Tuesday, April 30, 2013

“ஓவர் டு ஸிம்லா”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -22




“ஓவர் டு ஸிம்லா”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -22


22 01 2010

 ஓவர் டு ஸிம்லா: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -22
 Inline image 1

கவர்மெண்ட்காராளுக்கு என்னிக்குமே இங்கிதம் தெரியாது என்பார்கள். சென்னையில்ஜீ.ஏ.நடேசய்யர் பங்களாவிலிருந்த IAAS Training School ஐ ஸிம்லாவுக்கு மாற்றியதும் அல்லாமல்அவர்கள் பிறப்பித்த தாக்கீது படிநான் தலை தீபாவளியன்று காலை ஜீ.டி. பிடித்து பயணிக்கவேண்டும். மூன்றாம் வகுப்பு என்றால்டில்லி கம்பார்ட்மெண்ட்முதல் வகுப்பு என்றால்நள்ளிரவில் காசிப்பேட்டில்,வண்டி மாறவேண்டும். நான் ஏன் முதல்வகுப்பு டிக்கெட் வாங்கினேன் என்று இன்றும் புரியவில்லை. முதல் வட இந்தியப்பயணம்கூத்து தான் போங்கள்! முதலில்பல நாட்கள்பலர் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு (தாக்ஷண்யம் தன நாசம்!) வேண்டாத சாமான்களை எடுத்துக்கொண்டு (அலுமினிய கூஜா- அப்பாசரவணபவன் ஸைஸ் டிஃபன் கேரியர் – மாமியார்/  பட்டுப்பாய்,மெத்தைதலைகாணி - அடுத்தாத்து கிழம்/  லோகல் ரஜாயி - மாமனார் பெரிய குடைசின்ன குடைபிடித்த புத்தகங்கள்)வேண்டிய சாமான்களை விட்டு விட்டு (கம்பிளிபூட்ஸ்ஸ்வெட்டர் ரெயின் கோட் இத்யாதி/- நான்இடமில்லை என்று) கிட்டதட்ட 26 1/2 லக்கேஜ்களுடன் வண்டி ஏறினேனாமற்றோரு ஆலோசனைக்குழு என்னை தத்து எடுத்துக்கொண்டது..

அந்த காலத்தில் ரயில் பயணம்கப்பல்லே போற மாதிரி. தண்ணி சுத்துப்பட இல்லாவிட்டாலும்காடு. ஒன்றும் கிடைக்காது. அத்வானத்திலே மணிக்கணக்கா நிற்கும்தண்ணி பிடிக்கப்போனா, ‘கூ கூ என்று ஊதி விட்டு கிளம்பிவிடும்.  கடைசி வண்டியில் தொத்திக்கணும். இதைப்பற்றியெல்லாம் எச்சரிக்கை விடுத்த அந்தக்குழுபெரிய மனுஷாக்கூட்டம். சம்பளம் முதல் என்னைப்பற்றி யாதும் கேட்டறிந்த பிறகுஒரு ஐயாடில்லியில் வாங்கவேண்டியதைப்பற்றி பட்டியலே கொடுத்தார். இன்னொருத்தர் பஞ்சாபி பெண்களைப்பற்றி பயமுறுத்தினார் இப்படியாக பயணித்து காசிபேட்லே இறங்கினாவெட வெட குளிரு. கொட்ற மழைஅடிச்சுப்பிடிச்சு டில்லி கம்பார்ட்மெண்ட்லெ ஏறினா, 26 சாமான் தான் இருக்கு. [காலம்பறப்போயிஅந்த 1/2 சாமானையும் எடுத்து வந்தேன்.]. அந்த வண்டி மஹானுபவர்கள்முதல் வண்டி பட்டியலை உதாசீனம் பண்ணிவேறு லிஸ்ட்/கடை விவரத்துடன் கொடுத்தார்கள். இரண்டு நாள் பயணமா? கொண்டுவந்த தீபாவளி பக்ஷணங்கள் காலி. இது தான் சாக்கு என்று கல்யாண ஃபோட்டோக்களைப்பார்த்த ஒரு வட இந்திய பெரிசு, 'நீ ராஜாஜி மாப்பிள்ளையா?' என்று கேட்டார். எல்லா ஐயங்கார்களுக்கும் நாசி தீர்க்கம் என்று சொல்லித் தப்பித்தேன்.  டில்லியும் வந்தது. ஓல்ட் டில்லி ஸ்டேஷன் போய்கால்கா போகும் ரயிலைப்பிடிக்கவேண்டும்எப்டியோ பிடித்தேன். விஷயம் தெரிந்தவர்கள் கால்காவிலிருந்து ஸிம்லாவுக்கு ஷேர்டாக்ஸி பிடித்து சென்றனர். தந்தை சொல் மந்திரம் என்று நான் ஸிம்லா வரை டிக்கட் வாங்கியிருந்ததால், 'லொடக் லொடக்என்று சாவகாசமாக,மேட்டுப்பாளையம்-ஊட்டி வண்டி மாதிரி பல மணி நேரம் பயணித்துஒரு பாடாக ஸிம்லா சேர்ந்தால்ஒரு கூலியே, 261/2 31/4 லக்கேஜ்ஜை முதுகில் ஏற்றிக்கொள்ள,  நடராஜா ஸர்வீஸ். ஸிம்லா  என்றால் நடைமறுபடியும் நடைஅப்பறமும் நடை.

ஹாஸ்டலில் எல்லாரும் என்னையும் சாமான்களையும் விந்தையாக பார்த்தார்கள். கூஜாவை இரவல் வாங்கிசாப்பிடும் ஹாலில்பார்வைப்பொருளாக வைத்தார்கள்!  ரூமுக்குபோனாமெத்தை,கித்தை எல்லாம் தடபுடலாக இருந்தது. அசந்து உறங்கிவிட்டேன். எழுந்தா ரூம்லே தீ!
(தொடரணுமாஎன்ன?)

--
Tthamizth Tthenee 
1/22/10

மற்றோரு ஆலோசனைக்குழு என்னை தத்து எடுத்துக்கொண்டது
..


ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஅ

அவசியம்  தொடரவேண்டும்

இந்த  தத்துக்குழுக்கள்  நம்மைக் குழப்பும் குழப்பு  இருக்கிறதே  
அதை எழுதவேண்டாமா

அன்புடன்

தமிழ்த்தேனீ
_____________
இன்னம்பூரான்
30 04 2013

No comments:

Post a Comment