அன்றொரு நாள்:மே 27;
அஸ்தமனம்!
வரலாற்றுடன், அன்றாடம் சுகித்து, அழுது, வாழ்ந்தவர்கள் அதை அசை போடுவதும், குப்பனும், சுப்பனும் எழுதியதை படித்து விட்டு அதற்கு பூசை போடுவதும் வெவ்வேறு அணுகுமுறைகள். மே 27, 1964 அன்று அமரரான இந்திய தேசபக்தன், முதல் பிரதமர், பண்டித ஜவஹர்லால் நேஹ்ரு அவர்களின் வாழ்க்கை/அரசியல்/கொள்கைகள்/ ஆளுமை பற்றி என்றென்றும் குறை காணும் கும்பல்கள் உண்டு. பாமரமனிதரான அவரும் ஏதோ தெய்வீகக்குழந்தையாகத் தன்னை காட்டிக்கொள்ளவில்லை. அவருக்கும் லேடி மெளண்ட்பேட்டனுக்கும் தலைவனுக்கும், தலைவிக்கும் உள்ள காதல் உறவு இருந்திருக்கலாம். அவரும் பத்மஜா நாயுடுவும் காதலர்கள். ஆனால், இந்த பாழாப்போன காங்கிரஸ் கலாச்சாரம் அவர்கள் மணம் புரிவதற்கு முட்டுக்கட்டை போட்டது. அவரை பற்றி லக்ஷோபலக்ஷப்பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. நான் சில வரிகளை மட்டும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுத விழைகிறேன்.
பமேலா மெளண்ட்பேட்டன் நினைவு கூறுகிறார்.
’..நேரு சிரஸானம் செய்து காண்பித்தார்... அவருடைய தேஹாரோக்கியம் நன்றாக இருந்தது...1946 லிருந்து எங்கள் குடும்பம் அன்யோன்யம். என் அம்மாவும் அவரும் மிகவும் ஒருவரையொருவர் காதலித்தனர்...அவளுக்கு அவர் தினந்தோறும் காலை 2 மணிக்கு லிகிதம் எழுதுவார். அவை ஒரு இலக்கியக்குவியல்...58 வயதில் அம்மா இறந்து விட்டாள். அவளுடைய தலை அணியின் அடியில் இந்த கடிதக்குவியல். அம்மாவோ அவற்றை அப்பாவுக்கு உயில் எழுதி வைத்திருந்தாள். அவர் முதலில் என்னை படிக்கச்சொன்னார்... நேஹ்ரு அடிக்கடி சொல்லும் ‘all manners of things’ என்ற சொற்றொடரால் அவரை கேலி செய்வோம்... ஒரு நாள் அம்மா சர்தார் வல்லபாய் படேல் அவர்களுடன் விருந்து அருந்தினாள். ஒருவரை ஒருவர் கேலி செய்த வண்ணம்.,,’
~ இப்படி பல குறிப்புக்கள்.
அன்றைய தினம், நான் சென்னையில் உத்யோகம். திடீரென ஒரு பலத்தக்காற்று வீசல். கண்ணாடி டம்ளர் விழுந்து உடைந்தது. தத்க்ஷணமே துக்கச்செய்தி ரேடியோவில் அலறியது.
இன்னம்பூரான்
27 05 2012
உசாத்துணை:
No comments:
Post a Comment