Showing posts with label Rajaji. Show all posts
Showing posts with label Rajaji. Show all posts

Wednesday, June 5, 2013

2011/2013 ல் ராஜாஜி -2 :பொருளியல்


2011/2013 ல் ராஜாஜி -2


Innamburan Innamburan Sun, Apr 17, 2011 at 6:13 AM



 ராஜாஜி ஒரு அற்புதமான மனிதர். அறிவு, ஆற்றல், இனிமை, உவகை, ஊக்கம், எளிமை, ஏற்றம், ஒட்டணி ஆகிய அணிகளுடன், ஓஹோ என்பதையெல்லாம் தவிர்த்தத தீர்க்கதரிசியும் அடுத்தாத்து மாமாவும் அவரே. சில சமயம் அவர் இன்று 2013ல் எழுதிய மாதிரி தோற்றம். சரியான பெரிஸ்கோப் அவர்.
எனவே, கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து, அவரது கட்டுரைகளை தவணை முறையில் வெளியிடுகிறேன். . முதல் கட்டுரையை பதித்து பல நாட்கள் ஆயின. இன்று, நமது பொருளியல் நிலைமை அடி மட்டத்தில்வந்த கருத்துக்களை அடுத்த கட்டுரையில் தொகுத்து அளிக்கிறேன்
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVuOXVt3ThngxmVp_jeJQZJJCBKGsejwFWpkUuNmAczz0RuPj8Rtu1Vpr5JojKoTTBgpvHyy1t2LnEGlNai9tlVupEPF8D3en9mZ-nAxQXkAcmkmPeuB3BoFs17sfh0at3ntxRc5UMWnQ/s640/achchaariyar.jpg
இன்னம்பூரான்
05 06 2013

முன்குறிப்பு:
நண்பர்களே,

நாடு விடுதலை அடைந்த பத்தாவது வருடம், ஒரு ரூபாய் விலையில் ஒரு நூல் பிரசுரம் ஆயிற்று - ராஜாஜியின் ஒன்பது கட்டுரைகள். இது இரண்டாவது கட்டுரை.
நமது பொருளியல் நிலைமை

‘அரசியலின் உள்ளுறைவது, தேர்தலில் எப்படியாவது வெற்றியடைவது என்று தான் அவர்கள் நம்பினார்கள். வரலாற்றில் மறைபொருள் உண்டு. அவர்கள் தேர்தலில் தோற்றல்லவோ போனார்கள்.’

இந்த மேற்கோள் யாரோ வேறு ஒரு நாட்டை/மக்களைப்பற்றி கூறியது. ஆனால் இது நமது அறிவுஜீவிகளுக்கு பொருத்தமான எச்சரிக்கை. காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பொருந்தும். நமது அரசியல்/சமூக வாழ்வியலில் தார்மீகத்துக்கு (எதிக்ஸ்) நாம் இடம் கொடுக்காவிடின், மக்கள் நம்மை விரும்பமாட்டார்கள். அவர்கள் பாமர மக்கள் தாம்; ஆனால், நன்மக்களின் ஆழ்ந்த கவனம், அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் தரம் பார்க்க உதவுகிறது. ஜோடித்ததெல்லாம் அவர்கள் நம்பமாட்டார்கள். அமைச்சர்களின் ஊதியத்தையும், படி வரும்படிகளையும் 5/10/15 விழுக்காடு குறைத்தால் கூட, அவர்களை வசப்படுத்த முடியாது. அந்த வித்தையெல்லாம் வரிப்பளுவை குறைக்கப்போவதில்லை; விலைவாசி ஏற்றத்தைத் தடுக்கப்போவதில்லை. அதன் தாக்கத்தை குறைக்கப்போவதில்லை.  சுமப்பவர்க்கு உரிய சுமைக்கூலியை குறைப்பதில் பயன் என்ன? ஆளுமையில் இருப்பவர்களின் சம்பளத்தை அதிரடியாக குறைப்பது மதியீனம். அப்படி செய்தால், ஒரு ராபெர்ட் க்ளைவ் வந்து லஞ்சத்தையும், அடக்குமுறையும் விலக்கவேண்டி வரும். ஆளுமை அருளும் வேட்கைகளை தவிர்க்குமளவுக்கு சம்பளங்கள் இருக்கவேண்டும். இந்த இடத்தில் சிக்கனம், நம் பொருளுக்கு ஆதாரமும் இல்லை; யாரையும் ஏமாற்றமுடியாது. அதிகாரத்தில் இருப்பவர்களை முரட்டுத்தனமாக ஏழ்மைப்படுத்துவதில் மக்களுக்கு ஈடுபாடு கிடையாது. அது எல்லாம் அந்த அந்த வகையினர்களில், அடிபட்டவர்களின் ஆசையாக இருக்கலாம்.  அரசியல் எதிரிகளுக்கு இது எல்லாம் ஆயுதமாக இருக்கலாம். ஆனால், அது மக்கள் விழைவு அன்று. மக்கள் கேட்பதெல்லாம், சுளுவான வரியும், சுமையாக இல்லாத விலைவாசியும்.

உலகெங்கும் பணவீக்கம் இருக்கிறது; ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவிலோ, ஏழைகளுக்கு கூட சோம்பேறி/ வேலையற்ற உற்றார்/உறவினர்களை ஆதரிக்க வேண்டிய நிலைமை. விலைவாசி ஏற்றம் தாங்கவே முடியவில்லை. (அவர் சொன்னது 1956/57ல்) பணவீக்கத்தினால், அத்யாவசிய பொருள்களின் விலை அதிகப்படி; எல்லா தரத்திலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு; மத்திய வகுப்பு மக்கள் மூப்புகாலத்துக்கு சேமித்த பணத்தின் மதிப்புக்குறைவு. இது கொள்ளையில்லாமல், வேறு என்ன? முதலுக்கே மோசம். கொடுத்த கடன்/ டிபாசிட்/ சேமிப்பு/ காப்பீடு, எதுவானாலும், முதலும், வட்டியும் சேர்ந்து , அசலில் பாதி கூட தேறாது என்ற நிலை, இப்போது. மக்கள் நலம் எதில் இருக்கிறது? பொதுஜனத்தின் அன்றாட வாழ்க்கை செவ்வனே அமைவதில் தான் இருக்கிறது. இந்த முன்னேற்றம் ஏற்படும் வரை, நாட்டில் சமாதானமும், மகிழ்வும் நிகழாது. ஐயா! அது இரண்டும் தானே, மக்கள் நலத்தின் சின்னங்கள்.

வரி உயர, உயர, நாம் ஒடுக்கப்படுகிறோம். இருக்கிற துணியை வைத்து அல்லவோ சொக்காய் தைக்கவேண்டியிருக்கிறது. நாம் நினைவில் வைத்திருக்கவேண்டியது என்னவெனில், இந்த துணி ஜடம் இல்லை; மயங்கியது இல்லை; அதற்கு ஆத்மா உண்டு. இத்தருணம், இத்துடன் தொடர்புடைய ஒரு கருத்து: ஓஹோ என்று செலவழித்து, போர்க்களம் செல்லும் ஆயத்தங்களால், ஆவது ஒன்றுமில்லை. ஒன்று: நமது செல்வமும், உற்பத்தித்திறனும் அழியும். இரண்டு: எதிர்காலத்தை வல்லரசுகளுக்கு அடகு வைத்து விடுகிறோம். ராணுவத்துறையின் கிடு கிடு முன்னேற்றம், இந்த வருட உழைப்பை, அடுத்த வருடம் உருப்படியில்லாமல் செய்து விடுகிறது. நமக்கு, சாந்தியின்/தார்மீகத்தின் துணிவால், ராணுவச்செலவை குறைத்து, அன்றாட வாழ்க்கைக்கு மக்களுக்கு  நலன் செய்வதால் கிடைக்கும் பாதுகாப்பின் நலன் அண்டட்டும். நான் சொல்வது இவ்வளவு தான். ஒரு பத்து/பன்னிரெண்டு வருடங்கள் இப்படி ஆட்சி செய்து, அப்போது இருக்கும் நிலையை ஆராய்ந்து, தக்கதொரு கோட்பாட்டை அமைத்துக் கொள்ளலாமே.

பொதுமக்களின் பணத்தை செலவு செய்பவர்கள், எல்லா படிநிலைகளிலும், யோக்கியர்களாக இருக்கவேண்டும். தற்காலமோ, அந்த கண்ணியம் லவலேசம் கூட இல்லை என்பது வருந்தத்தக்க நிலைமை. கிட்டத்தட்ட, அட்டூழியங்கள் நடக்கும் அளவுக்கு கெட்டுவிட்டது, அந்த இழிநிலை. தேசாபிமானத்திற்கு, அது சாவுமணி என்க. அரசு பணி புரிவோர்க்கு போதுமான அளவு சம்பளம் கொடுக்கவேண்டும். அவர்களும் பொறுப்பில்லாமல் இருப்பதையும், அயோக்கியர்களாக இருப்பதையும், வெட்கம் கொண்டு தவிர்க்கவேண்டும். அயோக்கியன் என்ற க்யாதி வெட்கம் அளிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. மற்றோர் கண்டுபிடிக்கும் முன், கண்ணியமின்மை என்ற நிலை தனக்கு மட்டும் தெரியும் போதே, வெட்கம் தலை தூக்கவேண்டும். 

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, நிஜமான பணிகள் தொடங்கவேண்டுமே தவிர, வீண்செயலாக, பணியாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவது கூடாது. இப்போது சோம்பல், நிர்வாஹத்துறைகளில் ஒண்டுகுடித்தனம் செய்கிறது. ஒருவர் வேலை செய்தால், இருவர் ஓய்வில்! இது வேலையில்லா திண்டாட்டத்தை விட மோசம். சுவர்கடியாரத்தை பார்த்துக்கொண்டு சோம்பல் முறிக்கும் நபர்களுக்கு செலவு செய்வதை விட, சோம்பேறி/ வேலையற்ற உற்றார்/உறவினர்களை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு கொஞ்சம் கூட ஊதியம் வழங்குவது சாலத்தகும். 

பெரிய திட்டங்கள்/ பொதுப்பணி போன்றவையை செயல் படுத்துவதில் வீண்செலவை கண்கூடாகப் பார்க்கிறோம். இந்திய ஊழியர்களின் சிக்கனமும், கவனமும் இன்று திமிர் பிடித்த வீண்செலவினமாகவும், குற்றம் காணும் அளவுக்கு பொறுப்பின்மையாகவும் மாறி விட்டது மட்டுமல்ல; அது வாடிக்கையாகப் போய்விட்டது. நாம் கேட்பதெல்லாம், சிக்கனம், நாணயம், மனசாட்சிக்குகந்த பணி. அவ்வளவு தான். மத்திய அரசு நிர்வாஹம், மாநில அரசு நிர்வாஹத்திற்கு முன்னோடி. அரசின் இலாக்காக்கள், தனியார் தொழில் நிர்வாஹத்திற்கு முன்னோடி. வருங்காலத்தில், நாட்டின் செல்வபெருக்கு, அதற்கான திட்டங்கள் எல்லாவற்றிற்கும் மூலதனம், சிக்கனத்திலும், நிர்வாகத்திறனை கூட்டுவதிலும் இருக்கிறது. இல்லையெனில், நமது சாதனைகளின் விலை, சாதனைகளை விட அதிகமாகி விடும். அதன் விளைவு: வரிப்பளுவும், பணவீக்கமும்.

முக்யமான வழிமுறைகளை சொல்லிவிட்டேன். அமெரிக்காவின் உதவியுடன் ராணுவ தளவாடங்கள் வாங்கும் பாகிஸ்தானோடு போட்டாப்போட்டி போடும் கொள்கையை புறக்கணித்து, துணிவுடன் மக்கள் சக்தியை பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவ செலவுகள் அளிக்கும் பாதுகாப்பை விட, மக்கள் தொண்டு, அவர்களின் நல்வாழ்வு, நிறைவுடன் வாழும் மக்கள் சக்தி ஆகியவை வலிமை வாய்ந்தது.
-X-
பி.கு: 
அடுத்த கட்டுரை: ‘நல்லாட்சிக்கு ஒரு பக்குவம்’. ராஜாஜி அவர்கள் வீணடிப்பதை கண்டித்திருக்கிறார், இந்த கட்டுரையில். வீணடிப்பது ஒரு ஊழல். அரசு சொத்துக்களை விரயம் செய்வதில், முறைகேடான ஆதாயம் தேட முடியும். அது பற்றி அறிய ஆர்வமுடையவர்கள், இத்துடன் இணைத்திருக்கும், ‘வீணடிப்பதை கட்டுப்படுத்துவது’ என்ற ஆங்கில கட்டுரையை (ஹிந்து இதழில் 2004ல் வெளி வந்தது.) காணலாம்.
இன்னம்பூரான்
17 04 2011



Containing Waste.rtf
8K

Geetha Sambasivam Sun, Apr 17, 2011 at 11:05 AM

மற்றோர் கண்டுபிடிக்கும் முன், கண்ணியமின்மை என்ற நிலை தனக்கு மட்டும் தெரியும் போதே, வெட்கம் தலை தூக்கவேண்டும். //

இந்த நிலையை இன்று காண்பதே அரிதாக உள்ளதே ஐயா,  ஊழல் செய்துவிட்டுச் சிறைக்குச் செல்கிறவர்களும், கொலை செய்துவிட்டுச் சிறை செல்கிறவர்களும், ஏதோ பெரிய தியாகங்கள் புரிந்துவிட்டுச் செல்வதைப் போல் அல்லவா மக்கள் முன்னால் கைகாட்டி அமைதிப் படுத்திவிட்டுச் செல்கின்றனர்!  வெட்கமா?? அப்படின்னா என்ன???? இதுஅவர்கள் கேட்கும் கேள்வி.


Tuesday, April 23, 2013

2011/13ல் ராஜாஜி: 1

2011/13ல் ராஜாஜி: 1





Innamburan S.Soundararajan Tue, Apr 23, 2013 at 9:23 PM

2011ல் ராஜாஜி: 1

Inline image 1
Innamburan Innamburan <innamburan@gmail.com>
4/7/11

நண்பர்களே,

நாடு விடுதலை அடைந்த பத்தாவது வருடம், ஒரு ரூபாய் விலையில் ஒரு நூல் பிரசுரம் ஆயிற்று - ராஜாஜியின் ஒன்பது கட்டுரைகள். முன்னுரையில் அந்த தீர்க்கதரிசி இரு விஷயங்களை தெளிவுற கூறுகிறார் - 1. அவரது கருத்துக்களை, மக்களை மேய்ப்பர்கள் ஏற்காமல் இருக்கக்கூடும்; 2. இந்த கருத்துக்கள் சிந்தித்து, சிந்தித்து எழுதப்பட்டவை; அவசரம் அவசரமாக தன்னிச்சையாக எழுதப்பட்டவை அல்ல. ஆங்கிலத்திலிருந்து, அவற்றை தமிழில் மொழியாக்கம் செய்ய விருப்பம். சுருக்குவது கடினம். அவரே சுருக்கமாக எழுதுபவர். என் ஆர்வத்திற்கு இரு காரணங்கள். எனக்கு அவருடன் பரிச்சயம் இருந்தது. ஐம்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு அவரின் சொல் ஒவ்வொன்றும் கணீரென்று கணீரென்று ஆலயமணி அடிப்பது போலும், கீற்று மின்னல் 'டால்' அடிப்பது போலும், இன்றைய இந்திய சூழ்நிலைக்கு கனபொருத்தமாக இருப்பது. இந்த இழை என்னிடம், மணிக்கணக்காக வேலை வாங்கும். வரவேற்பு இல்லையெனில், நிறுத்தி விடுவது உசிதம். 


கட்டுரை 1: நமது ஜனநாயகம்
நாடாளுமன்ற பிரதிநித்துவம் என்ற மக்களாட்சி முறை செயல்பாடுகளில் வெற்றி பெற, இரு விஷயங்களில் தெளிவு வேண்டும். 1. பற்பல நிலைகளில் வசித்து வரும் மக்களிடையே, அரசின் குறிக்கோள்கள் எது, எதுவாக இருக்கவேண்டும் என்பதில் பெருமளவில் ஏகோபித்த அபிப்ராயம் இருக்கவேண்டும். 2. சீரிய தலைவர்கள், இடைவிடாமல், தரமான பாதையில் வழி நடத்தியும், மெஜாரிட்டி வாக்காளர்கள் விரும்பினால், நல்லாட்சி அளிக்கக்கூடிய, இரு கட்சிகள் களத்தில் இருக்கவேண்டும். அரசியல் கருத்துக்கள், ஒன்றுக்கொன்று சளைக்காத இரு கட்சிகள் இல்லையெனில், நீர்த்து விடும்.   அத்தருணம், நாடாளுமன்ற பிரதிநித்துவம் பெயரளவில் தான் இருக்கும். உண்மையான ஜனநாயகம் அங்கில்லை. ஒரு கட்சி அரசாளும் போது, மாற்றுக்கருத்துடையோர் தனியார்களாகவோ அல்லது சின்ன சின்ன குழுக்களாகவோ இருப்பின், அரசு நிச்சியமாக, சர்வாதிகாரம் செய்யத்தொடங்கும்...
(தொடரும்)
இன்னம்பூரான்
07 04 2011
Tirumurti Vasudevan 
4/8/11


முதலமைச்சரா இருந்தப்ப இரவு அரசு வேலைக்கு ஒரு மெழுகுவர்த்தியும், தன் சொந்த கடிதங்கள் எழுத தன் சொந்த மெழுகுவர்த்தியும் பயன்படுத்தியவர் பத்தி கேட்க கசக்குமா?
எழுதுங்க. விடாம படிப்பேன். பின்னூட்டம் இட அவகாசம் இல்லைன்னாலும்......
Innamburan Innamburan <innamburan@gmail.com>
4/8/11





பாகம் -2
அரசு நிச்சியமாக, சர்வாதிகாரம் செய்யத்தொடங்கும்...மக்களாட்சிெனில், வலிமையான எதிர்க்கட்சி தேவை. எல்லாருக்கும் ஓட்டு என்றால், எதிர்ப்பே இல்லாத மெஜாரிட்டி கட்சி ஆட்சி புரிவது, முழுச்சுமையையும் ஒரே கழுதையின் முதுகில் ஏற்றுவது போல. இரு கட்சி வரைமுறையில், சுமையை சமமாக பகிர்ந்து கொள்வதால், அரசாட்சி நிலை பெறும். நமக்கு இரண்டு கண்களும், இரண்டு காதுகளும் இருப்பதால், பார்த்ததையும், கேட்டதையும், உரிய இடத்தில் அமர்த்த முடிகிறது. ஒரே கட்சியை ஆளுமையில் வைத்தால், அத்தருணம், மக்களாட்சி தராதரத்தை இழந்து விடுகிறது. பார்க்க முடிந்தும், காண முடியாது; ஏற்றதாழ்வுகளை எடை போடமுடியாது; எழும் வினாக்களின் எல்லா பரிமாணங்களையும் காண இயலாது. 

காங்கிரஸ் கட்சியின் தாக்கம், வரலாற்றின் வெளிப்பாடே தவிர, தேர்தலில் பெற்ற வெற்றி அன்று. தேர்தலில் கெலிப்பதெல்லாம், இந்த தாக்கத்தின் விளைவு; காரணமல்ல. இவ்வாறு வரலாற்றின் பயனாக பெற்ற தலைமையை நியாயப்படுத்த, அந்த கட்சி இடது சாரியாக திரும்பியிருக்கிறது. இடது சாரியும் வரலாறும் சங்கமம் ஆகிவிட்டதால், வலதுசாரி ஆர்வம் அடக்கி வாசிக்கிறது, அலக்கழிக்கப்படுகிறது. ஆகமொத்தம், காங்கிரஸ் கட்சி சாஸ்வதமாக ஆளுமை வகிக்கிறது.

இந்த அசைக்கமுடியாத நிலையில், நாடாளுமன்ற பிரதிநித்துவம் (என் விளக்கம்: Westminister Model: his words: ‘parliamentary democracy’.) இல்லை. இந்த சூழ்நிலையில், முக்கியத்துவம் கட்சிக்கு; நாடாளு மன்றத்துக்கு அல்ல. கட்சிக்குள் அபிப்ராய பேதங்கள் எழலாம்; காணப்படலாம். கட்சியின் கட்டுப்பாடும், ஆளுமையும் இந்த ‘சுய பரிசோதனையை’ ஒடுக்காமல் இருந்தால், இருகட்சி பேதம், (ஆளும்) கட்சியிலேயே வளரலாம். கட்சி தலைவர், கட்சியின் மெஜாரிட்டி கருத்துக்கிணங்க, தீர்மானங்களை கொணரலாம். அவ்வாறு நிகழ்வது, ஓரளவு சர்வாதிகாரத்தை குறைக்கலாம்; தலைவர் மிக்க ஆளுமைத்திறனும், அத்தகைய அணுகுமுறையும் உடையவர் எனின், அதுவும் சாத்தியமில்லை. கதவை சாத்திவிட்டு, வீட்டுக்குள் கூட, மாற்றுக்கருத்துக்களை அனுமதிக்காமல், ஆளும் கட்சி இயங்கும். எந்தவித தடையும்,தடங்கலும் இல்லாமல், சர்வாதிகாரம்/யதேச்சதிகாரம் கோலோச்சும்...
(தொடரும்)
இன்னம்பூரான்
08 04 2011

sharadha subramanian 
4/8/11

நன்றி இன்னாம்பூர் சார் உங்கள் தமிழ்வாச்ல் அமர்களமாக்த் திறந்து உள்ளது உள்ளே
இன்னும் நிறய விஷயங்களை ப்டிக்க் ஆவலாக உள்ளது



coral shree 
4/8/11


ஐயா, நல்ல செய்திகள். இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம் ஐயா. நன்றி.
Geetha Sambasivam 
4/8/11

to mintamil
 
புதிய செய்தி ஒன்றையும் காணோமே?? அதே செய்திதான் திரும்ப வந்திருக்கு??? குழப்பம்?? எனக்கு வரலையோ???

2011/4/8 coral shree <coraled@gmail.com>
ஐயா, நல்ல செய்திகள். இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம் ஐயா. நன்றி.

Geetha Sambasivam 
4/8/11

அட, இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன்??  நன்றி பவளசங்கரி, நீங்க சொன்னதும் தான் மறுபடியும் பார்த்தேன்.


Innamburan Innamburan <innamburan@gmail.com>
4/8/11


Dear Mrs. Geetha Sambasivam,
As it takes a lot of time to translate his precious writing, I do small bits daily and reproduce earlier input also, so that continuity is available for readers.

Geetha Sambasivam 
4/8/11


Thank You Sir, I did not notice it.  Really it is a great job. hats off to you.
annamalai sugumaran 
4/8/11

என்னிடம் 1960    களில் இருந்து கலகி இதழில் ராஜாஜி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இருக்கும் என நினைக்கிறேன் .
அதில் அவர் எழுதிய சோக்க்ரதர் போன்ற பல கட்டுரை தொகுப்புகள் உள்ளன .
என்னிடம் இப்போது கூட சுமார்  5000 அந்தநாளைய புத்தகங்கள் எனது எளிய இல்லத்தில் இடமின்றிதவிக்கின்றன .
இதுவரை நான் சேர்த்த பெரிய நூலகங்கள் மூன்று முறை களைந்து போயின .
முதல் முறை நான் 1979   வெளிநாட்டில் வேல்லைக்கு சென்றபோது கவனிப்பாரின்றி களைந்து போனது .
அடுத்து மீண்டும் சேர்த்த குவியல் எனக்கு மிகவும் உடல் நிலை சரியில்லாமல் போனபோது .கவனிப்பாரின்றி போனது .
இப்போது புதுவையில் இருப்பது பழயன கழிந்து புதியன புகுந்தது .
அவையே இப்போது படிடிக்க நேரமில்லாமல் குவிந்து விட்டன .

இங்கிருக்கும் பல பழைய புத்தக கடைகளுக்கு நான் தான் புரவலர் .

செல்வம் உபரியாக இல்லை என்றாலும் புத்தகம் குவிந்துவருவது தொடர்கிறது எனது மனைவியின் முனுமுனுப்புக்கிடையே கூட .
என மனைவிக்கு தெரியாமல் எனது வீட்டுக்குள் புத்தகங்களை நான் கொணர்வது ஒரு தனி கலை .

யாராவது என்னை சந்தித்தால் பழைய கல்கி தொடர்களைத் தர தயாராக இருக்கிறேன் .

அன்புடன் 
சுகுமாரன் 

s.bala subramani B+ve 
4/8/11


செல்வம் உபரியாக இல்லை என்றாலும் புத்தகம் குவிந்துவருவது தொடர்கிறது எனது மனைவியின் முனுமுனுப்புக்கிடையே கூட .
என மனைவிக்கு தெரியாமல் எனது வீட்டுக்குள் புத்தகங்களை நான் கொணர்வது ஒரு தனி கலை .


 என்  வீட்டிலும் நடக்கும் கதை இது தான் 
Geetha Sambasivam 
4/9/11


விண்ணப்பம் போட்டு வைக்கிறேன்.  ஆனால் நீங்க சொல்றாப்போல் என் கணவருக்குத் தெரியாமல் கொண்டு சேர்க்கணும். வேறே வழியே இல்லாமல் அவரே தூக்கி வருவதும் உண்டு.

2011/4/8 annamalai sugumaran <amirthamintl@gmail.com>
_________________________
Innamburan
23 04 2013

Thursday, April 4, 2013

நூறு வருஷங்களுக்கு முன்னால் - 2



Tuesday, July 14, 2009
நூறு வருஷங்களுக்கு முன்னால் - 2



கமலம் சொல்றா, உணர்ச்சிவசப்படாதங்கோன்னு. சரியாத்தான் பட்றது. ஆனா, ஒரு சின்ன விஷயம்னாக்கூட உள்வாங்க்கிம்ம, ரசிக்கமுடியுமா? ரசிக்கத்றுன்னா, ‘பேல! பேல! ேபஷ்!’ ன்னு தோடி ஆலாபைனையயோ, குழந்ைத அழகா அைரமண்டிபோட்டு நாட்டியமாடறைதயோ சிலாகிக்கறது மட்டுமில்ைல, ஸ்வாமி. அதிெல ரொம்ப நுட்பம் இருக்குங்காணும்! நவரஸமும் அனுபவிக்க கத்துண்டாத் தான், அதுெல ஒரு பூர்ணம், ஒரு முழுைமயா இருக்குமாம். தினோம் மூணாம் பிைற பாத்திண்ட்ருக்கமுடியுமோ? ெபளர்ணமியும். அமாவைசயும் வந்து வந்து போகலயா? ஏன்! இப்பல்லாம் மத்ராஸ்ேல ஸூர்யன் எப்போ அஸ்தமனம் ஆவான்னு காத்திண்டிருக்குேம. அப்படி பொசுக்கறது. இைத விடுங்கோ. நவரஸங்களுக்குள்ேள ஆயிரம் ரசைன இருக்குங்கறார், அது தான் ெவள்ைளக்காரான் சொல்றர ஏஸ்ெதடிக்ஸ் (aesthetics) டி.ேக.சி. சிதம்பரநாத முதலியார். ராஜாஜீக்கு ரொம்ப அன்யோன்யமாம், அவர்.
விஷயத்துக்கு வருவோம். அந்தக்காலத்திெல, ைமலாப்பூர் எப்படி இருக்கும்னு நிைனக்கிேறள். இப்போ குளத்ைத சுத்தி இப்படி ெநரிசலா இருக்ேக, அப்பல்லாம் வீெடல்லாம் கப்பல் மாதிரி ெபரிசு. கோச் வண்டி, குதிைர, பசுமாடு இெதல்லாம் எல்லாெரத்துேலயும். இவ்வாள்ளாம், ஐயங்காரோ, ஐயரோ பிரபலமான வக்கீலா இருப்பா. ஹால் கல்யாண மண்டபம் மாதிரி இருக்கும். ‘ேஜ ேஜன்னு கட்சிக்காராக் கூட்டம். ஜமீந்தாைரக்கூட குமாஸ்தா டபாய்ப்பான்.ரகஸ்யமா துட்டும் பாத்துடுவான், மாமா ஸ்னானம் பண்ராரா, பூைஜ பண்றாரான்னுக்கூட சொல்லமாட்டான். திடீர்ன்னு வருவார்; கச்ேசரிக்கு போய்விடுவார். சாயரைக்ஷல்ேல பாக்கலாம்னு நிைனக்காதங்காணும். அவா க்ளப்புக்கு
page9image10712 page9image10872 page9image11032 page9image11192

page9image12040
போய்டுவா. அதுவும் கச்ேசரி தான்ன்னு சொல்வான், அந்த நக்ஷத்ரயன், கோபாைலயர். எல்லாம் உண்டுன்னு சொல்லிட்டு, ‘ஓஹோன்னு சிரிப்பான். ேபருக்கு தான் அவன் குமாஸ்தா. சப்ஜாடா அவனுக்கு மனப்பாடம். சொல்லிப்பா. அவன் தான் ஸாருக்கு லா பாயிண்ட் எடுத்து தருவான்னு. மாமா பெனண்டு மணிக்கு தள்ளாடிண்டு வரச்ேச, யாரும் இருக்கப்டாது. மாமீ தான் ைகத்தாங்கலா, ெசல்லமா வசுண்ேட உள்ேள கூட்டிண்டுப்போவா.
மாமாைவ விடுங்கோ. மாமி காலாம்பற கோயிலுக்கு கிளம்பர ஆரவாரம் இருக்ேக? முதல்ேல, மாமாவுக்கு எல்லாம் மாமி தான் எடுத்துைவக்கணும். இல்ேலன்னா, ஆகாத்தியம் பண்ணிடுவார். அப்பறம். சைமயலுக்கு ஆர்டர் பறக்கும். ேநத்திக்கு ரஸத்திேல உப்பு தூக்கல், ைமசூர்பாகு பொடியாபோய்டுத்து, அப்படி, இப்படின்னு முதல்ேல ஒரு குற்றப்பத்திரிக்ைக தாக்கல். ெரட்ைட நாடி ேதஹமா. மூச்சு வாங்கும். மாமிக்கு தனி எண்ட்ரன்ஸ்ஸா. வாசல் பக்கெமல்லாம் வரமாட்டா. படி தாண்டா பத்தினியாச்ேச. முத்து, இரட்ைட மாட்டு வண்டியோட, காத்திண்டுருப்பான், ரண்டு எட்டுெல இருக்கிற கபாலீஸ்வரர் கோயிலுக்கு போரத்துக்கு. பண்ற டிேலெயல்லாம் பண்ணிட்டு, ‘சீக்கிரம் போடா, கடங்காரா! தீபாரதைன ஆயிடப்போறதுஅப்படிம்ப்பா. அவனும் தார்க்குச்சிையப்போட்டு, மாட்ைட விரட்டுவான், சிரிச்ெசண்ேட. இன்னும் விஷயத்துக்கு வரல்ேல, பாத்துக்குங்கோ. வயசாயிடுத்து இல்ைலயோ!
(அத்ைத வருவாள்)
பின்குறிப்பு:
எனது ஃபாண்ட் சரியாக ெதரிவதில்ைல என்றார்கள். அதான் அட்டாச்ெமண்ட். இன்னம்பூரான்
[Quoted text hidden]
நூநூறுறு வருருஷங்ங்களுளுக்க்குகு முமுன்ன்னால்ல்.doc 37K
Tthamizth Tthenee  Reply-To: minTamil@googlegroups.com To: minTamil@googlegroups.com
Tue, Jul 14, 2009 at 3:08 PM
page10image11008 page10image11168 page10image11336 page10image11496 page10image11656 page10image11816
ஆஹா ஜமாய்க்கேறள்
ைமலாப்பூர்ெல இருந்து வாசம் பண்ணவாளோட வாசத்ைதெயல்லாம் நன்னா வாசம் பிடிச்சிருக்ேகள் வாசம் எங்ேக வசமாறதுன்னு இப்போ புறிஞ்சு போச்............
அன்புடன் தமிழ்த்ேதனீ
[Quoted text hidden]
N. Kannan  Reply-To: minTamil@googlegroups.com To: minTamil@googlegroups.com
ஜோர்..ஜோர்..பேல..பேல.. கச்ேசரி தூள்! நாவன்னாகானா

*
சித்திரத்திற்கு நன்றி: http://www.appusami.com/HTML/htmlv83/images/rusha5.gif