இன்றைய அப்டேட்:
டில்லியில் இருக்கும் திஹார் சிறைவாசிகள் உத்தராகாண்ட் வெள்ளத்தில் அடிபட்டவர்களுக்கு உதவ ரூ,10 லக்ஷம் நன்கொடை கொடுத்துள்ளனர். அதில் ரூ.3.5 லக்ஷம் ஆயுள் கைதிகளிடமிருந்து. சிறையில் உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து, இந்த நன்கொடை.
~ ஹிந்து அப்டேட்.
இன்னம்பூரான்
25 06 2013
Innamburan S.Soundararajan | Mon, Jun 24, 2013 at 11:52 PM |
|
மனித நேயம் ~7
கேதார்நாத், பத்ரிநாத், அலக்நந்தா, பாகீரதி, ருத்ரப்ராயக், ... ஆஹா! என்னே அழகிய பெயர்கள். தெய்வாதீனமோ! மனித பராதீனமோ! ஒரு பெருவெள்ளம் யாத்திரீகர்களை மிகவும் பாதித்து விட்டது. வருமுன் காப்போன் வந்தபின்னும் காக்கவில்லை என்ற கூச்சல். ஆனாலும், நமது ராணுவம் அசகாய வேலைகளை செய்து மீட்புப்பணியில் இயங்குகிறது. இந்த கட்டுரை அதை பற்றியல்ல. நாள்தோறும் ஊடகங்கள் இது விஷயம் பற்றி வரிந்து வரிந்து எழுதுகிறார்கள். நான் பார்த்தவரை, அந்த பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள், அவர்களின் இன்னல்கள், நிவாரணம் அதையெல்லாம் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை, நேற்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் உசாத்துணையை தவிர. அது ஒருபுறமிருக்க...
350 குடும்பங்கள் - இடையர்கள், நெசவாளிகள்,குடியானவர்கள், ஊழியர்கள் - பாகீரதி நதிக்கரையில் வசிக்கும் பகோரி கிராமத்தினரை அமுதசுரபி என்று சொன்னால் சாலத்தகும். கிராமத்துத்தாய்குலம் விருந்து படைக்கிறது. 24 மணி நேரமும் தேனீர் பருகலாம். ஹிந்து/பெளத்த மதம் சார்ந்த சாந்தஸ்வரூபிகளாகிய இந்த பரம ஏழைகளின் பிரதிநிதி சாந்தா தேவி பூரிக்கு மாவு பிசைந்து கொண்டே ‘கவலையற்க. வேண்டியது இருக்கிறது’ என்கிறார். எத்தனை நாட்கள் இது ஓடும்? காசு கூட இல்லை. வங்கிக்கணக்கு எல்லாம் 70 கிலோமீட்டருக்கு அப்பால். போகமுடியாது. இடையில் பெருவெள்ளம். மாநில அரசு எப்படி இயங்கினாலும், ராணுவமும் சோறு போடுகிறது. இந்த மாதிரி எத்தனை கிராமங்களோ? அவர்க்ளுக்கும் நிவாரண/புத்துயிர் உதவி அவசரத்தேவை.
இனி சித்திரம் பேசும். காண, உசாத்துணை சொடுக்கவும். நன்கொடை கொடுக்கவும்.
உசாத்துணை: அவர்களது காப்புரிமையை மதித்து, நன்றி நவில்கிறேன்.
(Photos by Prasad Nichenametla)
சித்திரம்:
|
|
No comments:
Post a Comment