Showing posts with label அரசு. Show all posts
Showing posts with label அரசு. Show all posts

Thursday, August 29, 2013

அரசு 12 துரைத்தனம்.


அரசு 12 துரைத்தனம்.


Innamburan S.Soundararajan Fri, Aug 30, 2013 at 9:20 AM

அரசு 12 துரைத்தனம்.

Friday, August 30, 2013, 4:57


இன்னம்பூரான்
Cockroachawardராஜமாதா முப்பெரும்தேவி பொன்னம்மா தேவிஶ்ரீ மதுராபுரியை ஆண்ட ராணிமங்கம்மாவை விட பல திறன்களில் தலை சிறந்து விளங்குபவர். ரோமாபுரி இளவரசி. தாமரை மணாளனை அவரை சங்கத்தமிழ் பண்புக்கு இணங்க காதல் செய்த பின்னரே வரைவு செய்து கொண்டது உலகறிந்த விஷயம். அது அவர்களது உரிமை என்பதில் கடுகளவேணும் ஐயமில்லை. அழகான குழந்தைகள். ஆண் அரசாளும் என்கிறார்கள் சிலர். அவருடைய திருமகனார் இளங்குமரனுக்காக, அரியணை காத்திருக்கிறது. வடிவுக்கரசியான அவருடைய திருமகளோ, குடும்ப விளக்கு. எங்கிருந்தோ வந்த ஆணழகன் இளஞ்சேரலாதனை மணந்து பல வருடங்கள் ஆயின. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றாள், ஒளவை பாட்டி. குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகள் (பாலையையும் விட்டு விடவில்லை!) நாடோடி, நாடோடி இளஞ்சேரலாதனை நாடின. மணிமேகலையின் அமுதசுரபி தோற்றது, போங்கள். அலிபாபாவின் மாயவிளக்கு மங்கியதோ என்ற தோற்றம்! காசுகள் கொட்டின; மோஹராக்கள் ‘தக தக’வென்று மின்னின; திரவியம், கனகதாரா தோத்திரம் மொழிந்தவாறு, கூரையை பிய்த்துக்கொண்டு ‘கொட்டோ கொட்டு’ என்று இடைவிடாமல் பொழிந்தது; பொழிகிறது; பொழிந்து கொண்டே இருக்கும். இளஞ்சேரலாதன் அமர்ந்தவிடத்தில் அல்லது தேகாப்பியாசம் செய்யும் இடத்தில் அல்லது இளைப்பாறலும், தேறலும், விருந்தும் அளிக்கும் மன்றங்களில் மகிழ்வின் மணமும், செல்வத்தின் செல்வாக்கும் நிறைகுடங்களாக ததும்பி வழிகின்றன.
என்றென்றும் ராஜ விசுவாசிகளில் ஒருவராக பரிமளிக்கும் குருக்ஷேத்திரத்தின் குறுநிலமன்னராகிய உலகநாதபெருமான் அவர்களிடம் தெற்கத்திய பத்திரிகை ஒன்று, இளஞ்சேரலாதனுக்கு குருக்ஷேத்திர பிராந்தியம் அள்ளி அள்ளி கொடுத்த நிலபுலனை பற்றியும், ஸ்தாவரசொத்தான பூமியயையே காசு பணமாக ரஸவாதம் செய்யப்பட்ட உத்திகளை பற்றியும், குருக்ஷேத்திர நாட்டின் உயர்/தாழ் ஊழியனனான கண்ணிய கமுக்கனார் தட்டிய முரசொலியின் ‘அபஸ்வர’ எதிரொலியை பற்றியும், ஒரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அவரோ ஜராசந்தன் போன்ற சண்டைக்கோழி. விடுவாரா? ஒரு உயர்/தாழ் ஊழிய சமூகத்தையே அருகில் வைத்துக்கொண்டு கருத்து முத்துக்கள் பல உதிர்த்தார். அவையாவன:
தேசத்தின் மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர்.
குருக்ஷேத்திர தர்மம் மைனர் குடியானவர்களுக்கு, அதுவும் செல்வக் களஞ்சியங்களுடன் ‘தகாத’ இனம் சேரும் மைனர் குடியானவர்களுக்கு சலுகைகள் அளிக்கும்.
ஆகவே மாப்பிள்ளை இளஞ்சேரலாதனுக்கு கொடுத்த சலுகைகள் தர்மத்தின் அடிப்படையே.
இந்திரனா புகாரித்தான்? இந்திர பதவி உயர்ந்தது தான். ஆனால் இந்திரர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்ல. இந்திரனும் காசு பார்த்தான். அநீதி + அநீதி = நீதி! இது அறியாத தென்னாட்டுத் திருமாலே. உம்மை கண்டு பரிதாபம் கொண்டேன்.
கமுக்கரின் குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போயின, ஐயா. செல்வக்களஞ்சியம் ஏன் புகாரிக்கவில்லை. அது எனக்கு புரியவில்லையே!!!
கமுக்கரின் குற்றச்சாட்டுகளை, துரைத்தனத்தாரின் கமிட்டி நிராகரித்து விட்டதே. அதன் ரிப்போர்ட்டை நான் படிக்கவில்லை. அதனால் என்ன கெட்டுப்போச்சு? அது நிராகரித்திருக்கும்.கும்! கும்மோ கும்!!
அப்படியானால் குமுக்கரை ஏன் அமுக்கவில்லை என்றா கேட்கிறீர்கள்! நான் அவசரப்படுபவன் அல்ல. என்னை போன்ற நடுநிலையாளர் கிடையாதாக்கும். கும்! கும் கும்!!
மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு பண்பாளர். அவர் ராஜமாதாவின் மாப்பிள்ளை என்பதால் தான், பத்திரிகைகள் அவரை வாட்டுகின்றன. அலக்கழிக்கின்றன. என்னே அக்கிரமம்! மம்! மம்மோ மம்!!
அசரீரி: “ மெய்யெல்லாம் மெய்யல்ல; பொய்யெல்லாம் பொய்யல்ல; மெய் என்பது பொய்யோ? பொய் என்பது மெய்யோ? பொய்யும் மெய்யும் கலந்துக்கட்டியோ? ஐயோ!”
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்’ என்று அரசியல் அறியாமையினால், சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பிழை இழைத்து விட்டார் போலும். எதற்கும் ஒரு செய்தி. அரசியல் பிழைத்தோர்க்கு ஆரூடம் கை வந்த கலை. ஜோசியம் கை கூடிய கலை. அதனால் தான் இந்த உலகநாதபெருமானின் அற்புத வாசகங்கள் வருமுன்னரே, ராஜமாதாவின் பிரதம விசுவாசியும், திவானும் ஆன மனோவசியனார் அவர்கள், பத்திரிகைகளுக்கு ஒரு அறைகூவல் விடுவித்தார். “பத்திரிகைகள் எதையும் விசாரிக்கட்டும்; ஆனால் தனிமனிதர்களை மீது பழி கூறலாகாது….”. அதாவது தவறு செய்தவன் தனிமனிதனாலும், சிஸ்டம் தவறியது என்பது உகந்த சொல் எனலாமோ? அவரது பொழிவை முழுதுமுச்சூடும் கேட்டோ/படித்தோ வசியமானவர்கள் உலகநாதபெருமானின் கூற்றை அனுபவித்து வரவேற்பார்கள்.
‘ஏழை குடியானவர்கள்’ பிழைப்பார்கள். விதர்பா ஏழை குடியானவர்கள் மடிவார்கள். குருக்ஷேத்திரத்தில் நிலபுலன் இழந்த ஏழை குடியானவர்கள் நெற்றியில் பட்டை நாமம் பளபளக்கிறது. மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் மைனர் குடியானவர் என்றால், ‘அமிதா பச்சன் ஒரு அறிமுக நடிகர்’ என்றார், ஒரு ட்விட்டர். மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர் என்றால் முதுகலைஞர் கருணாநிதி அவர்கள் பால் மணம் மாறாத குழவி என்பர் சிலர்.
வர்ரேன்…
சித்திரத்துக்கு நன்றி: asifmeeran.blogspot.com
பிரசுரம்: வல்லமை 30 08 2013


Sunday, June 30, 2013

அரசு 11: கருவூலம்




அரசு 11: கருவூலம்

Innamburan S.Soundararajan Sun, Jun 30, 2013 at 3:46 PM




Inline image 1அரசு 11: கருவூலம்
பல வருடங்களாக தேடி வந்த் கவிதையொன்று இன்று தற்செயலாகக் கிடைத்தது. சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8f/Kancional_Jistebnicky.jpg

இன்னம்பூரான்
30 6 2013

Daily 
Prayer 
For 
red tape 
Votaries...
A LITURGY
Let
us 
Pray

O Lord grant that this day
We come to no decisions,
neither run into any kind
of responsibility, 
but that all our doing may be 
 ordered to establish
new and quite  unwarranted 
departments
for ever and ever.
A
HYMN
O thou, who seest all things
below.
grant that thy servant
may go slow,
that they may study to comply
with regulations till they die.

Teach us Lord to reverence
committees more than common
sense.
Impress our minds to make no plan.
but pass the baby when
we can.
And when the Tempter
seems to give
us feelings of initiative,
or when alone we go too far,
chastise us with a Circular.
Amen!

Amen
தமிழாக்கம்
சிவப்பு நாடா பக்தர்களே!
உமக்கான பிரார்த்தனை.
தொழுகை
நாம் பிரார்த்திப்போமாக.

பரமபிதாவே! வரம் தருவீர்களாக!
நாங்கள் ஒரு தீர்மானமும் எடுக்க வேண்டாமென்று.
தவறிக்கூட பொறுப்பேற்க வேண்டாமென்று.
 உருப்படாத  புதிய புதிய இலாக்காக்களை  என்றென்றைக்கும்
உருவாக்கும் திறனை அளிப்பாயாக.


கீர்த்தனை
ஆண்டவனே!
மண்ணுலகில் நடப்பது எல்லாம் நீ 
அறிவாயே.
உன்னடிமையாகிய எங்களை அருள் கூர்ந்து 
வரமளிப்பாயாக.
சாகும் வரை, ஐயனே, நாங்கள் நத்தை நடை நடந்து,
ரூல்! ரூல்! ரூல்! 
என்று ஜபிப்போமாக.
தேவனே! பொது அறிவை விட கமிட்டி துரைத்தனத்தை
போற்றுவோமாக.
திட்டமும் வேண்டா; சட்டமும் வேண்டா.
பிரச்னைகளை நைஸா தள்ளிவிடவேண்டுமையா.
சாத்தான் வந்து எமக்கு சாதனை ஆசை காட்டினாலோ,
நாங்களே தொலைவு நோக்கி பயணித்தாலோ,
ஒரு சுற்றறிக்கை  போதும், பரமபிதாவே.
ஹல்லேலூயா!
Amen



Wednesday, June 26, 2013

அரசு-9: மாபெரும் புரட்சி



அரசு-9: மாபெரும் புரட்சி

Innamburan S.Soundararajan Wed, Jun 26, 2013 at 11:19 AM

அரசு-9: மாபெரும் புரட்சி
Inline image 1

அரசு-9: மாபெரும் புரட்சி

நாயுடுகாரு மண்ணூர் ரெவென்யூ இன்ஸ்பெக்டர்; கல்லூரில் சுப்பய்யர். இருவருக்கும் மேலதிகாரி தணிகாசலம் பி.ஏ. ~ அதாவது தாசில்தார். மக்கள் சம்பந்தப்பட்டவரையில் மூவருமே உருப்படாத கேஸ், ‘அரசு-8: இளங்கன்று’ இழையில் அகப்பட்டுக்கொண்டவர்கள் போல. கலோனிய அரசு இந்தியர்களை நம்பவில்லை. பிறந்த நாள் முதற்கொண்டு பொய் சொல்வது நமக்கு வழக்கம் என்பதும் உண்மை. விளைவு: எதற்கெடுத்தாலும் நற்சான்று, முன்பின் தெரியாத தாசில்தாரிடமிருந்து. அதற்கான சடங்கு, ரெவென்யூ இன்ஸ்பெக்டர். மேல்வரும்படிக்கு, இதை விட பெரிய சுரங்கம் கிடையாது. அதான் அதற்கு கிம்பளம் என்ற செல்லப்பெயர். எப்படி என்றால், மேல அக்ராஹத்து சம்பத் ஐயங்காருடைய பிள்ளை சமத்து என்பவனை, இந்த ‘நற்சான்று’ சேரிவாசி ‘சக்கிலியன்’ என்று நம்பவைக்கும், கிம்பளம் வாங்கிக்கொண்டு. 

மே மாதம் 23 அன்று தமிழ்ச்செல்வி அடுக்கிய ஆதிதிராவிடர், பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் எல்லாம் நாயுடுவுக்கும், சுப்பய்யருக்கும் மனப்பாடம். அதில் உள்ள நெளிவு சுளிவுகள் தணிகாசத்துக்கு தண்ணி பட்ட பாடு. ஏன் அவர்கள் முற்றத்தில் காசு மழையாக பெய்யாது? அந்த மாதிரி இந்திய பிரஜை யாவரும், பட்டாவிலிருந்து மரண சான்று வரை, இவர்களிடம் தொங்கவேண்டும். பிணத்திடமிருந்து கைநாட்டு வாங்கி மாற்று உயில் தயாரித்த ரெவென்யூ இன்ஸ்பெக்டர் ஒருவரை தெரியும். ஜமீன்தார் வீட்டு சமாச்சாரம் என்பதால் கனத்த காசு மழை. இத்தனை பீடிகை எதற்கென்றால்:

மத்திய அரசு இந்த நற்சான்று தீமையை ஒரேயடியாக ஒழிக்க, ஒரு புதிய பாதையை போட்டு இருக்கிறது. சொல்லப்போனால், அது ஏற்கனவே உயிர் விஷயத்தில் இருக்கிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள்  ‘இன்னும் உயிர் தரித்திருக்கிறேன்’ என்று சொல்ல, ஆஜரானால் போதும். தான் அளிக்கும் பத்திரங்கள், ஆவணங்கள் உண்மையானவை என்று சத்தியம் செய்ய, நாமே அவற்றில் ‘இது உண்மையான ஆவணம்’ என்று நற்சான்று கொடுத்தால், சம்மதத்துடன் அதிகாரிகள் அவற்றை வாங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தான் அந்த மே 2013 ஆணை. பின்னர், நேரில் வந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது மூல ஆவணங்களை காட்ட வேண்டும்.

இது அருமையான ஆணை. கொஞ்சம் என்ன ரொம்ப லேட். நிர்வாகத்தை சீரமைக்கும் மன்றம் 2009ல் செய்த பரிந்துரை, இது. ஆடி அசைந்து, அரசு மெதுவாக நல்லதொரு ஆணையை பிறப்பித்தது. நிறைய பொடி வைத்து வடித்த ஆணை, இது, அதாவது மூன்றாவது பாரா படி, இந்த ஆணை மண்ணூரிலும், கல்லூரிலும் அமலுக்கு வர, இன்னும் ஒரு மாமாங்கம் ஆகலாம்.  செய்தி எனக்கு எல்.ஸ்வாமிநாதன் என்ற நண்பரிடமிருந்து வந்தது. அவருக்கு நன்றி நவின்று, அந்த ஆணையை, எல்லாருக்கும் பயன்படும் என்பதால், கீழே பதிவு செய்திருக்கிறேன்.
ஒரு கேள்வி: ஐஏஎஸ்ஸை விட கடுமையான போட்டி, எந்த பரீக்ஷைக்கு?
இன்ன்ம்பூரான்
26 06 2012
*

SELF-CERTIFICATION OF DOCUMENTS INSTEAD OF ATTESTATION OF DOCUMENTS BY GAZETTED OFFICERS – DEPARTMENT OF ADMINISTRATIVE REFORMS RECOMMENDS SELF-CERTIFICATION OF DOCUMENTS IN LIEU OF GAZETTED OFFICER’S ATTESTATION
No.K-11022/67/2012-AR
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Administrative Reforms & Public Grievances
Sardar Patel Bhavan, Sansad Marg,
New Delhi-110001. Dated the 10th May, 2013

OFFICE MEMORANDUM
Subject: Self-certification
The Second Administrative Reforms Commission in its 12th Report titled “Citizen Centric Administration – The Heart of Governance”, has recommended, adoption of self-certification provisionfor simplifying procedures. (www:darpg.gov.in)
2. Taking a cue from this some Ministries/State Governments have adopted the provision of self-certification of documents like marksheet, birth certificate etc. by the applicants/stakeholders instead of asking for an attested copy of the documents by a Gazetted Officer or filing of affidavits. Under the self attestation method, the original documents are required,to be produced at the finalstage.
3. You will appreciate that the above method is citizen friendly and obtaining either an attested copy or affidavit not only cost money but also involves wastage of time of the citizens and the Government officials.
3.  It is requested to kindly review the existing requirements of attested copy or affidavit in variousapplication forms in a phased manner and wherever possible make provision for self-certification ofdocuments, after obtaining the approval of the competent authority.
Sd/-
(Sanjay Kothari)
Secretary to the Government of India



Tuesday, June 25, 2013

அரசு 8: இளங்கன்று




அரசு 8: இளங்கன்று

Innamburan S.Soundararajan Tue, Jun 25, 2013 at 2:51 PM


அரசு 8: இளங்கன்று
Inline image 1


எல்லாரும் இந்நாட்டுமன்னர்களே,ஓரளவு சமுதாயத்துக்காக செயல் பட்டால்.

மதுரையில் ஒரு பள்ளி மாணவன் செயல்பட்டதை கவனியுங்கள். பனையூரிலிருந்தும். அதைச்சார்ந்த பத்து கிராமங்களிலும் நிலபுலன்களுக்கு உரிமம் ஆன ‘பட்டா புத்தகம்’  கொடுக்காமல், இழுத்தடித்தனர், ரெவின்யூ துர்தேவதைகள். மனுக்கள் கட்டி வைக்கப்பட்டன. தொணத்திய பிறகு லஞ்சம் ( ரூ.10,000) கேட்டார்கள். ஜமாபந்தியில், கலைக்டர் அன்ஷுல் முஸ்ராவிடம் மனு போட்டு, நீதி கேட்டும் பயன் ஒன்றுமில்லை. பட்டா அளிக்கச்சொன்ன அவருடைய ஆணையை தூக்கி அடித்தனர். இந்த அவலத்தை கண்ட அருண் என்ற மாணவன் விலாவாரியாக எல்லா விவரங்களையும் கலைக்டரின் முக நூலின் (Facebook) பதிவு செய்துவிட்டான். கலைக்டர் வெகுண்டெழ, இந்த துர்தேவதை வர்க்கம், உடனுக்குடனே உரிமங்களை அளித்தார்கள்; லஞ்சத்தைத் திருப்பினார்கள். கலைக்டர் துர்தேவதைகளைக் கூப்பிட்டு எச்சரித்தாராம்.

இரு கேள்விகள் எழுகின்றன. 1. கலைக்டரின் ஆணையை மீற, அவர்கள் என்ன சால்ஜாப்பு சொல்லியிருப்பார்கள்? 2. எச்சரிப்பு ஒரு தண்டனையா? இரு குற்றங்கள்: கடமை தவறியது + லஞ்சம். கலைக்டர் என்ன செய்திருக்கவேண்டும் என்று, விருப்பமுள்ளவர்கள் மடலாடுங்கள்.

இன்னம்பூரான்

Thursday, June 20, 2013

அரசு -2 மக்கள் எழுச்சி





அரசு -2 மக்கள் எழுச்சி
அப்டேட்: 3:  21 06 2013

Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 12:14 PM


அரசு -2
மக்கள் எழுச்சி
Inline image 1
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். நாடும் கொள்ளாது எனலாம். வரலாற்றில் முதல் காட்சி: ஃப்ரென்ச் புரட்சி. ‘ரொட்டி கிடைக்கவில்லையென்றால் அப்பம் சாப்பிடு.’ என்ற பொருள்பட மேரி அண்டாய்னட் சொன்னதாக ஆதாரமில்லாத வதந்தி. மக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். பிறகு, பல புரட்சிகள். புரட்சிகளே யதேச்சதிகாரத்துக்கு வித்தாக அமைந்த கூத்துக்களும் நிகழ்ந்துள்ளன. அது வேறு விஷயம். ‘அன்றொரு நாள்’ தொடரில் அது பற்றி விவரங்களை காணலாம். சில நாட்களாக பிரேசில் நாட்டில் நடுத்தரவகுப்பு மக்களையும் அரசையும் எதிரும் புதிருமாக வைத்துள்ள அமைதியின்மை கவலையளிக்கிறது. ஒரு பார்வை:
சிறு துளி பெரு வெள்ளம் என்பதை விட, சிறியதொரு தீப்பொறி ஊரையே கொளுத்தி விடும் என்பதே சரியான உவமை. கால்பந்து விளையாட்டு பிரேசில் மக்கள் விரும்பும்  பொழுது போக்கு என்றாலும், உலகளாவிய கால்பந்து விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டுமானச்செலவுகள்/ஊழல்கள் மீது மக்களுக்கு அதிருப்தி. இந்தியாவின் காமென்வெல்த் விளையாட்டு மோசடிகளை, இது நினைவுபடுத்துகிறது. அதிருப்தி, அலைகளை போல மோதி, மோதி வலுத்துவிடும். பிறகு பஸ்/சப்வே கட்டணங்கள் ஏற்றப்பட்டது மேல் அதிருப்தி. ஆயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களில் அமைதியாக கூடி போராடும்போது, அதை வன்முறையால் அடக்குவது கடினம். காந்திஜியும், மார்ட்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவும் இதற்கு சாக்ஷி. பிரேசிலில் தற்பொழுது அமைதியான புரட்சி அலை கரை புரண்டுவிட்டது என்று தோற்றம், கமீலா ஸேனா என்ற நிடொராய் நகரத்து 18 வயது யுவதி கூறியது போல: ‘விலையேற்றத்தை எதிர்த்த காலகட்டம் கடந்து விட்டது. நாட்டு நடப்பு, அரசு தன்மை (சிஸ்டம்)  கேவலமாக இருக்கிறது. எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. அதை சப்ஜாடா மாற்றியமைக்க வேண்டும்... பணத்தை கொண்டுபோய் ஊழலில் வீணடிப்பதைக் கண்டு கொதித்தெழுந்தோம்’.
ஊருக்கு ஊர் பஸ்/சப்வே கட்டணங்களை குறைத்தும், மக்களின் ஆத்திரம் குறையவில்லை. ஃபோர்டெலெஸா என்ற ஊரில் 15 ஆயிரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசிடம் அடி வாங்கினர். கல்வி உரிமை வேண்டும், சுகாதாரப்பணிகள் மேன்படவேண்டும் என்று கோஷமிட்டனர்.
இந்தியாவுக்கு வருவோம். எத்தனையோ ஊழல்களை அமைதியாக ‘கண்டும் காணாத' மக்கள் கொதித்தெழுந்தனர், இமாலயத்தின் மடியில் வாழும் மக்கள். கங்கை நதியின் உபநதிகளான ருத்ரபிரயாக், அலக்நந்தா வரலாறு காணாத வகையில் பிரவாஹம் எடுத்தோடின. அடிப்பட்டது கிராமவாசிகள். பார்வையிட வந்த முதல்வர் விஜய் பஹுகுணாவும் அவரது கூட்டாளிகளும், பொது மக்களின் உணர்ச்சிகரமான எதிர்ப்பை தாங்கமுடியாமல் 15 நிமிடங்களில் புறங்காட்டி ஓடினர், ஹெலிகாப்டர்களில்.
கொசுறு செய்தி: ஆங்கிலேய கலோனிய அரசை கனவிலும் மக்களாட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் கட்டிவைத்த வாய்க்கால்கள் வெள்ளத்தைத் தணித்தன. ‘ரோடு போடுகிறோம், அழகூட்டுகிறோம்’ என்று சொல்லி அவற்றை அடைத்தது, மக்களால் தேர்ந்தெடுப்பட்ட ஆட்சி! ஹூம்!
இன்னம்பூரான்
20 06 2013
சித்திரத்துக்கு நன்றி: http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article1247510.ece/alternates/w460/q5.jpg


http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com





Geetha Sambasivam Thu, Jun 20, 2013 at 12:44 PM


உத்தராஞ்சலில் மலையை வெடி வைத்துத் தகர்த்தார்கள்.  மண் அரிப்பைத் தடுக்கும் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள்.  அரசாங்கம் எங்கே வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை கொடுத்திருந்ததோ அங்கே அரசாங்கத்துக்குத் தெரியாமல் வீடுகள் கட்டிக் கொண்டார்கள்.  ஒரு வகையில் ஆக்கிரமிப்பு எனலாம். மனிதன் ஏற்படுத்திய அழிவே உத்தராஞ்சலில் !  மக்கள் கொதித்தெழுந்து என்ன செய்ய? இதை எல்லாம் ஆரம்பத்திலேயே இதே மக்கள் தடுத்திருக்க வேண்டும். ஆக தவறு இருபக்கமும்.

Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 1:23 PM

நன்றி பல. இது மேலதிக செய்தி. சுந்தர்லால் பஹுகுணாவின் அமைதி புரட்சியை பற்றி எழுதியிருந்தேன் என்று ஞாபகம். உங்கள் இடுகையை கொஞ்சம் விஸ்தாரப்படுத்தினாலும், இவ்விழை மேலும் பயன் அடையும்.

இன்னம்பூரான்
Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 2:25 PM
To: mintamil@googlegroups.com
அப்டேட்:


  1. மூன்று வருடங்கள் முன்பே ஆடிட் ரிப்போர்ட்: (1) பாகீரதி/அலக்நந்தா நதிகளில் அரசு நிறுவி வரும் மின் நிலையங்களால் ( ஹைடல்) மலைகளுக்கு பேராபத்து. (2) இவற்றின் பயனாக திடீர் வெள்ளம் ஆபத்து அதிகரிக்கும்; (3) அதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். (4) வனங்களை அழிப்பது தொடருகிறது. இதுவும் மலைகளுக்கு ஆபத்து. (5) 38% அளவுக்கு, இந்த ப்ராஜெக்ட்களில் செடிகொடி நடுவது இல்லை. அந்த தவறு செய்தவர்களை அரசு தண்டிக்க வில்லை. ஆடிட் சொன்னால் கேட்கலாமோ? 
  2. இன்றைய தகவல்: உச்ச நீதிமன்றம்,பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய அரசும்,உத்தராகாண்ட் அரசும் சோறு, தண்ணி, மருந்து, எரிபொருள், மற்ற உதவிகள் எல்லாம், பாகுபாடு இன்றி, கொடுத்துதவவேண்டும் என்று, இன்று,ஆணையிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவதியில்.


ஆக மொத்தம்: அடிபடுவது மக்கள். ஏன் கொதித்தெழக்கூடாது?

இன்னம்பூரான்
20 06 2013

Prakash Sugumaran Thu, Jun 20, 2013 at 2:32 PM


வணக்கம். இப்போதைய சூழலிலும், எதிர்வரும் காலங்களிலும் மக்கள் போராட்டம் என்பதெல்லாம் கனவுதான். அதிகபட்சம் ஒரு இயக்கம் தொடங்கி கொஞ்ச காலம் முட்டி மோதி பார்க்கலாம். அரசு அலுவலகங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தொண்டை நோக கத்தி விட்டு, உண்ணாவிரதம், உண்ணும் விரதம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு.. இப்படி பலவிதங்களில் எதிர்ப்பை காட்டிவிட்டு அடங்கி விட வேண்டியதுதான். இதையெல்லாம் ஒடுக்கவென்றே பல அரசுத் துறைகள் உள்ளன. நீதிமன்றக் கதவை தட்டுவது ஓரளவு பயன் தரலாம்.. ஆனால் நீதி அரசாங்கம் போடும் சட்ட விதிகளை பொறுத்தது.
ஒரு கொள்கை சார்ந்தோ, ஒருமித்த சிந்தனை சார்ந்தோ, குறிப்பிட்ட இலக்கை நோக்கிய பார்வையிலோ மக்கள் ஒன்று கூடி விடக் கூடாது என்பதில் பாரபட்சம் இல்லாமல் எல்லா அரசாங்கங்களும் தெளிவாக உள்ளன. மக்களின் முன்னேற்றத்துக்கு என ஏற்படுத்தப்பட்டுள்ள துறைகள் செயல்படாத நிலை குறித்து எப்போதும் கவலையே கொள்ளாத அரச கட்டமைப்பு இப்படியான மக்கள் திரளை கலைக்க உருவாக்கி வைத்துள்ள பல நுண் பிரிவுகள்  மீது மிக கவனம் கொடுத்து இதே மக்களின் வரிப்பணத்தில் பெரும்பான்மையை செலவிட்டு இயக்குகின்றன.
இவற்றை எல்லாம் மீறி ஆச்சரியப்படும் வகையில் இன்னும் தொடரும் ஒரே அறப்போராட்டம் கூடங்குளம் போராட்டம் மட்டுமே. இதுவே இறுதியான பெரிய மக்கள் போராட்டமாக இருக்கும் என சொல்ல முடியும். ஏனெனில் யாருக்கு லாபமோ இல்லையோ இந்தப் போராட்டத்திலும் பாடம் கற்றுக் கொண்டு விட்டது அரசு இயந்திரங்களின் நுண் அறிவு பிரிவுகளே.
[Quoted text hidden]
--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

Geetha Sambasivam Thu, Jun 20, 2013 at 2:33 PM


ஓஹோ, நான் நினைச்சது இப்போதைய வெள்ளப் பெருக்கைப் பத்திச் சொல்றீங்கனு.  பஹுகுணாவைப் பற்றிச் சொல்றீங்கனு புரிஞ்சுக்கலை.  தப்பு என்னோடது தான். 

CAG warned of hazards 3 years ago. 

The CAG, in an environmental assessment of the Bagirathi and Alaknanda, three years ago, had warned of hazards. It said hydel projects on the rivers were damaging hills and increasing possibility of flash floods.The devastation in the 

2013/6/20 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Jun 20, 2013 at 2:34 PM


நீங்களே போட்டுட்டீங்க.  இதான் நான் சொல்ல வந்ததும்
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 2:42 PM
To: mintamil@googlegroups.com
 நன்றி, கீதா. ஒரே க்ஷணத்தில் நாமிருவரும் ஒரே செய்தியை விமரிசித்ததும் ஒரு மகிழ்வே.
நன்றி, பிரகாஷ். நீங்கள் கூறுவதின் யதார்த்தம் புரிகிறது. ஆனால், அலை வரிசைகள் வேறு. நான்
வரலாற்று நோக்கில் நீண்டகால பார்வையாக எழுதுகிறேன். அவ்வளவு தான். காந்திஜி, மார்ட்டின் லூதர் கிங்க், மாண்டேலா ஆகியோர் புரட்சிகளை நிகழ்த்திக் காண்பித்தவர்கள்.

Innamburan S.Soundararajan Fri, Jun 21, 2013 at 12:02 PM

அரசு 2: மக்கள் எழுச்சி:அப்டேட்:2
உத்தராகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த காட்டாற்று வெள்ளம் சுனாமி போன்ற பேராபத்து தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும், பூர்வோத்தரம் அறிந்து கொள்வது நல்லது. டாக்டர் கே.எல்.ராவ் என்ற பிரபல விஞ்ஞானி மத்திய அமைச்சரவையில் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். அவர் வகுத்த ‘மலர்மாலை’ நதிகள் இணைப்பு பெரிதும் பேசப்பட்டது; பின்னர் கடப்ஸில் போடப்பட்டது. இந்தியாவின் நதிகளின் நீரோட்டம், பிரவாகம், மேடுபள்ளம், வெள்ளங்களின் வரலாறு அவற்றையும், இந்த மலர்மாலை திட்டத்தையும் தழுவி மத்திய அரசு 1975ல் தயாரித்தத் திட்டத்தின் படி அமையும் சட்டத்தின் விதிப்படி, வெள்ள அபாயம் உள்ள இடங்களிலிருந்து குடியிருப்புகளை அகற்றலாம். ஆனால் குறுக்கே நின்றன, உத்தர்பிரதேச, பீகார், மேற்கு வங்காள மாநில அரசுகள். அந்த வகையில் பார்த்தால், இந்த பேராபத்தில் சிக்கிய பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருக்கும். ஆள்சேதம் குறைந்திருக்கும். கிட்டத்தட்ட 40 வருடங்களாக இந்த மசோதாவுக்கு பதில் அளிக்க ‘கின்னஸ் சாதனை’ மாநிலங்கள் தான் நமக்கு மேலாண்மை! மணிப்பூரும். ராஜஸ்தானும் மட்டுமே ‘ததாஸ்து’ கூறி, பின்னர் வாளாவிருந்து விட்டன. மசோதா மறுபரிசீலனையில். இந்த அழகில் மக்கள் மீது எப்படி பழி சாற்றலாம்?

அது போகட்டும். ஏப்ரல் 23, 2013 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆடிட் ரிப்போர்ட் வெளிப்படுத்திய உண்மை:
  1. உத்தராகாண்ட் மாநிலத்தின் ‘பேராபத்து நிவாரண மையம் 2007 ல் நியமிக்கப்பட்டது;
  2. அது இன்று வரை (ஏப்ரல் 2013) ஒரு தடவை கூட கூடவில்லை.
  3. அத்தகைய மையங்கள் தன்னுடைய கொள்கை, நடைமுறை, விதிகள் ஆகியவற்றை வரைந்தால் தானே இட்ட கடமையை செய்ய முடியும். அதைக்கூட செய்யவில்லை;
  4. பேராபத்து வந்தால் முதல் நிலை நடவடிக்கை பற்றிய திட்டம் ஒன்று கூட வரையவில்லை.
  5. பாதிக்கு மேல் பணியிடங்கள் காலி. 

இந்த களேபரத்திக்கு நடுவில் சாக்கோ என்ற ̀காங்கிரஸ் கட்சித்தலைவர் சாக்குப்போக்குகள் பல சொல்லி வினா தொடுத்தார். அவற்று பதில் அவரல்லவா சொல்லவேண்டும். அதான், நான் கொயட்டு.
இன்னம்பூரான்
21 06 2013

இன்னம்பூரான்

Geetha Sambasivam Fri, Jun 21, 2013 at 12:17 PM


ஜோஷி மட்டுக்கு வந்திருக்கும் மந்திரியை மக்கள் முற்றுகையிடுகின்றனர். அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
2013/6/21 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Innamburan S.Soundararajan Fri, Jun 21, 2013 at 12:24 PM

இந்த படங்களை பாருங்கள்.


இன்னம்பூரான்

Innamburan S.Soundararajan Fri, Jun 21, 2013 at 7:09 PM

'அரசு -2: மக்கள் எழுச்சி' என்ற முதல் இழை பிரேசில் நாட்டின் மக்கள் எழுச்சியை பற்றியது. சமகாலத்து இந்திய நிகழ்வு ஒப்புமைக்குக் கூறப்பட்டது. அதை பற்றி மட்டுமே இழைகள் தொடர்ந்தது வியப்பளிக்க வில்லை. மறுபடியும் பிரேசில் நாட்டுக்கு திரும்புகிறோம். பத்து நூறாகி, அதுவும் ஆயிரமாகி, பல்லாயிரமாக வளர்ந்து, இப்போது மிலியன் கணக்காக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தொலைக்காட்சியில் கண்டதை பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னம்பூரான்

அரசு-1 மக்கள் கருத்து:அப்டேட்


அரசு-1 மக்கள் கருத்து:அப்டேட்.அரசு-2 மக்கள் எழுச்சி: அடுத்து வரும்.
இன்னம்பூரான்
20 06 2013

Innamburan S.Soundararajan Tue, May 21, 2013 at 7:24 PM

அரசு-1
மக்கள் கருத்து
Inline image 1
இது புதிய தொடர். பல வருடங்களாக மடலாடும் குழுக்களில் எழுதி வந்ததை வலைப்பூவில் பதிக்கவில்லை. சில நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க, அவற்றை மீள்பதிவு செய்ய தொடங்கினேன். சேகரமும் ஆகிறது; வாசகர்களும் கூடினர். ஒரு பக்கம், அது தொடரும். நிகழ்காலத்துக்கும் வரவேண்டுமல்லவா. அதற்காக, புதிய தொடர்கள். சுருக்கமான தலைப்புகள். எளிய உரைநடை. ஆங்கிலம் கலக்கலாம். இவற்றை மடலாடும் குழுக்களுடனும், வல்லமை இதழுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
இரு வாரங்கள் முன்னால் ஸீ.என்.என்.ஐ.பி.என் ஒரு சர்வே நடத்தியது. தற்கால மத்திய கூட்டணி ஒன்பது வருடங்களாக அரசாளுகிறது. இனி தாக்குப் பிடிக்கமுடியாது என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதாக ஒரு தோற்றம். இந்த சர்வேயில் பெரும்பாலோர் இது துணிவிழந்த அரசு, அரசியல் திறன் குறைந்து விட்டது என்கிறார்களாம் -95% டில்லியில்; லஞ்சலாவண்யம் கடந்த ஒரு வருடத்தில் அதிகரித்து விட்டதாக 94% டில்லியில் வருந்தினார்கள். விலைவாசி எக்கச்சக்கமாகவே உயர்ந்து விட்டது என்ற கவலை வேறு. சென்னையிலும் இதே மாதிரி தான் கணிப்பு. மும்பையில் சரி பாதி இந்த அரசுக்கு ஆதரவு. சரி பாதி அதை போற்றவில்லை. பெங்களுரில் ஆதரவு கொஞ்சம் கூட. அங்கே தான் பிஜேபியின் வண்டவாளம் வெளுத்து விட்டதே. இந்தியாவின் செல்வ நிலை (பொருளாதாரம் என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை.) மங்கி விட்டதாக ஒரு கருத்துப் பரவலாக இருந்தாலும் சண்டிகரிலும், போபாலில் இதற்கு மாறான கருத்து. மிகவும் கவலை தரும் விஷயம்: 80 வயதான பிரதமர் மன் மோஹன் சிங் அவர்கள் கண்ணியத்துக்குப் புகழ் பெற்றவர். பிரமாதமான பட்ஜெட் அளித்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னால் உலகை அசத்தியவர். பொருளியல் நிபுணர். சமீபத்து உழல்களின் பின்னணி பயங்கரமானது. அவற்றில் சில தேசத்துரோகம் செய்தவை. கறுப்புப்பணம் ஈட்டியவை. வெளிநாட்டு மர்மக்கணக்குகளில் நம் செல்வத்தை முடக்கியவை. அவற்றை கட்டுப்படுத்தவில்லை என்று மக்கள் அவரை குறை சொல்வது அதிகரித்து விட்டது. என் செய்வது? நான் அவரை மதிப்பவன். ஆனால், நமக்கு எத்தனை நெருடல்!
இன்னம்பூரான்
21 05 2013






Tthamizth Tthenee Wed, May 22, 2013 at 9:43 AM

பதவிக்கு வரப் பயப்படவேண்டும்.

1. உருப்படியாக எதையும் செய்ய இயலாதென்றால் மக்கள் பாதிக்கப் படுவார்கள்  என்று உணர்ந்த நேர்மையான மனிதராயிருந்தால் பதவிக்கு வரப் பயப்படுவார்
2.அப்படியே பதவிக்கு வந்துவிட்டாலும்   அதற்குப் பிறகும் எதுவும் செய்ய இயலாதென்று உணர்ந்து விட்டால்  பதவியைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியேறுவார்   அவர் உண்மையான மக்கள் தொண்டனாய் இருந்தால்,
3.தேசாபிமானியாய்  இருந்தால்,  அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி  அக்ரமங்களை  கண்டும் காணாமலும்   இருக்க மாட்டார்.
4.முகத்துக்கு நேரே  நீங்கள் சரியாக செயல்படவில்லை  என்று  கைநீட்டி குற்றம் சாட்டிய பிறகாவது  விலகி இருப்பார்  நேர்மையான மனிதராய் இருந்தால்
5.அல்லது உண்மையாகவே  நேர்மையான தேசாபிமான உணர்வு கொண்டவர் என்றால்  தவறு நடக்கும் இடத்தில்  தைரியமாக தட்டிக் கேட்பார்  தன் பதவி பறிபோனாலும் பரவாயில்லை, நாடுதான் முக்கியம், நாட்டு மக்கள்தான் முக்கியம் என்று .
இப்படிப்பட்ட எந்த நல்ல குணமும் இல்லாதவர் முதன்மை ஸ்தானத்தில் இருந்து கொண்டு தவறுகளுக்கு துணை செல்பவராக இருந்தால்  அவரைக் குற்றம் சாட்டுவதில்  தவறே இல்லை


பொருளாதார மேதை  என்றால் அவர் பதவிக்கு வந்த பின் நாடு பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிறதா? இல்லையென்றால் பொருளாதார மேதை என்னும் சொல்லுக்கு  பொருள் என்ன?
அன்புடன்
தமிழ்த்தேனீ

*




இன்னம்பூரான்






நேரம் செலவழித்து அருமையான பட்டியல் போட்டதற்கு நன்றி.
பதவிக்கு வரப் பயப்படவேண்டும்.

1. உருப்படியாக எதையும் செய்ய இயலாதென்றால் மக்கள் பாதிக்கப் படுவார்கள்  என்று உணர்ந்த நேர்மையான மனிதராயிருந்தால் பதவிக்கு வரப் பயப்படுவார்.
~ அச்சமில்லை. தயங்குவர். இரா.செழியன் அவர்கள் பதவி நாடியதில்லை.

2.அப்படியே பதவிக்கு வந்துவிட்டாலும்   அதற்குப் பிறகும் எதுவும் செய்ய இயலாதென்று உணர்ந்து விட்டால்  பதவியைத் தூக்கிப் போட்டுவிட்டு வெளியேறுவார்   அவர் உண்மையான மக்கள் தொண்டனாய் இருந்தால், 
~ மாஜி  ஜனாதிபதி ஜனாப் அப்துல் கலாம் கூட அவ்வாறு உணர்ந்த போது, பதவியை தூக்கிப்போட்டு வெளியேறவில்லை.

3.தேசாபிமானியாய்  இருந்தால்,  அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி  அக்ரமங்களை  கண்டும் காணாமலும்   இருக்க மாட்டார்.
~? 

4.முகத்துக்கு நேரே  நீங்கள் சரியாக செயல்படவில்லை  என்று  கைநீட்டி குற்றம் சாட்டிய பிறகாவது  விலகி இருப்பார்  நேர்மையான மனிதராய் இருந்தால்
~ நேர்மையானவர்களுக்கு அந்த குறிப்பு தேவையில்லை. 

5.அல்லது உண்மையாகவே  நேர்மையான தேசாபிமான உணர்வு கொண்டவர் என்றால்  தவறு நடக்கும் இடத்தில்  தைரியமாக தட்டிக் கேட்பார்  தன் பதவி பறிபோனாலும் பரவாயில்லை, நாடுதான் முக்கியம், நாட்டு மக்கள்தான் முக்கியம் என்று .
~ சான்றாக, ராஜாஜி, காமராஜர், நேதாஜி. 

இப்படிப்பட்ட எந்த நல்ல குணமும் இல்லாதவர் முதன்மை ஸ்தானத்தில் இருந்து கொண்டு தவறுகளுக்கு துணை செல்பவராக இருந்தால்  அவரைக் குற்றம் சாட்டுவதில்  தவறே இல்லை
~அது மட்டும் போதாது. 


பொருளாதார மேதை  என்றால் அவர் பதவிக்கு வந்த பின் நாடு பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிறதா? இல்லையென்றால் பொருளாதார மேதை என்னும் சொல்லுக்கு  பொருள் என்ன?

~ யார், யாரை அவ்வாறு கூறினார்கள்? 

Tuesday, May 21, 2013

அரசு-1 மக்கள் கருத்து




அரசு-1 மக்கள் கருத்து

Innamburan S.Soundararajan Tue, May 21, 2013 at 7:24 PM

அரசு-1
மக்கள் கருத்து
Inline image 1
இது புதிய தொடர். பல வருடங்களாக மடலாடும் குழுக்களில் எழுதி வந்ததை வலைப்பூவில் பதிக்கவில்லை. சில நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க, அவற்றை மீள்பதிவு செய்ய தொடங்கினேன். சேகரமும் ஆகிறது; வாசகர்களும் கூடினர். ஒரு பக்கம், அது தொடரும். நிகழ்காலத்துக்கும் வரவேண்டுமல்லவா. அதற்காக, புதிய தொடர்கள். சுருக்கமான தலைப்புகள். எளிய உரைநடை. ஆங்கிலம் கலக்கலாம். இவற்றை மடலாடும் குழுக்களுடனும், வல்லமை இதழுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
இரு வாரங்கள் முன்னால் ஸீ.என்.என்.ஐ.பி.என் ஒரு சர்வே நடத்தியது. தற்கால மத்திய கூட்டணி ஒன்பது வருடங்களாக அரசாளுகிறது. இனி தாக்குப் பிடிக்கமுடியாது என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதாக ஒரு தோற்றம். இந்த சர்வேயில் பெரும்பாலோர் இது துணிவிழந்த அரசு, அரசியல் திறன் குறைந்து விட்டது என்கிறார்களாம் -95% டில்லியில்; லஞ்சலாவண்யம் கடந்த ஒரு வருடத்தில் அதிகரித்து விட்டதாக 94% டில்லியில் வருந்தினார்கள். விலைவாசி எக்கச்சக்கமாகவே உயர்ந்து விட்டது என்ற கவலை வேறு. சென்னையிலும் இதே மாதிரி தான் கணிப்பு. மும்பையில் சரி பாதி இந்த அரசுக்கு ஆதரவு. சரி பாதி அதை போற்றவில்லை. பெங்களுரில் ஆதரவு கொஞ்சம் கூட. அங்கே தான் பிஜேபியின் வண்டவாளம் வெளுத்து விட்டதே. இந்தியாவின் செல்வ நிலை (பொருளாதாரம் என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை.) மங்கி விட்டதாக ஒரு கருத்துப் பரவலாக இருந்தாலும் சண்டிகரிலும், போபாலில் இதற்கு மாறான கருத்து. மிகவும் கவலை தரும் விஷயம்: 80 வயதான பிரதமர் மன் மோஹன் சிங் அவர்கள் கண்ணியத்துக்குப் புகழ் பெற்றவர். பிரமாதமான பட்ஜெட் அளித்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னால் உலகை அசத்தியவர். பொருளியல் நிபுணர். சமீபத்து உழல்களின் பின்னணி பயங்கரமானது. அவற்றில் சில தேசத்துரோகம் செய்தவை. கறுப்புப்பணம் ஈட்டியவை. வெளிநாட்டு மர்மக்கணக்குகளில் நம் செல்வத்தை முடக்கியவை. அவற்றை கட்டுப்படுத்தவில்லை என்று மக்கள் அவரை குறை சொல்வது அதிகரித்து விட்டது. என் செய்வது? நான் அவரை மதிப்பவன். ஆனால், நமக்கு எத்தனை நெருடல்!
இன்னம்பூரான்
21 05 2013