எல்லாரும் இந்நாட்டுமன்னர்களே,ஓரளவு சமுதாயத்துக்காக செயல் பட்டால்.
மதுரையில் ஒரு பள்ளி மாணவன் செயல்பட்டதை கவனியுங்கள். பனையூரிலிருந்தும். அதைச்சார்ந்த பத்து கிராமங்களிலும் நிலபுலன்களுக்கு உரிமம் ஆன ‘பட்டா புத்தகம்’ கொடுக்காமல், இழுத்தடித்தனர், ரெவின்யூ துர்தேவதைகள். மனுக்கள் கட்டி வைக்கப்பட்டன. தொணத்திய பிறகு லஞ்சம் ( ரூ.10,000) கேட்டார்கள். ஜமாபந்தியில், கலைக்டர் அன்ஷுல் முஸ்ராவிடம் மனு போட்டு, நீதி கேட்டும் பயன் ஒன்றுமில்லை. பட்டா அளிக்கச்சொன்ன அவருடைய ஆணையை தூக்கி அடித்தனர். இந்த அவலத்தை கண்ட அருண் என்ற மாணவன் விலாவாரியாக எல்லா விவரங்களையும் கலைக்டரின் முக நூலின் (Facebook) பதிவு செய்துவிட்டான். கலைக்டர் வெகுண்டெழ, இந்த துர்தேவதை வர்க்கம், உடனுக்குடனே உரிமங்களை அளித்தார்கள்; லஞ்சத்தைத் திருப்பினார்கள். கலைக்டர் துர்தேவதைகளைக் கூப்பிட்டு எச்சரித்தாராம்.
இரு கேள்விகள் எழுகின்றன. 1. கலைக்டரின் ஆணையை மீற, அவர்கள் என்ன சால்ஜாப்பு சொல்லியிருப்பார்கள்? 2. எச்சரிப்பு ஒரு தண்டனையா? இரு குற்றங்கள்: கடமை தவறியது + லஞ்சம். கலைக்டர் என்ன செய்திருக்கவேண்டும் என்று, விருப்பமுள்ளவர்கள் மடலாடுங்கள்.
இன்னம்பூரான்
No comments:
Post a Comment