நாடு வா வா! காடு போ போ!
புலி வருதுடோய்! புலி வருதுடோய்! புலி வருதுடோய்! வந்துடுத்து!
ஒடிஷாவின் நந்தன் கானன் மிருகக் கண்காட்சி சாலை சந்தகா கானகத்தின் நடுவே, அணிகலனாக நிற்கிறது. மாநில தலை நகர் புவனேஷ்வரம் கூப்பிடு தூரம். அந்த மிருகக் கண்காட்சி சாலைக்கு காட்டிலிருந்து வருகை புரிந்த யானைக்குட்டி, புலி ஆகியவற்றை பற்றி எழுதியிருந்தேன். இந்த புது கேஸ் தடபுடல். அவருடைய பெயர் இந்திரன் என்று வைத்துக்கொள்வோம். நான் சொன்ன பழைய கேஸ் மாதிரித்தான், கைக்கிளை அதாவது ஒரு தலைக்காதல். ( யார் கண்டா? தமிழ் காமக்கதைகளை போல, நந்தன் கானன் வாசி ஊர்வசி அவரிடம் ‘நாடு வா வா! காடு போ போ!’ என்று சொல்லி நைச்சியம் பண்ணி இருக்கலாம். வருகை: ஏப்ரல் 29, 2013. எது எப்படியோ,’ மோகம் முப்பது நாள்’ ! 18 அடி உயர்ந்த வேலியை தாண்டி குதித்து காட்டுக்குள் போய்விட்டார். அங்கும் ஒரு மோஹினியா? அல்லது வேட்டையா? யாமறியோம். ‘போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு’ என்பது உறுதியாச்சு, மே 31 அன்று.
எல்லாருக்கும் குஷி இந்த செய்தி என்பதால் - இந்திரனுக்கும் , ஊர்வசிக்கும், கண்காட்சி சாலை அதிகாரி சர்மாவுக்கும், எனக்கும், உமக்கும் தான் - பதிவு செய்தேன். இந்திரநூர்வசி தாம்பத்தியம் செழித்தோங்க வாழ்த்துங்களேன். ப்ளீஸ்.
ஆமாம் போடுங்க, தாய்க்குலமே! அண்ணன் தம்பிகளே, வாண்டு பசங்களே!
No comments:
Post a Comment