சித்திரத்துக்கு நன்றி: http://bks2.books.google.com/books?id=b_hBAAAAYAAJ&pg=PP5&img=1&zoom=1&sig=ACfU3U13jh2NWoKu43Sp9bEGIrvT1zGSIQ
Innamburan Innamburan | Tue, Jun 21, 2011 at 7:47 PM |
|
அன்றொரு நாள்: ஜூன் 22
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா! என்று கேட்காதீர்கள். இரண்டும் ஓருடலின் அவயவங்கள் தானே. வரலாற்று நதி கூட மேலும் கீழுமாகப் பாயக்கூடியது தான். பாருங்களேன். யான் வாழும் போர்ட்ஸ்மத் நகரவாசி சர் ஜோசையா சைல்ட் நினைவு தினமிது (1699). அவர் செல்வம் ஈட்டியது, புரட்டியது எல்லாம், சென்னையில் எனலாம். வரலாறு அறிவதின் பயன் யாதெனில், நம் முன்னோர்களின் வாழ்வியலை பற்றி புரிந்து கொள்ளலாம் என்பதே. சர் ஜோசையா சைல்ட் கிழக்கிந்திய கம்பேனியின் தூண்களில் ஒருவர் என்பதால், ஒரு பின்னணி. 1608ல் சூரத் நகரில் வணிகம் தொடங்கிய கிழக்கிந்திய கம்பேனி, 1639ல் தான் மேற்கிலிருந்து கிழக்குப்பக்கம், அதாவது தென் கிழக்குப்பக்கம் - கொரமாண்டெல் கடலோரம் - கால் வைத்தது. ஃபிரான்சிஸ் டே மதராஸ் பட்டினத்தில் (சென்னை) ஜார்ஜ் பெயரில் கோட்டையும் கொத்தளமும் அமைத்தார். சொல்லப்போனால், வெள்ளைக்காரனின் இந்திய மண்ணாசை தலை எடுத்தது, இங்கு தான். மதராஸ் மாகாணத்தின் ஜென்மம். தடபுடலாக, வணிகம், தட்டிப்பறித்தல், நாடு பிடித்தல், கடன் உடன், படையெடுப்பு, சூழ்ச்சி, வாரிசு நியமனம் என்றெல்லாம் சொத்து சேர்த்த அந்த கம்பெனி 1640 வாக்கில், கிட்டத்தட்ட திவால். கஜானா காலி. வந்த வெள்ளைக்காரன் எல்லாரும் ‘உண்டகத்துக்கு இரண்டகம்’ செய்து, (இப்போ மாதிரின்னு சொல்றது நீங்க; நான் ஒண்ணும் சொல்லலை!) கம்பெனியை அதோகதியாக்கி விட்டனர். அவதாரபுருஷராக வந்தாரையா, நம்ம சைல்ட் துரை, 1860லே. போர்ட்ஸ்மத் துறைமுகத்தில் கப்பல் தரை தட்டாது, அப்போ. தள்ளி நின்று சங்கூதும். தண்ணீர், தண்ணி, முட்டை, மீன் எல்லாம் சப்ளை செய்வது, இவரு. ‘சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப்பணம்’ என்ற வகையில் ஓஹோன்னு சம்பாதிச்சார், முப்பது வயதிற்க்குள். அதை இந்த கம்பெனியில் முதலீடு செய்து, பெரிய மனிதரானார்; நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பெல்லாம், இங்கேயும் திருமங்கலம் மாதிரி, ஒரு சின்ன அளவுக்கு எனலாம். நம்ம ‘ஆவ்சம் அமெரிக்கா செல்வன்’ மாதிரி, இவருக்கு, தன்னிச்சை சந்தையில் (ஃப்ரீ மார்க்கெட்) அபார மோஹம்! போதாக்குறைக்கு அதற்க்குள் ஒரு பொடி வைத்தார்! காலனிகளுடன் இங்கிலாந்து தான் ஏகபோக வணிகம் என்ற ஃப்ரீ இல்லாத மார்க்கெட்டுக்கு வக்காலத்து வாங்கினார். இவர் பெருமளவில் முதல் திரட்டி, சார்லஸ் II மன்னரிடம் புதிய பிரகடனம் வாங்கி, கிழக்கிந்திய கம்பேனியை புனருத்தாரணம் செய்தார். தலைவனுக்கு எத்தனை முக்யம் பாருங்கோ. 69 வயதில் செத்தாலும் செத்தார், 1699ல்; பாண்டிச்சேரியில் ஃபிரன்ச்சுக்காரன் தண்டல் எடுத்து, இங்கிலாந்துக்காரர்களை பாடாய் படுத்தினான்.
அதெல்லாம் போகட்டும். ஏழைபங்காளன் என்று அவருக்குக் கீர்த்தி உண்டு. இல்லாட்டா, எழுதுவேனா?
இன்னம்பூரான்
22 06 2011
|
|
Geetha Sambasivam | Wed, Jun 22, 2011 at 5:53 AM |
|
ஆவ்சம் அமெரிக்கா செல்வன்’ //
ஹாஹாஹாஹா, நல்லா இருக்கு. அது சரி, ஏழைப்பங்காளன் எப்படி?? அதைப் புரிஞ்சுக்க முடியலையே எனக்கு????? :(
அதெல்லாம் போகட்டும். ஏழைபங்காளன் என்று அவருக்குக் கீர்த்தி உண்டு. இல்லாட்டா, எழுதுவேனா?
இன்னம்பூரான்
22 06 2011
|
|
Innamburan Innamburan | Wed, Jun 22, 2011 at 8:08 AM |
|
இந்த மாதிரியான கேள்விகளினால் மகிழ்ச்சி. Interactive Forum ஆகிவிடுகிறது அல்லவா. அது தான் என் இலக்கு. அதனால் தான் ஆடிப்பாடி, பின்னூட்டத்துக்கு தாளம் போடுகிறேன். சர் ஜோசையா சைல்ட் காலத்தில் இங்கிலாந்தில் தொழிலாளர்களை கொடுமைப்படுத்துவது தொடங்கியது எனலாம். ஏற்கனவே ஆண்டை-அடிமை உறவு. இவர் சில புரட்சிகரமான வழிகள் மூலம் அவர்களுக்கு வழி வகுத்தார் என்று பீ பீ ஸீ சொல்கிறது. அதனால் கீர்த்தி என்றேன். நன்றி, வணக்கம்.
|
|
செல்வன் | Fri, Jun 24, 2011 at 7:50 AM |
|
. நம்ம ‘ஆவ்சம் அமெரிக்கா செல்வன்’ மாதிரி, இவருக்கு, தன்னிச்சை சந்தையில் (ஃப்ரீ மார்க்கெட்) அபார மோஹம்! போதாக்குறைக்கு அதற்க்குள் ஒரு பொடி வைத்தார்! காலனிகளுடன் இங்கிலாந்து தான் ஏகபோக வணிகம் என்ற ஃப்ரீ இல்லாத மார்க்கெட்டுக்கு வக்காலத்து வாங்கினார்.
ப்;ரி மார்க்கட்டு செல்வனுக்கு பிடிக்கும்
இந்தாளுக்கு ப்ரி இல்லாத மார்க்கட்டு பிடிக்கும்
அப்புறம் எப்படி ஜோசையா சைல்ட் ஆவ்சம் ஆவாரு?:) -- செல்வன்
"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் தரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்
|
|
Innamburan Innamburan | Fri, Jun 24, 2011 at 9:18 AM |
|
முன்வினை பயனாக, பிற்காலம் ஏழை பங்காளன் ஆனதனாலே! ஆமாம்! ஆமாம்!
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
|
|
No comments:
Post a Comment