Wednesday, June 26, 2013

அரசு-9: மாபெரும் புரட்சி



அரசு-9: மாபெரும் புரட்சி

Innamburan S.Soundararajan Wed, Jun 26, 2013 at 11:19 AM

அரசு-9: மாபெரும் புரட்சி
Inline image 1

அரசு-9: மாபெரும் புரட்சி

நாயுடுகாரு மண்ணூர் ரெவென்யூ இன்ஸ்பெக்டர்; கல்லூரில் சுப்பய்யர். இருவருக்கும் மேலதிகாரி தணிகாசலம் பி.ஏ. ~ அதாவது தாசில்தார். மக்கள் சம்பந்தப்பட்டவரையில் மூவருமே உருப்படாத கேஸ், ‘அரசு-8: இளங்கன்று’ இழையில் அகப்பட்டுக்கொண்டவர்கள் போல. கலோனிய அரசு இந்தியர்களை நம்பவில்லை. பிறந்த நாள் முதற்கொண்டு பொய் சொல்வது நமக்கு வழக்கம் என்பதும் உண்மை. விளைவு: எதற்கெடுத்தாலும் நற்சான்று, முன்பின் தெரியாத தாசில்தாரிடமிருந்து. அதற்கான சடங்கு, ரெவென்யூ இன்ஸ்பெக்டர். மேல்வரும்படிக்கு, இதை விட பெரிய சுரங்கம் கிடையாது. அதான் அதற்கு கிம்பளம் என்ற செல்லப்பெயர். எப்படி என்றால், மேல அக்ராஹத்து சம்பத் ஐயங்காருடைய பிள்ளை சமத்து என்பவனை, இந்த ‘நற்சான்று’ சேரிவாசி ‘சக்கிலியன்’ என்று நம்பவைக்கும், கிம்பளம் வாங்கிக்கொண்டு. 

மே மாதம் 23 அன்று தமிழ்ச்செல்வி அடுக்கிய ஆதிதிராவிடர், பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் எல்லாம் நாயுடுவுக்கும், சுப்பய்யருக்கும் மனப்பாடம். அதில் உள்ள நெளிவு சுளிவுகள் தணிகாசத்துக்கு தண்ணி பட்ட பாடு. ஏன் அவர்கள் முற்றத்தில் காசு மழையாக பெய்யாது? அந்த மாதிரி இந்திய பிரஜை யாவரும், பட்டாவிலிருந்து மரண சான்று வரை, இவர்களிடம் தொங்கவேண்டும். பிணத்திடமிருந்து கைநாட்டு வாங்கி மாற்று உயில் தயாரித்த ரெவென்யூ இன்ஸ்பெக்டர் ஒருவரை தெரியும். ஜமீன்தார் வீட்டு சமாச்சாரம் என்பதால் கனத்த காசு மழை. இத்தனை பீடிகை எதற்கென்றால்:

மத்திய அரசு இந்த நற்சான்று தீமையை ஒரேயடியாக ஒழிக்க, ஒரு புதிய பாதையை போட்டு இருக்கிறது. சொல்லப்போனால், அது ஏற்கனவே உயிர் விஷயத்தில் இருக்கிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள்  ‘இன்னும் உயிர் தரித்திருக்கிறேன்’ என்று சொல்ல, ஆஜரானால் போதும். தான் அளிக்கும் பத்திரங்கள், ஆவணங்கள் உண்மையானவை என்று சத்தியம் செய்ய, நாமே அவற்றில் ‘இது உண்மையான ஆவணம்’ என்று நற்சான்று கொடுத்தால், சம்மதத்துடன் அதிகாரிகள் அவற்றை வாங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தான் அந்த மே 2013 ஆணை. பின்னர், நேரில் வந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது மூல ஆவணங்களை காட்ட வேண்டும்.

இது அருமையான ஆணை. கொஞ்சம் என்ன ரொம்ப லேட். நிர்வாகத்தை சீரமைக்கும் மன்றம் 2009ல் செய்த பரிந்துரை, இது. ஆடி அசைந்து, அரசு மெதுவாக நல்லதொரு ஆணையை பிறப்பித்தது. நிறைய பொடி வைத்து வடித்த ஆணை, இது, அதாவது மூன்றாவது பாரா படி, இந்த ஆணை மண்ணூரிலும், கல்லூரிலும் அமலுக்கு வர, இன்னும் ஒரு மாமாங்கம் ஆகலாம்.  செய்தி எனக்கு எல்.ஸ்வாமிநாதன் என்ற நண்பரிடமிருந்து வந்தது. அவருக்கு நன்றி நவின்று, அந்த ஆணையை, எல்லாருக்கும் பயன்படும் என்பதால், கீழே பதிவு செய்திருக்கிறேன்.
ஒரு கேள்வி: ஐஏஎஸ்ஸை விட கடுமையான போட்டி, எந்த பரீக்ஷைக்கு?
இன்ன்ம்பூரான்
26 06 2012
*

SELF-CERTIFICATION OF DOCUMENTS INSTEAD OF ATTESTATION OF DOCUMENTS BY GAZETTED OFFICERS – DEPARTMENT OF ADMINISTRATIVE REFORMS RECOMMENDS SELF-CERTIFICATION OF DOCUMENTS IN LIEU OF GAZETTED OFFICER’S ATTESTATION
No.K-11022/67/2012-AR
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Administrative Reforms & Public Grievances
Sardar Patel Bhavan, Sansad Marg,
New Delhi-110001. Dated the 10th May, 2013

OFFICE MEMORANDUM
Subject: Self-certification
The Second Administrative Reforms Commission in its 12th Report titled “Citizen Centric Administration – The Heart of Governance”, has recommended, adoption of self-certification provisionfor simplifying procedures. (www:darpg.gov.in)
2. Taking a cue from this some Ministries/State Governments have adopted the provision of self-certification of documents like marksheet, birth certificate etc. by the applicants/stakeholders instead of asking for an attested copy of the documents by a Gazetted Officer or filing of affidavits. Under the self attestation method, the original documents are required,to be produced at the finalstage.
3. You will appreciate that the above method is citizen friendly and obtaining either an attested copy or affidavit not only cost money but also involves wastage of time of the citizens and the Government officials.
3.  It is requested to kindly review the existing requirements of attested copy or affidavit in variousapplication forms in a phased manner and wherever possible make provision for self-certification ofdocuments, after obtaining the approval of the competent authority.
Sd/-
(Sanjay Kothari)
Secretary to the Government of India



No comments:

Post a Comment