*
அன்றொரு நாள்: ஏப்ரல் 2:
சூ! மந்திரக்காளி!
இன்று காலை உலாவும்போது ஒரு வீட்டில் வாசலில் குட்டிப்பெண்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தனர். இங்கெல்லாம் மற்றவர் குழந்தைகளை தொடக்கூடாது. ஆபத்து. ஜெயிலில் போட்டாலும் போட்றுவாஹ. ஆனால், நன்மக்கள். அதனால், தள்ளி நின்று பார்த்தேன். இனி உரையாடல்.
காட்சி 1:
வீட்டு எஜமானி அம்மா, நான், ஒரு வாண்டு, குட்டிப்பெண்கள்: ஹெலன், லீஸா, ரோஸி, சாந்தி, கதீஜா, ‘சிப்பாய்’, ‘மாயாஜாலி’ எனப்படும் சூ! மந்திரக்காளி.
எ: வாங்கோ. இந்த குட்டி ஹெலனுக்கு பிறந்த நாள். மத்ததுகள் ராத்தங்கல் இங்கே. ஒரே லூட்டி.
நா: ஹெலனுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் கதை சொல்வீங்களா?
எ: மூணாங்கிளாஸ் படிக்கிறதுகள். ஹாரி பாட்டர் அத்துப்படி.
வாண்டு: நான் தான் ஹாரி பாட்டர்!
நா. என்ன ஹெலன்! பெர்த்த்டே கதை வேணுமா?
ஹெ: உன் பேரென்ன?
நா: ‘ராஜ்’.
வா: ராஜ்! கதை சொல்லு. நான் அதை விட பெரிய கதை அப்றம் சொல்றேன்.
நா: ‘டக்’ ‘டக்’! ஒரு சிப்பாய் வரான், ரோட்டில். மார்ச் பண்றான். கத்தி வச்சுண்டு இருக்கான். ஒரு சூ! மந்திரக்காளி! மாயாஜாலி! வழிலே நிக்றா. அவ சொல்றா.
சூ: அப்பா சிப்பாய்! தோரணையாத்தான் இருக்கே. கத்தி வேறே. உனக்கு வேண்டிய பணம் வராப்லெ ஒரு வழி சொல்றேன்...
சி: நன்றி. உனக்கு எத்தனை கருணை!
சூ: அந்த மரத்தைப்பாரு. ஒரே போல். உள்ளே ஓட்டை. நீ உள்ளே இறங்கு. நான் உன் இடுப்பை சுற்றி ஒரு கயத்தைக் கட்டி இழுத்துடுவேன்.
வாண்டு: கயுறு அறுந்து போனா?
லீசா: போடா! முட்டாள். அது நைலான் கயிறு.
சிப்பாய்: இறங்கினா இருட்டா இருக்குமே. பாம்பு இருந்தா?
சாந்தி: அவன் செத்துப்போயிட்டானா?
எஜமானி அம்மா, ஆர்வத்துடன் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டாள்.
நா: அந்த சிப்பாய் என்ன பன்ணனும் என்று கேட்டான்.
சூ: நீ இறங்கின இடத்தில் ஒரு பெரிய ஹால் இருக்கும். எக்கச்சக்க லைட்டு, லஸ்தர், அலங்கார பல்பு, நீளவாட்டு ட்யூப், பத்தாயிரம் வாட்டு குளோப்பு எல்லாம் எரியும்.
கதீஜா: அப்றம் பயம் என்ன? பாம்பு இருந்தாத் தெரியுமே.
வாண்டு: நானா இருந்தா, ஒரு கழியும் எடுத்துண்டு போயிருப்பேன். கத்தியை எடுக்றத்துக்குள்ளே, பாம்பு கடிச்சுட்டு ஓடிப்போயிடும்.
சூ: அங்கே மூணு கதவு இருக்கும். சாவியும் மாட்டி இருக்கும். நீ திறக்கலாம். ஆனால்....’
ரோ: ஒரே சமயத்திலெ மூணு கதவையும் திறக்கமுடியாதே.
எ: ரோஸி! பேசாமெ கதையை கேளு.
சூ: முதல் அறைக்குள் போ. ஒரு பெரிய நாய் ஒக்காண்டிருக்கும். முறம் மாதிரி கண்கள். பயப்படாதே. தகரியாம அதை தூக்கி, நான் கொடுத்திருக்கும் கம்பளத்து மேல் உட்காரவை. அப்றம் அங்கெ இருக்ற பெட்டியை திற. நிறைய செப்புக்காசுகள் இருக்கும். வேண்டியதை எடுத்துக்கோ.
ஹெ: அப்றம்.
சூ: அப்றம், அடுத்த கதவை திற. அங்கே இருக்கறது பெரிய நாய். பொல்லாது. வண்டிச்சக்ரம் மாதிரி காதுகள். மெல்ல தூக்கி, நான் கொடுத்த சால்வை மேல் உட்காரவை. அப்றம் அங்கெ இருக்ற பெட்டியை திற. நிறைய வெள்ளிக்காசுகள் இருக்கும். வேண்டியதை எடுத்துக்கோ.
லீசா: அவனாலெ தூக்கமுடியாது. அது அவனை தின்னுடும்!
வா: அடிலெ பிடிச்சு தூக்கணும், லீசா அசடு.
லீசா அவனை அடிக்றா. அவன் அவள் கையை கடிச்சுட்றான். ரகளை. எஜமானி அம்மா ஒரு பாடாக, அவர்களை சமாதானம் செய்து விட்டு, தேனீர் கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றாள். எனக்கு இந்த கதை அரைகுறையா தெரியும். ஆனா, உமது கைச்சரக்கு, இடைச்செருகல்...*
[திரை விழுகிறது]
காட்சி 2: வரலாமா? விட்றுலாமா?
இன்னம்பூரான்
02 04 2012
- நீங்கள் சொன்னப்றம், அந்த மாமி சொன்னதை சொல்றேன். வர்ரட்டா....!
ஹாரிபாட்டர்,எங்க காலத்து சூ மந்திரக்காளீ எல்லாம் என்ன ஆட்டம் போட்டார்கள். பிரமாதம் .
ReplyDeleteநன்றி, திரு.வல்லி சிம்ஹன்.
Deleteஇன்னம்பூரான்