அம்மாக்கண்ணுவும்,கண்ணாயிரமும்:1

அம்மாக்கண்ணுவும்,கண்ணாயிரமும்: 1
இன்னம்பூரான்
27 12 2012
அம்மாக்கண்ணு அபலை. கட்டுப்பாடும் இல்லை. பாதுகாப்பும் இல்லை. கண்ணாயிரம் கேடி. பொம்பளைப்பொறுக்கி. ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறானோ இல்லையோ, இவர்கள் இல்லாத சந்து பொந்து கிடையாது. மானிட ஜன்மங்கள் எல்லாவற்றிலும்,அம்மாக்கண்ணுவும், கண்ணாயிரமும் ஒளிந்து வளருகிறார்கள், ஜன்ம ஜன்மாந்திரமாக. வைசூரி பரவுது போல, தீடீரென்று பாரத தேசமெங்கும் கற்பழிப்பு. சாலை மறியல், அடிதடி, நாசம், அறிக்கைகள், கமிஷன்கள், ஊடகங்களிலும், இணைய தளத்திலும் அநாயசமாக மேலெழுந்தவாரி பேச்சுக்கச்சேரிகள். தட்டிக்கேட்டால் பொல்லாப்பு. உண்மை விளம்பினால், திசை மாற்றுகிறார்கள். மனம் நொந்து போச்சு, மனித சால்ஜாப்பு வளையங்களை கண்டு.
இன்றைய லண்டன் டைம்ஸ் (ப.14) பகரும் தகவல்: டிசம்பர் 24ம் தேதி, கடலூரில் பத்து கயவர்கள் ஒரு அபலையை இரண்டு மணி நேரம் கற்பழித்தார்கள் என்று ராதிகா என்ற போலீஸ் அதிகாரி சொன்னார்...இவ்வருடம் இந்தியாவில் பதிந்த 256,329 கிரிமினல் வழக்குகளில் 228,650 பெண்களை துன்புறுத்தியதைப் பற்றி. டில்லியில் மட்டும் கற்பழிப்பு வழக்குகள் 669. மற்றொரு லண்டன் இதழில், அன்றாடம் டில்லியில் பயணிக்கும் மாணவி ஒருவர் நாள்தோறும் பெண்களை இம்சிப்பது, கெட்ட வார்த்தை சொல்லி எகத்தாளம் செய்வது, தடவுவது, குடாய்வது எல்லாம் சர்வசாதாரணம் என்றார். ஒரு பிரபல பெண் வரலாற்று ஆசிரியர் சொல்கிறார், ‘என்னுடைய மாணவிகளுக்கு நித்யகண்டம். பூர்ணாயுசு இல்லை. நடுங்கி, நடுங்கி, செத்துப்பிழைத்துத்தான் அன்றாடம் கல்லூரிக்கு வருகிறார்கள்.’ சமூக சேவகி ஒருவர், ‘இம்சைக்கு ஆளாகாத பெண்கள் இந்தியாவில் கிடையாது’ என்று தன்னுடைய சமூகப்பணி அனுபவத்தின் பின்னணியில் கூறினார். ரவிக்குமார் என்ற இணையநண்பர், இந்தியாவில் பெண்கள் ஆளுமையிலும், அதிகாரத்திலும் இருப்பது மிகக்குறைவு என்று வருத்தப்பட்டார். நியாயம் தான். நான் பணி செய்த இந்திய தணிக்கைத்துறையில் அறுபது வருடம் முன்னால் இரு பெண்கள். இன்று அவர்கள் ஆளுமையிலும், அதிகாரத்திலும் சமபங்கு வகிக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அவர்களே தாம். இது பெருமையாக இருக்கிறது. ஆனால், இன்றைய மொத்த புள்ளி விவரங்களை பாருங்கள். சைனாவில் 70% பெண்கள் வேலை நாடுகிறார்கள். இந்தியாவில் 25%. பட்டப்படிப்பு பெற்ற பெண்களில் 81% சைனாவின் பெண்மணிகள் வீட்டுக்கு வெளியே வேலை தேடுகிறார்கள். இந்தியாவில் 34%. எல்லாம் இம்சைக்கு பயந்து தான். இந்த இம்சை விகாரத்தை வேருடன் அறுக்காமல், பெண்களுக்கு வேலை உரிமை என்று கேட்டு யாருக்கு பிரயோஜனம்? முதற்கண்ணாக, சகஜமான உறவு நிலவவேண்டும். இது ஒரு புறம்.
டிசம்பர் 16 அன்று டில்லியில் நடந்த அசம்பாவிதத்திற்கு, திட்டம் போட்ட பேயாட்டத்திற்கு, கொலைக்கு அஞ்சாத பாதகத்திற்கு எதிர்ப்பு அலைகள் மாவார்த்தமாக எழுந்ததை நான் அலக்ஷியம் செய்யவில்லை. பேயரசு புரிந்தால், சாத்திரங்கள் பிணம் தின்னால், சமுதாயமே கொதித்தெழவேண்டும் என்று பலமுறை கூறியிருக்கிறேன். ஆனால், இந்த கற்பழிப்பு சமாச்சாரத்தை நான் அணுகும் முறை வேறு. அது பற்றி நான் இணைய தளத்தில் கூறியதை, இங்கும் பதிவு செய்கிறேன். மேலும், விஷயம் தெரிந்த ஊர்வசி புடாலியா, பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண், ஹரீஷ் காரே, பிரவீன் சுவாமி ஆகியோர் பார்வைகளில் நான் கண்டதை பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு பிறகு யாராவது விரும்பிக்கேட்டால், இந்த பெண்ணிம்சை பிரச்னையை இங்கிலாந்து மக்கள் ஆலோசனை மன்றம், அபலை பாதுகாப்பு மையம், போலீஸ் எப்படி கையாளுகிறார்கள், பெண் விடுதலை எப்படி இயங்குகிறது என்பதை பார்க்கலாம், என் அனுபவத்தையும், பிரவீண் சுவாமியின் புள்ளி விவரங்களையும் இணைத்து. ஏற்கனவே, கட்டுரை இருமடங்கு நீண்டு விட்டது.
- இணைய தளத்தில் என் கருத்து:
~ஆண்/பெண் உடலமைப்பு வன்முறைக்கு ஏதுவாக இருக்கிறது.
~ தொன்று தொட்டு, அதுவும் நெருங்கிய சம்பந்தத்தில், இது தலையெடுக்கிறது.
~சமுதாயம் தான் பெண்களின் எதிரி, பார்க்கப்போனால். உறவு, சுற்றம், அண்டை வீடு, அரசியல் ஆளுமை என்று கற்பழித்தவர்களை மறைமுகமாக, சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறது, சமுதாயம் தான்.
~ இரண்டாவது எதிரி காவல் துறை. ஊர்வசி புடாலியா எழுதிய கஸ்டடி கற்பழிப்பு விவரம் நோக்குக. சமுதாயத்தின் விழிப்புணர்ச்சி இங்கு அர்ஜண்ட் தேவை.
~மூன்றாவது எதிரி: நிர்வாஹம். அதனுடைய 'டீக் ஹை' அசிரைத்தை.சமுதாயத்தின் விழிப்புணர்ச்சி இங்கு அர்ஜண்ட் தேவை.
~இனி தான் சட்டம். சட்டத்தில் ஓட்டை இல்லை. சட்டத்தை இயற்றுவது, போற்றிப்பணிவது, விரைவுப்பணி இவற்றில் இருக்கும் குறைபாடுகள் வேறு.
~ ஜஸ்டிஸ். வர்மா நம் சான்றோர்களில் ஒருவர். இம்மாதிரி கமிஷன்களில் பல்லாண்டுகளாக மக்கள் சிரத்தை காட்டுவது கிடையாது.
~ மக்கள் அசிரத்தையாகத்தான் இருப்போம். ஆனால், சாலை மறியல் செய்வோம். போலீஸ்காரனை அடித்துக்கொல்லுவோம் என்று இயங்கினால் யாருக்கு லாபம்?
இந்த அடிப்படை கேள்விகள் அறவே ஒதுக்கப்பட்டாலும், பெண்களுக்கு தற்காப்புப்பயிற்சி இல்லாமை, காம நுகர்வு மென்மை இல்லாமை, ஜனத்தொகை நெருக்கம் ஆகியவை காரணம் என்று ஒரு பதில் வந்தது.
2. ஊர்வசி புடாலியா: இவர் பிரபல பெண்ணிய எழுத்தாளர். பிரசுரகர்த்தா.
‘...டில்லியில் மக்கள் கொதித்து எழுந்துள்ளார்கள். இத்தகைய எதிர்ப்புகளால் மட்டுமே மக்களின் விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்பமுடிகிறது என்பது வருத்தம் தருகிறது. கற்பழிப்பும், பெண்ணிம்சையும் பெண்களை மட்டும் பாதிக்கவில்லை. இந்த வன்முறைகளின் முதல் பலிகடா, நசுக்கப்பட்ட மக்கள்... ஒரு கசக்கும் உண்மை. 90% கற்பழிப்பு செய்பவர்கள், நெருங்கியவர்கள். முக்கால்வாசி குடும்பத்திற்குள். மரணதண்டனை என்று கூச்சல் போடும் நீங்கள், அப்பனையும், மாமனையும், அண்ணன் தம்பியையும், புருஷனையும், அண்டை வீட்டுக்காரனையும் காட்டியா கொடுப்பீர்கள்? இல்லை. கூச்சல் போலியானது. எப்படியும் மரணதண்டனை குற்றங்களை தணிக்கவில்லை...பெண்ணியம் பல வருடங்களாக கரடியாக கத்துவது, போலீஸ் கஸ்டடி கற்பழிப்புப் பற்றி. அனேக போலீஸ்காரர்களை, அப்படியானால், தூக்கிலிடவேண்டும். உங்களுக்கு சம்மதமா?...போலீஸ் நடவடிக்கை என்று கோரிக்கை வைக்கிறீர்கள். யார் அந்த போலீஸ்? அவர்களும் கற்பழித்தவர்களும் ஒரே இனம் தானே? போலீஸ் அதிகாரிகள் மொத்தத்தில் பெண்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவில்லை என்று பேசுகிறார்கள்... வக்கீல்கள், ஜட்ஜ்கள் கூட ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.நல்லது. ஆனால், இத்தகைய குற்றவாளிகளை விடுவிக்க வக்கீல்கள் செய்யும் மாய்மாலங்கள்!...இளைஞன் என்று இரக்கம் காட்டும் ஜட்ஜுகள்...அரசியல் வாதிகள். அடடா! அவர்களின் மேல் எத்தனை வழக்கு என்று புள்ளி விவரம் நாடவேண்டும். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் போது ஓடோடி வந்த அரசியல் வாதிகள் எங்கே? எங்கே?... சமுதாயம் மாறி வருகிறது. பெண்களின் ஆற்றல் அதிகரித்து வருகிறது. இதெல்லாம் தன்னலம் நாடும் சில ஆணாதிக்க அமைப்புகளுக்குப் பிடித்த விஷயம் அல்ல. நாம் பல சமுதாய உண்மைகளை அலச வேண்டியிருக்கிறது...நமது மக்கள் லேசுபட்டவர்கள் அல்ல. இதே அட்டூழியம் மணிப்பூரிலோ, காஷ்மீரிலோ, ராணுவ வீரர்களால் நடத்த்ப்பட்டிருந்தால், சப்பைக்கட்டுக் கட்டுவார்கள், தேசீயம் என்ற சாக்கைக்கூறி... கற்பழிப்பை நாம் எதிர்க்கவேண்டும். அது தனித்து இயங்குவது அல்ல. அது சமுதாயத்தின் வன்முறையில் எதிரொலி. நாம் அந்த வன்முறையை, சிந்தனையாலும், செயல்களாலும், எழுத்துக்களாலும், பேச்சாலும், தணிக்க வேண்டும். மனப்பான்மையை மாற்றிக்கொள்ளவேண்டும். பதவியும், அதிகாரமும் வன்முறைக்குத் துணை போகலாம்...பெண்கள் என்ன? ஆண்களுக்கும் மரியாதை தரவேண்டும். டில்லியில் அந்த பெண்ணுடன் சென்று அடி வாங்கிய ஆண்மகனும் நம்மடவர் தான். அவரை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை, ஒருவரும்...
3. ஆர்.கே.லக்ஷ்மண்:
அறுபது வருடங்களாக ‘சராசரி குடிமகனை’ கார்ட்டூன் படத்தில் மையமிட்டு, சமுதாயத்தை அலசியவர். இந்திய மாணவர் நாடாளுமன்றம் ஒன்று அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. அதற்கு இவரின் உபயம், அந்த கார்ட்டூன். அவரது வாசகம்: ‘மாணவர்கள் அரசியலை ஒதுக்கக்கூடாது. அவர்களின் மனதில் அரசியல் ஊற்று எடுக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் தான் நான் இந்த படத்தை உங்களுக்காக வரைந்ததின் காரணம்’ என்கிறார். பாருங்களேன். காந்தியும், ராஜாஜியும், நேருவும் விரும்பி உழைத்த அரசியல் களம் தற்காலம், நம்மில் பெரும்பாலோருக்குத் தள்ளுபடி. ஜஸ்டிஸ். வர்மா கமிஷனுக்குக்கூட கருத்து தரமாட்டோம் என்ற பிடிவாதம். உருப்பட்டால் போல தான்!
4. ஹரீஷ் காரே:
பலவருடங்களாக பிரபலமான அரசியல் ஆய்வாளர்; பிரதமரின் ஊடக ஆலோசகராக இருந்தவர். ‘அராஜகம் அழைக்கிறது’ என்ற தலைப்பில் இந்த ‘அம்மாக்கண்ணுவும்,கண்ணாயிரமும்’ அட்டூழியத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி இருக்கிறார். இந்த ஆரவாரமெல்லாம் வரப்போகும் புரட்சிக்கு அபாயக்கொடி பிடிக்கிறது. ஆளுமையை எதிர்க்க வலிமை தேவை என்கிறது...கூட்டங்கள் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கக்கூடும். மறைமுகமாகவோ, நேரடியாகவே தலைமை தாங்குபவர்கள், பழங்காலம் போல் பொறுப்பு ஏற்கமாட்டார்கள்...அரசியல் கட்சிகள் ஆளுமையை இழந்து விட்டன...ஆகவே தண்டல்காரனின் அதிகாரம் ஓங்குகிறது. அதற்கு எதிர்மறையாக, தண்டல்காரனை, எது செய்தாலும் கொடுங்கோல் என்று குற்றம் சாட்டுவார்கள்... நமது கலாச்சாரம் மாறவேண்டும். உரிமைக்கும், பண்புக்கும், மரியாதைக்கும் உரமிடுவோம். ஜனநாயகத்தின் சுகாதாரத்துக்கு யதேச்சதிகார வழிகள் உதவாது. மக்கள் தான் தனது சமுதாய வேலிகளை அமைத்துக்கொள்ளவேண்டும்...
5. பிரவீண் சாமி: இவர் பிரபல ஊடக ஆய்வாளர். மற்ற நாடுகளிலிருந்து ஆதார பூர்வமான புள்ளிவிவரங்கள் கொடுத்துள்ளார். அவறை அலசும் முன், மக்கள் ஆலோசனை மன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது, சமுதாய நோக்கில் உற்று நோக்கினால். எனவே, சில விஷயங்கள் மட்டும் இப்போதைக்கு: ‘கற்பழிப்பை தடுப்பதில் போலீஸை விட சமுதாயம் தான் வெற்றி பெற இயலும்...அமெரிக்காவில், 1979ல் ஆயிரம் பேரில் 2.8 பேருக்கு பாதிப்பு என்று இருந்ததை, 2004ல் ஆயிரம் பேரில் 0.4 பேர் என்று தணித்தது பெரிய விஷயமல்லவா! போலீஸ் காபந்தை விட, கலாச்சார பண்புகள் நல்லமுறையில் மாற்றப்பட்டன...போலீஸ் உதவியை மேன்படுத்தலாம். சட்டத்தை சீர்திருத்தம் செய்யலாம். அவற்றின் எல்லை, ஆனால், குறுகியது. பெண்ணியம் ஆண்டாண்டு தோறும் போட்டு வரும் போர், ஆணின் மனதை மாற்றுவது. பெண்ணை அடிமைப்படுத்துவது தான் ஆண்மை என்ற அசிங்கமான எண்ணத்தை மாற்றுவது. பிரச்னை போலீஸ்/கோர்ட்டு/அரசாங்கம் அல்ல. பிரச்னை நாம் தான்.’
இந்த கட்டுரையின் வாசகர்கள் சமுதாயத்தின் அங்கத்தினரே. அவர்களின் கருத்து முக்கியம். செயல்பாடுகள் அதை விட முக்கியம். கேள்வி கேட்பதும் முக்கியம். இதனுடைய தொடர் வருமா இல்லையா என்பது, அதை பொறுத்துத் தான் இருக்கிறது.
இன்னம்பூரான்
27 12 2012

'இ' சார்
நான் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்தபோது எத்திராஜ் கல்லூரியைச் சார்ந்த சரிகா ஷா என்ற மாணவி சாலையொரம் ஈவ் டீசிங் செய்த மாணவர்களால் தள்ளப்பட்டு உயிரிழந்தார்
அப்போதும் இதுபோன்ற உணர்ச்சிக் கொந்தளிப்பு சென்னையில் எழுந்தது
நான் சென்னையில் இருந்த வர்மக்கலை மருத்துவர் டாக்டர் ராஜா மணி (எம்.ஜி.ஆருக்கு வர்மக் கலை மூலம் இழந்த பேச்சுத் திறனை மீட்டளித்தவர்) அவர்களுடன் இணைந்து எளிதான வர்மக்கலை சார்ந்த தற்காப்புப் பயிற்சியை உருவாக்கினோம்
இன்னும் என் துறையில் நான் வாங்கி வைத்த சிலம்பங்களும் கத்திகளும் அப்படியே உள்ளது (ஆடிட் அப்ஜெக்ஷனுக்குப் பயந்து)
ஆனாள் அப்போதிருந்த துணைவேந்தர் கடைசி நேரத்தில் இந்தப் பயிற்சியைப் பெண்களுக்குக் கொடுப்பதால் ஆண்களுக்குத் தற்காப்பு போய்விடும் குடும்பம் போர்க்களமாக ஆகிவிடும் என் வீட்டிலேயே என் மனைவிக்குப் பயிற்சி அளித்தால் என் நிலை என்னாகும் என்ற பயம் இருக்கிறது பயிற்சி வேண்டாம் என்று சொல்லி விட்டார்
என் வீட்டில் பெண்கள் இருவரும் பயிற்சி பெற்றவர்கள் அவர்கள் நினைத்தால் என் கதி என்று நடுக்கம் இருந்தாலும் அவர்கள் அச்சமின்றித் தன்னம்பிக்கையுடன் தெருவில் அலுவலகத்தில் கல்விச்சாலையில் வன் முறைக்காளாகாமல் இருக்கும் பாங்கைக் காண்கிறேன்
இப்படி ஆர்ப்பாட்டமெல்லாம் செய்பவர்கள் பேசாமல் பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியைக் கொடுத்தால் பாலியல் வன் கொடுமையின் எண்னிக்கைக் கனிசமாகக் குறையும் என்பது என் காத்துட்டுக் கருத்து
நாகராசன்
டில்லியில் பலாத்காரம் செய்யப்ப்ட்டு, சிங்கப்பூரில் தீவிர சிகிச்சையில் இருக்கும் பெண்ணின் உடல் நிலை மெலும் கவலைக்கிடம் ஆகி விட்டது என்று, சில நிமிடங்களுக்கு முன் வந்த பீ பீ.சி. செய்தி கூறுகிறது.
On Dec 28, 12:48 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> அம்மாக்கண்ணுவும்,கண்ணாயிரமும்
உண்மை, ஏகப்பட்ட தகவல்கள். பகிர்விற்கு நன்றி ஐயா.
அன்புடன்
பவளா
--
நீங்கள் எழுதி இருப்பவை அனைத்தும் சரியே. உண்மையில் ஆண் தன் உடல் வலிமையால் பெண்ணை எப்படியேனும் அடக்கிவிடுகிறான் என்பதும் உண்மை என்றாலும் இதற்கு அது மட்டுமே காரணம் இல்லை. மது, தொலைக்காட்சி சீரியல்கள், ஊடகங்கள் போன்றவையே. இவற்றிற்கு முக்கியப்பங்கு உண்டு. முக்கியமாய் மதுவுக்குக் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்; அல்லது அடியோடு ஒழிக்க வேண்டும். சிறு வயது முதலே நீதி போதனைகளைப் புகட்ட வேண்டும். மதச் சார்பற்ற நாடு என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு இருந்த கொஞ்ச நஞ்சம் கலாசாரத்தையும் அழிந்து போகாமல் காக்க வேண்டுமெனில் முதலில் அனைவருக்கும் அவரவர் மதச் சார்புள்ள நீதிபோதனைகளைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். நீங்கள் தொடரக் காத்திருக்கிறேன்.
நன்றி, கீதா. 1994ல் என்று நினைக்கிறேன். அன்றைய அரசியலை கண்டித்து ஃப்ரண்ட் லைன் இதழில் எழுதினேன். காரமும், சாரமும் கண்டு ஒரு பெரும்புள்ளி கேட்டார், ' நீங்கள் என்ன பளார் பளார் என்று அறைகிறீர்களே' என்று. ஒரு அமெரிக்க கற்பழிப்பு வழக்குப் பற்றி எழுதியதை கண்டு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிக்கொண்டு எழுதுகிறேநன்.

இன்று வந்த சில கருத்துக்களை முதலில் சொல்கிறேன்.
ஞான சுதா மிஸ்ரா என்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திய சாட்சிய சட்டத்தின் படி பல தடவை சாட்சியத்தை முன் கொணர்ந்து தாமதிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், டில்லி உயர்நீதி மன்ற நீதிபதி உஷா மேஹ்ரா, முதல் கட்டத்திலியே வக்கீல்களை ஜட்ஜ் குற்றவாளிகளுக்கு நியமிப்பது தாமதத்தைக் குறைக்கும் என்கிறார்கள். உஷா மேஹ்ரா போலீஸ் சேகரித்த சாட்சியம் இருப்பதை வைத்து உடனக்குடன் உண்மை நிலை ஆராயவேண்டும்; தவறுகள் தென்படும் என்கிறார். ஒரு ஜட்ஜ் முன்னிலையில் சாட்சியம் பெறும்போது, அரசு தரப்பு, குற்றவாளி தரப்பு என்று பல தடவை இழுத்தடிப்பது குறையும் என்கிறார், நீதிபதி மிஸ்ரா. குறுக்கு விசாரணை தான் அப்போது பாக்கி, அதுவும் விரைவு கோர்ட்டு என்றால், தாமதமே இல்லாமல் தீர்ப்பு அளிக்கமுடியும் என்கிறார். டில்லி கற்பழிப்பு படுகொலை குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்க வக்கீல்கள் மறுக்கிறார்கள் என்பதை குறித்துக்கொண்ட நீதிபதி உஷா மேஹ்ரா, யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும், இவ்விஷயத்தில் ஜட்ஜுக்கு இருக்கும் ஆளுமையை பயன்படுத்த சட்டம் அனுமதிக்கிறது என்றார்.
இந்திய சாட்சிய சட்டத்தை இவ்வாறு பொது மன்றங்களில் யாரும் அலசவில்லை, இந்த அலசல்கள் நிச்சயமாக பொருத்தமானவை என்பதால், அவற்றை பொது மன்றத்தில் வைக்கிறேன். மற்றபடி என் கருத்துக்களை முன் வைத்து, உங்கள் கருத்துக்கள் கிடைத்த பின் ஜஸ்டிஸ்.வர்மா கமிஷனுக்கு எழுதுவதாக உத்தேசம்.
இன்னம்பூரான்
30 12 2012

உண்மையைப் பேசும் அருமையான இடுகை ஐயா
நாட்டில் வசிப்பதைவிட காட்டில் வசிப்பது பாதுகாப்பு என உணர வைத்துவிடும் போல உள்ளது இன்றைய நிலை
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
January 4, 2013
Dear Justice Verma Committee,
Welcoming your move to elicit public opinion and cognizant of the overwhelming response, I write as under:
My credentials are: (a) Being an observant and concerned citizen over six decades and (b) my having been privy to confidences on ‘Violation of the Female’ (my preferred expression for your wide-ranging Terms of References) in the workplace as a former Indian civilian and elsewhere as well, as a former Citizen Adviser in the UK. I made a special study of this deviant behavior, inter alia, for my Applied Sociological Work degree in the UK. I had diligently kept track of this nettlesome issue over the long term and in the sad context in which this Committee was set up.
‘Violation of the Female’ is anatomically easy and quick; the male mind dwells on nothing else, most of the time. He can get away with it in no time. Consequences do not visit on him. It is ubiquitous globally and over the centuries. Widespread and socially acceptable consensual sex among the adult population in the western world does empower the female and mitigates this deviant behavior, but it also brings in intractable problems, in its wake. India is not ready for any such experiment, except to the extent it is already prevalent. We are too self-centered to come out of the shell of denial of stark truths. Family, neighborhood and the larger society had almost always acquiesced into the ‘Violation of the Female’ and will continue to do so, for reasons of the dubious ‘family honor’, hypocrisy masquerading as political correctness (no virtue either!), the denial-mode and pervert vicarious self-indulgence. Binge-drinking is most certainly deplorable for triggering this deviant behavior, most often. India is now infamous.
The criminal justice system ~ administration of Indian Penal Code, laxity and loopholes in enacted law, abhorrent record of the Law & Order establishment, heinous political interference, court delays that deny justice, widely prevalent defiance of the rule of law ~ is no less deviant than the perpetrators themselves. Distance, instead of dimming, throws the spotlight in, sometimes. I cite an excerpt from myself on the ‘Obnoxious, but not Criminal’ vintage justice system from the distant USA, for flooding the spotlight in, on us.
[ ‘...This brings to one’s mind the story of an infamous trial in New York that shocked the Unites States. Acquitting
three young white men of the charge of gang-raping a black woman, the foreman of the jury intoned that their
conduct was “obnoxious” but not “criminal”. He brushed aside independent testimony that the victim had been unconscious most of the time and that she could not stand when she was conscious. He had no moral dilemma while pronouncing the verdict. To his mind, she was a ‘consenting partner’. The ugly parallel is too close to comfort. The thin dividing line will be crossed, for sure...’
Frontline: November 20, 1992: Economic Policy: “Obnoxious, But Not Criminal”: Public Sector Disinvestment. (S.Soundararajan) ]
The thin dividing line has been crossed and the act denied, hundreds of time by our criminal justice system.
In the above backdrop, I see your remit, as under:
1.As far as I discern, we do no have codified Human Rights Law. With due respect to the framers of our Constitution, I submit that the the contrived divide between the Fundamental Rights and the Directive Principles has done us no good. Please set things right, to the extent within your terms and commend enactment of the Human Rights Act, from the larger perspective.
2.Bring back a robust dose of Moral Studies in the schools, assisted by gradual teaching of Rights, Duties, Societal obligations and Rule of Law. This is for the long term. Some move is afoot; it could by spiked by the vested interests. Hence, the request.
3. Paediophilia, Incest, Binge-drinking, Violation of the Female and prostitution are caged within one vicious trap . Please break it by suggesting the skeleton of a distinct Law to be enacted quickly for comprehensive and lucid coverage, by replacing the welter of law on these subjects. Punishment should be quick, deterrent and should not be amenable to remission of any kind. Parole should be prohibited. The latitude and discretion to the police officials should be minimal. Punishment for negligence of duty should be severe. Negotiation and bargaining at the instance of the police should be treated as abuse of power; it should be made criminal, not merely obnoxious.
4.These aspects, to my mind, are very serious. I urge you to set up a sub-committee for framing the draft Bills on para 2 & 3 above and recommend that the Legislature pass it. Please include female legal luminaries in that sub-committee.
5.Revision of the Indian Evidence Act for facilitating fast track courts, a hard look at Tort Law for levying extortionate fines on the guilty for offenses listed in para 2 above is also an urgent need. I personally do not see virtue in the government always paying for the damage caused by the criminals. Local communities abet, at times. They should be heavily fined.
6.Transparency is one deterrent. The ‘Amanath’ outrage was too much in the open. Hence, the upheaval. I urge you to commend a code of conduct for the government, media, police and the NGOs, in this regard.
7.I do not favor capital punishment for larger reasons; nor do I favor chemical castration, as it is no deterrent and as the danger of miscarriage of justice looms large. In USA and some Western countries, anti-socials of this class and degree are jailed for the very long term, not merely as a punishment, but as their release is considered a danger to the society. You may like to consider laws leading to that effect; but, the real deterrent is the hard and strenuous labor being extracted from them during such incarceration.
We look to you most expectantly for exploring the causes and suggesting robust and practical remedies, in perspective.
I thank you for the opportunity to comment.
Thanking You,
S.Soundararajan
Respected Sir,
The following points are very impressive...
We are too self-centered to come out of the shell of denial of stark truths....the denial-mode and pervert vicarious self-indulgence
The criminal justice system ... is no less deviant than the perpetrators themselves (in reference with “Obnoxious, But Not Criminal” incident)
The recommendations clearly show awareness of the violation and the punishment for the crime should be implemented hand in hand.
Thank you sir, I greatly appreciate your initiative on behalf of the Women's Front
Sincerely,
….. Themozhi
excellent sir! And thank you for taking time and writing!!
On Jan 4, 11:47 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> January 4, 2013
>
> Dear Justice Verma Committee,
>
> Welcoming your move to elicit public opinion and cognizant of the
> overwhelming response, I write as under:
>
> My credentials are: (a) Being an observant and concerned citizen over six
> decades and (b) my having been privy to confidences on ‘Violation of the
> Female’ (my preferred expression for your wide-ranging Terms of References)
> in the workplace as a former Indian civilian and elsewhere as well, as a
> former Citizen Adviser in the UK. I made a special study of this deviant
> behavior, *inter alia*, for my Applied Sociological Work degree in the UK.
> [ *‘...This brings to one’s mind the story of an infamous trial in New York
> that shocked the Unites States. Acquitting *
>
> *three young white men of the charge of gang-raping a black woman, the
> foreman of the jury intoned that their *
>
> *conduct was “obnoxious” but not “criminal”. He brushed aside independent
> testimony that the victim had been unconscious most of the time and that
> she could not stand when she was conscious. He had no moral dilemma while
> pronouncing the verdict. To his mind, she was a ‘consenting partner’. The
> ugly parallel is too close to comfort. The thin dividing line will be
> crossed, for sure...’*
>
> *Frontline: November 20, 1992: Economic Policy: “Obnoxious, But Not
> Criminal”: Public Sector Disinvestment. (S.Soundararajan) *]
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
On Fri, Jan 4, 2013 at 11:17 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
anti-socials of this class and degree are jailed for the very long term, not merely as a punishment, but as their release is considered a danger to the society. You may like to consider laws leading to that effect; but, the real deterrent is the hard and strenuous labor being extracted from them during such incarceration.
நல்ல கருத்து.
நீதி வெல்ல வேண்டும்.
Dear Sir,
Wonderful Comment. Very much appreciable.Thanks a lot sir.
Regards
Pavala
--
Take life as it comes.
All in the game na !!
Pavala Sankari
Erode.
Tamil Nadu.
--
|
|