே இலங்கைத் தமிழ் ஏஜெண்டுகள் இருக்கின்றனர். மலேசியாவில் 6 ஆண்டுகாலம் ஓரு ஊரில் ஒளிந்து கொண்டு வாழ்ந்திருக்கின்றார். இடையில் இந்த ஏஜெண்டுகளால் பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுத்தப்பட்டு.. பின்னர் அங்கிருந்து இத்தாலி அனுப்பப்பட்டு.. பின்னர் அங்கிருந்து இறுதியில் ஜெர்மனி வந்து .. பின்னர்  அந்த உறவினரைச் சந்தித்து அவர் வழியாக அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டு பின்னர் அவரையே திருமணமும் செய்து கொண்டு. தற்சமயம் 19 வயதில் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.

திருமணத்திற்குப் பின் தான் தெரிந்திருக்கின்றது அந்தக் கணவர் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டவர் என்பதும், அடித்து  துன்புறுத்துபவர் என்பதும். இதையெல்லாம் தாங்கிக் கொண்டு சில  ஆண்டுகள்.. கடந்த 5 ஆண்டுகளாக உளக்கோளாறு வந்து ஹிஸ்டீரியாவில் கஷ்டப்படுகின்றார்.. ஹிஸ்டீரியா கொண்டு அலறுவதால் அண்டை வீட்டுக் காரர்கள் போலீசாருக்கு தகவல் சொல்ல போலீஸார் வந்து இவரை மன நோய் சிகிச்சை தர அழைத்துச் சென்று விட்டனர். 

பின்னர் மனம் ஓரளவுக்கு அமைதி அடைந்து தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று மனித உரிமை சங்கத்தை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் ஒரு சூப்பர்மார்க்கெட்டில் பணி புரிகின்றார்.  அவ்வப்போது நான் பார்க்கும் போது நலம் விசாரிப்பேன்.. இது ஒருவரது உண்மை சம்பவம்.. இது போல ஏராளம் ஏராளம்..

சுபா
*
நன்றி, சுபாஷிணி.
Image Credit:https://www.nhm.in/img/978-81-8493-477-9_b.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

மனித நேயம் ~4




மனித நேயம் ~4

Innamburan S.Soundararajan Sun, May 19, 2013 at 2:43 PM

மனித நேயம் ~4
Inline image 1

கதை கேளும். இது கதையல்ல. நிஜம்.
மொஹம்மது .... எழுதப்படிக்கத்தெரியாத பங்களா தேஷ் அகதி, இங்கிலாந்தில். சட்டத்தை மீறி எப்படியோ 13 வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்தில் திருட்டுத்தனமாக புகுந்து விட்டார். தெருவுக்குத் தெரு இந்திய உணவு விடுதிகளா இங்கு.  நடத்துவது, பெரும்பாலும் பங்களா தேசிகள். அத்தகைய ஹோட்டல்களில் எடுபிடியாக, எக்ஸ்ப்ளாயிடட். ஒரு நாள், தாங்கமுடியாமல், எங்கள் ஆலோசனை மன்றத்துக்கு வந்தார், எல்லை தாண்டி. அவருடைய சர்நேம் குழப்பம். ஆங்கிலம் தெரியாததால், பிரச்னை. எங்கள் மன்றம் சின்ன அமைப்பு. அதன் மானேஜர் பிராந்திய எம்.பி.க்கு, உரிமையுடன் எழுதுகிறார்,

'இவர் அப்பாவி. ஏழை. நாம் உதவ வேண்டும். 14 வருடங்கள் அஞ்ஞாத வாசம் செய்தால், துணிவுடன் தலையை காட்டி, குடியுரிமை நாடலாம். அது தான் சட்டம். நான்கு மாதங்கள் தான் பாக்கி. சலுகையுடன் அதை பொருட்படுத்தாமல், இவருக்கு உதவ, உங்கள் பரிந்துரை உதவும். அது வேண்டும்.'

அதற்கு வேண்டிய ஆவணங்கள் அவருடைய வக்கீல் கையில். அவரும் பங்களா தேஷ் ஆசாமி. மொகம்மது அவர் சால்ஜாப்பு சொல்கிறார், காசு வாங்கிக்கொண்டு, என்றார். நாங்கள் பேச முனைந்தால், ஒரு வினாடிக்கு இத்தனை பவுண்டு கட்டினால் தான் ஆச்சு என்று முழக்கம். நாங்கள் ஆலோசனை மன்றத்துக்கு ஆட்கள். உம்மை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று அவரை வழிக்குக் கொண்டு வந்தோம். ஆவணங்களை வாங்கி ஒரு பிரிட்டீஷ் வக்கீலுடன் கொடுத்தோம். அவரோ இலவசமாக பணி புரிந்தார். இதற்கான நிர்வாக ஊழியம் செய்தது குடும்பத்தலைவி ஒருத்தி. மிருதுவான ஸ்வபாவம். கறார் ராணி. அந்த வக்கீலுடன் இவருடைய கண்டிப்பான சம்பாஷணை அபாரம். இந்தியாவில் எத்தனை குடும்பத்தலைவிகள் இவ்வாறான பணி செய்ய இயலும். ஊஹூம்! நான் லக்ஷக்கணக்கில் செலவு செய்து ஊரூராக அலைந்தது தான் மிச்சம். இத்தகைய தன்னார்வப்பணிகளுக்கு இந்தியாவில் ஆதரவு இல்லை. பிரதமர் மன்மோஹன் சிங்குக்கு, அவர் முதல் தடவை பதவி ஏற்ற தினமே எழுதினோம். நோ ரிப்ளை. ஜனாப் அப்துல் கலாம் அவர்களுக்கு, அவர் பதவி துறந்த தினமே எழுதினோம். நோ ரிப்ளை. பல தன்னார்வ அமைப்புகளிடம் படையெடுத்தேன். ஒரு காதில் வாங்கி எதிர் காதின் வழியே. விட்டார்கள். நானும் தமிழன்னையிடம் அடைக்கலம் புகுந்தேன்.

Monday, May 13, 2013

பாமர கீர்த்தி 4 மனித நேயம்


பாமர கீர்த்தி 4 
மனித நேயம்


இந்த இழையில் கனிவுடன் கலந்து கொண்டோர்களுக்கு நன்றி. பாமர கீர்த்தி என் பல நாள் கனவு. இந்த இழையே 18 04 2011 அன்றே தொடங்கி, ஐந்து மாதங்கள் ஓடி விட்டன. ஷைலஜாவின்/மற்றவர்களின் அனுபவங்களும் நல்வரவே. பேராசிரியரின் ஆய்வு சிந்தனையை தூண்டுகிறது. இத்தருணம், "அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24" இழையில் ஈற்றடியில் யான் பதிவு செய்ததை இங்கு மீள்பதிவு செய்கிறேன்:

"...இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு, தமிழகம், செந்தமிழ், தனித்தமிழ், செம்மொழி, என்று தோள் தட்டுகிறோம்; குரலெழுப்புகிறோம்; வாதங்களில் இறங்குகிறோம், படியில்லா கிணற்றில் சறுக்கியபடி.  
"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்' 
என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை உதட்டசைத்து மட்டும் பாடுகிறோம். ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!..." 

அவ்வாறு யான் உரைத்ததின் பின்னணியே, 'யாதும் ஊரே...'.  
ஷைலஜா சொல்படி, ஒரு பாமர கீர்த்தி, ஏற்கனவே சொல்லியிருந்தாலும்: 

1947: டோனாவூர் ஒரு கிருத்துவ ஆஸ்பத்திரியும், அதை சார்ந்த கிராமமும். அங்கு என் தங்கை கமலாவுக்கு தீவிர வைத்தியம். சனிக்கிழமை தோறும் கணக்குத் தீர்க்கவேண்டும். விதி விலக்கு கிடையாது. தொகை மறந்து விட்டது. சூத்திரம் தான் என்றும் மறக்க முடியாதது. பில் ரூ. 209/- எனலாம், இப்போதைக்கு.  முழித்தேன். இனி உரையாடல்:

அத்தை: ராஜூ! ஏன் முகவாட்டம்? சொல்லு விஷயத்தை.
நான்: ரூ.209/- எல்லாம்! [இழுக்கிறேன்]
அத்தை: பில்லை செட்டில் பண்ணிடணும், ராஜூ. அதைக்கொடு.
[ரூ.209/- அடிக்கப்பட்டு, ரூ.9/- ஆக, என்னை பார்த்து புன்னகிக்கிறது.]
எனக்கோ ரோஷமதிகம். கண்கள் குளமாயின. 
நான்: அத்தை! இதை ஆயுசு பர்யந்தம் சொல்லிக்கொண்டேயிருப்பேன். இதோ! உங்களிடம் சொல்கிறேன். ஸுபாஷிணி புதுசா ரொம்ப பேர் வந்திருக்கிறதாக சொல்லியிருக்கிறார். அதான், மறுபடியும்.
விளக்கம்: அத்தை பெயர் நூரானி. அத்தை என்று கூப்பிடுவது டோனாவூர் மரபு. அத்தை நூரானி ஜெர்மானியர். ஹிட்லரின் காலகட்டத்து பெண்மணி.
அவருடைய கீர்த்தி பாடுவதுடன் நிற்காமல், அவருடைய ஈகையை பரப்புவதும் என் கடனே. இழை தொடரட்டும்: தொகுப்போம்.

நன்றி, வணக்கம். அந்த ஆஸ்பத்திரி நகரை நிறுவியவர் அமி கார்மைக்கேல். அவருக்கு வந்தனம்.
சித்திரத்துக்கு நன்றி: http://images.betterworldbooks.com/161/Amy-Carmichael-Wellman-Sam-9781616269081.jpg

Sunday, April 21, 2013

மனித நேயம்






மனித நேயம்


கலஹாரி பாலையில் ஒரு வெள்ளையன் சிக்கிக்கொண்டான். அவன் கார், ரேடியேட்டர்ல், நீர் வறண்டு போனதால், நின்று விட்டது. ஆதவன் இறங்க, இறங்க, இவனுக்கு திகில் ஏறியது. ஒன்று: குளிர் கொன்றுவிடும்; இரண்டு: ஒரு பழங்குடி, ஒதுங்கி, மறைந்து, இவனை நோட்டம் விடுகிறான். அசந்து போனால், கொன்று தின்று விடுவானோ என்ற பயம். மேல் மட்டத்தாருக்கு, கீழ்மட்டம் என்றுமே தள்ளுபடி. ஆனால், இனம் தெரியாத பயம்.

சில மணி நேரம். அந்த பழங்குடி, அனுபவத்தின் பயனாக, ஓரிடத்தில் மணலை தோண்டி, சொற்பமான நீரை வாயில் உறிஞ்சி, வெள்ளையனிடம் இருந்த ஜெர்ரிகேனில் தர, அவனும் காரை கிளப்பிக்கொண்டு போகிறான். மிஞ்சிய துளிகளை அருந்த அவன் தாகம் விழைகிறது. பரிதாபமாக, அந்த  'தண்ணீர் பந்தலை பார்க்கிறான், குற்ற உணர்வுடன். அவன் தலை அசைக்க, அருந்தி விடுகிறான். ஆனால், அந்த வெள்ளையனுக்கு தெரியும்; பாலைவனம், இனி நீர் தராது. அந்த பழங்குடி இறந்து போவான்.

பல வருடங்களுக்கு முன்னால், இது நிஜம் என்று படித்தேன்.

இன்னம்பூரான்
15 03 2011
*
Photo Credit: http://www.docslide.com/assets/images/large/2011/11/21340-the-san-people-bushmen-of-the-kalahari-desert-p1.gif

Tuesday, April 9, 2013

மனித நேயம் 1




மனித நேயம் 1
29 messages


Innamburan Innamburan Wed, Nov 18, 2009 at 12:35 AM
To: mintamil

நேற்று சென்னையில் ஒரு அற்புதம் நடந்தது. சென்னையை தாயகமாகக் 

கொண்ட வடநாட்டு முதியவரொருவர் (79) இயற்கை எய்தினார். கண் தானமும் 

நடந்தது. தற்காலம், இந்த பணி அதிகரித்துவருவது நற்செய்தியென ஒரு 

பக்கமிருக்க, இச்ச்சான்றோனின், ஒரு கண்ணை எடுத்தது, அவரது திருமகனார். 

மற்றொன்றை எடுத்தது, வீட்டிற்கு வந்த திருமகள். அவர்கள் இருவரின் 

மனநிலை எவ்வாறு இயங்கியிருக்கும் என்று நினைக்கவே நம் மனம் 

கலங்குகிறது. அந்த முதியவரின் பெயர்: டாக்டர் அகர்வால், பிரபல கண் 

மருத்துவர்.

இன்னம்பூரான்

Tthamizth Tthenee Wed, Nov 18, 2009 at 3:42 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
பஞ்ச பூதங்களுடன் மீண்டும்  கலக்கும் இந்த உடலை  இந்த உலகில் வாழும் மற்றவர்க்கு உபயோகப்படும்படி   தானம் செய்தல் உண்மையான  மனிதாபிமானம்
 
அதில் வரும் இது போன்ற  சில வருத்தங்களை நாம் சமாளிக்க வேண்டியதுதான்
 
அப்போது நாம் ஒரு பெரிய அரிய செயலைச் செய்த த்ருப்திக்கு ஆளாவோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
18-11-09 அன்று, Innamburan Innamburan <innamburan@googlemail.com> எழுதினார்:



Venkatachalam Subramanian Wed, Nov 18, 2009 at 4:58 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஓம்.
உறுப்புதானம் செய்யும் நற்பணி தற்போது செயறேபடுகின்றது.. உறுப்புதானத்தின் விளைவாய் தமிழுக்கு ஒரு புதிய சொல் கிடைத்திருக்கிறது.

’உதானம்= உறுப்பு தானம்.’

என்தாயார் மாதுஸ்ரீ சங்கரிஅம்மாள் அவர்களின் விருப்பப்படி அவர்களது கண்கள் இரண்டும் இரண்டு பார்வையற்றோருக்கு தலா ஒன்றாகப் பொருத்தப்பட்டுள்ளன.

எவருக்கு தரப்பட்டது என்பதை மறைபொருளாக வைக்கச் சட்டம் சொல்கிறது போலும்.ஏனெனில் பின் தொடர்ச்சி செய்வோர் உளர் என்றபதும் ஒருவகையில் சரிதான்.

இதில் மிகுந்த சிரமம் என்னவெனில், இறந்தவர் விரும்பினாலும், அங்கு குழுமும் சுற்றம் போதிய விழிப்புணர்வின்மையின் காரணத்தால் கண் தானம் செய்வது பாபம் என்பது போன்று ஓங்கிப் பேசித்  தடுக்கும். அதையும் மீறி செயற்பட உரிமையான நெருக்கம் மறுக்கும்.
தானம் செய்ய விருப்பம் உள்ள குடும்பத்தினர் உடனடியாகச் செய்ய வேண்டியட்வை:
  • கண்மருத்துவ மனையின் தொலைபேசியுடன் தொடர்புகொண்டு நம் முகவரியை தெளிவாகக் கூறி, வந்தடைவதற்கு தேவையான இடவிளக்கம்,அருகில் உள்ள அனைவருக்கும் தெரிகின்ற அடையாளங்கள் (லேண்ட் மார்க்) தெரிவிக்கவேண்டும்.
  • இறந்தவரின் இருகண்களிலும் சிப்ளாக்ஸ் கண்மருந்தை ஊற்றி இரு விழிகளையும் மூடவேண்டும்.
  • சிறிது ஐஸ் எடுத்து சர்ஜிகல் பஞ்சில் வைத்து விழிகளின் இமையின் மிது ஒற்றித் துடைத்தாற்போன்று வக்கவேண்டும்.
  • தலைப்பாகம் உடலை விட சற்று உயரத்தில் இருக்குமாறுஒரு தலையின் அடியில் தலையணையை வைக்கவேண்டும்.
  • மருத்துவ குழு தேவையான உபகரணங்கள் தர்மோஸ் பிளாக்ஸ் ஆகியவற்றுடன் வந்தவுடன் எவ்வளௌ விரைவாக அவர்களுக்கு உதவ முடியுமோ உதவிசெய்து அனுப்பவேண்டும்.
  • இவை சரிவர முடிந்தபின்னர் இதர நடைமுறைக் காரியங்கள்  செய்யலாம்.


  • அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Nov 19, 2009 at 3:50 AM
To: mintamil@googlegroups.com
வழக்கம் போல, ஓம் அவர்கள் நடைமுறை விளக்கமும் கொடுத்துள்ளார். நன்றி. இந்த இழையின் நோக்கம், மனிதநேயத்தின் நல்வரவுகளை, யாவரையும் பதிவு செய்ய வேண்டுவது. 

சான்று 2: 

விசனத்தில் ஆழ்ந்தோருக்கு, தக்கதொரு ஆறுதலும், ஆலோசனையும், முடிந்தால் அடைக்கலமும், வழங்குவது. ஓம் அவர்கள் இங்கிலாந்து நாகரீகம் பற்றி இரு அருமையான இணைப்பு அளித்துள்ளார். அந்த நாட்டின் மரபு ஒன்று, இருக்க இடமில்லாதோர்க்கு அடைக்கலம் அளிப்பது. பொதுவுடமை தத்துவத்தின் தந்தையான கார்ல் மார்க்ஸ், தனது நாட்டிலேயிருந்து துரத்தப்பட்டு, இங்கிலாந்தில் அடைக்கலம் நாடினார்
ஆஸ்திரிய முதல்வரோ, 'இவன் மஹாராணி விக்டோரியாவை கொலை செய்ய வருகிறான். துரத்தி விடுங்கள்' என்று ரகசியக்கடிதம் எழுதினார். அதை குப்பையில் போட்டுவிட்டு, அவருக்கு அடைக்கலம் அளித்தது, பிரிட்டீஷ் அரசு. பின் வந்த வரலாறு, உலகே அறியும்.
இன்னம்பூரான்