‘...Full many a gem of purest ray serene
The dark unfathom'd caves of ocean bear:
Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air.
Some village-Hampden, that with dauntless breast
The little tyrant of his fields withstood,
Some mute inglorious Milton here may rest,
Some Cromwell, guiltless of his country's blood...’
தாமஸ் க்ரே அவர்களின் ‘கிராமீய கல்லறை இரங்கற்பாட்டை திரு. வீ.கே. விஸ்வநாதய்யர் சொல்லிக்கொடுத்ததை மறக்கமுடியுமோ? ‘ஆழ்கடலின் நன்முத்தை கண்டது யார்? ...
காட்டு ரோஜா மணக்குமா? திருட்டுக்கும்பலில் மாட்டிக்கொண்ட நாணயஸ்தன் என்ன செய்யவேண்டும்? தலைகால் தெரியாமல் குதிக்கும் அரசன் வீசி கடாசிய செங்கோலை நாமும் மிதித்துத் துவம்சம் பண்ணத்தான் வேண்டுமா? ‘யதா ராஜா! ததா பிரஜா!’ இது வேத வாக்கா? பைசாச துர்போதனையா?
இரண்டாம் உலக யுத்தத்தில் நார்மண்டி லேண்டிங்க் உலகபிரசித்தம். அமெரிக்காவின் ‘அருண் க்ஷேத்ரபால்’ ந்னு வச்சுக்கோங்கோ. படுகாயமடைந்த நண்பனை காப்பாற்ற ஒரு வாலிபன் (23) உயிரை பணயம் வைக்கிறான். நல்லவேளை பொழைச்சுட்டான். பல வருஷங்களுக்கு பின் செங்கோலை மிதிக்கச்சொல்றா. போடான்னுட்டார். அவர் சொல்றார். நார்மண்டியில் இருந்த மனோதர்மம் தான் இங்கும் என் துணை என்று. அதான் கதை. ஆனால், இவரை பற்றி எனக்கு முன்னாலேயே தெரியும் என்று யாராவது சொன்னால், எனக்கு ஆத்ம திருப்தி. ஸ்வாமி! காட்டு ரோஜா, அநாமதேய நாணயஸ்தன், விடாக்கொண்டன்ஸ், உடும்புப்பிடி, இவர்கள் எல்லாம் இல்லையானால், இந்த அரசியலர், அதிகாரமையங்கள், Extra Constitutional Power Centres, எல்லாம் நம்மை தூக்கி சாப்பிட்டிருக்கும். வரலாறு அவர்களை மறந்து போகிறது. மறக்கவைக்கப்படுகிறது. நான் சொல்வது உலக அளவில். அன்றைய இந்தியா, இன்றைய இந்தியா, உண்ணா விரதிகள், உண்ணும் ..., அவர்களை எல்லாம், நீங்களே தான் இனம் கண்டு இயங்கவேண்டும். ஒன்று திண்ணம். ‘அச்சம் தவிர். தேசம் பசாவ்!’
ஜூலை 20, 1920யில் பிறந்த சராசரி மனிதன் எலியட் ரிச்சர்ட்ஸன். தேசப்பற்றில் ஊறிய பாஸ்டன் மண். அவர் பார்க்காத பெரிய ஊழியம் இல்லை; அட்டர்னி ஜெனெரல், மாநிலத்திலும், மத்திய அரசிலும், பிரட்டனுக்கு அமெரிக்கத் தூதர், சர்வதேச கடல் சம்பந்தமான சட்டங்களை வகுத்து நிர்ணயம் செய்தவர், ஐ.நா.வின் சார்பில், நிகராகுவே தேர்தலை கண்காணித்தவர், வரலாற்றில் காணாத வகையில், அமெரிக்க அமைச்சரகத்தில் நான்கு பதவிகள் வகித்தவர், இத்யாதி.
நிக்சன் ஜனாதிபதியாக இருந்த போது, அவர் எதிக்கட்சியின் அலுவலகத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தது (ஜூன் 17, 1972) முதல், பண்ணாத லூட்டி கிடையாது. கேட்காத ஒட்டு கிடையாது. அதிகார துஷ்பிரயோகம் கொடி கட்டி பறந்தது. பக்கிரியும், போக்கிரியுமாக அவருக்கு துணை நின்றோர் பலர். நன்றாக ஞாபகம் இருக்கு. பாப் உட்வெர்ட், கார்ள் பெர்ன்ஸ்டீன் என்ற இரு நிருபர்கள், பிச்சு உதறி விட்டார்கள். அந்தக் கதை படு சுவாரஸ்யம். இன்று இந்தியாவில் பாடம் எடுக்க உதவும். எங்கிட்ட ட்யூட்டோரியல் ரெடி. எப்போ சொல்வதற்க்கு வேளை வருமோ? நம்ம எலியட் ரிச்சர்ட்ஸன் ஐயா தான் அட்டர்னி ஜெனெரல். ஆர்ச்சிபால்ட் காக்ஸ் என்பவர் அரசு வக்கீல் (Special Public Prosecutor). கொளுத்தரராரு போட்டு. நிக்சனுக்கு சூடு தாங்கலை. எளுந்து நின்னு செங்கோலை வளைச்சுட்டு, ‘ஆர்ச்சிபால்ட் காக்ஸை டிஸ்மிஸ் பண்ணு’ என்றார், எலியட் ரிச்சர்ட்ஸனிடம். அவரு முடியாது மன்னனே! என்று சொல்லிவிட்டார். (தனி மொழி: கோவிச்சுக்காதங்கோ! பின்ன என்ன? கோபால் சுப்ரமணியம் என்ற அரசு வக்கீலை கபில் சைபல் அவமதித்தது கண்டீரோ?).
ராஜிநாமா செய்தார். அடுத்தபடி வந்த வில்லியம் ரக்கல்ஹெளஸ்ஸும் முடியாது என்க, அவரும் வேலை இழந்தார். பின்னர் செங்கோலை மிதித்து, அந்த அபகீர்த்தியை கட்டிக்கொண்டது, ராபெர்ட் போர்க் என்ற பெரிய அதிகாரி. ஆனால். அவர் பெயரும் பெர்மனெண்டா டாமேஜ் ஆயிடுத்து. அதிபரும் ஜெயிலிலிருந்து தப்ப, ராசியாகமாகவே, ராஜீநாமா செய்யும்படி ஆகிவிட்டது.
‘ஒரு மிதவாதியின் எண்ணோட்டங்கள்’ என்ற 1996ல் எழுதிய நூலில், எலியட் ரிச்சர்ட்ஸன் எழுதியது:
‘...இந்த விசாரணை சுதந்திரமாக இருந்தால் மட்டும் போதாது; அந்த சுதந்திரம் மக்களுக்கு கண்கூடாக இலங்க வேண்டும்’ என்று செயல் பட்டேன்..அதிபரின் கைக்கூலிகள் தீயவர்கள் மட்டுமல்ல. பச்சோந்திகள்...’
ஒரு லேசு தகவல்: எலியட் ரிச்சர்ட்ஸன் அவர்கள் சிலகாலம் புகழ் வாய்ந்த நீதிபதி ஃபெலிக்ஸ் ஃப்ராங்க்ஃபெர்ட்டரிடம் குருகுலவாசம் செய்தபோது, தினந்தோறும் ஷேக்ஸ்பியர் படிக்க ஒரு மணி வேண்டும் என்றார். அது கேட்டு மனம் குளிர்ந்த நீதிபதி, இவரை (வயது 33) ஹார்வேர்ட் தலைமைக்கு சிபாரிசு செய்தார்.
சுருங்கச்சொல்லின், இந்தியாவுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான எலியட் ரிச்சர்ட்ஸன்கள் வேண்டும். நீதிபதி ஃபெலிக்ஸ் ஃப்ராங்க்ஃபெர்ட்டர் மாதிரியும் வேணும். ஒரு வகையில் வீ.ஆர். கிருஷ்ணய்யார் மாதிரி. ஹெரால்ட் லாஸ்கியின் நண்பர். ஹெரால்ட் லாஸ்கி தான், நமது மாஜி ஜனாதிபதி கே.ஆர். நாராயணனை, நேருவிடம் சிபாரிசு செய்தவர். மனசு வச்சா, லோகம் சின்னது.
மற்றவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் என்பதற்காக, கொஞ்சம் கசப்பு கலக்காமல் மருந்து கொடுக்க முடியுமா? இதோ ஒளஷதம். (பிடிக்கலை என்றால் டெலீட் பட்டன் இருக்கவே இருக்கு).
மதிப்பிக்குரிய மாஜி ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை புகழ்ந்து எனது ஒரு மடல். ஹிந்து இதழில் போட்டார்கள். அதற்கு பிறகு அவர் செயலை குறை கூறி ஒரு மடல். போட்டார்களோ? போட்டதாக நினைவில் இல்லை.
Opinion - Letters to the Editor
The President has articulated ethical concerns and echoed public opinion.
The Oxonian in Prime Minister Manmohan Singh will recognise the incongruity
of applying a British constitutional device to the opposite end. It is not
beyond the realm of possibility that the President may resign, rather than
being pressured into giving assent in the second round.
S. Soundararajan,
Chennai
Note: He did not resign and gave assent in the second round. I recall that my letter condemning the same was not published.]
இப்போ மட்டும் ஒரு இந்திய எலியட் ரிச்சர்ட்ஸன் இருந்திருந்தால்...
இன்னம்பூரான்
20 06 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment