21. “ஞானஸ்நானம்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3 1 message |
Innamburan S.Soundararajan | Mon, Apr 29, 2013 at 9:19 PM | |||||||||||||||||||
21 01 2010
21. “ஞானஸ்நானம்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3
ஞானஸ்நானத்துடன் மூன்றாம்பத்து தொடங்குகிறது.
ஆட்டைத்தூக்கி மாட்டிலே போடக்கூடாது; ஒத்துக்கிறேன். அதற்காக புலியோடு போடுவார்களோ? அரசாங்கக்கணக்கு வ
"தனிபெறு தன்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பீன்று..." என்றெல்லாம் கலித்தொகையில் பிடவம், கோடல், காயா முதலான பல மலர்கள் சொல்லப்பட்டமாதிரி, இந்த பெரும் தலைகள், சிறு தலைகள், குட்டித்தலைகள், அரசு கணக்கு வழக்கில் புகுந்து விளையாடின. கல்லறைகளுக்கு மட்டும் நான்கு குறும் தலைகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது எல்லாம் எங்கள் அலுவலகப்பரிக்ஷைகளில் வந்து பாடாய் படுத்தின. முதல்முறையாகவும் கடைசிமுறையாகவும் கோட்டு அடித்தேன். இல்லறத்தை பாதிக்கும் அளவுக்கு, ராவெல்லாம் தலைகள் உருண்டன. என்ன பயன்?
ஆனானப்பட எனக்கே இந்த அதோகதி என்றால், நேற்று வந்த கருவூலகுமாஸ்தா (9ஸி: தினக்கூலி) ஏன் ஆட்டைத்தூக்கி புலியில் போடமாட்டார்? எனக்கு இது சுத்தமா பிடிக்கவில்லை; புரியவில்லை.
போதாக்குறைக்கு, ஏ.ஜீயின் பாங்கன் யான் வைத்த பெயரை அவரிடம் வத்தி வைத்துவிட்டார் போல. ஏ.ஜீ என்னை கடிந்து கொண்டார். "நீ கடவுளர் பெயரை எல்லாம் இப்படி இழுக்கலாமா? இது தகுமோ? இது முறையோ?" என்று அவர் வினவ, "இல்லை! இல்லை! (தனிமொழி: 'அப்பாணை! இல்லை! இல்லை!) என்று விடையளித்துவிட்டு, சிரங்களையெ
எந்த துறையிலும் நுணுக்க, நுணுக்க, முழுமை மறந்து போய் விடுகிறது. ஆங்கிலத்தில் சொன்னால், ‘The devil is in the detail; but, we lose the wood for the trees. “எங்கள் டிபார்ட்மென்ட்டின் பெயரிலேயே, இரட்டைக்குழல்: கணக்கு வழக்கு & தணிக்கை. நான் ஏதொ கொஞ்சம் தணிக்கை செய்ய கற்றுக்கொண்டாலும், ஒரு தணிக்கை ரிப்போர்ட் பார்த்தது கிடையாது. அது எல்லாம் மூடுமந்திரம். கற்றுக்கொண்டதோ, நிர்வாகம், பொ
கல்கத்தாவிலிருந்து சித்தரஞ்சன் ஒரு தடவை வரும்போது, அப்போது தான் தொடங்கிய காஸ்ட் அக்கெளவுன்டெட் தனியார் துறை தலைவரும் என் கூட பயணித்தார். வாய்சாலகங்கள் முடிந்தபின், 'எங்கள் பரிக்ஷைகள் எழுதி முன்னேறுக' என்று அழைப்பும் விடுத்தார். பார்த்தேன். ரயில் பயணம் இலவசம் அல்லவா! ஜாம் ஜாம் என்று தம்பதி சமேதராக, டில்லி சலோ! என்னுடைய ஆசார்யன், 'ஈ.வி.சரோஜா விசிறி' திரு.பரஃபுல் சந்திர பாதி அவர்களை வீட்டில் சந்தித்து சரணடைந்தேன். ஆஃபீசில் வேங்கை என்றாலும், ஏற்கனவே குடும்ப நண்பர்கள். அஜகஜாந்திர தூரம், பதவி விஷயத்தில் இருந்தாலும். நான் அவரிடம் எந்த விதமான தயவு கோரவே இல்லை என்பதால் தான் இது முடிந்தது. ஏதாவது கேட்டிருந்தால், கடாசியிருப்பா
ஒரு குரல் அழுதேன், வஸந்தா ரன்னிங்க் கமென்டரி அடிக்க. செவி மடுத்துக்கேட்டுக்கொண்டார். என் பாயிண்ட்ஸ்; 1. எனக்கு அக்கெளண்ட்ஸ் வேண்டாம். தணிக்கை மட்டும் வேண்டும் 2. காஸ்ட் அக்கெளண்ட்ஸ்: அறிவுரை ப்ளீஸ்.
அவர் விடுத்த தோட்டாக்கள:
1 கணக்கு வழக்குக்கு முழுக்குப்போட்டு விடு, என் மாதிரி. யாரிடமும் சொல்லாதே. (அவர் கணக்குப்புலி;ஆடிட் சிங்கம், அருமையாக தச்சு வேலை செய்வார்; எனக்கு ஒரு பரிசு கூட அளித்திருக்கிறார்; சினிமாப்
2.தணிக்கையில் தணியா வேகம் எடுக்க.
3.உனக்கு கணக்குவழக்கு பதவிகள் வரும். அஞ்சாதே. ஒரு தகுந்த எஸ்.ஏ.ஸ். கணக்காளரை உறுதுணையாக வைத்துக்கொள்.*
4. காஸ்ட்டும் வேண்டாம். அக்கெளண்ட்ஸும் வேண்டாம். ஸ்பெஷைலைஷன் நலம் தராது. மூலையில் முடங்கிவிடுவாய்.
5. திறந்த மனதுடன் பல விஷயங்கள் கற்றுக்கொள். கேள்வி ஞானம் சிறந்தது என்பதை மறக்காதே.
6. படிப்பதை நிறுத்திவிடாதே.
இவ்வாறு ஆசுவாசப்படுத்திய பிறகு தட்டிக்கொடுத்து அவர் அருளிய வாக்கு: "உனக்கு வாக்தீக்ஷையும், சக்க்ஷுதீக்ஷை
தமிழ்த்தேனீ எச்சரிக்கை விடுத்தும், எனக்கு கணக்கு வழக்கு தெரியாது என்று இன்று சொல்லிவிட்டேன். கணக்குவழக்கு பதவிகளை திறம்பட வகித்தேன். பிற்காலம், என்னுடைய சாக்ஷியத்தை உயர்மட்டநிதிகமிஷன் பாராட்டினார்கள். அது ஆச்சர்யம் அல்ல. தனிப்பட்ட சாதனையும் அல்ல.
மாரல்:
‘The devil is in the detail; but, do not lose the wood for the trees.
* ஆடிட்டர் ஜெனரல் நேர்முக அடிப்படையில் மட்டும் எஸ்.ஏ.ஸ். கணக்காளர்களை தேர்ந்து எடுத்து, (சிபாரிசு அறவே கிடையாது..) பயிற்சியில் புடம் போட்டு மத்திய தட்டு மேற்பார்வையாளர்களாக பணியில் அமர்த்தினார், சில வருடங்கள். ஐ.ஏ.ஏஸ்ஸில் சோடை போனது உண்டு. எஸ்.ஏ.ஸ்ஸில் ஒருவர் கூட சோடை போனதில்லை.
இன்னம்பூரான்
List of Major Gods & Minor Gods!. மன்னிக்கவும். அது நான் வைத்த செல்லப்பெயர்; இயற்பெயர்
List of Major Heads & Minor Heads. Detailed headsஇது போன்று ரகசிய குறிப்பு வார்த்தைகள் பரவலாக ஒவ்வொரு அலுவலகத்திலும் உண்டு ரக வாரியாக பிரிக்கலாம் இந்த பெரும் தலைகள், சிறு தலைகள், குட்டித்தலைகள், அரசு கணக்கு வழக்கில் புகுந்து விளையாடின. கல்லறைகளுக்கு மட்டும் நான்கு குறும் தலைகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
இவ்வாறு ஆசுவாசப்படுத்திய பிறகு தட்டிக்கொடுத்து அவர் அருளிய வாக்கு: "உனக்கு வாக்தீக்ஷையும், சக்க்ஷுதீக்ஷை
நல்லவேளை அதனால்தானே இன்று எங்களுக்கெல்லாம் தணிக்கை செய்யாத குறும்புகள் இலவசமாயக் கிடைக்கின்றன
அன்புடன்
தமிழ்த்தேனீ
excellent
_______________
Image Credit: http://3.bp.blogspot.
இன்னம்பூரான்
29 04 2013
|
No comments:
Post a Comment