வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 8
ஃப்.ஐ. ஆர். பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்பார்களோ, இத்தொடரை படித்தவர்கள். ஒரு பிரபலமான ஃப்.ஐ. ஆர். கையில் இருந்தும், மற்ற தீயச்செயல்கள் முன்னுரிமை கேட்கின்றன.
நேற்று எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் அப்பனுக்கு பத்து வருட ஜெயிலும், ரூ.40 ஆயிரம் அபராதமும், ஆத்தாளுக்கு ஏழு வருட ஜெயிலும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டன.
அப்பனின் குற்றம்: தன் பெண்ணையே வன்புணர்ச்சி செய்து, பின்னர் அவளை விலை பேசி விபசாரத்தில் ஆழ்த்தியது. இது அப்பனுக்கு, இதே குற்றத்துக்கு மூன்றாவது வழக்கு.
ஆத்தாளின் கைங்கர்யம்: தன் பெண்ணையே விலை பேசி விபசாரத்தில் ஆழ்த்தியது. அவளுக்கும் இது மூன்றாவது வழக்கு. அப்பனைப்போல அவளுக்கு தண்டனை அளிக்க வில்லை, முதல் இரண்டு குற்றத்துக்கு.
அநியாமாக இல்லை? குடும்ப/ சமூக/சட்டப்படி/ நியாயமாக/தர்மராஜாவாக, இந்த அரக்கி-அரக்கன் தம்பதியை என்ன செய்து இருக்கவேண்டும்.
சொல்லுங்கோ.
No comments:
Post a Comment