அன்றொரு நாள்: ஏப்ரல் 2:
சூ! மந்திரக்காளி!
காட்சி 3:
(குடுக்கையை) எடுத்துண்டு வந்தான். கொடுக்க இஷ்டமில்லை. சண்டை வந்தது. மாயாஜாலியை குத்தி கொன்று விட்டானா? அவள் செத்துப்போய்ட்டாள்!
அவனும் குடுக்கையையும், துட்டு எல்லாத்தையும் எடுத்துண்டு ஒரு டவுனுக்குப் போனான். ஜாலியா ஊர் சுத்தினான்.நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்! ஆனால், ராஜகுமாரியை பாக்கணும்னு ஆசை. ஊர்க்காரா சொன்னா, ‘நீ அவளை பாக்கமுடியாது. ராஜா அவளை போத்தி, போத்தி,காப்பாத்துறான். அவள் ஒரு சாதாரண சிப்பாயை கல்லாணம் கட்டிப்பா என்று ஆரூடம். ராஜாவுக்கு அது பிடிக்கல்லை. நம்ம சிப்பாய் ஊர் சுத்திண்டிருந்தான்.ஏழை பாழைகளுக்கு உதவி பண்ணினான். பைத்தியக்காரனை சுத்தி நாலு பேர் என்றால், பணக்காரனை சுத்தி பத்து பேர். தின்னே அழிச்சுப்பிட்டார்கள். இவன் மறுபடியும் ஏழை ஆனான். மச்சு வீட்டை காலி பண்ணிட்டு குச்சு வீட்டுக்குப் போய்ட்டான்.
( நம்ம வாண்டு கேட்டான்,’ குச்சு வீட்டு கூறை பிச்சுண்டுப் போனா! ஒரே அவுட்டு சிரிப்பு, குழந்தைகள் ஜோக் நமக்கு புரியவா போகிறது!)
பிள்ளையார் கோவில் பிச்சாண்டியான சிப்பாய் ஒரு நாள் அந்த குடுக்கையை தட்டினான். அந்த செப்புக்காசு நாய் வந்து நின்றது. காசு கொண்டா என்றான். அது வாய் நிறைய செப்புக்காசு கொண்டு வந்தது. இரண்டு தடவை தட்டினால், வெள்ளிக்காசு நாய். மூணு தடவை தட்டினா, பொன் காசு. மறுபடியும் பெரிய பணக்காரன் ஆனான். பெண்ணாசை ஏற, அந்த செப்புக்காசு நாயை, ராஜகுமாரியை கொண்டா என்றான். அதுவும் கொண்டு வந்ததா?
(என்ன பேச்சு மூச்சு காணும் என்று பாத்தா,எல்லாம் கோணாமாணான்னு படுத்துத் தூங்கி வழிகிறதுகள்).
அதுகளுக்குஇல்லாத கதை உமக்கா? நோ. வேணும்னா நாளை வாங்கோ. வரோமா இல்லையா என்று சொல்லுங்கோ.
(தொடரணுமா?)
இன்னம்பூரான்
02 04 2012
No comments:
Post a Comment