அன்றொரு நாள்: மே 4:
எல்லாமே சங்கீதம் தான்!
நேற்று, ஒரு நீண்டப்பயணத்தின் களைப்பை பொருட்படுத்தாமல், ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அந்த தேவகானம் என்னை (ஆங்கிலத்தில் ‘transported’ என்பார்கள்) எங்கெங்கோ, பற்பல சொர்க்கங்களின் தலைவாசல்களுக்கு, அழைத்துச் சென்று களைப்பை அறவே நீக்கி, உற்சாகத்தை அளித்தது. (Glinka: Rusian and Lyudmila Overture & Rachmaninoff: Piano Concerto No.3 in D minor, op.30 & Symphony No.5 in C minor,op.67). அவகாசம் கிடைத்தால், அது பற்றி எழுதலாம். கச்சேரி முழுதும் ஒரு பின்பாட்டு, மனதில்.
சர்வஜித் ௵ சித்திரை மீ பஹுல தசமியும், ஸோமவாரமும் ஆகிய சுப தினத்தில், (மே 4, 1767) கிருஷ்ண யஜுர்வேத கிளையை அத்யயனம் செய்யும் அந்தணர் குலத்தில், ஆபஸ்தம்ப ஸூத்ரம் சார்ந்த குடும்பத்தில், பாரத்வாஜ கோத்ர வம்சாவளியில், கடக லக்னம், பூர்வாஷாட நக்ஷத்ரமும் கூடிய சுப முஹூர்த்தத்தில், (பாருங்கோ! என்னே பொருத்தம்!) சீதம்மாவுக்கும், ராமபிரஹ்மம் அவர்களுக்கும், ஒரு ஆண் பிரஜை சுபஜெனனம்.
திருவாரூரில் பிறந்த குழந்தையா! தியாகராஜன் என்று நாமகரணம்.
250 வருஷங்கள் கடந்து போயின. தியாகய்யாவின் மங்கா புகழ் எங்கும் நிரம்பியிருந்தாலும், அநாவசிய கதைகள் கட்டப்பட்டன என்று வருத்தப்பட்டு, தியாகய்யா அவர்களின் உண்மையான கீர்த்தி பாட, அமெரிக்கா-வாழ் நண்பர் ஒருவரின் பதிவுகள் தான் உசாத்துணை. ஒரு சொல். சில வருடங்கள் முன்னால், திருவையாறு சென்று ஐயாவாளை சேவித்து விட்டு வந்தேன். அன்று தான் இந்தியாவில் ஒருங்கிணைத்த கர்நாடக சங்கீத ஆர்க்கெஸ்ட்ரா கேட்டு மகிழ்ந்தேன். நாற்பது வயலின். எல்லாம் சின்னப்பசங்க. ஆஹா!
இன்னம்பூரான்
04 05 2012
உசாத்துணை:
|
No comments:
Post a Comment