அரசு -2
மக்கள் எழுச்சி
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். நாடும் கொள்ளாது எனலாம். வரலாற்றில் முதல் காட்சி: ஃப்ரென்ச் புரட்சி. ‘ரொட்டி கிடைக்கவில்லையென்றால் அப்பம் சாப்பிடு.’ என்ற பொருள்பட மேரி அண்டாய்னட் சொன்னதாக ஆதாரமில்லாத வதந்தி. மக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். பிறகு, பல புரட்சிகள். புரட்சிகளே யதேச்சதிகாரத்துக்கு வித்தாக அமைந்த கூத்துக்களும் நிகழ்ந்துள்ளன. அது வேறு விஷயம். ‘அன்றொரு நாள்’ தொடரில் அது பற்றி விவரங்களை காணலாம். சில நாட்களாக பிரேசில் நாட்டில் நடுத்தரவகுப்பு மக்களையும் அரசையும் எதிரும் புதிருமாக வைத்துள்ள அமைதியின்மை கவலையளிக்கிறது. ஒரு பார்வை:
சிறு துளி பெரு வெள்ளம் என்பதை விட, சிறியதொரு தீப்பொறி ஊரையே கொளுத்தி விடும் என்பதே சரியான உவமை. கால்பந்து விளையாட்டு பிரேசில் மக்கள் விரும்பும் பொழுது போக்கு என்றாலும், உலகளாவிய கால்பந்து விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டுமானச்செலவுகள்/ஊழல்கள் மீது மக்களுக்கு அதிருப்தி. இந்தியாவின் காமென்வெல்த் விளையாட்டு மோசடிகளை, இது நினைவுபடுத்துகிறது. அதிருப்தி, அலைகளை போல மோதி, மோதி வலுத்துவிடும். பிறகு பஸ்/சப்வே கட்டணங்கள் ஏற்றப்பட்டது மேல் அதிருப்தி. ஆயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களில் அமைதியாக கூடி போராடும்போது, அதை வன்முறையால் அடக்குவது கடினம். காந்திஜியும், மார்ட்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவும் இதற்கு சாக்ஷி. பிரேசிலில் தற்பொழுது அமைதியான புரட்சி அலை கரை புரண்டுவிட்டது என்று தோற்றம், கமீலா ஸேனா என்ற நிடொராய் நகரத்து 18 வயது யுவதி கூறியது போல: ‘விலையேற்றத்தை எதிர்த்த காலகட்டம் கடந்து விட்டது. நாட்டு நடப்பு, அரசு தன்மை (சிஸ்டம்) கேவலமாக இருக்கிறது. எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. அதை சப்ஜாடா மாற்றியமைக்க வேண்டும்... பணத்தை கொண்டுபோய் ஊழலில் வீணடிப்பதைக் கண்டு கொதித்தெழுந்தோம்’.
ஊருக்கு ஊர் பஸ்/சப்வே கட்டணங்களை குறைத்தும், மக்களின் ஆத்திரம் குறையவில்லை. ஃபோர்டெலெஸா என்ற ஊரில் 15 ஆயிரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசிடம் அடி வாங்கினர். கல்வி உரிமை வேண்டும், சுகாதாரப்பணிகள் மேன்படவேண்டும் என்று கோஷமிட்டனர்.
இந்தியாவுக்கு வருவோம். எத்தனையோ ஊழல்களை அமைதியாக ‘கண்டும் காணாத' மக்கள் கொதித்தெழுந்தனர், இமாலயத்தின் மடியில் வாழும் மக்கள். கங்கை நதியின் உபநதிகளான ருத்ரபிரயாக், அலக்நந்தா வரலாறு காணாத வகையில் பிரவாஹம் எடுத்தோடின. அடிப்பட்டது கிராமவாசிகள். பார்வையிட வந்த முதல்வர் விஜய் பஹுகுணாவும் அவரது கூட்டாளிகளும், பொது மக்களின் உணர்ச்சிகரமான எதிர்ப்பை தாங்கமுடியாமல் 15 நிமிடங்களில் புறங்காட்டி ஓடினர், ஹெலிகாப்டர்களில்.
கொசுறு செய்தி: ஆங்கிலேய கலோனிய அரசை கனவிலும் மக்களாட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் கட்டிவைத்த வாய்க்கால்கள் வெள்ளத்தைத் தணித்தன. ‘ரோடு போடுகிறோம், அழகூட்டுகிறோம்’ என்று சொல்லி அவற்றை அடைத்தது, மக்களால் தேர்ந்தெடுப்பட்ட ஆட்சி! ஹூம்!
இன்னம்பூரான்
20 06 2013
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
Geetha Sambasivam | Thu, Jun 20, 2013 at 12:44 PM |
|
உத்தராஞ்சலில் மலையை வெடி வைத்துத் தகர்த்தார்கள். மண் அரிப்பைத் தடுக்கும் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள். அரசாங்கம் எங்கே வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை கொடுத்திருந்ததோ அங்கே அரசாங்கத்துக்குத் தெரியாமல் வீடுகள் கட்டிக் கொண்டார்கள். ஒரு வகையில் ஆக்கிரமிப்பு எனலாம். மனிதன் ஏற்படுத்திய அழிவே உத்தராஞ்சலில் ! மக்கள் கொதித்தெழுந்து என்ன செய்ய? இதை எல்லாம் ஆரம்பத்திலேயே இதே மக்கள் தடுத்திருக்க வேண்டும். ஆக தவறு இருபக்கமும்.
|
|
Innamburan S.Soundararajan | Thu, Jun 20, 2013 at 1:23 PM |
|
நன்றி பல. இது மேலதிக செய்தி. சுந்தர்லால் பஹுகுணாவின் அமைதி புரட்சியை பற்றி எழுதியிருந்தேன் என்று ஞாபகம். உங்கள் இடுகையை கொஞ்சம் விஸ்தாரப்படுத்தினாலும், இவ்விழை மேலும் பயன் அடையும்.
இன்னம்பூரான்
|
|
Innamburan S.Soundararajan | Thu, Jun 20, 2013 at 2:25 PM |
To: mintamil@googlegroups.com |
அப்டேட்:
- மூன்று வருடங்கள் முன்பே ஆடிட் ரிப்போர்ட்: (1) பாகீரதி/அலக்நந்தா நதிகளில் அரசு நிறுவி வரும் மின் நிலையங்களால் ( ஹைடல்) மலைகளுக்கு பேராபத்து. (2) இவற்றின் பயனாக திடீர் வெள்ளம் ஆபத்து அதிகரிக்கும்; (3) அதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். (4) வனங்களை அழிப்பது தொடருகிறது. இதுவும் மலைகளுக்கு ஆபத்து. (5) 38% அளவுக்கு, இந்த ப்ராஜெக்ட்களில் செடிகொடி நடுவது இல்லை. அந்த தவறு செய்தவர்களை அரசு தண்டிக்க வில்லை. ஆடிட் சொன்னால் கேட்கலாமோ?
- இன்றைய தகவல்: உச்ச நீதிமன்றம்,பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய அரசும்,உத்தராகாண்ட் அரசும் சோறு, தண்ணி, மருந்து, எரிபொருள், மற்ற உதவிகள் எல்லாம், பாகுபாடு இன்றி, கொடுத்துதவவேண்டும் என்று, இன்று,ஆணையிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவதியில்.
ஆக மொத்தம்: அடிபடுவது மக்கள். ஏன் கொதித்தெழக்கூடாது?
இன்னம்பூரான்
20 06 2013
|
|
Prakash Sugumaran | Thu, Jun 20, 2013 at 2:32 PM |
|
வணக்கம். இப்போதைய சூழலிலும், எதிர்வரும் காலங்களிலும் மக்கள் போராட்டம் என்பதெல்லாம் கனவுதான். அதிகபட்சம் ஒரு இயக்கம் தொடங்கி கொஞ்ச காலம் முட்டி மோதி பார்க்கலாம். அரசு அலுவலகங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தொண்டை நோக கத்தி விட்டு, உண்ணாவிரதம், உண்ணும் விரதம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு.. இப்படி பலவிதங்களில் எதிர்ப்பை காட்டிவிட்டு அடங்கி விட வேண்டியதுதான். இதையெல்லாம் ஒடுக்கவென்றே பல அரசுத் துறைகள் உள்ளன. நீதிமன்றக் கதவை தட்டுவது ஓரளவு பயன் தரலாம்.. ஆனால் நீதி அரசாங்கம் போடும் சட்ட விதிகளை பொறுத்தது.
ஒரு கொள்கை சார்ந்தோ, ஒருமித்த சிந்தனை சார்ந்தோ, குறிப்பிட்ட இலக்கை நோக்கிய பார்வையிலோ மக்கள் ஒன்று கூடி விடக் கூடாது என்பதில் பாரபட்சம் இல்லாமல் எல்லா அரசாங்கங்களும் தெளிவாக உள்ளன. மக்களின் முன்னேற்றத்துக்கு என ஏற்படுத்தப்பட்டுள்ள துறைகள் செயல்படாத நிலை குறித்து எப்போதும் கவலையே கொள்ளாத அரச கட்டமைப்பு இப்படியான மக்கள் திரளை கலைக்க உருவாக்கி வைத்துள்ள பல நுண் பிரிவுகள் மீது மிக கவனம் கொடுத்து இதே மக்களின் வரிப்பணத்தில் பெரும்பான்மையை செலவிட்டு இயக்குகின்றன.
இவற்றை எல்லாம் மீறி ஆச்சரியப்படும் வகையில் இன்னும் தொடரும் ஒரே அறப்போராட்டம் கூடங்குளம் போராட்டம் மட்டுமே. இதுவே இறுதியான பெரிய மக்கள் போராட்டமாக இருக்கும் என சொல்ல முடியும். ஏனெனில் யாருக்கு லாபமோ இல்லையோ இந்தப் போராட்டத்திலும் பாடம் கற்றுக் கொண்டு விட்டது அரசு இயந்திரங்களின் நுண் அறிவு பிரிவுகளே.
|
|
Geetha Sambasivam | Thu, Jun 20, 2013 at 2:33 PM |
|
ஓஹோ, நான் நினைச்சது இப்போதைய வெள்ளப் பெருக்கைப் பத்திச் சொல்றீங்கனு. பஹுகுணாவைப் பற்றிச் சொல்றீங்கனு புரிஞ்சுக்கலை. தப்பு என்னோடது தான்.
CAG warned of hazards 3 years ago.
The CAG, in an environmental assessment of the Bagirathi and Alaknanda, three years ago, had warned of hazards. It said hydel projects on the rivers were damaging hills and increasing possibility of flash floods.The devastation in the
[Quoted text hidden]
|
|
Geetha Sambasivam | Thu, Jun 20, 2013 at 2:34 PM |
|
நீங்களே போட்டுட்டீங்க. இதான் நான் சொல்ல வந்ததும்
[Quoted text hidden]
|
|
Innamburan S.Soundararajan | Thu, Jun 20, 2013 at 2:42 PM |
To: mintamil@googlegroups.com |
நன்றி, கீதா. ஒரே க்ஷணத்தில் நாமிருவரும் ஒரே செய்தியை விமரிசித்ததும் ஒரு மகிழ்வே.
நன்றி, பிரகாஷ். நீங்கள் கூறுவதின் யதார்த்தம் புரிகிறது. ஆனால், அலை வரிசைகள் வேறு. நான்
வரலாற்று நோக்கில் நீண்டகால பார்வையாக எழுதுகிறேன். அவ்வளவு தான். காந்திஜி, மார்ட்டின் லூதர் கிங்க், மாண்டேலா ஆகியோர் புரட்சிகளை நிகழ்த்திக் காண்பித்தவர்கள்.
|
|
Innamburan S.Soundararajan | Fri, Jun 21, 2013 at 12:02 PM |
|
அரசு 2: மக்கள் எழுச்சி:அப்டேட்:2
உத்தராகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த காட்டாற்று வெள்ளம் சுனாமி போன்ற பேராபத்து தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும், பூர்வோத்தரம் அறிந்து கொள்வது நல்லது. டாக்டர் கே.எல்.ராவ் என்ற பிரபல விஞ்ஞானி மத்திய அமைச்சரவையில் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். அவர் வகுத்த ‘மலர்மாலை’ நதிகள் இணைப்பு பெரிதும் பேசப்பட்டது; பின்னர் கடப்ஸில் போடப்பட்டது. இந்தியாவின் நதிகளின் நீரோட்டம், பிரவாகம், மேடுபள்ளம், வெள்ளங்களின் வரலாறு அவற்றையும், இந்த மலர்மாலை திட்டத்தையும் தழுவி மத்திய அரசு 1975ல் தயாரித்தத் திட்டத்தின் படி அமையும் சட்டத்தின் விதிப்படி, வெள்ள அபாயம் உள்ள இடங்களிலிருந்து குடியிருப்புகளை அகற்றலாம். ஆனால் குறுக்கே நின்றன, உத்தர்பிரதேச, பீகார், மேற்கு வங்காள மாநில அரசுகள். அந்த வகையில் பார்த்தால், இந்த பேராபத்தில் சிக்கிய பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருக்கும். ஆள்சேதம் குறைந்திருக்கும். கிட்டத்தட்ட 40 வருடங்களாக இந்த மசோதாவுக்கு பதில் அளிக்க ‘கின்னஸ் சாதனை’ மாநிலங்கள் தான் நமக்கு மேலாண்மை! மணிப்பூரும். ராஜஸ்தானும் மட்டுமே ‘ததாஸ்து’ கூறி, பின்னர் வாளாவிருந்து விட்டன. மசோதா மறுபரிசீலனையில். இந்த அழகில் மக்கள் மீது எப்படி பழி சாற்றலாம்?
அது போகட்டும். ஏப்ரல் 23, 2013 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆடிட் ரிப்போர்ட் வெளிப்படுத்திய உண்மை:
- உத்தராகாண்ட் மாநிலத்தின் ‘பேராபத்து நிவாரண மையம் 2007 ல் நியமிக்கப்பட்டது;
- அது இன்று வரை (ஏப்ரல் 2013) ஒரு தடவை கூட கூடவில்லை.
- அத்தகைய மையங்கள் தன்னுடைய கொள்கை, நடைமுறை, விதிகள் ஆகியவற்றை வரைந்தால் தானே இட்ட கடமையை செய்ய முடியும். அதைக்கூட செய்யவில்லை;
- பேராபத்து வந்தால் முதல் நிலை நடவடிக்கை பற்றிய திட்டம் ஒன்று கூட வரையவில்லை.
- பாதிக்கு மேல் பணியிடங்கள் காலி.
இந்த களேபரத்திக்கு நடுவில் சாக்கோ என்ற ̀காங்கிரஸ் கட்சித்தலைவர் சாக்குப்போக்குகள் பல சொல்லி வினா தொடுத்தார். அவற்று பதில் அவரல்லவா சொல்லவேண்டும். அதான், நான் கொயட்டு.
இன்னம்பூரான்
21 06 2013
இன்னம்பூரான்
|
|
Geetha Sambasivam | Fri, Jun 21, 2013 at 12:17 PM |
|
ஜோஷி மட்டுக்கு வந்திருக்கும் மந்திரியை மக்கள் முற்றுகையிடுகின்றனர். அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
|
|
Innamburan S.Soundararajan | Fri, Jun 21, 2013 at 12:24 PM |
|
|
Innamburan S.Soundararajan | Fri, Jun 21, 2013 at 7:09 PM |
|
'அரசு -2: மக்கள் எழுச்சி' என்ற முதல் இழை பிரேசில் நாட்டின் மக்கள் எழுச்சியை பற்றியது. சமகாலத்து இந்திய நிகழ்வு ஒப்புமைக்குக் கூறப்பட்டது. அதை பற்றி மட்டுமே இழைகள் தொடர்ந்தது வியப்பளிக்க வில்லை. மறுபடியும் பிரேசில் நாட்டுக்கு திரும்புகிறோம். பத்து நூறாகி, அதுவும் ஆயிரமாகி, பல்லாயிரமாக வளர்ந்து, இப்போது மிலியன் கணக்காக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தொலைக்காட்சியில் கண்டதை பகிர்ந்து கொள்கிறேன்.
இன்னம்பூரான்
|
|
|
|
No comments:
Post a Comment