கனம் கோர்ட்டார் அவர்களே ~3
- Monday, October 10, 2011, 11:51
- பிரசுரம்: வல்லமை
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8YmnJzdBEsPdpR6XLberL6C9ftNMDDX7YlJ0I6UJ__eEkcNbmD72pk-XLuITogPyntWQtT4f6GbaBdlkzHpDitp1SZy2AXjxzkNLV4zz4KH-xUP-lVkCodHr6F6J_w7_hmjFln_ys5LoO/s1600/kavithai+funny+animals-2.jpg
இன்னம்பூரான்
கனமான விஷயங்களை மட்டுமே எழுதி வந்தால், துண்டை உதறி போட்டுக்கொண்டு ஓடிப்போய்விடுவார்கள். கொஞ்சம் லைட்டா எழுதேன், என்றார் தேசிகன். அவர் தான் நமக்கு இன்ஹெளஸ் விமர்சகர். நீங்க எங்கே வேணும் பாருங்கோ ~ரேஷன் கடை, தபாலாபீஸ், வங்கி, கோர்ட்டு, பார்லிமெண்ட்… ஜாலியா சுத்திண்டேஇருக்கும் நகைச்சுவை, அறுவை ஜோக் உள்பட. உங்களுக்கு கோர்ட்டுக்குள் கால் வைத்த துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கோ? அமீனா கால் வைத்தால் வீடு உருப்படாது. கோர்ட்டில் கால் வைத்தால் நீங்க உருப்படுவேளா? டவுட்! கோர்ட்லே, வயசான ஜட்ஜ் நொண்டிண்டே வரச்சே மஹா டவாலி ( டவாலி களில் மேல் சாதி, கீழ் சாதி உண்டு, சுவாமி!) ‘ஆர்டர்! ஆர்டர்! ஆர்டர்! என்று கூப்பாடு போடுவான். எல்லாரும் பவ்யமா எழுந்து நிற்கணும். ஆமாம்.
இதை மனதில் வைத்துக்கொண்டு ‘அமெரிக்கன் கோர்ட்டுகளில் அனார்டர் (அதாவது ‘ஆர்டர் குலைந்தது’) என்று ஒரு நூல். அதில் இருந்த ஷோக்கான ஜோக்குகளில் சில: எல்லாம் நிஜம். இதை எல்லாம் நோட்ஸ் எடுக்கும் குமாஸ்தாக்கள் சிரிக்கவே முடியாது. ஒரு கருவூலமே வச்சிருக்கேன்.
விவாகரத்து தாவா:
‘காலையில் எழுந்தவுடன் என்ன சொன்னார், உன் புருஷன்?
‘நான் எங்கே இருக்கேன், கமலா’ என்றார்.
‘அதுக்கு போய் கேஸ் போடலாமா, தாயே!’
‘பின்ன! என் பெயர் பத்மினி.’
*
‘கிருஷ்ணன்! இந்த அல்ஸீமர் வியாதி: இதனால், மறதி வருதா?
‘ஆமாங்க.’
‘அது சரி சார்! அது எப்படி உங்க ஞாபகசக்தியை அஃபெக்ட் பண்ணுது?
‘சொல்லத்தெரியல்லையே. மறந்து போச்சே.’
‘கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும். என்ன மறந்தது? ஒரு உதாரணம். சொல்லித்தான் ஆகணும்.’
*
‘டாக்டர்! இது நிஜமா? ஒத்தன் செத்துட்டான், தூக்கத்திலே. இந்த விஷயம், காலாம்பறத்தான் அவனுக்குத் தெரியுமா?
‘வக்கீல் சார்! இது நிஜமா? நீங்கள் வக்கீல் பரிக்ஷை பாஸ் பண்ணது?
*
‘மோஹன்! உங்கள் பையன் 20 வயசு ராமு! அவன் வயசு என்ன? டக்னு சொல்லணும்.’
‘அவன் வயசும் உங்க ஐ.க்யூ அதே ~20.’
*
‘ரஹீம்! உங்களோட ஃபோட்டோ எடுக்கச்ச, நீங்க அங்கே இருந்தீங்களா?
‘தண்ணிப் போட்டுட்டா கோர்ட்டுக்கு வந்தீங்க?
*‘ கவிதா! உங்கள் முதல் விவாகம் எதனால் ரத்து ஆனது?
‘சாவு’.
‘யார் சாவு?’ உடனே பதில்.
‘நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள், வக்கீல் (மடையனே!)
*
‘அந்த நபரை வர்ணிக்கவும்.’
‘சராசரி உயரம், குறும் தாடி.’
‘க்விக்! ஆணா? பெண்ணா?
‘ வக்கீல் சார்! ஆண் என்று நினைக்கிறேன். எதற்கும் சர்க்கஸ் வந்திருந்ததா என்று விசாரித்துக்கொள்ளுங்கள்.’
*
‘டாக்டர்! நீங்கள் செய்த பிரேத பரிசோதனைகளில், எத்தனை பேர் செத்தவர்கள்?
‘வக்கீல் சார்! எல்லாருமே. உயிரோடு இருந்தவங்க, சண்டை போட்டு ஓடி போய்ட்டாங்க.
*
‘டாக்டர்! இந்த குப்புசாமி பிரேதத்தை எத்தனை மணிக்கு பரிசோதனை செய்தீர்கள்?
‘காலை 8 30க்கு.
‘அத்தருணம் அவர் செத்து விட்டாரா?
‘அதை விடுங்க. நான் அறுத்து முடிக்கச்சே குப்புசாமி பிணம்.’
பி.கு. ஸர் ஜான் சைமனும், திருவள்ளூர் குடியானவனும். தெரியுமோ?
இன்னம்பூரான்
No comments:
Post a Comment