எப்படி ஆடினரோ? - 2 & 3
(...சங்கக்காலத்தை பற்றி கேட்டால், பீடிகை பலமாக இருக்கிறதே என்றா கேட்கிறீர்கள்? அக்காலத்தில் நாட்டியம் மங்கலம் நிறைந்து வாழ்ந்தது. ஆடல் இலக்கணம் காண வேண்டுமா? ... “...its baroque splendour and by the charm and magic of its lyrical parts belong to the epic masterpieces of the world...”
Kamil Zvelabil (1956) Tamil Contribution to World Literature.
“...தியாகராச நகர் வாணிமகாலில் சென்னை பாரதி சங்கத்தின் சார்பில்....திருமதி.ருக்மணி அருண்டேல் அவர்கள் கூறுதாவது:
“ ஒரு முறை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்களை நான் சந்தித்த போது, நாட்டியக்கலையில் நான் பெரும் திறமை என்று பெயர் பெற்றதை குறித்துப் பாராட்டிவிட்டு, ‘அம்மா, நீ சிலப்பதிகாரம் படித்திருக்கிறாயா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை, ஐயா’ என்று கூறினேன். அவர் மிகுந்த ஏமாற்றத்துடன், ‘நாட்டியக்கலையில் பெரும்புகழ் பெற்றிருந்தும், தமிழில் உள்ள ஆதி நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்தைப்பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாதிருப்பது வியப்பைத் தருகிறது. தயவு செய்து இனியாவது அதைப் படியுங்கள்’ என்று கூறினார்.”
~ [ ம.பொ.சி.(1990) ‘சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும்’: சென்னை: பூங்கொடி: ப: 37]
(தொடரும்)
திருமதி கீதாம்மா அவர்களுக்கு சிறு வயதில் நான் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்
ஆண் பெண் பேதம் தெரியாமல் வளர்ந்தேன்
நான் யாரிடம் பழகுகிறேனோ அவர்களிடமே சந்தேகம் கேட்பேன்
நீ டாவா....... டீயா. என்று
டா என்றால் ஆண்
டீ என்றால் பெண்
இப்படித்தான் நான் அடையாளம் கண்டேன்
இப்போது என் பேரன் (மூன்று வயதாகிறது) வீட்டிற்கு யார் வந்தாலும் பெண்ணாயிருந்தால்
உங்க ஹஸ்பண்ட் பேர் என்ன என்கிறான்
ஆணாயிருந்தால் உங்க வைப் பேரு என்ன என்கிறான்\
குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அதிகம் இந்தக் காலத்தில்
நான் இன்னும் குழந்தைதான்
க்ராஸ் ஸ்டிச் பற்றி தெரியவில்லை
க்ராஸ் ஸ்டிச் போடனு தனியாச் சவுக்கம்னு சொல்லுவாங்க மேட்டி க்ளாத்?? சரியாத் தெரியலை, அப்படி ஒரு துணி, கலர் நூல்கள், ஊசி வேணும், அம்மா நிறையப் போட்டுப் பார்த்திருக்கேன். மயில், கிளி, ஊஞ்சல், கிருஷ்ணன் எல்லாம் போடுவா. துணியில் போடும் கைத்தையல், பூத்தையல்னு சொல்லலாமோ? அந்த வேலைப்பாடுகள். அவற்றை கிராஸாகப் போட்டுச் சேர்ப்பார்கள். அதைக் கண்ணாடி போட்டு வீட்டில் மாட்டுவதும் உண்டு. என் அம்மாவின் பிறந்தகத்தில் அவங்க சகோதரிகள் போட்டவை சுவர் பூராவும் மாட்டி இருக்கும்.
க்ராஸ் ஸ்டிச் என் அண்ணி ஏராளமாக வித விதமாக (கண்ணாடி பீரோவிற்கும்
கவர் )செய்து போட்டிருக்கிறார்கள்! மிக அழகாக இருக்கும்!எனக்கும் கத்து கொடுத்து நானும் சின்ன சின்னதாய் போட்டிருக்கிறேன்.மிக அழகாக இருக்கும்!
|
7/28/10
| |
|
ஆஹா அருமை
என்னுடைய பெரிய பெண் மிகவும் நன்றாக இந்தக் கலையைச் செய்வாள்
கண்ணால் கண்டதையும் காணாதவர் தமிழ்த்தேனீ. சித்திரத்தை எழுத்தில் வடித்தார், தெளிவாக திருவாட்டியார். சித்திரத்தையே முன் வைத்து, என் தங்கயையும், லேடனையும் கொணர்ந்தார் மீனா முத்து ஆச்சி. இனி ஆடலாம்.
எப்படி ஆடினரோ? - 3
(“... தமிழில் உள்ள ஆதி நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்தைப்பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாதிருப்பது வியப்பைத் தருகிறது...” ) ‘ஆடாமல், அசையாமல் வாடா! கண்ணா’ என்ற மெட்டு கேட்கும்போதே, தாளம் போடுகிறோம். அவன் ஆடி, அசைந்து வந்து மயக்கினால், நாமும் கூட ஆடுவோம். அன்றும் அப்படித்தான், குரவைக்கூத்தில்; இன்றும் அப்படித்தான் தொலைக்காட்சியில், அரங்கில் காட்டுக்கூச்சலோடு நவீன டப்பாங்குத்து ஆடினால், சபையில், யுவனும், யுவதியும், குட்டியும், குட்டனும், பாட்டனும், பாட்டியும், சங்குச்சக்ரசாமி போல ‘ஜிங்கு ஜிங்கு’ ந்னு ஆட்றா! இத்தனைக்கும் ‘டம்ரூ பாஜே’ ந்னு தாண்டவம் ஆடினது சிவபிரான். ஆடிய பாதமோ நர்த்தனசுந்தர நடராஜர். மஹாவிஷ்ணு ஆடினதா பக்தி இலக்கியம் சொல்லலே. ரைட்டா, தேவ்? மயிலாட்டமெல்லாம் எப்டி கீது? ஹரிகி சங்காத்தமா? வேர்ட் எல்லாம் இப்டி விழுது. அவருக்கென்ன. என்ஜாய் என்பார். அது சரி. ஒரு சமயம் நம்ம கண்ணனை தான் சொல்றாளோ? கலித்தொகையில் ஒரு க்ளு இருக்காப்லெ.
சங்க இலக்கியங்களில் கலித்தொகையும் பரிபாடலும் ஒரு தனித்துவம் வாய்ந்தவை. அவற்றை இசையோடு பாடலாம். ‘கல்வி வலார் கண்ட கலியின்’ அமைப்பே, பரதநாட்டியத்தின் சொல்லுக்கட்டுப்போல. துள்ளலோசை. தரவுக்கு பிறகு, தாழிசை மூன்றில் தொடங்கி, இரண்டு அல்லது மூன்று அசைகளால் ஆன தனிச்சொல் பின் தொடர, அதே வழியில் சுரிகதம். இளவழகனார் சொல்றார், ‘...முதலில் தரவுப்பகுதியில் குறிப்பாகத்தோன்றிப்பின், தாழிசைகளில் தெளிவாக விளக்கப்பட்ட கருத்துக்கள், இத்தனிச்சொல்லின் வழி சாறு போற் பிழிந்திறுகி, இறுதிப்பகுதியான் சுரிதகத்தின் பயன் தோன்றி நிற்கும்...’ பரத நாட்டியத்தில் அரைமண்டியிலிருந்து தில்லானா வரை என்பது போல இல்லை?
கலித்தொகையின் காலம், பெரிய அளவு கோலில் வைத்துப்பார்த்தால், கிட்டத்தட்ட சிலப்பதிகாரத்திம் காலம் எனலாம். அக்காலத்தில் பிரபலமான மக்கள் ஆடல் பாடல் குரவை.
‘...ஆரவுற்று எமர், கொடை நேர்ந்தார் - அலர் எடுத்த
ஊராரை உச்சி மிதித்து,
ஆங்குத்
தொல்கதிர்த் திகரியான் பரவுவதும் -ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
ஒருமொழி கொள்க, இவ் வுலகுடன், எனவே [75-80]
என்றல்லவோ குரவை ஆடிப்பாடுகிறார்கள்.
க்ளு இங்கு உள்ளுறை என்க.
(தொடரும்)
>> மஹாவிஷ்ணு ஆடினதா பக்தி இலக்கியம் சொல்லலே. ரைட்டா,<<
வெண்ணெய்க்காடும் பிரான் இல்லாத விண்ணகரம் எங்கே உள்ளது ?
‘குடமாடு கூத்தனை வலத்தே வைத்து ...’ என நாயன்மார்களும் பாடியுள்ளனரே !
எம்பெருமான் குடமாடியதையும், குரவை கோத்ததையும் தமிழ் இலக்கியம் பேசும்.
ராஸ மண்டல மத்தியில் அவன் ஆடாத ஆட்டமா !! தான் ஆடுவதோடு நில்லாமல்
நிஸ்சலனமாக ஒதுங்கி வாழும் கைவல்ய நிஷ்டர்களையும் ஆட்டிப்படைக்கிறானே.
க்ஷீராப்தியின் உறக்கமும் அலைகடலின் ஆட்டத்துக்கு இடையில்,
அதுவும் நெளிந்து கொண்டே இருக்கும் ஒரு பாம்புக்கு மேல்.
தென்னகத்தில் சிவபிரானுக்கு நடராஜன் என்று பெயர்;
கண்ண பிரானை வடபுலத்தில் நடவரலால் என்பர்.
தேவரீர்கள் ஸூத்ர ரூபத்தில் வெகு சுருக்கமாக அருளிச்செய்துவிட்டு அடியேனை
உபந்யாஸம் செய்ய வைத்துவிட்டீர்கள்; இருக்கட்டும், அசடுகள் எப்போதும்
மாட்டிக்கொள்ளும்
தேவ்
திரு தேவ் அவர்களே இன்னம்புரான் அறியாத ராசக்ரீடையா?
நம்மை வேண்டுமென்றே வம்புக்கிழுக்கிறார்
>> ‘குடமாடு கூத்தனை வலத்தே வைத்து ’ என நாயன்மார்களும் ...<<
இது தவறு, ‘குடமாடு கூத்தனை இடத்தே வைத்து’ என்று இருக்க வேண்டும்.
தில்லையின் இறைவன் கூத்தபிரான்; திருக்குளந்தையின் இறைவன்
மாயக்கூத்தன்.
தில்லையில் காளிக்குப் போட்டியாக ஈசனாரின் கூத்து ; திருக்குளந்தையில்
மாயக்கூத்தர் அச்மஸாரனுக்குப் போட்டியாக . கேரளத்தின் மோஹினி ஆட்டத்தை
மோஹினி அவதாரத்தோடு தொடர்பு படுத்துவர்
தேவ்
|
7/29/10
| |
|
காளிங்க நர்த்தனத்தை விட்டுட்டீங்களே?
> காளிங்க நர்த்தனத்தை விட்டுட்டீங்களே? [?][?]<
ஆம், அம்மா
பாம்புத்தலைமேல் நடமிடும் பாதத்தைப் புகழாத கவிகள் உண்டா ?
உங்கள் வலைப்பூவில் ஊத்துக்காடு ஆலயத்தின் அற்புதமான அந்தச் சிற்ப
அதிசயத்தை
ஏற்கெனவே எழுதி இருக்கிறீர்களே ?
http://sivamgss.blogspot.com/2007/02/217.html
தேவ்
ஓம்
நடவரலால கிரிதர கோபால ஜெய் ஜெய் யசோத நந்தலால
வெ. உப்பிரமணியன் ஓம்.
______________
இன்னம்பூரான்
29 04 2013
|
|
No comments:
Post a Comment