அன்றொரு நாள்: ஏப்ரல் 30:
கண்ணியம்
செவிவாய் செய்தி. இந்தியாவின் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு, ஜனவரி 26, 1950 அன்றைய பதிப்பை வெளி கொணருவதில் சங்கடம், தாமதம், பிரச்னை, காரியாலயத்தில் கோபம், தாபம் எல்லாம். ஆங்கில இதழ். ‘இண்டியன் யூனியன்’ என்பதற்கு பதிலாக, ‘இந்தியன் ஆனியன்’ என்ற சொற்றொடர், கொட்டை கொட்டை எழுத்தில், முதல் பக்கத்தலைப்பில்! ஆயிரக்கணக்கான பிரதிகள் கொளுத்தி அழிக்கப்பட்டனவாம். அந்த மாதிரி ஒரு மஹாபுருஷரின் ஜன்மதினம் இன்று என்று இணையதளத்தில் தென்படுகிறதே என்று, அவரை பற்றி விலாவாரியாக எழுதின பிறகு, அவருடைய திருமகனே மற்றொரு இணையதளத்தில் வேறு தேதியை குறிப்பிடுகிறார் என்பதை பார்த்தேன். என் செய்வது? ‘அடியை பிடிடா, பாரதபட்டா!’ என்று என்னையே நொந்து கொண்டு, இன்றைய தினம் கண்ணியத்துக்கும் வாய்மைக்கும் உகந்த நாளாக, சில இடங்களில் கொண்டாடபடுகிறது என்பதை பதிவு செய்து விட்டு, ஓடி விடுகிறேன்.
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்து கவர்னரின் இதழியல் காரியதரிசியான ஹிர்ஷ் கோல்ட்பெர்க், ஏப்ரல் 30 தான் ‘கண்ணியத்துக்கு உகந்த நாள்’ என்று நான்கு வருட ஆய்வுக்கு பின் அறிவித்தார். ஏப்ரல் முதல் தேதி ஏமாந்தவர்களுக்கு, இது ஆறுதல் தினமென்க. போதாக்குறைக்கு, ஏப்ரல் 30, 1973 அன்று தான் கண்ணியத்தை, மண்ணீயமாக்கி, வாய்மையை பொய்மையாக்கிய அமெரிக்க ஜனாதிபதி ‘திரு’ ‘திரு’. நிக்சனார் தன்னுடைய ‘மண்ணீய’/‘பொய்மை கூஜாக்கள் இருவர் வேலையிலிருந்து விலகியதாக அறிவித்தார். அந்த ஹிட்லரும், அவனுடைய ‘ஒரு நாள்’ மனைவியும்/‘பலநாள் சினேகிதியுமான ஈவா பிரானும் தற்கொலை செய்து கொண்ட தினமும், ஏப்ரல் 30, 1945.
இன்னம்பூரான்
உசாத்துணை:
No comments:
Post a Comment