Monday, June 24, 2013

அன்றொரு நாள்: ஜூன் 25 + 26




அன்றொரு நாள்: ஜூன் 25 + 26
அப்டேட்: 
1.'பின் வைத்த காலை அரசு இன்னும் பின்னுக்கு இழுத்தபடி... '
~ அதிவேகமாக, ஆடிப்பாடி,ஓடி, தள்ளாடியே...!
2.'...நிதி நிலை அவலத்தினால், நாட்டின் பாதுகாப்புக்கும், ஆளுமைக்கும் ஆபத்து என்று, எமெர்ஜென்ஸி பிரகடனம் செய்து விட போகிறார்கள்!..'
~ அச்சமிக ஆகுதடி, காத்தாயி!
இன்னம்பூரான்
25 06 2013
சித்திரத்துக்கு நன்றி:http://asianetindia.com/wp-content/uploads/2012/12/emergency.jpg


Innamburan Innamburan Fri, Jun 24, 2011 at 8:33 PM



அன்றொரு நாள்: ஜூன் 25 + 26

இன்று (ஜூன் 25, 1975) காலை ஆதவனுக்கு அலுப்பு தட்டியதோ என்னவோ! வைகறையில் ஒரு கலக்கம். களப்பிரர் காலம் இப்படித்தான் இருள் மண்டி, முள்புதராக, கூர்க்கல்லாக, புலிப்பாய்ச்சலாக, முதலை கண்ணீராக, மக்களை ஆட்டிப்படைத்ததோ? முதல் நாள் உச்ச நீதி மன்றம் அளித்தத் தீர்ப்பினால், மத்திய அரசுக்கு, அஸ்தியில் ஜன்னி. ரகஸ்யமாக, ஈட்டிகள் தீட்டப்பட்டன. தோட்டாக்கள் நிரப்பப்பட்டன. வலைகள் நாலாதிசையும் வீசப்பட்டன. முஸ்தீப்புகள், ஜூன் 12, 1975 அன்று நீதிபதி.ஸின்ஹா அலஹாபாத்தில் தீர்ப்பு அளித்தவுடன் தொடங்கினவோ? என்ன கடபுடா சத்தம்! குண்டுச்சட்டியிலே எல்லாரும் சவாரி வராகளே! யாரை பார்த்தாலும் ஒரு சவக்களை! அரசியல் சுனாமி வரப்போவுதோ! அன்று நான் புவனேஸ்வரத்தில் இருந்தேன். பின்னர் பேசப்போகும் நண்பர் சந்திரமெளலி காந்தி நகரில் இருந்தார். நாங்கள் இருவருமே ஒரு மினி எமர்ஜென்ஸியை (அவசர நிலை) அஹமதாபாதில் ஒருசேர பார்த்திருக்கிறோம். ஏன்? அரசியல் சாஸனத்திற்கு உட்பட்ட எமர்ஜென்ஸி காலகட்டங்களில் இது மூன்றாவது. மூன்றையும் என் தலைமுறை பார்த்தது. மற்ற இரண்டிலும் எழாதக் கேள்வி, ‘இது அரசியல் சாஸனத்திற்கு உட்பட்டதா?’

இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள சக்திகளாலோ, உள்நாட்டு சூழல்களாலோ, பாதிக்கப்பட்ட நிதி அவலங்களாலோ, நாட்டின் பாதுகாப்புக்கும், ஆளுமைக்கும் ஆபத்து வந்தால், ஜனாதிபதி எமெர்ஜென்ஸி பிரகடனம் செய்யலாம்; இந்திய அரசியல் சாஸனம்: 18வது பகுதி. 

அடிப்படை உரிமைகள் மறுக்கப்படலாம். மாநிலங்கள் வாலில்லா வானரங்களாகலாம். மாநிலங்களில் கடைந்தேறிய அவசரநிலைகளை இங்கு அலசப்போவதில்லை. மதிப்புக்குரிய அப்துல் கலாம் அவர்கள் காலத்திலே கூட மாநில அவசரங்கள் (அவலங்கள்) நிகழ்ந்த

நாடு தழுவிய எமெர்ஜென்ஸி தருணங்கள் மூன்று. முதலாவதில், சூறாவளியின் மையத்தில் தொண்டு (ராணுவ அமைச்சரகம்: போர் கையேடு,  முப்படை ஆயுதம் + தளவாடம், பட்ஜெட், விஞ்ஞான ஆலோசகருக்கு உதவி, ரகஸ்யங்கள் இத்யாதி) செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இது நிற்க.


எமெர்ஜென்ஸி தருணங்கள் மூன்று:
  1. 26 10 1962 - 10 01 1968: இந்தோ-சீன போர்;
  2. 03 12 1971 - 1977: இந்தோ-பாகிஸ்தான் போர். இந்த எமெர்ஜென்ஸி அடுத்து வந்த கூளியுடன் சங்கமம் ஆயிற்று.
  3. 25/26 06 1975 - 21 03 1977: இங்கு பேசப்படும் உள்நாட்டு அரசியல் சூழல் அவசர நிலை.

முதல் நாள் உச்ச நீதி மன்றம் அளித்த நிபந்தனை-தீர்ப்பு: ‘இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினர் எனினும் மன்றப்பணி ஒன்றும் செய்ய இயலாது, வோட்டளிப்பது உள்பட.’ அதை வழங்கிய நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர், ‘ ஒரு நிகழ்வு மற்றொன்றின் பின் வருவதால் மட்டுமே, அவை தொடர்பு உடையவை அல்ல...பிரதமரின் மனுவுக்கு முக்கியத்தும் கொடுத்து, இடை விடாமல் வழக்கை விசாரித்து, மறு நாளே தீர்ப்பு அளித்து, யாவருக்கும் அது உடனடியாகக் கிடைக்க வழி செய்தேன். அதனுடைய சூத்திரம்: 

‘நீ எவ்வளவு உயர்ந்த பதவியிலிருந்தாலும், சட்டம் ஒரு படி மேலே.’ 


பிரதமருக்காக வாதாடிய நானி பால்கிவாலா, இந்தத்தீர்ப்பு இந்திராகாந்தியை ஆத்திரப்படுத்தியது என்று பிற்காலம் கூறினார். அதனால் தான் தன்னை குறை கூறுபவர்களையும், எதிர்ப்புகளையும் அடக்க, அவசரநிலையை 25/26 நள்ளிரவில் பிரகடனம் செய்து, அரசியல் சாஸனம் போற்றிய அடிப்படை உரிமைகளை ரத்து செய்து, நீதியை ஒடுக்கி (தணிக்கைத்துறைக்கு ஆவணங்கள் கொடுக்கத்தேவையில்லை என்ற ஆணை, ஒரு தனிச்செய்தி.), ஏகப்பட்ட ஜனங்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு கண்காணாத இடங்களுக்கு அனுப்பபட்டனர். இந்த அவசரநிலை இந்தியாவின் வரலாற்றில் இருண்ட காலம். ஏன்? 1991-2000 நமது நிதி அவலம் அடைந்த பத்தாண்டு காலம். 

அவர் இதை எழுதியது 2000ம் ஆண்டு. இன்று பாமர மக்களை ஆட்டுவிக்கும் 9% பணவீக்கம், பரமபத சோபான வட்டி விகிதம், நுகர்வோர் படும் பாடு, தரகராட்டம், லஞ்ச லாவண்யம், ஊழல், கறுப்புப்பணம், அரசின் பற்றா நிதி நிலைமை, பின் வைத்த காலை அரசு இன்னும் பின்னுக்கு இழுத்தபடி... இது எல்லாம் 2000ல் அவருக்கு தெரிந்து இருக்க நியாயமில்லை. எதற்கும் உரக்க பேசக்கூடாது; நிதி நிலை அவலத்தினால், நாட்டின் பாதுகாப்புக்கும், ஆளுமைக்கும் ஆபத்து என்று, எமெர்ஜென்ஸி பிரகடனம் செய்து விட போகிறார்கள்!

இந்த 1975 அவசர நிலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதம்: ‘ ஒரு நிரபராதியை போலீஸ் தீய எண்ணத்துடன் சுட்டுக்கொன்றாலும், கனம் கோர்ட்டாரால் ஒன்றும் செய்ய இயலாது. இந்த வாதம் வென்றது: நான்கு நீதிபதிகள் அத்தரப்பு. மறுத்தவர் ஒருவர்: நீதிபதி ஹெர்.ஆர்.கன்னா. உச்ச நீதி மன்றத்தின் இருண்ட மணித்துளி இது என்கிறார், முன்னாள் நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர். அவர் மேலும் சொல்வது, ‘நான் நீதியவையில் அமராத காலத்தில், பிரதமரை வீ.கே.கிருஷ்ணமேனன் நினைவு விழாவில் கலந்து கொள்ள அழைத்தேன். மறுத்து விட்டாலும் திருமதி. ஜென்னி லீயின் சொற்பொழிவுக்கு வந்தார். (திருமதி. ஜென்னி லீ சரியான புரட்சியாயினி; பிறகு பார்க்கலாம்.) நான் அவசர நிலை ஆட்சியை பழித்தேன். அவர் அதை கண்டு கொள்ளவில்லை எனினும், அவர் முகம் கலக்கமாயிற்று என்று சிலர் கூறினர்.

அவர் மேலும் சொல்வதை கேட்டு திருமதி. இந்திரா காந்தியின் தனித்துவத்தை நோக்கவும். நல்லதையும் சொல்லவேண்டுமல்லவா? அவருக்கு தப்புத்தாளம் போட்டு, பூம் பூம் மாடு ஆடியவர், உள் நாட்டு அமைச்சர் ஓம் மேஹ்தா. அவரை நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையரிடம் அனுப்பி, அவர் புகாரின் படி, கேரளாவில்,அநியாயாமாக கைது செய்யபட்டிருந்தவர்களின் பட்டியலை வாங்கி, அவர்களை விடுவித்தார். 

இதையும் கேளுங்கள். இன்று கடை மூடும் நேரம் வந்து விட்டது. அதர்மமான கட்டுப்பாடுகளை உதறிய உயர் நீதி மன்ற நீதிபதிகள், அங்குமிங்கும் தூக்கி யடிக்கப்பட்டனர். பழிக்குப் பழி! இதற்கு ஆசியளித்தது, உச்ச நீதிமன்றத்தின் தலைவர் என்று குறிப்பால் உணர்த்துகிறார், முன்னாள் நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர்.

கட்டுரை நீண்டு விட்டது. இத்தனைக்கும் இது ஒரு துளி. கட்டுரைக்கு மிகவும் உதவியது:
http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/20000627/ina27053.html
(தொடரும்)
இன்னம்பூரான்
25 06 2011

Geetha Sambasivam Sat, Jun 25, 2011 at 1:42 AM

  1. 25/26 06 1975 - 21 03 1977: இங்கு பேசப்படும் உள்நாட்டு அரசியல் சூழல் அவசர நிலை.//
இந்த அறிவிப்பு வந்த அந்தத் தருணங்கள் நினைவில் நன்கு இருக்கின்றன.  மதியம் சாப்பாட்டுக்கு வந்த என் கணவர் ரகசியமாகச் சொன்னார்.  அதோடு வானொலிச் செய்திகள் தணிக்கையையும் பற்றிக் கூறிவிட்டு பிபிசி தமிழ்ச்சேவையை ஒலி குறைத்து மெல்லக் கேட்டோம். அப்போதெல்லாம் தொலைக்காட்சி இத்தனை பிரபலம் அடையவில்லை. நாங்கள் இருந்ததோ ராணுவக் குடியிருப்பு.  கண்டோன்மெண்ட்.  செய்திகள் உடனுக்குடன் வந்துவிடும். மிகவும் ஆவலோடும், ஒரு விதமான பரபரப்புடனும், திகிலுடனும் கழிந்த நாட்கள்.

இந்த எமர்ஜென்சி முடிந்த சமயம் தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவந்து இந்திரா காந்தி தோற்றதை அறிவித்த அந்தத் தருணம் கிராமத்தில் மாமனார் வீட்டில் இருந்தேன்.  எங்க பையர் பிறந்து அப்போது தான் என்னை அங்கே கொண்டு விட்டிருந்தாங்க.   அந்த வருஷம் தான் ஊருக்கு மின்சாரமே வந்தது.  வானொலிச் செய்திகளில் இந்திரா காந்தி தோற்றதை ஆங்கிலச் செய்தியில் கேட்டுவிட்டு நான் குதித்த குதியில் பிள்ளை மிரண்டு விட்டான். 

2011/6/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>

யடிக்கப்பட்டனர். பழிக்குப் பழி! இதற்கு ஆசியளித்தது, உச்ச நீதிமன்றத்தின் தலைவர் என்று குறிப்பால் உணர்த்துகிறார், முன்னாள் நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர்.



கட்டுரை நீண்டு விட்டது. இத்தனைக்கும் இது ஒரு துளி. கட்டுரைக்கு மிகவும் உதவியது:http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/20000627/ina27053.html
(தொடரும்)
இன்னம்பூரான்
25 06 2011



Dhivakar Sat, Jun 25, 2011 at 8:12 AM

Reply-To: mintamil@googlegroups.com

To: mintamil@googlegroups.com
I remember very well the emergency days were most welcomed in general by South India including Tamil Nadu people. The northern states only had the problems severely. The result of 1977 General election in the southern states speaks volume of Support for emergency, when congress won most of seats in Andhra, karnataka, TN with AIADMK and Kerala. The general talk of South those days 'India needed the emergency in those circumstances'. DMK suffered lot during the emergency period in TN but at the same time it got drubbed in election.

But the present circumstances is quiet different.

2011/6/25 Innamburan Innamburan 



-

Thiruvengada Mani T.K Sun, Jun 26, 2011 at 10:38 AM


திரு திவாகர் சொன்னது போல எமர்ஜன்சியின் தாக்கம் வெகுவாக வடக்கில்தான் இருந்ததோ?.
இத்தொடர் படிக்கும்போது இன்னொரு எண்ணம் வருகிறது. இத்தனை சிறப்பான சட்டங்களும் நேர்மையான நீதியரசர்களும் இருக்கும்போது - சட்டமன்றம்/பாராளுமன்றம், எக்சியுடிவ் எனப்படும் செயலகம், சிறந்த நீதிமன்றங்கள், பற்றாக்குறைக்கு மிகச்சிறப்பான அச்சமற்ற மீடியா போன்ற 4 இயந்திரங்கள் இருக்கும் போது இவற்றைச் செம்மை செய்வதை விடுத்து இன்னுமொரு லோக்பால் அதற்கு ஒரு குளறுபடி இவையெல்லாம் தேவைதானா? இருக்கும் சட்டங்கள் நெறியோடும் முறையோடும் இயக்கப்பட்டாலே குற்றங்களைக் களைய முடியாதா? இது என் சந்தேகம்.... இன்னம்புரான் ஐயா தெளிவிக்க வேண்டும்.
மணி

Innamburan Innamburan Sun, Jun 26, 2011 at 10:44 AM

மூவர் கருத்துக்களுக்கும் தெளிவான விடை அளிக்கக் கடமை பட்டிருக்கிறேன். ஓரளவுக்கு, அடுத்தக் கட்டுரையில், முனைவர் திருவேங்கிடமணியின் வினாவுக்கு விடை இருக்கிறது. அதையும் பார்த்துவிட்டு எழுதுங்கள். பதிலிடுகிறேன். இதுவல்லவோ Interactive Forum. மற்றவர்களும் வினா எழுப்பினால், நலமே.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்
26 06 2011

fonio sivakumar 
அந்த சட்டம் எனும் பத்திரத்தில் நிறைய ஓட்டைகள்  உள்ளன . அதில் கடல் அளவு  தண்ணி  கொட்டினாலும் அது நிரம்பாது 
--
*(**(¨`·.·´¨)
`·.¸(¨`·.·´¨)
(¨`·.·´¨)¸.·´
`·.¸.·´என்றும்
       அன்புடன்*
  ***¤*.¸¸.·´¨`»*«´¨`·.¸¸.*¤***
 *¤*.¸¸.·´¨`»**சிவா**«´¨`·.¸¸

 `•.,¸,•
        (¨`·.·´¨) *Always *
          `·.¸(¨`·.·´¨)*Keep on*
             (¨`·.·´¨)¸.·´ *Smiling!*
               `·.¸.·

Innamburan Innamburan Sun, Jun 26, 2011 at 12:25 PM

புரியவில்லை, திரு.சிவகுமார். கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நல்வரவு ஆகுக. சாதரண தமிழில் என்ன செய்யலாம் என்ற உங்கள் மேலான கருத்தைத் தெரிவியுங்கள்.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்
26 06 2011




Innamburan Innamburan Sun, Jun 26, 2011 at 5:47 PM

கீதா:
நினைவு கூர்ந்ததற்கு நன்றி. பிற்காலம் லண்டன் எகானமிஸ்ட 'இந்திரா ஒரு காளி' என்று ஒரு இதழ் வெளியிட, அது இந்தியாவில் தடை செய்ய்ப்பட்டது. ஓடோடி வாங்கி வந்தேன். இங்கு என்னிடம் உள்ளது. ஒரு நாள் ஸ்கான் செய்து அனுப்புகிறேன். இந்தியாவின் பிரிதிநிதியாகத்தான், நீங்கள் குதியாட்டம் போட்டீர்கள்.


திவாகர்:

நான் சொன்னால் தென்னாட்டு மக்கள் சண்டைக்கு வருவார்கள். அவர்கள் போர், சமயவெறி, நமது அண்ணன் தம்பிகளே அகதிகளாக, இது போன்ற இன்னல்களை சந்தித்தது இல்லை. அதனால், எமெர்ஜென்ஸிக்கு ஆதரவு?

திருவேங்கிடமணி:

உங்கள் சந்தேஹம் நியாயமானதே. தொன்மை தத்துவங்களை பிறகு பார்க்கலாம். ஹாப்ஸ், லாக், ரூஸோ ஆகியோரின் சமுதாய ஒப்பந்தக்கருத்துக்கள் முக்யம் எனினும், பதில் நீண்டுவிடும். இப்போதைக்கு: அரசு நிர்வாஹத்தை மக்களவை, நிர்வாஹம், நீதித்துறை என்று Separation of Powers என்று மூன்றாக வகுத்தார், மாண்டெஸ்க்கோ என்ற தத்துவ ஞானி. தணிக்கையின் வரலாறு அதற்கும் முந்தியது என்றாலும், அது நிர்வாஹத்தின் ஒரு பகுதி. இந்தியாவில் 150 வருடங்களாக, அதற்கு சுதந்திரமான பணி. என் கட்டுரையில் பார்த்திருப்பீர்கள், அதிகாரிகளும், அரசியலரும் கூஜா தூக்கியதையும், நீதித்துறை அடி பணிந்ததையும். வல்லமை இதழில், எப்படி கனடாவில் லோக்பால் போன்ற பதவியிலிருந்தவர் கடமை தவறினார், தணிக்கைத்துறை அதை குறை கூறியது என்று விவரமாக எழுதியிருக்கிறேன், ஒரு கட்டுரையில். படிப்பினை: மனிதர்கள் பலஹீனமானவர்கள்; பதவி யாதாயினும் தவறு நிகழலாம். எனவே, மக்கள் சக்தி, நீதி என்னும் செங்கோல், தணிக்கை என்ற வேடன் ஆகியவை ஒருசேர நாணயமாக இயங்கினால், லோக் பால் ஐந்தாவது சக்கிரம். தானாக சுழலும். வண்டிக்கு சம்பந்தமற்றது. இன்று இந்தியாவில், இந்த மூன்று இயந்திரங்களுக்கும் இன்னல்கள் பல. ஜான் ஸ்டூவர்ட் மில் அவர்கள் சொன்னமாதிரி, 'Vigilance is the Price of Liberty'. அதற்கு, இன்று இங்கு லோக் பால் தேவையாக இருக்கலாம். தணிக்கைத்துறைக்கு அரசு நிர்வாஹம் போடும் முட்டுக்கட்டையை பற்றி, வல்லமையில் ஒரு கட்டுரை வரும். அதில் உங்களுக்கு முழுமையான விடை கிடைக்கலாம்.

சிவகுமார்:
உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். தற்காலிக பதில்: சொல் வீச்சினால் மட்டும் மக்களுக்கு ஆதாயமில்லை. சட்டத்தில் ஓட்டை ஏன்? சில உதாரணங்கள் கொடுத்தால் நல்லது.

No comments:

Post a Comment