Saturday, May 4, 2013

அம்மாக்கண்ணுவும்,கண்ணாயிரமும்: 2



அம்மாக்கண்ணுவும்,கண்ணாயிரமும்: 2

Innamburan S.Soundararajan Sat, May 4, 2013 at 10:28 PM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88
அம்மாக்கண்ணுவும்,கண்ணாயிரமும்: 2

https://lh6.googleusercontent.com/-X8QkWq5BwYM/TYzjWrwjpPI/AAAAAInline image 1AAAGxY/C8Q163FCSGo/s1600/penniyam---ancient-women.gif

'அம்மாக்கண்ணுவும்,கண்ணாயிரமும்' ஒரு அமங்கலத்தொடர். எழுதும்போது கை மட்டும் அல்ல. மனதும் வலிக்கிறது. இன்று ஒரு புதிய தகவலை அலச நினைத்தபோது, பழம்பாக்கி கண் முன் வந்து நின்றது. மேலும் தினந்தோறும் யாராவது ஒருவர் படிப்பதை கூகிள் எடுத்துரைக்கிறது.
இந்த தொடர் நான்கு பாகங்களில் வரும்.
இன்னம்பூரான்
04 05 2013
_______________________________________________________________________________________________

நேயர்களே,

டாக்டர் விஜய் நாகஸ்வாமி சென்னையில் பிரபல மனநல வைத்தியர்.  ஜஸ்டிஸ். வர்மாக்குழுவுக்கு நான் எழுதிய மடலை நேற்று இங்கு பதிவு செய்தேன். அதற்கும் இவரின் கருத்துக்களுக்கும் ஒப்புமை இருப்பதை, அடிகோடிட்ட பகுதிகளில் இருந்து தெரிய வருகிறது.. நான்கு நேயர்கள் என் பதிவை பார்வையிட்டிருந்தாலும், இது தீவிர பிரச்னை என்பதால் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

05 01 2013

Dear Friends,



05 01 2013

*

Rapes and wrath

VIJAY NAGASWAMI



I belong to myself. Photo: AP
TOPICS
 The fight against rape
crime
sexual assault & rape

social issue

An independent all-woman criminal justice system for acts of violence against women would stand a better chance of enabling equitable justice than one dominated by patriarchal insensitivity.
What more can I say about the unconscionable event that took place on the night of December 16 in Delhi that has not already been said or written about over the last fortnight? Every conceivable aspect of the brutal rape and the reactions to it have been reported, dissected and analysed. We have all seen stirring images of the outrage on the part of young Indians from Delhi and many other cities in the country.

We have all been angered by the rank insensitivity of the powers-that-be and their anaemic responses. And most of all, we have all been deeply saddened when the undeserving victim’s body, viciously savaged by six barbarians, could fight no more. We have heard, read, felt all of these and more, but still, like most other horrified Indians, I feel the need to say something — if for no other reason than to honour the memory of the 23-year-old student whose name has remained protected, and who will doubtless become a posthumous icon for the war on violence against women.

I know that at such a time, the most immediate thing to do is to demand the lynching of the perpetrators — the gang of six. Which is why we have had debates about the most befitting punishment for the crime. Some of us believe that nothing short of the death penalty would be acceptable. Many of us want castration in the belief that this will not only be just punishment but will also deter other potential offenders from even contemplating such an act. Some want the rape laws to be tightened and legal processes to be fast-tracked. And some of us quibble about the definition of rape.

Whether accompanied by violence or not, rape is, more than anything else, the complete violation of a woman’s self-respect and dignity. Her sense of humiliation and utter powerlessness at the time leaves mental scars that are far more difficult to heal than the scars on her body. Which probably explains why many social scientists consider rape to be driven by the need for dominance and control of men over women. However, evolutionary biologists are more inclined to believe that rape is more about sex than dominance and control. The underlying theory here is that the male of the species is more likely to be sexually profligate and is more likely to forcibly satiate himself sexually when he believes he can get away with it.

This simmering sex vs control debate was powerfully renewed in 2000 after the publication of The Natural History of Rape: The Biological Bases of Sexual Coercion by Randy Thornhill and Craig Palmer. This book still remains controversial because its biologist and anthropologist authors pooh-poohed what has come to be known as the “feminist perspective” that views rape as a patriarchal tool to dominate women. The issue is clearly a complex one, but I believe the two perspectives are not necessarily mutually exclusive.

Obviously sex does play a role, particularly in a sexually repressed society like India where even at a protest march against rape, men reportedly sexually grope women in the crowd. But given the brutal manner in which the poor young girl was assaulted for no real reason other than that the perpetrators could do so, it’s obvious that other factors are equally if not more important.

If men didn’t feel protected by the institution of patriarchy, they wouldn’t feel as free to engage in sexual coercion as they do. Nor would they see their sexual gratification as an entitlement from their wives or from women belonging to the more oppressed castes. From eve-teasing (which has almost become a man’s rite of passage) to sexual assault is not much more than a small step. There is something terribly wrong with the way in which we, as a nation, experience and understand masculinity.

While I have no quarrel with making the punishment for rape more stringent (I personally favour 10 years to life imprisonment), I don’t believe that changing the law is by itself going to ensure justice for victims of rape, for the implementation of even the best of laws by a system where power equations are lopsided is unlikely to ensure equity.

Even after this tragedy, we still hear the voices of those who are considered leaders and opinion makers exhorting women to “de-sex” themselves so as not to arouse men’s lust, thereby victimising the victims even further. And although I don’t believe that all women are necessarily more empathetic of other women than men could be, I still believe that an independent all-woman criminal justice system for acts of violence against women would stand a better chance of enabling equitable justice than one dominated, certainly at its lower levels, by patriarchal insensitivity.

It’s always easy to place the onus for the remedy entirely at the doorstep of legislators. But each of us also needs to do our bit, for patriarchy happens inside our heads.

It is an attitude deeply entrenched in our minds by systems that are constant reminders that men are more equal than women, where men are the protectors and women the protectorate, where brides are “given away” (kanyadaan) but grooms are not, where chastity is a feminine virtue but a masculine weakness, where daughters are “dowriable” liabilities and sons “dowriable” assets, and so on.

For all of these to change, each of us needs to ask ourselves how we can ensure that our sons are never allowed to feel superior owing to their gender and our daughters inadequate owing to theirs. Tough question. But one that, at no time more than the present, demands to be asked. And answered.




Retrieved from the Hindu (05 01 2013) on that date, with thanks & acknowledging their copyright

http://www.thehindu.com/opinion/columns/Vijay_Nagaswami/rapes-and-wrath/article4269072.ece?homepage=true
***
கிருஷ்ணகிரி மாநிலத்து சென்னப்பநாயக்கனூருக்கு அருகில் உள்ள பழையூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கோவிந்தனுக்கு (23) ஒரு பழக்கம். யாராவது ஒரு பெண்ணின் தலையில் படுகாயப்படுத்தி, அவள் சுயநினைவை இழந்தபின் கற்பழித்து, அதன் பிறகு ஒரு பாறாங்கல்லால் தலையில் அடித்து கொன்று விடுவான். பீளமேடு என்ற இடத்தில் இப்படி ஒரு எட்டு வயது பெண்ணை அவன் கொன்றதாக சொல்லப்படுகிறது. வழக்கு பதியப்பட்டதா இல்லையா என்பதை பற்றி தகவல் இல்லை. ஊடக செய்திகளை படித்தால், வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், காலவறைக்குள் போலீஸ் சார்ஜ்ஷீட் பதிவு செய்யாததால் அவனுக்கு ஜாமீன் கிடைத்தது என்று தோற்றம். அப்படி கிடைத்த இடைவெளியில் தான் அந்த காலேஜ் மாணவியை கொன்றான்.  ஜனவரி 21, 2011 (இரண்டு வருடங்களுக்கு முன்)  அதிலும் ஜாமீன் கிடைத்தது. விந்தையான காரணம். காலாகாலத்தில் ோலீஸ் சார்ஜ்ஷீட் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் முடிந்தது. அதனால் ஜாமீனாம்! அப்படி கிடைத்த இடைவெளியில் அவன் ஊத்தங்கரையில் டிசம்பர் 28,2011 அன்று பள்ளி ஆசிரியை ஒருவரை கொல்ல முயன்றான். அவள் போட்ட சத்தம் கேட்டு, பொது மக்கள் அவனை பிடித்துக்கொடுத்தனர், போலீசிடம். அப்போது தான் இவன் காலேஜ் மாணவியை கொன்றவன் என்பது தெரிய வந்ததாம்!!!!. குண்டர் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டான்.  அந்த கேஸ் நடந்து முடிந்து இன்று அவனுக்கு கொலைக்குற்றத்துக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கற்பழிப்புக்கு 10 வருடம் + 2500 ரூபாய் அபராதம். இது எல்லாம் இன்று வந்த ஊடக செய்திகள்.

எழும் கேள்விகள்:

இவன் பயங்கர மனநோயாளியா? பெண்ணாசை மட்டும் பிடித்தவனா?
இவனை போன்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க சட்டத்தில் இடமில்லையே. எப்படி கிடைத்தது?
ஜாமீன் கொடுக்கப்பட்டது காரணங்களை சொன்னவர் ஒரு சீனியர் போலீஸ் அதிகாரி.  நடந்தது போலீஸின் சட்ட நிர்வாகத்தின் கோளாறா? / சட்டதின் ஓட்டையா? ஓட்டையானால் என்ன ஓட்டை எந்த சட்டத்தில்?
முதல் கேசில் ஜாமீன். இடைவெளியில் ஒரு கொலை. இதனால், ஜாமீன் கொடுத்தவர்களுக்கு கொலையில் பங்கு உண்டா?
அதே மாதிரி, அடுத்த தாக்குதலும். அதே கேள்வி.
பொது ஜன அபிப்ராயப்படி, (அதாவது உங்கள்) இவனை எப்போது என்ன செய்திருந்தால், சமுதாயத்துக்குப் பாதுகாப்பு?
இன்னம்பூரான்
07 01 2013

செல்வன்
பொது ஜன அபிப்ராயப்படி, (அதாவது உங்கள்) இவனை எப்போது என்ன செய்திருந்தால், சமுதாயத்துக்குப் பாதுகாப்பு?


இவனுக்கு தான் தூக்கு தண்டனை கொடுக்க கூடாது என்பது உங்கள் கட்சி ஆச்சே?

உங்க விருப்பபடி இவனுக்கு ஆயுள் தன்டனை தான் கிடைத்து உள்ளது. 14 வருடத்தில் அல்லது எதாவது தலைவரின் நூற்ராண்டு விழாவில் விடுதலை ஆகிவிடுவான். அப்புறம் இன்னும் எதாவது பெண்ணின் தலையில் கல்லால் அடித்து கொல்லுவான்.

இதுமாதிரி நாய்களை எல்லாம் முதல்தடவை பிடித்தவுடன் காயடித்து தூக்கில் போட்டுவிடவேண்டும். அதுக்கு எல்லாம் அமெரிக்கா தான் சரிபட்டு வரும். ஆவ்சம் அமெரிக்கா


தேமொழி

இவ்ழக்கில் குற்றவாளிகள்  காவல் துறையினரும்.

நேரத்திற்கு பணிக்கு வராத மருத்துவர்களை ஒருநாள் திடீரெனஆய்வுக்கு வரும் சுகாதாரத் துறை அமைச்சர் பணிநீக்கம் செய்வார்.

இது போன்று  காவல் துறையினர் மீதும் அது போன்ற நடவடிக்கைகள்  தேவை.

ஆமாம்.... ஜாமீன் கொடுத்தவர்கள் மீது செகண்ட் டிகிரி மர்டர் செய்தததாக கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும்.



இனி மனித உரிமை வாரியத்தின் வழியாக வன்புணர்வு புகார்கள் கொண்டு செல்லப்பட்டு, அவைகள்  அவர்கள் மூலம் ஆன்லைன் FIR பதிவு செய்யப்பட்டு காவல் துறைக்கு செல்ல வேண்டும்.

ஒவ்வொரு அரசு மருத்துவ மனையிலும் இதற்கென ஒரு மருத்துவர்  மனித உரிமை வாரிய பிரதிநிதியாக பணியாற்ற உடன் பட வேண்டும்.

பாதிக்கப் பட்டவர்  நேரே அரசு மருத்துவனை சென்று, சிகிச்சை பெற்று வழக்கையும் பதிவு செய்ய வழி செய்ய வேண்டும்.

சும்மாவாக்கும் போலீஸ் கேஸ் என்ற அலம்பல்கள் இருக்கக்கூடாது.

மருத்துவமனை வழியே மருத்துவ வழக்காக மனித உரிமை வாரியத்தின் பிரதிநிதி  பதிவு செய்யும் பொழுது, நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என் செல்வாக்கு என்ன தெரியுமா? மவனே எம்மேல FIR போடுவியா நீ? என்று குற்றவாளி காவல் துறையை மிரட்ட முடியாது.

பிறகு habeas corpus வழக்குகள் கையாளப் படுவது போல நிர்ணயித்த கால கட்டத்திற்குள் காவல் துறை நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வேண்டும்.

இல்லாவிட்டால் பிங்க் ஸ்லிப்.



N. Kannan
செல்வன்

எங்கிருந்து வருகின்றன வெறிநாய்கள் என்று ஆராய்ந்து வழி செய்ய வேண்டும்.
நாய்க்கு வெறி பிடிக்கக் காரணமுண்டு இல்லையா?

உலகின் மிகச்சிறந்த அறவழிகள் கொண்ட நாடு இந்தியா. இந்த டெல்லிக் கேசை
உலகம் அலசிக்கொண்டு இருக்கும் போதே நேற்று ஒரு 23 வயதுப் பெண் நோய்தாவில்
கற்பழிக்கப்படு கொல்லப்பட்டிருக்கிறாள்.

காமத்துப்பால் பாடிய இந்தியாவில் ஏனிந்த வெறி? வாத்சாயினர் தோன்றிய
இந்தியாவில் ஏனிந்த வெறி?

பெண் சிசுக்கொலை செய்வதால் ஆண்கள் கூட்டம் பெருகிவிட்டது ஒரு காரணம்
என்று ஒரு ஆய்வு சொல்கிறது. தில்லியில் மட்டும் 30 மில்லியன் அதிக ஆண்கள்
உள்ளனராம். இப்படியிருக்கும் சூழலில் rouge groups உருவாவது இயற்கை.
மிருகங்களிலும் (குறிப்பாக யானை, சிங்கம்) இது நிகழ்கிறது.

பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெளியே நடமாடுகின்றனர். அதுவும்
out sourcing வந்த பின் பேயும் உறங்கும் வேளையில் பெண் வேலை செய்துவிட்டு
வருகிறாள்.

பெண்களுக்கு வேலை வாய்ப்புப் போய்விடுவதால் ரௌடி ஆண்கள் வேலையற்றுப் போய்
இம்மாதிரி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

முன்பு போல் இரவில் போலீஸ் ரோந்து வர வேண்டும். ஜெர்மனியில் இரவில்
போலீஸ் ரோந்து இருந்து கொண்டே இருக்கும். கொரியாவிலும் அப்படியே. இந்த
நாடுகளில் குடி ஒரு பிரச்சனை அல்ல. மாட்டினால் மவனே! தொலைந்தாய் எனும்
பயமுறுத்தல் இருக்கிறது. அது இந்தியாவிலும் வேண்டும்.

பெண்கள் கைவசம் கராத்தே அல்லது மிளகுக்காய்ச்சல் (Pepper spray) வைத்துக்
கொள்தல் நலம்.

அவசர உதவிக்கு அழுத்தியவுடன் சேதி போகின்ற மாதிரி ஏதாவதொரு gadget செய்து
ஒவ்வொரு பெண்ணிடமும் கொடுத்து விட வேண்டும்.

நா.கண்ணன்

பிகு: செல்வன்! ஒரு சந்தேகம். காயடித்தால் போதாதோ? காயடித்து பின் ஏன்
தூக்கிலிட வேண்டும்? :-))


Geetha Sambasivam
//பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெளியே நடமாடுகின்றனர். அதுவும்

out sourcing வந்த பின் பேயும் உறங்கும் வேளையில் பெண் வேலை செய்துவிட்டு
வருகிறாள்.

பெண்களுக்கு வேலை வாய்ப்புப் போய்விடுவதால் ரௌடி ஆண்கள் வேலையற்றுப் போய்
இம்மாதிரி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.//

கண்ணன் சொல்லி இருக்கும் காரணமும் ஒன்றுதான்.  ஆனாலும் இவ்வளவு வக்கிரமாய் இருக்க வேண்டுமா?  இன்னும் சொல்லப் போனால் இரவு வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் பெண்களுக்குக் கம்பெனி வண்டி அனுப்புகிறது.  ஆனால் அந்த வண்டியை ஓட்டும் ஓட்டுநரே வக்கிரம் பிடித்து அலைகிறார்.  இம்மாதிரியும் இரண்டு , மூன்று வன்புணர்வோடு கூடிய கொலைகள் நடந்துள்ளன.  ஆண்கள் மனதளவில் மாற வேண்டும்.  வேறொரு பெண்ணை வெறி கொண்டு தொடும் முன்னர் இதே மாதிரி நம் தாய், சகோதரி, மனைவி ஆகியோருக்கு நடந்தால்??? என்ற எண்ணம் மனதில் வர வேண்டும். தேவை மனமாற்றமே.

அதே சமயம் பெண்களுக்குத் தற்காப்புக்கலை அவசியம் தேவை.  அடி வாங்கி ஆண் விழும் அளவுக்குத் தாக்கும்படியான தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.


கி.காளைராசன்
இதே மாதிரி நம் தாய், சகோதரி, மனைவி ஆகியோருக்கு நடந்தால்??? என்ற எண்ணம் மனதில் வர வேண்டும்.

இக்குற்றங்களில் ஈடுபடும் கண்ணாயிரங்களுக்குத் தாய், சகோதரி, மனைவி இருப்பதில்லை என்றே கருதுகிறேன்.

அன்பன்


Geetha Sambasivam
சகோதரியும், மனைவியும் இல்லாமல் இருக்கலாம்.  தாய் இருந்தே ஆகவேண்டுமே! குறைந்த பட்சமாகத் தாய் நினைவு வந்தாலாவது திருந்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமே.



2013/1/8 Geetha
சகோதரியும், மனைவியும் இல்லாமல் இருக்கலாம்.  தாய் இருந்தே ஆகவேண்டுமே!
நான் சொல்வது,

கண்ணாயிரத்தைத்
தாய் வளர்த்திருக்க மாட்டார்,  அல்லது
கண்ணாயிரம் தாயுடன் வாழ்ந்திருக்க மாட்டார்.

அன்பன்
கி.காளைராசன்

குறைந்த பட்சமாகத் தாய் நினைவு வந்தாலாவது திருந்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமே.



செல்வன்

பெண்கள் கைவசம் கராத்தே அல்லது மிளகுக்காய்ச்சல் (Pepper spray) வைத்துக்
கொள்தல் நலம்.

இன்று வந்த செய்தி டெல்லி பெண்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி கேட்கிறார்கள். பகலில் கூட பஸ்ஸீல் போக முடிவதில்லை என்கிறார்கள். பெப்பர் ஸ்ப்ரே எல்லாம் ஒருத்தன் மேல் அடிக்கலாம். இரும்புதடியுடன் ஆறுபேர் வந்தால் என்ன செய்வது?




நா.கண்ணன்

பிகு: செல்வன்! ஒரு சந்தேகம். காயடித்தால் போதாதோ? காயடித்து பின் ஏன்
தூக்கிலிட வேண்டும்? :-))

காயடிப்பது பலாத்காரத்துக்கான தண்டனை. தூக்கு என்பது கொலைக்கான தண்டனை. இரன்டையும் செய்தால் இரன்டு தன்டனைகளையும் கொடுப்பதுதான் நியாயம்:-)

அமெரிக்காவில் மரணதன்டனை கொடுக்கையில் அவனால் கொல்லபட்டவர்களின் குடும்பத்தை அந்த தண்டனையை பார்க்க அனுமதிப்பார்கள். இந்தியாவிலும் அந்த முறை அமுலுக்கு வரவேண்டும்.


செல்வன்
கோயமுத்தூரில் முஷ்கின் என்ற 11 வயது குழந்தையை இருவர் ரேப் செய்தார்கள். அதன்பின் அவளையும் அவள் தம்பியையும் ஆற்றில் தள்ளி கொன்றார்கள்.

கோவை பொலிஸ் அவர்களை பிடித்தது. அவர்களை என்கவுன்டரில் போட சொல்லி கோவை நகரமே கொந்தளித்தது. அதேபோல் போலிசும் உடனே என்கவுன்டரில் போட்டுவிட்டார்கள்.

அந்த பெண்ணின் அப்பா போலிசுக்கு நன்றி சொல்லி இப்போதுதான் எங்கள் குடும்பம் ஓரளவு நிம்மதி அடைந்தது என்றார்.

குறிப்பு: அந்த பெண்ணின் தந்தை ஜைனர்.


தேமொழி
காயடிப்பது பலாத்காரத்துக்கான தண்டனை. தூக்கு என்பது கொலைக்கான தண்டனை. இரன்டையும் செய்தால் இரன்டு தன்டனைகளையும் கொடுப்பதுதான் நியாயம்:-)

அமெரிக்காவில் மரணதன்டனை கொடுக்கையில் அவனால் கொல்லபட்டவர்களின் குடும்பத்தை அந்த தண்டனையை பார்க்க அனுமதிப்பார்கள். இந்தியாவிலும் அந்த முறை அமுலுக்கு வரவேண்டும்.



செல்வன்
ஒக்லஹோமா குண்டு வெடிப்பிற்குக்  காரணமான திமோத்தி மேக் வேயின் மரணதண்டனையை நிறைவேற்றிய பொழுது, அந்த ஆள் மரண பயத்தில் துடித்து  வேதனை அடைவதை பார்க்க உயிர்ழ்ந்தோரின் உறவினர்கள் காத்திருந்தனர். அந்த ஆள் ஒரு உணர்ச்சியும் காட்டாமல், செய்த தவறுக்கு கடைசி வரை வருந்தாதைப் பார்த்து மேலும் ஆத்திரம்தான்  அடைந்தார்கள்.


Holding photographs of her daughter, who died in the bombing, witness Kathleen Treanor said she needed to see the execution with her own eyes. Treanor was among the survivors and victims' relatives who watched the execution through a closed-circuit television feed more than 650 miles away.

"It's a demarcation point," Treanor said immediately following the execution. "It's a period at the end of a sentence. It's the completion of justice and that's what I'll remember about today."



தேமொழி
Larry Whicher, whose brother was killed in the bombing, said McVeigh had a defiant stare and showed no remorse. (More on victims' reactions)

இந்த மரண தண்டனை நிறைவேறிய சமயம் நான் அந்த மாநிலத்தில்தான் இருந்தேன், லோக்கல் டிவி, செய்திதாள்களால் மிகவும் பேசப்பட்ட செய்தி.
உயிரிழந்தோர் அந்த ஊர்க்கார்கள் இல்லையா அதனால். இதனை மிகவும் விவரமாகப் பார்த்ததினால் சொல்கிறேன்.
..... தேமொழி





இதில் கொலைகாரன் தன் தவறுக்கு வருந்தவில்லை என தான் எழுதி உள்ளது. அவன் மரணபயத்தில் துடித்து அலறுவதை பார்க்க போன இறந்தவர்களின் உறவினர்கள் ஏமாந்து போய் ஆத்திரம் அடைந்தார்கள் என இல்லையே?

No comments:

Post a Comment