நீயும், நானும், விஞ்ஞானமும்: 1அ:
விஞ்ஞான திருவிழாக்கள்
செல்டன்ஹாம் விஞ்ஞான விழா சில நாட்களில் நடக்கவிருக்கிறது. அதை பற்றி எழுதவதற்கு முன், இன்றைய உலக விஞ்ஞான திருவிழா பொருட்டு, ந்யூ யார்க்கில் இன்று நடந்து கொண்டிருக்கும் நிகழ்வில் பிரபல விஞ்ஞான பிரமுகர்கள் (எவான் ஜெலிஸ்ட்ஸ், கண்ணன்) அளவளாவிய கருத்தரங்கம் எடுத்துக்கொண்ட மைய கருத்து:
‘... விஞ்ஞானம் மிகவும் நுட்பமான கருத்துக்களை வடிகட்டி, வடிகட்டி, ஆய்வுகள் பல செய்கிறது. அவற்றை அறிந்து பயன் பெறுவது பற்றி பொதுஜனங்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது ஒரு சவால். விஞ்ஞானத்தின் உள்ளே உறையும் உட்கருத்தாகிய வித்துக்கு ஹானியில்லாமல், அதை பாமர மொழியில் விளக்க முடியுமா? அவ்வாறு விளக்க முயலும் விஞ்ஞான விவரணைகள் எவ்வாறு அமைய வேண்டும்...’.
என்பதை பற்றி, ஜான் ஹோக்கென்பெர்ரி (John Hockenberry) என்ற விஞ்ஞான இதழியலாளரும், லோன் ப்ஃரேன்க்க் (Lone Frank Ph.D) என்ற விஞ்ஞான நூலாசிரியரும், ஜேம்ஸ் க்ளைக் (James Gleick) என்ற உலகபுகழ் வாய்ந்த விஞ்ஞானம்/விஞ்ஞானிகளின் வரலாறு ஆகிய நூல்கள் படைத்தவரும், நுட்பங்களை விளக்குவதில் நற்பெயர் பெற்ற பேராசிரியர் ப்ரையான் க்ரீன் (Brian Greene) அவர்களும் விவாதித்ததின் விவரங்கள், இன்னும் சில நாட்களில் காணொளியில் கிடைக்கும்.
இந்த 1அ பகுதியை பற்றி ஒரு தன்னிலை விளக்கம். முதுசொம் கல்விமேடையில் சுபாஷிணி சொன்னது போல, எங்கோ, எப்போதாவது, ஏதாவது ஒரு மாணவர் தேடினாலும் செய்தி கிடைக்கட்டுமே என்ற அணுகுமுறை. நூறு வருடங்களுக்கு முன் சிவக்கொழுந்து சார் அப்படி செயல்பட்டதினால் தானே கரியமாணிக்கம் உதித்தது! இல்லையா?
இன்னம்பூரான்
01 06 2013
Image Credit: http://twi-ny.com/blog/wp-content/uploads/2011/05/world-science-festival.jpg
உசாத்துணை:
No comments:
Post a Comment