Wednesday, April 3, 2013

தொன்மை



தொன்மை

மந்திரம் மாங்காயை வீழ்த்தாது; மாங்கனியை அன்புடன் பிழிந்து மாம்பழரசத்தை பருகத் தரும். ஏனெனில், மந்திரமாவது மாயை. எல்லா கருத்துக்களையும் கவனத்துடன் படித்தேன். வியந்தேன். என்ன வியந்தேன்? மந்திரமோ அமுதசுரபி. நமது காதில் விழுவதோ பஞ்சசாரை. 
தொன்மை (Mythology) ஒலியின் நல்வரவு ~ டம்ரூ பாஜே!, பிரணவம் உற்பத்தியாச்சு. '...வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்...' என்று பாரதி பாடவில்லை. மந்திரோபதேசம் செய்தார். கடோபனிஷத், மாண்டூக்யோபனிஷத், பதஞ்சலி, எங்கு சென்றாலும் பிரணவ நாதம்.

இங்கு ஒரு பாகிஸ்தானி கடை இருக்கிறது. நாள் முழுதும் குரானும், அரேபிய மந்திரங்கள் ஓதியபடி. சிலசமயம், நான் கட்டுண்டு  கேட்பதுண்டு. என்னிடம் ஒரு திபெத்தியன் தாளவாத்திய கச்சேரியின் ஒலிப்பதிவு ஒன்று இருக்கிறது. நள்ளிரவில் மெல்லியதாக வைத்துக்கேட்டால், சுகமாக இருக்கும். அதை கேட்ட அன்பர் ஒருவர், இந்த காட்டுக்கூச்சலை நிறுத்து என்றார். கருவாடுக்கூடை கதை தான். என் செய்வது? 

கிரகேரியன் சேண்ட்ஸ் கேட்டிருக்கிறீர்களோ? வேத அத்யயனம் மாதிரி இருக்கும். 'Chanter' is German; Chanting is English; சந்தஸ்: சம்ஸ்கிருதம். 'சந்தம் : தமிழ்: விவிலியம் கூறுவதாவது:
 “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை [இயேசு] தேவனாயிருந்தது” என்று குறிப்பிடுகிறார் (யோவான் 1:1)

மந்திரம் எந்த மொழிக்கும், எந்த சமயத்திற்கும், எந்த சமூகத்திற்கும் ஏகபோக உரிமையல்ல. இவையெல்லாம் உற்பத்தி செய்யப்படும் தான்தோன்றி ஒலி, உச்சாடனம், மந்திரம். மனிதன் முதலில் அஞ்சியது ஒலி, வணங்கியது ஒலி,  அவரவர் மொழிக்கும், சமயத்திற்கும், சமூகத்திற்கும், சந்தர்ப்பத்துக்கும், அணைத்துக்கொண்டது, அரவணைத்ததும், மந்திரம்.
இந்த இடுகையை யாராவது 'நீயிரும் வம்மின்' இழையில் மீள்பதிவு செய்ங்களேன். மாங்கனியை அன்புடன் பிழிந்து மாம்பழரசத்தை பருகத் தருகிறதா என்று பார்ப்போம்.
இன்னம்பூரான்
25 01 2012
சித்திரம் பெறப்பட்டது: ஏப்ரில் 3, 2013. நன்றி

No comments:

Post a Comment