26 01 2010
தணிக்கை செய்வதில் தணியா வேகம் -26: "+ F "ஆடிட்'
ஸிம்லா அடாவடி போர் அடித்துவிட்டதோ என்ற ஐயம் எழ, 15 வருடங்கள் கழிந்த பிறகு டைம்லைன் 1971: ‘
+ F "ஆடிட்'. துணுக்கு.
காலையில் எழுந்தவுடன் படிப்பு:
பசங்களுக்கு ஆத்திச்சுவடி;
பெரியவாளுக்கு பகவத்கீதை;
கிழங்களுக்கு ஆபிச்சுவரி நோட்டீஸ்;
ஆடிட்காரனுக்கு டெண்டர் நோட்டீஸ்!
~ அதிலே சங்கேதங்கள் இருக்கும். சூக்ஷ்மங்கள் மறைபொருள். தமிழ்நாட்டு துறை ஒன்று சாதரணமாக கேட்டது: முறுக்கேற்றிய எஃகு தண்டுகளை உருக்கி, முறுக்கற்ற எஃகு கம்பிகளாக தர காண்ட்ராக்ட்' . எல்லாம் ‘meet and proper’. உருக்குச்சேதம் இத்தனை % கூட சொல்லப்பட்டிருந்தது. மைனர் ஜமீந்தாரின் முறுக்கு எப்படி உருகாதோ, அந்த மாதிரி முறுக்கிய எஃகை [cold deformed steel] உருக்கமுடியாது. உடைந்து விடும், மற்றபடி இஷ்ட்ராங்க். கொஞ்சம் புலன் விசாரணை அன்றே, சம்பந்தமில்லாத கேள்விகளுக்குள், வில்லங்கமான கேள்வியைப் புகுத்தி! 'டக்'னு பதில். நீங்கள் ஆடிட்லே. அதிகப்படி ஸ்டாக் முறுக்கு எஃகு என்று குற்றம் சாட்டிவிட்டு, இப்படி கேட்டா? என்று எதிர்கேள்வி. என்ன இது? குழந்தையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டினா? [அக்காலம் எனக்கு தமிழ்த்தேனீ அவர்களை தெரியாது]
அடுத்த கட்டம்: அத்துறை தலைவருக்கு [ஐஏஎஸ்] ஃபோன். இதான் சமாச்சாரம். ஆடிட் பாரா அனுப்பவா? வருமுன் காப்பதால்,ஆடிட் பாரா ஒழிந்தாலும் பரவாயில்லை, கவர்மென்ட் காசு ஒழியக்கூடாது என்பது என் கொள்கை. அவர் மீட்டிங்க் போட்டார்.தலைமைப்பொறியாளர் என்னைப்பார்த்து ஏளனமாக் சிரித்து,. ISI [Indian Standard Institution]
உருக்கு சதவிகிதம் காண்பித்தார். அதை விட குறைவாகத்தான் இருக்கிறது, எங்கள் ஷரத்துக்கள் என்றார். தணிந்து தான் செக்ரடரி கேட்டார். 'இப்படி முறுக்கு எஃகை உருக்குவானேன்' என்று. என்னைப்பார்த்து, ஸீ.ஈ மேலும் சொல்வார்:
எல்லாம் ஆடிட் செய்த வினை. ஸ்டீல் விலை எகிறிக்கிட்டே போகுது. இவுக உயிரை வாங்க்றாங்க. செக்ரடரி கேட்டார், 'இந்த உருக்கு சாத்தியமா?' பதில்.' அதெல்லாம் இல்லை; இது பண்டமாற்று..
செக்ரடரிக்கு கோபம் வந்துவிட்டது. அப்போ, நீங்கள் பண்டமாற்று டெண்டர் கேட்டு இருக்கவேண்டும். உருக்கு சதவிகிதம் போட்டதே விந்தையாக இருக்கிறது. ‘படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில் ' என்று பொருள்பட சொல்லி,என்னிடம் சொன்னார், .'நாளை இந்த டெண்டர் நோட்டீஸ் ரத்து என்று பேப்பரில் வரும்'. ஷரத்து பேசியவரின் சுரத்து இறங்கிவிட்டது. அதளபாதாளத்துக்கு. அவர் அதிகாரமையத்துக்கு (அதற்கு பல அவதாரங்களுண்டு) பதில் சொல்லவேண்டியிருக்கலாமே.
ஸீ.ஈ.யும் நண்பர் தான். தனியாக, அவரிடம் கேட்டேன், 'என்னை கொலை செய்ய ஆசையா இருக்கிறது இல்லை! என்று.
'ஆமாம்'என்றாரே பார்க்கலாம். அன்றிலிருந்து 'டெண்டர் ரத்து' நோட்டீச்களையும் படித்து வருகிறேன்.
இன்னம்பூரான்
26 01 2010
No comments:
Post a Comment